
Post No. 11,370
Date uploaded in London – – 19 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
யாரை எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை அறிந்து கொள் – தவறான மனிதரைக் கோபத்திற்குள்ளாக்காதே!
ச.நாகராஜன்
ராபர்ட் க்ரீன் எழுதியுள்ள தி 48 லாஸ் ஆஃப் பவர் (Robert Greene – The 48 Laws of Power) வெற்றிக்கான விதிகளைச் சொல்லும் புத்தகம்.
இது சர்ச்சைக்கு உள்ளான புத்தகம்; கடுமையாக விமரிசிக்கப்பட்ட புத்தகம் – இது கூறுகின்ற வழி முறைகளால்! அமெரிக்காவில் சிறைகளில் தடை செய்யப்பட்ட புத்தகமும் கூட.
இப்போது நாம் பார்க்கப் போவது அவர் கூறும் 19வது விதி. யாரை எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை அறிந்து கொள் – தவறான மனிதரைக் கோபத்திற்குள்ளாக்காதே! (Know who you are dealing with – Do not offend the Wrong Person) என்பது அவர் கூறும் விதி.
முன்னேற்றப் படிகளில் வேகமாக ஏற விழையும் ஒருவர் ஐந்து விதமான நபர்களைப் பார்க்கிறார்.
1. The Arrogant and Proud Man – திமிர் பிடித்த கர்வம் கொண்ட மனிதர்.
2. The Hopeless insecure Man – நம்பிக்கையற்ற ஆதரவற்ற மனிதர்
3. Mr. Suspicion – சந்தேகப் பேர்வழி
4; The Serpent with a Long Memory நீண்ட காலம் நினைவை வைத்திருக்கும் பாம்பு
5. The Plain, Unassuming and Often Unintelligent Man – எளிய, மனதில் முன்னதாகவே அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்ளாத, பெரும்பாலும் புத்திசாலியாக இல்லாத மனிதர்.
இவர்களை முதலில் இனம் கண்டு கொள்ள வேண்டும். தவறான மனிதர்களை உரசி விட்டால் பின்னால் அது பெரிய ஆபத்தாக முடியும்.
இதில் அவர் பல உதாரணங்களை எடுத்துக் காட்டுகிறார். இரண்டு சம்பவங்களை இங்கு பார்ப்போம்.
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு. இன்றைய சீனா – அன்று சின் (Chin)என்று அழைக்கப்பட்டது. அதன் இளவரசன் சுங்- எர்.(Chung -erh) ஒரு சமயம் நாட்டை விட்டுத் தலைமறைவாக வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
மிக ஏழ்மையான நிலையில் இருந்த . அந்த இளவரசன் எப்போது தனது அரசுரிமை தனக்குக் கிடைக்கும் என்று சந்தர்ப்பம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.
ஒரு சமயம் செங் மாகாணத்தின் வழியே அவன் சென்று கொண்டிருந்தான். செங்கை ஆண்டு வந்த அரசனை அவன் சந்திக்க, அந்த அரசனோ அவனை மிகவும் கேவலமாக நடத்தினான்.
அரசனின் அமைச்சர், “மன்னரே! இவர் யார் தெரியுமா. சீனாவின் இளவரசர். இவரிடம் இப்படி கடுமையாகவும் அவமரியாதையாகவும் நடந்து கொள்ளக் கூடாது. இவரிடம் மரியாதையாக நடந்து கொண்டால் இவர் நமக்கு உதவி அளிக்கும் காலம் வரும் போது அது நமக்கு நன்மை பயக்கும்” என்று அறிவுரை கூறினார்.
ஆனால் அந்த அரசனோ அதைக் கேட்காமல் இன்னும் கேவலமாக இளவரசனைத் திட்டினான்.
அமைச்சரோ, “மன்னா! ஒன்று மரியாதையாக நடத்துங்கள், அல்லது இவரைக் கொன்று விடுங்கள்” என்றார்.
ஆனால் அவனோ இளவரசனைத் திட்டி அனுப்பி விட்டான்.
காலம் மாறியது. இளவரசன் சமயம் பார்த்து சீனாவின் அரசுரிமையைப் பிடித்து மன்னரானான்.
தான் ஒளிந்திருந்த கால கட்டத்தில் தனக்கு உதவியவர்களையும் அவன் மறக்கவில்லை; அதே போல தன்னை இழிவாக நடத்தியவர்களையும் அவன் மறக்கவில்லை.
செங்கின் மீது படையெடுத்து தன்னை அவமதித்த அந்த அரசனின்னது எட்டு மாகாணங்களையும் பிடித்து அவனை நாட்டை விட்டே விரட்டினான்.
ஆகவே எதிரிலிருப்பவர் யாரென்று நன்கு ஆராயாமல் ஒருவரை நாம்
நினைத்தபடி நடத்தக் கூடாது.
இன்னொரு சம்பவம்.
இது ஹென்றி ஃபோர்ட் வாழ்க்கையில் நடந்தது.
வெள்ளந்தியான மனிதர் ஃபோர்ட். ஆனால் ஆகப் பெரும் பணக்காரர்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் கலை ஓவியங்கள் விற்பதிலும் அதை வாங்குவதிலும் பெரும் சுணக்கம் ஏற்பட்டது.
இதனால் இதை விற்கும் மிகப் பெரும் வணிகர்கள் ஐந்து பேர் ஒன்று கூடினர்.
ஜோஸப் டுவீன் (Josehp Duveen) என்பவர் இந்த ஐந்து பேரில் பெரும் வணிகர்.
அவருக்கு ஒரு யோசனை உதித்தது.
மிகச் சிறந்த நூறு கலை படைப்புகளைப் படம் பிடித்து அவர் மூன்று தொகுதிகள் கொண்ட புத்தகங்களாக ஆக்கினார்.
ஹென்றி ஃபோர்டிடம் குழு சென்றது. டுவீன் கலைப் படைப்புத் தொகுதிகளை அவரிடம் கொடுத்தார்.
பக்கம் பக்கமாக அதைப் பார்த்த ஃபோர்டு வியந்து போனார். “அடடா, அற்புதம், ஆனால் இந்தப் புத்தகங்களின் விலை அதிகமாக இருக்கும் போல இருக்கிறதே” என்று சொன்னார்.
டுவீனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
இதெல்லாம் உங்களுக்குத் தான். விலையெல்லாம் இல்லை. அசல் ஓவியங்கள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டத் தான் உங்களுக்காக இதைத் தயாரித்தோம்” என்றார் டுவீன்.
“ஆஹா! இப்படிப்பட்ட புத்தகங்களை நான் எப்படி இலவசமாகப் பெற முடியும்?” என்றார் ஃபோர்ட்.
கலைப் படைப்புகளை விற்பதற்காக வந்த தங்கள் நோக்கத்தை மெல்ல மெல்ல டூவீன் அவரிடம் எடுத்துரைத்தார்.
“அப்படிப்பட்ட அரும் ஓவியங்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது! இதோ இந்த புத்தகங்களில் இருப்பதே போதுமே. எவ்வளவு பிரமாதமாக இருக்கிறது!” என்றார் போர்டு.
அத்துடன் அந்த உரையாடல் முடிந்தது.
பல லட்சம் டாலரை எதிர்பார்த்து வந்த அவர்கள் தாங்கள் எப்படிப்பட்டவரை எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தெரியாததால் வெறுங்கையோடு வெளியேறினர்.
வெள்ளந்தியான மனிதரான ஃபோர்டு சிரித்தார்.
ஆக முதலில் நாம் பார்த்த இளவரசன் நான்காம் வகை மனிதர் – The Serpent with a Long Memory நீண்ட காலம் நினைவை வைத்திருக்கும் பாம்பு
அடுத்து நாம் பார்த்த ஃபோர்டோ ஐந்தாம் வகை – The Plain, Unassuming and Often Unintelligent Man – எளிய, மனதில் முன்னதாகவே அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்ளாத, பெரும்பாலும் புத்திசாலியாக இல்லாத மனிதர்.
ஆகவே யாரை எதிர்கொள்ளப் போகிறோம் என்பதில் எப்போதும் எச்சரிக்கை தேவை – இதுவே வெற்றிக்கான 19வது விதி.
***

புத்தக அறிமுகம் – 90
அனைவருக்கும் ஆரோக்கியம் (பாகம் 3)
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. முகப் பருக்களை நீக்கி சரும அழகைப் பாதுகாப்போம் : புதிய
ஆய்வுகள் காட்டும் வழி!
