
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,366
Date uploaded in London – – 18 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்பு மொழி முப்பது
ச.நாகராஜன்
1) மின்சாரம் செலுத்தப்பட்ட வேலி போல ஒரு பெண்ணின் ஆடை இருக்க வேண்டும். காட்சியைத் தடை செய்யாமல் அது தனது குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும். – சோபியா லாரன்
A woman’s dress should like a barbed-wire fence: serving its purpose without obstructing the view. – Sophia Loren
2) (தருணம் பார்த்துக் காத்திருக்கும்) பொறுமையான ஓநாய் தான் ஒரு கனவான்! – லானா டர்னர்
A gentleman is simply a patient wolf – Lana Turner
3) வளைவுகள் இல்லாத பெண்மணி பாக்கட் இல்லாத ஜீன்ஸ் போல! உங்கள் கைகளை எங்கு வைப்பது என்று உங்களுக்குத் தெரியாது!
A woman without curves is like jeans without pockets. You don’t know where to put your hands.
4) தன்னுடைய மனைவிக்கு ஜோக்கை ரசிக்கத் தெரியாது என்று சொல்லும் ஒருவன் அவள் அவனைத் திருமணம் செய்து கொண்டதை மறந்து விடுகிறான்! – ஆஸ்கார் வைல்ட்
The man who says his wife can’t take a joke, forgets that she took him.”
— Oscar Wilde
5) ஒருவரிடமிருந்து திருடுவது காப்பி அடிப்பதாகும்; ஆனால் பலரிடமிருந்து திருடுவதோ ஆராய்ச்சி ஆகும். – ஸ்டீவன் ரைட்
To steal ideas from one person is plagiarism; to steal from many is research.
― Steven Wright
6) உங்களை நிதானமாகப் போகுமாறு போலீஸார் சொல்லாமல் உங்கள் டாக்டர் சொல்கிறார் என்றால் நீங்கள் நடுவயதுக்கு வந்து விட்டீர்கள் என்று அர்த்தம் – ஜோன் ரிவர்ஸ்
“You know you’ve reached middle age when you’re cautioned to slow down by your doctor, instead of by the police.”
—Joan Rivers
7) எல்லோரும் சொல்கிறார்கள் என்னிடம் – “பெட்டி, பழைய நண்பர்களைத் தொடர்பு கொள்ள சிறந்த வழி ஃபேஸ்புக் தான் என்று! எனது இந்த வயதில் பழைய நண்பர்களைத் தொடர்பு கொள்வதென்றால் எனக்கு ஊஜா போர்ட் தான் வேண்டும்.
– பெட்டி ஒய்ட் (99 வயது வாழ்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை)
“People say, ‘But Betty, Facebook is a great way to connect with old friends.’ Well, at my age, if I want to connect with old friends, I need a Ouija board.” – Betty Whilte ( Famous Hollywood Actress who lived 99 years)
8) வயது அதிகமானால் ஆசை கரைந்து விடுமா? அந்த நாள் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். – பெட்டி ஒய்ட் – 99 வயது வரை வாழ்ந்த ஹாலிவுட் நடிகை
Does desire melt away with age? I’m waiting for that day to come. – Betty White
9) நான் இருப்பது இரண்டு மாடி வீடு. எனக்கோ நினைவாற்றல் கம்மி. மேலும் கீழுமாக நான் அடிக்கடி ஏறி இறங்குவது என் உடற்பயிற்சி தேவையைப் பூர்த்தி செய்து விடுகிறது. – பெட்டி ஒயிட்
I have a two-story house and a bad memory, so all those trips up and down the stairs take care of my exercise. – Betty White
10) வயதான உடலில் அடைபட்டிருக்கும் இளவயதுக்காரி நான்! – பெட்டி ஒயிட்
I’m a teenager trapped in an old body. – Betty Whilte
11) உன்னுடைய உத்தி எவ்வளவு அழகியதாக இருந்த போதிலும் அவ்வப்பொழுது முடிவையும் நீ பார்க்கத்தான் வேண்டும். வின்ஸ்டன் சர்ச்சில்
However beautiful the strategy, you should occasionally look at the results.– Winston Churchill
12) அவ்வப்பொழுது நீ தோல்வியே அடையாவிடில், நீ புதுமையாக எதையும் செய்யவில்லை என்று அர்த்தம். – உடி ஆலன்
If you’re not failing every now and again, it’s a sign you’re not doing anything very innovative.” – Woody Allen
13) சில பேர்கள் நிஜத்தில் முட்டாள்களாக இருந்து கொண்டு, பழமைவாதிகளாக தாங்கள் இருப்பதாகக் காட்டிக் கொண்டு நல்ல பெயர் சம்பாதித்துக் கொள்கிறார்கள். – கிம் ஹப்பர்ட் Some fellows get credit for being conservative when they are only stupid. – Kim Hubbard
14) நீ சந்திக்கும் ஒவ்வொருவனிடமும் அன்பாயிரு. ஒவ்வொருவனும் இன்னும் அதிகம் கஷ்டமான சண்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ப்ளேட்டோ Be kind, for everyone you meet is fighting a harder battle. – Plato
15)உலகம் மாற்றத்தை வெறுக்கிறது. ஆனால் மாற்றம் ஒன்று தான் முன்னேற்றதைத் தந்துள்ளது. – சார்லஸ் எஃப் கெட்டரிங்
The world hates change yet it is the only thing that has brought progress. – Charles F. Kettering
16) முன்னேறிப் போய்க் கொண்டிருந்தால் நான் எங்கு வேண்டுமானாலும் போகத் தயார் – டேவிட் லிவிங்ஸ்டன் I’ll go anywhere as long as it’s forward. – David Livingstone
17) வாழ்க்கை ஒரு பறவை போல. அது உன் தலையில் எச்சத்தை இடும் வரை அழகாக இருக்கும். – யாரோ Life is like a bird, it’s pretty cute until it shits on your head. – Anonymous
18) யாருக்காவது இன்னொருவர் கொடுக்கக் கூடிய ஒரு பெரிய பரிசை எனது தந்தை எனக்குக் கொடுதார். அவர் என்னை நம்பினார் – ஜிம் வால்வனோ My father gave me the greatest gift anyone could give another person. He believed in me. – Jim Valvano
19) கெட்ட சகவாசத்துடன் இருப்பதை விட தனிமையாக இருப்பதே மிகச் சிறந்தது. – ஜார்ஜ் வாஷிங்டன் It is far better to be alone, than to be in bad company. – George Washington
20) வாழ்க்கையின் துயரமான அம்சமே நாம் சீக்கிரமே வயதானவர்களாக ஆகி விடுகிறோம், மிக தாமதமாகவே அறிவாளிகள் ஆகிறோம் என்பது தான் – பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளின் Life’s tragedy is that we get old too soon and wise too late.– Benjamin Franklin
21) ப்ளான் ஏ வேலை செய்யவில்லை என்றால் எழுத்துக்களில் இன்னும் 25 மீதி இருக்கிறது. அமைதியாக இரு. – யாரோ If Plan A doesn’t work, the alphabet has 25 more letters. Keep calm. – Anonymous
22) இரண்டு மனிதர்களுக்கு இடையே உள்ள மோசமான தூரம் தவறான புரிதலே – யாரோ The worst distance between two people is misunderstanding. – Anonymous
23) எவன் ஒருவன் பிரச்சினையைச் சரியாக விவரிக்கிறானோ அவனே அதைத் தீர்க்க வல்லவன். – டான் ரோம்
Whoever best describes a problem is the one most likely to solve it. – Dan Roam
24) எனது மூளையை மட்டும் நான் பயன்படுத்துவதில்லை. நான் கடன் வாங்கக் கூடிய அனைத்து மூளைகளையும் பயன்படுத்துகிறேன். – உட்ரோ வில்ஸன்
I not only use all the brains I have, but all that I can borrow. – Woodrow Wilson
25) அறிவாளிகள் பொன்மொழிகளை உருவாக்குகிறார்கள். முட்டாள்கள் அதைத் திருப்பிச் சொல்கிறார்கள் – யாரோ Wise men make proverbs, but fools repeat them. – Anonymous
26) முட்டாள்கள் தங்கள் அனுபவத்திலிருந்து பாடம் கற்கிறார்கள். புத்திசாலிகளோ அடுத்தவர்கள் அனுபவத்திலிருந்து பாடம் கற்கிறார்கள். – ஆட்டோ வான் பிஸ்மார்க் Fools learn from experience. Wise men learn from the experience of others. – Otto von Bismarck
27) நான் வீண்விவாதம் செய்யவில்லை. நான் சரிதான் என்பதை விளக்கிக் கொண்டிருக்கிறேன், அவ்வளவு தான்! – யாரோ
I am not arguing. I am simply explaining why I’m right. – Anonymous
28) ஒரு அவுன்ஸ் செயலானது ஒரு டன் தியரியை விட மேல் – ரால்ஃப் வால்டோ எமர்ஸன் An ounce of action is worth a ton of theory. – Ralph Waldo Emerson
29) நாம் இளைஞர்களுக்கான எதிர்காலத்தை எப்போது பார்த்தாலும் உருவாக்க முடியாது. ஆனால் எதிர்காலத்திற்கான நமது இளைஞர்களை நாம் உருவாக்கலாம். – ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் We can’t always build the future for our youth, but we can build our youth for the future.– Franklin D. Roosevelt
30) நல்ல ஒரு யோசனையை நாம் கொள்ள வேண்டுமெனில் நிறைய யோசனைகளை நாம் கொள்வதே சிறந்த வழியாகும் – லினஸ் பாலிங் The best way to have a good idea is to have lots of ideas.” – Linus Pauling
**
புத்தக அறிமுகம் – 91
மாயாலோகம் (பகுதி 1)

பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. காஸினி வெளிப்படுத்தும் விந்தைகள்!
2. கோழிக் குஞ்சிலிருந்து டைனோஸர்!
3. தவறான ஜோதிடத்தால் ஹிட்லரை வீழ்த்திய
ஹிம்லர்! – 1
4. தவறான ஜோதிடத்தால் ஹிட்லரை வீழ்த்திய
ஹிம்லர்! – 2
5. அமெரிக்காவை அலற வைக்கும் வான ஸர்ப்பங்கள்! 9
6. இருபது வருடங்கள் கழித்து – மரணம் இல்லை இனி
மனிதருக்கெல்லாம்!
7. மாஜிக் கலை ரகசியங்கள் அம்பலம்! -1
8. மாஜிக் கலை ரகசியங்கள் அம்பலம்! -2
9. வானத்தில் நிலம் உண்டு! வாங்கலாமா ஒரு கிரவுண்டு?
10. மண்டையோட்டுச் சகோதரிகள் குழு – 1
11. மண்டையோட்டுச் சகோதரிகள் குழு – 2
12. வயலில் மர்ம வட்டங்கள்!
13. அற்புத புருஷர் ஸ்ரீ சத்யசாயி பாபா! – 1
14. அற்புத புருஷர் ஸ்ரீ சத்யசாயி பாபா! – 2
15. அற்புத புருஷர் ஸ்ரீ சத்யசாயி பாபா! – 3
16. ஜேம்ஸ் பாண்ட் ‘007′ ஆனது எப்படி?
17. காலத்தை ஊடுருவி ஒரு பயணம் போகலாமா?
18. காலத்தை ஊடுருவி ஒரு பயணம் போகலாமா? – 2
19. காலத்தை ஊடுருவி ஒரு பயணம் போகலாமா? – 3
20. ஆரேகானில் தோன்றிய அதிசய ஸ்ரீ யந்திரம்!
21. டியோடிஹுவாகானின் சந்திர சூரிய பிரமிடுகள்!
22. 2012ல் உலகப் பேரழிவு ஏற்படும்! எச்சரிக்கை தருகிறது
பழைய நாகரிகம்!!
23. 2012ல் உலகப் பேரழிவு ஏற்படும்! எச்சரிக்கை தருகிறது
பழைய நாகரிகம்!! – 2
24. செவ்வாயில் மனிதன்! ஒபாமாவின் கனவு!!
25. சிரிப்பே சிறந்த மருந்து என நிரூபித்தவர்!
26. அமேஸானை 4200 மைல் நடந்தே கடந்தவர்!*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
This book evolves from a series that was published in a weekly magazine “Bhagya”. This book has been sublimely crafted with episodes on wondrous human beings, peculiar scientific researches and happenings. It also covers unbelievable places, rare occurrences and incredible people. This book is a must for everyone who wants to keep abreast with the latest happenings and serves a perfect gift for children to boost their reading habit.
‘பாக்யா’ வார இதழில் வந்த தொடர் இப்போது நூலாகப் பூத்துள்ளது! விந்தையான மனிதர்கள், விசித்திரமான அறிவியல் ஆராய்ச்சிகள், அறிவியல் நிகழ்வுகள், வினோத இடங்கள், அபூர்வ நிகழ்வுகள், அற்புதப் புருஷர்கள் பற்றிய சுவையான கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு! புதுமையான தகவல்களை அறிய ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாகத் தவற விடக் கூடாத நூல்! குழந்தைகளின் படிக்கும் பழக்கத்தைத் தூண்டுவதற்குப் பரிசளிக்க ஏற்ற நூல்!
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ மாயா லோகம்’ -பகுதி 1’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
**