
Post No. 11,381
Date uploaded in London – 21 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
நேற்று வெளியான கட்டுரையின் இரண்டாவது பகுதியைக் காண்போம்.
அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ அவனைச் சுடக்கூடாது என்று சீதா தேவி வெளியிட்ட வேண்டுகோளை அக்கினி பகவான் ஏற்றான் . ஏனெனில் அவள் கற்புக்கரசி.; மனம், மொழி, மெய் மூன்றின் மூலம் வேறு ஆடவணை நினையாத பெண்களுக்கு அற்புத சக்தி உண்டு என்று வள்ளுவனும் சொன்னான்.
சீதையின் ஸ்லோகங்களை வால்மீகி முனிவரின் வாயிலாகத் தொடர்ந்து பார்ப்போம்:- இவை சுந்தர காண்டத்தில் வரும் ஸ்லோகங்கள்
श्रुत्वा तद्वचनं क्रूरमात्मापहरणोपमम्।।5.53.26।।
वैदेही शोकसन्तप्ता हुताशनमुपागमत्।
ச்ருத்வா தத் வசனம் க்ரூர ஆத்மாப ஹரணோ உபமம்
வைதேஹி சோக ஸந்தப்தா ஹுதாசன உபாகமத்
(உன்னுடன் பேசிய செம்முகக் குரங்கின் வாலில் அரக்கர்கள் தீ மூ ட்டிவிட்டனர் என்ற) செய்தியைக் கேட்ட சீதா தேவி துயரத்தில் துடித்தாள் ; தன்னைக் கடத்தியது போல இதுவும் (ராவணனின் ) கொடூர செயல் என்னு கருதினாள் . அக்கினி பகவானுக்கு வேண்டுகோள் விடுத்தாள்
(கண்ணகி அழைத்தவுடன் அக்கினி பகவான், பிராமணன் வடிவில் அவள் முன் தோன்றி ‘தாயே கட்டளை இடுங்கள்’ என்று வணங்கியதாக இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் இயம்பியதை இங்கே ஒப்பிடலாம் )
xxx
मङ्गलाभिमुखी तस्य सा तदाऽसीन्महाकपेः।।5.53.27।।
उपतस्थे विशालाक्षी प्रयता हव्यवाहनम्।
மங்களஅபிமுகி தஸ்ய ஸா ததாஸ் ஸீன் மஹா கபேஹே
உபதஸ்தே விசாலாக்ஷி ப்ரயதா ஹவ்யவாஹனம்
பெரிய குரங்கின் (அனுமனின்) உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்று கருதிய, அகன்ற கண்களைக் கொண்ட சீதை , இருதயபூர்வமாக அக்கினி தேவனை வேண்டினாள்
மஹா கபி = பெரிய குரங்கு/அனுமன் ; விசால அக்ஷி = அகன்ற/ அழகிய கண்களை உடைய ; ஸா = அவள்/சீதை ; ஹவ்யவாஹனம் = அக்கினி தேவன் ; பிராமணர் அளிக்கும் அவியை /ஹவிஸை இறைவனுக்கு சுமந்து செல்லுவோன். pray / prayer என்ற ஆங்கிலச் சொற்கள் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்றன. தமிழில் பிரார்த்தனை என்கிறோம்
Xxx
यद्यस्ति पतिशुश्रूषा यद्यस्ति चरितं तपः।
यदि चास्त्येकपत्नीत्वं शीतो भव हनूमतः।।5.53.28।।
யத்யஸ்த்தி பதி சுஷ்ரூஷா யத்யஸ்த்தி சரிதம் தபஹ
யாதி சாஸ்யேகபத்நீத்வம் சீதோ பவ ஹநூமதஹ
ஓ , அக்கினி தேவனே ! நான் என் கணவனுக்கு உரிய பணிவிடை செய்திருப்பேன் ஆகில், நான் பெண்களுக்குரிய விரதங்களைக் கடைப்பிடித்திருப்பேன் ஆகில், என்னுடைய கணவன் ஒருவனிடத்தில் மட்டுமே விசுவாசம் செலுத்தியிருப்ருப்பேன் ஆகில் , அனுமன் இடத்தில் நீ குளிர்ச்சியாக இருப்பாயாகுக
பதி =கணவன் ; சுஷ்ரூசை = பணிவிடை ; சீத = குளிர்ச்சி ; நாம் சீதோஷ்ணம்/தட்ப வெப்பம் என்று சொல்லுவோம் ; பவ = இருப்பாயாகுக ; ஏக பத்நீத்தவம் = ஒருவனுக்கு ஒருத்தி கொள்கை
(இந்த இடத்தில் அப்பர் பெருமானை நாம் நினைவு கூறுதல் பொருத்தம்; மஹேந்திர வர்மன் (600 CE ) என்ற பல்லவ மன்னன், அப்பரை சுண்ணாம்புக் காளவாயில் தூக்கி எறிந்த போது அவர் ‘நம சிவாய ‘என்று சொன்னவுடன் ,அக்கினி அவரைத் தொடவில்லை )
xxxx

यदि किञ्चिदनुक्रोशस्तस्य मय्यस्ति धीमतः।।5.53.29।।
यदि वा भाग्यशेषो मे शीतो भव हनूमतः।
யதி கிஞ்சித் அனுக்ரோசஸ் தஸ்ய மய்யஸ்தி தீமதஹ
யதி வா பாக்ய சேஷோ மே சீதோ பவ ஹனூமதஹ
என்னிடத்தில், அறிவில் சிறந்த ராமனுக்கு, சிறிதளவாவது கருணை இருக்கும் என்றால் , எனக்கு கொஞ்சமாவது அதிர்ஷ்டம் இருக்கிறது என்றால் ; அனுமன் இடத்தில் குளிர்ச்சியைக் காட்டுவாயாக (அவனைச் சுடாதே )
xxxx
यदि मां वृत्तसम्पन्नां तत्समागमलालसाम्।।5.53.30।।
स विजानाति धर्मात्मा शीतो भव हनूमतः।
யதி மாம் வ்ருத்த ஸம்பன்னாம் தத் ஸமாகமலாலஸாம்
ஸ விஜா னாதி தர்மாத்மா சீதோ பவ ஹனூமதஹ
இராமபிரான் நேர்மையானவன் என்றால், நான் தூய்மையானவள் என்றால் , நான் என் கணவனுடன் மீண்டும் சேரவேண்டும் என்று உண்மையாக நினைப்பவள் என்றால் , அனுமனிடத்தில் குளிர்ச்சியைக் காட்டு
(மற்றவர் துயரப்படும்போது, ஒரு நல்ல உள்ளம் படைத்த பெண்ணின் மனதில் என்ன தோன்றும் என்பதற்கு சீதை உதாரணம். அவள் தன்னுடைய தவ வலிமை மட்டுமின்றி ராமனின் தவ வலிமையையும் உரிமையுடன் பயன்படுத்தி, அனுமனைக் காப்பாற்றுகிறாள் )
Xxxx
यदि मां तारयेदार्यस्सुग्रीवः सत्यसङ्गरः।।5.53.31।।
अस्माद्धुःखाम्बुसंरोधाच्छीतो भव हनूमतः।
யதி மாம் தாரயே தார்யஸ் ஸுக்ரீவஹ ஸத்யஸ ங்கரஹ
அஸ்மாத் துக்காம்புஸரோதாச் சீதோ பவ ஹனூமதஹ
சுக்ரீவன், அவன் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவானேயாகில் , அவன் என்னை இந்தத் துன்பக் கடலிலிருந்து மீட்பானேயாகில் அனுமனிடத்தில் குளிர்ச்சியைக் காட்டு
Xxxx
ततस्तीक्ष्णार्चिरव्यग्रः प्रदक्षिणशिखोऽनलः।।5.53.32।।
जज्वाल मृगशाबाक्ष्या श्शंसन्निव शिवं कपेः।
ததஸ் தீக்ஷ் ணார்ச்சிரவ்யக்ரஹ ப்ரதக்ஷிண சிகோ அனலஹ
ஜஜ் ஜ்வால ம்ருகசாபாக்ஷயா சசம் ஸன்னிவ சிவம் கபேஹே
(இப்படி சீதை பிரார்த்தனை செய்தவுடன் ) எரியும் சுவாலை (அக்கினி தேவன்) மான்விழி உடைய சீதையை நோக்கி வலமாக வந்தது அனுமனுக்கு அக்கினி தேவன் மங்களத்தையும் பாதுகாப்பையும் நல்குவான் என்று உணர்த்தியது .
(இந்த இடத்தில் சகுன சாஸ்திரத்ததைக் காண்கிறோம்; தமிழ்த் திரைப்படங்களில் கூட ஒருவர் இறப்பதைக் காட்ட, டைரக்டர்கள் விளக்கு அணைவதைக் காட்டுகிறார்கள் ; சுடர்விட்டுப் பிரகாசிப்பதும், யாகத்தில் தீ வலமாகச் சுற்றி எரிவதும் நல்ல சகுனங்கள்/ நிமித்தங்கள் என்று கருதப்படுகிறது )
சிவம் = நன்மை பயக்கும்; மங்களகரமான ; ப்ரதக்ஷிணம்= வலமாக ; ம்ருகசாபாக்ஷயா= மான்விழியாள் /சீதை
To be continued………………………………..
TAGS- தீ எரிக்காது, இந்து மத அற்புதம் 2, சீதை, அக்கினி தேவன்