2. உணவுத்திட்ட துணை உணவுகள் பற்றி ஒவ்வொருவரும் அறிய
வேண்டிய ஐந்து விஷயங்கள்! – முதல் பகுதி
3. உணவுத்திட்ட துணை உணவுகள் பற்றி ஒவ்வொருவரும் அறிய வேண்டிய ஐந்து விஷயங்கள்! – இரண்டாம் பகுதி
4. உணவுத்திட்ட துணை உணவுகள் பற்றி ஒவ்வொருவரும் அறிய வேண்டிய ஐந்து விஷயங்கள்! – மூன்றாம் பகுதி
5. கல்லீரலையும் மூளையையும் பாதுகாக்கும் அற்புத மூலிகை
6. மைக்ரேனைத் தடுக்கும் விதம்- 1அமில-கார சமச்சீர் நிலை வேண்டும்
7. மைக்ரேனைத் தடுக்கும் விதம்- 2 அமில-கார சமச்சீர் நிலை வேண்டும்
8. எளிதில் தூக்கம் வரவில்லையா? இதோ இருக்கிறது தூக்கம் வர வழிகள்! 9. எளிதில் தூக்கம் வரவில்லையா? இதோ இருக்கிறது தூக்கம் வர வழிகள்! – 2 10. வாழும் போது தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்!
11.ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 1
12.ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 2
13.ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 3
14.நினைவாற்றலைக் கூட்டச் சின்னச் சின்ன வழிகள்!
15. ஆரோக்கிய மேம்பாட்டைத் தரும் உபவாசத்தின் அற்புத மஹிமைகள்!
16. வெண்டைக்காயின் மகிமை – 1
17. வெண்டைக்காயின் மகிமை – 2
18. டயாபடீஸ் அபாயத்தைக் குறைக்கும் காப்பி!
19. ஆரோக்கியத்திற்கு உதவும் ஏழு இன்றியமையாத பொருள்கள்! 20.மலேரியா நோயை ஒழிக்க விஞ்ஞானிகளின் புதிய வழி!
பாலியல் பகுதி
21. செக்ஸ் உறவில் பழக்கப்பற்று 22. குறைவான டெஸ்டோஸ்டெரோனும் செக்ஸ் இயக்கமும்
23. டயாபடீஸும் செக்ஸும் – உங்கள் மாஜிக் கவர்ச்சியை மீண்டும் பெறுங்கள்- 1 24. டயாபடீஸும் செக்ஸும் – உங்கள் மாஜிக் கவர்ச்சியை மீண்டும் பெறுங்கள்- 2 25. செக்ஸ் பற்றிய கருத்துக்கள் : உண்மையா? பொய்யா? – 1 26. செக்ஸ் பற்றிய கருத்துக்கள் : உண்மையா? பொய்யா? 2 27. செக்ஸ் தெராபியும் ஆலோசனையும் 28. விறைப்புத்தன்மை இன்மை பற்றிய ஏழு மூட நம்பிக்கைகள்
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
This work follows the AROKKIYAM PART I AND PART II for all. Many articles on physical health and mental health find a place in this book. Articles on Sex on a scientific basis found in the book should be read and be benefitted by all. On the information on sex, what are true and what is not explained clearly based on science is the book’s specialty. Articles incorporating important inputs on the chemicals that affect the diabetics and how lady’s fingers help the sugar patients are usefully found in the book. Useful articles on how honey helps enjoying family life, thoughts that enslave a man to sex, whether several prevalent opinion on sex are right or wrong etc giving clarity to the readers find a place.
அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 1 மற்றும் பாகம் 2 ஐத் தொடர்ந்து பாகம் 3 வெளியாகிறது. உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் தொடர்பாக பல கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பாலியல் குறித்து அறிவியல் நோக்கிலான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பாலியல் பற்றிய தகவல்களில் உண்மைத் தகவல்கள் எவை?, பொய்யானவை எவை? என்பதை அறிவியல் தரும் விளக்கத்தின் மூலம் தெளிவுபடுத்தும் கட்டுரைகள் இடம்பெற்றிருப்பது நூலின் தனிச் சிறப்பாகும். வேதியல் பொருட்கள் எவ்வாறு சர்க்கரை நோயாளிகளைப் பாதிப்படைய செய்கின்றன? என்னும் விழிப்புணர்வு சார்ந்தும், சர்க்கரை நோயாளிகளின் உடல் நலத்திற்கு வெண்டைக்காய் எவ்வாறு உதவுகின்றன? என்னும் அரிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன, இல்லற உறவு இனிக்க உதவுகிறது தேன், மனிதனை செக்ஸுக்கு அடிமையாக்கும் எண்ணங்கள், மற்றும் செக்ஸ் பற்றிய கருத்துக்கள் உண்மையா?, பொய்யா??என்பதை விரிவாக விளக்கி நம் அறிவைத் தெளிவுபடுத்தும் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன.*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அனைவருக்கும் ஆரோக்கியம்’ -பாகம் 3’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
**