இந்தியாவின் மகத்தான சாதனை ஐ.என்.எஸ். விக்ராந்த்! (Post.11,374)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,374

Date uploaded in London – –    20 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியாவின் மகத்தான சாதனை ஐ.என்.எஸ். விக்ராந்த்!

ச.நாகராஜன்

இந்தியாவின் மகத்தான சாதனைகளுள் ஒன்றாகத் திகழும் ஐ.என்.எஸ்,விக்ராந்த் நமது பாரத கடற்படையிடம் தரப்பட்டது.

2022 செப்டம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அதை பாரத பிரதமர் திரு மோடிஜி அவர்கள் கடற்படையிடம் தந்தார்.

ஒரு கப்பலைக் கட்டுவது பெரிய சாதனை என்று சொல்ல முடியுமா என்று சிலர் நினைக்கலாம்.

ஆகவே தான் அதைப் பற்றிய விவரங்களை அறிதல் இன்றியமையாததாக ஆகிறது.

ஐ.என்.எஸ். விக்ராந்த் ஒரு மிதக்கும் விமான தளம். அது ஒரு மிதக்கும் நகரம்.

அதன் நீளம் 262 மீட்டர் அதாவது 859.58

அதன் அகலம் 62 மீட்டர் அடி. (203.41 அடி.)

அதில் 30 போர் விமானங்களை நிறுத்தலாம்.

அந்தக் கப்பலில் உள்ள 76 சதவிகித பாகங்கள் இந்தியாவிலேயே 500 நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டன. இதை பி.பி,சியே சொல்கிறது!

இந்தப் போர்க்கப்பல் இரண்டு கால்பந்து மைதானம் அளவிற்குச் சமமாகப் பெரிய ஒன்று.

18 அடுக்கு மாடிகள் கொண்டது இது.

இதில் 2400 பிரிவுகள் – compartments – உள்ளன. பெண் அதிகாரிகளுக்காகவும் பெண் மாலுமிகளுக்காகவும் இதில் தனி அறைகள் உள்ளன.

இதில் உள்ள ஏவியேஷன் ஹாங்கர் (Aviation Hangar) இரண்டு ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவிற்குப் பெரியது.

இதில் உள்ள சமையலறையில் மணிக்கு 3000 ரொட்டிகளைத் தயார் செய்யலாம். அவ்வளவு பெரிய சமையலறை! 3 பெரிய உணவருந்தும் விசாலமான சாப்பாட்டு அறைகள் உள்ளன. இங்கு காபி-வெண்டிங் மெஷின்கள் உள்ளன. மேஜை நாற்காலிகள் தாராளமாக உள்ளன.

ஒரே சமயத்தில் 600 பேர் உணவருந்தலாம்.

ரஷிய  மிக் 29 K ரக விமானங்களை இங்குள்ள ஹாங்கரில் நிறுத்தலாம். இதில் போர் கால எச்சரிக்கைக் கருவிகள் ஏராளமாக உள்ளன. Kamov 31 மற்றும் அமெரிக்க MH 60R ரக அதி நவீன ஹெலிகாப்டர்களை இங்கு நிறுத்திக் கொள்ளலாம். அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர் மற்று லை காம்பாட் ஏர்க்ராப்டை இதில் வைத்துக் கொள்ள முடியும்.

1600 பேர்கள் இந்தக் கப்பலில் பணி புரிகின்றனர்.

1957இல் முதலில் இங்கிலாந்திலிருந்து வாங்கப்பட்ட ஹெர்குலிஸ் என்று பெயருள்ள ஹர் மெஜஸ்டிஸ்  ஷிப் 1961இல் பாரத கடற்படையில் சேர்க்கப்பட்டது. அந்த விமானம் தாங்கி கப்பலுக்கு அப்போது   விக்ராந்த் என்று பெயர் சூட்டப்பட்டது. அதையொட்டி இந்தப் பெயர் இந்த அதி நவீனமாய வடிவமைக்கப்பட்டக் கப்பலின் பெயராக அமைந்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் போர் 1971இல் நடைபெற்றா போது இது அரும்பணி ஆற்றியது.

அந்தப் போரில் இதன் சாகஸங்கள் தனி ஒரு வரலாற்றைப் படைத்தவை.

இந்தக் கப்பல் இப்போது உலகினர் வியக்கும் படி இந்திய கடற்படை அணியில் சேர்க்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்குப் பெருமை தரும் ஒரு பெரிய நிகழ்வாகும்.

வாழ்க நமது கடற்படை! வாழிய பாரதம்! வாழிய நமது சேனாவீரர்கள்!

***

 புத்தக அறிமுகம் – 92

மாயாலோகம் (பாகம் 2)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. வியப்பூட்டும் தற்செயல் ஒற்றுமைகள்! – 1   

 2. வியப்பூட்டும் தற்செயல் ஒற்றுமைகள்! – 2   

 3. வியப்பூட்டும் தற்செயல் ஒற்றுமைகள்! – 3   

 4. வியப்பூட்டும் தற்செயல் ஒற்றுமைகள்! – 4   

 5. எண்ணியதை எண்ணியவுடனேயே செய்யும்  அதிசய கணிணி!    

 6. மின்னல் மன்னன் டாமி காருதர்! 

 7. எதிர்கால விண்வெளிப் போர்கள்! 

 8. ஐன்ஸ்டீன் மூளையின் அதிசயப் பயணம்! – 1

 9. ஐன்ஸ்டீன் மூளையின் அதிசயப் பயணம்! – 2

10. ஐன்ஸ்டீன் மூளையின் அதிசயப் பயணம்! – 3

11. ரத்தம் உறிஞ்சும் சுபாகாப்ரா!

12. பாதாள நகரம் டெரின்குயு!  

13. வந்து விட்டது மூளையியல் விற்பனை!

14. 200 நிமிடங்கள் அந்தரத்தில் நின்று சாதனை! 

15. அமெரிக்க ரகசியம்! – 1

16. அமெரிக்க ரகசியம்! – 2

17. அமெரிக்க ரகசியம்! – 3

18. விஞ்ஞானியின் எச்சரிக்கை: அயல்கிரகவாசி இருக்கிறான்! ஆனால்  

   அபாயகரமானவன்!!    

19. அதிசய புருஷர் தலாய்லாமா – 1 

20. அதிசய புருஷர் தலாய்லாமா – 2 

21. அதிசய ரொபாட்டும் பறக்கும் சப்மரீனும்-1   

22. அதிசய ரொபாட்டும் பறக்கும் சப்மரீனும்-2   

23. சந்திரனை அடைய விண்வெளி தூக்கி! 

24. நிரந்தரமாக உயிர் வாழ பழைய மூளை; புதிய உடல்!  

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

This book is a treasure that contains the information about mysterious men, places and events. A few of the interesting chapters are Blood drinking Subakaapraa, Brainology Market, The astronaut lift for Moon etc. The book is the second part of a collection of articles called Mayagolam which was published in Tamil weekly Bhagya.

‘பாக்யா’ வார இதழில் வெளிவந்த தொடரின் இரண்டாம் பாகம் நூலாகப் பூத்துள்ளது. விசித்திரமான மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகளைப் பற்றிப் பேசும் நூல்! ‘ரத்தம் உறிஞ்சும் சுபாகாப்ரா’, ‘மூளையியல் விற்பனை’, ‘சந்திரனை அடைய விண்வெளித் தூக்கி’ என நூலின் அத்தியாயங்கள் பிரமிக்கச் செய்கின்றன. படித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இந்நூல். 

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ மாயா லோகம்’ -பாகம் 2’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: