சங்க இலக்கியத்தில், பகவத் கீதையில், பிரபஞ்ச உற்பத்தி Big Bang, Biggest Number (Post.11,373)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,373

Date uploaded in London – 19 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

இந்துக்கள் மட்டுமே பிரபஞ்சத்தின் தோற்றத்தை (Big Bag) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னார்கள் . இது ரிக் வேதத்தில் பிரபஞ்ச உற்பத்தி (Creation Hymn in Rig Veda ரிக் வேதம் 10-129) பற்றிய கவிதையில் உள்ளது.  ஆயினும் பகவத் கீதை ஒரு படி மேலே சென்று பிரபஞ்ச அழிவு அல்லது ஒடுக்கம் (Big Crunch) பற்றியும் பகர்கிறது. அத்தோடு நில்லாமல் கால அளவையும் (Time Scale) சொல்கிறது

இதை ஆங்கிலத்தில் பிரபஞ்ச வெடிப்பு அல்லது பிரபஞ்சத் தோற்றம் Big Bang என்பர். பிரபஞ்ச ஒடுக்கம்  Big Crunchபற்றி அவர்கள் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் அதற்கான தடயம் இப்போது தென்படவில்லை என்பது அவர்களுடைய வாதம். ஆனால் விண்மீன்கள் என்றாலே என்ன என்று அவர்களுக்குத் தெரியாதபோதே நாம் பஜனைப்பாடல்களிலும் பகவத் கீதையிலும் ஆயிரம் சூரியன்கள் (Divi Surya Sahasrasya in BG) பற்றிக் கதைத்து விட்டோம் . விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் சஹஸ்ரகோடி யுக தாரிணே என்ற வரி வருகிறது. அதை எல்லாம் கூட பிற் காலச் சேர்க்கை என்று கருதுவோருமுளர். ஆகையால் பகவத் கீதையிலும் சங்க இலக்கியத்திலும் வரும் விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ஆராய்வோம்.

BIGGEST NUMBER IN SANGAM TAMIL LITERATURE

உலகிலேயே பெரிய எண் பகவத் கீதையிலும் பதிற்றுப்பத்து நூலிலும்தான் உள்ளது.

முதலில் பதிற்றுப்பத்து பாடலைக் காண்போம். பிராமணப் புலவர் கபிலர் , சேர மன்னன் செல்வக் கடுங்கோ ஆழியாதனைப் பாராட்டுகையில் அவனை ஆயிரம் வெள்ளம் ஊழி (1000 ChaturyugaX Vellam) காலம் வாழ்க என்கிறார்

செல்வக் கோவே! சேரலர் மருக!

கால்திரை எடுத்த முழங்கு குரல் வேலி

நனந் தலை உலகம் செய்த நன்று உண்டெனின்

அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல்

ஆயிர வெள்ள ஊழி

வாழி யாத ! வாழிய பழவே 63-20

பரிபாடலில் பிரபஞ்சத் தோற்றமும் ஒடுக்கமும் பல பாடல்களில் வருகின்றன

பரி 2-1/4; 2-1/12

பதிற்றுப் பத்திலும் 72-8ல் ஒடுக்கம் பற்றி வருகிறது

சதுர் யுகத்தைக் குறிக்கவும் ஊழி பயன்படுகிறது -பரி  3-80

மேலும் தோற்றத்தின்போதும் ஒடுக்கத்தின்போதும் என்ன வரிசையில் அது நிகழும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை மேலை நாட்டு விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ளும் காலம் வெகு தலைவில் இல்லை. புறம் 51-ல் இளங்கீரனார் பாட்டிலும் இதைக்  காணலாம். முதலில் வெளி Space, பின்னர் வளி Wind/Star dust , தீ Fire , நீர் Water , நிலம் Land/Earth என்ற வரிசையை விஞ்ஞான  முறைப்படி கூறுகின்றனர்.

இதில் குறிப்பாக கபிலர் சொல்லும் எண் மிகப்பெரியது. ஆம்பல் என்னும் சொல்லைச் சொல்லி விட்டு மற்றோரு எண் ஆகிய  வெள்ளம் என்னும் எண்ணைச் சொல்கிறார்.

இரண்டாவது உலகத் தமிழ்நாட்டின்போது சா.கணேசன் தலைமையில் அறிஞர்கள் வெளியிட்ட கையேடு இந்த  எண்ணை விவரிக்கிறது : 1 என்ற எண்ணுக்குப்பின்னால் 16 பூஜ்யங்களைப் போடவேண்டும் ; அதைப்போல ஆயிரம் யுகம் அல்லது 1000 சதுர் யுகம் என்று இரு வகையிலும் பொருள் கொள்ளலாம். இதை சரியெனக் காட்டும் ஸ்லோகம் பகவத் கீதையில் வருகிறது. அதை மனதிற்கொண்டே பிராமண கபிலர், சம்ஸ்க்ருத மன்னன் இப்படிப் பாடியிருக்க வேண்டும்

Following is from my English article Tamil Hindu Encyclopaedia:

‘Vellam’ literally meant Flood or Water.

Vellam in mathematical jargon means

1 followed by 16 zeros

1,0000000000000000

(see page 275 of Second World Tamil Conference Hand Book)

Brahmin poet Kabilar used this number with 1000 UUzi(Chatur Yuga)

That means 1000X4,320,000X1,0000000000000000

Years.

Xxx

கீதை ஸ்லோகங்களில் Big Bang, Big Crunch, Biggest Number

கீதையிலும் கண்ணன் இதைக் கதைக்கிறார் ; கீழ்க்கணட ஸ்லோகங்களில் பிரம்மாவின் பகலில் பிரபஞ்சம் தோன்றுவதும் பிரம்மாவின் இரவில் அது ஒடுங்குவதும் சொல்லப்படுகிறது. பகவத் கீதை எழுதி 2500 ஆண்டுகள் ஆகிவிட்டதாக வெள்ளைக்காரர்கள் கதைப்பார்கள். நாமோ அது 5150 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண பரமாத்மா சொன்னது என்பதை பஞ்சாங்கம் மூலம் அறிகிறோம்.

सहस्रयुगपर्यन्तमहर्यद्ब्रह्मणो विदुः ।
रात्रिं युगसहस्रान्तां तेऽहोरात्रविदो जनाः ॥८- १७॥

ஸஹஸ்ரயுக³பர்யந்தமஹர்யத்³ப்³ரஹ்மணோ விது³: |
ராத்ரிம் யுக³ஸஹஸ்ராந்தாம் தேऽஹோராத்ரவிதோ³ ஜநா: || 8- 17||

பிரம்மாவுக்கு ஆயிரம் யுகம் ஒரு பகல்; ஆயிரம் யுகம் ஓரிரவு.; இதையறிந்தோரே இராப் பகலின் இயல்பறிவார்.


अव्यक्ताद्व्यक्तयः सर्वाः प्रभवन्त्यहरागमे ।
रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके ॥८- १८॥

அவ்யக்தாத்³வ்யக்தய: ஸர்வா: ப்ரப⁴வந்த்யஹராக³மே |
ராத்ர்யாக³மே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே || 8- 18||

பிரம்மாவின் பகல் தொடங்கும் போது எல்லா விதமான சராசர தொகுதிகளும்
மறைவுபட்ட உலகத்தினின்றும் வெளிப்படுகின்றன (BIG BANG) ; இரவு வந்தவுடன்
அந்த மறைவுலகத்திலேயே மீண்டும் மறைகின்றன (BIG CRUNCH)

Thanks to http://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-8

இந்த இடத்தில் அந்த எண்ணை மட்டும் எடுத்து கபிலர் பாட்டுடன் ஒப்பிடுவோம் .

பிரம்மாவின் பகல் 1000 யுகம்

பிரம்மாவின் ஒரு இரவு 1000 யுகம்

இது அவருடைய ஒரு நாள். அவருடைய வாழ்நாள் – 100 ஆண்டு x  365 நாட்கள் x 2000 சதுர் யுகம் x 4,320,000

இதை ஒரு பரம் என்று அழைப்பர் (காண்க – பகவத் கீதை- அண்ணா உரை- பக்கம் 216; ராமகிருஷ்ண மடம், சென்னை

மேற்கூறிய எண்ணுக்கு இணையான நம்பர் உலகில் வேறு எந்த நூலிலும் இல்லை. இதை ஒரு காகிதத்தில் எழுத முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்

 இப்படிப்பட்ட ஒரு இடம் பிரபஞ்சத்தில் ஓரிடத்தில் உள்ளது. அதை நாம் பிரம்ம லோகம் அல்லது சத்ய லோகம் என்போம். அதையும் தாண்டி வைகுண்டம் உளது. பிரம்ம லோகம் வரை சென்று வருவோருக்கு மறு பிறப்பு உண்டு. அதற்கு மேல் இல்லை என்ற வியப்பான செய்தியையும் கிருஷ்ணன் செப்புகிறார்.

பகவத் கீதை ஆன்மீக நூல் மட்டும் அல்ல. விண்வெளி இயல், வெளி உலக வாசிகள் இயலும் கூட.

 –subham–tags- பெரிய எண் , வெள்ளம், ஆயிரம் ஊழி, பிரபஞ்ச , தோற்றம், ஒடுக்கம், கபிலர், கீதை 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: