தீ எரிக்காது- இந்து மத அற்புதம்-3 (last part)-Post No.11,385

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,385

Date uploaded in London – 22 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ அவனைச் சுடக்கூடாது என்று சீதா தேவி வெளியிட்ட வேண்டுகோளை அக்கினி பகவான் ஏற்றான் . ஏனெனில் அவள் கற்புக்கரசி.; மனம், மொழி, மெய் மூன்றின் மூலம் வேறு ஆடவணை நினையாத பெண்களுக்கு அற்புத சக்தி உண்டு என்று வள்ளுவனும் சொன்னான்.

சீதையின் ஸ்லோகங்களை வால்மீகி முனிவரின் வாயிலாகத் தொடர்ந்து பார்ப்போம்:- இவை சுந்தர காண்டத்தில் வரும் ஸ்லோகங்கள்

हनुमज्जनकश्चापि पुच्छानलयुतोऽनिलः।।5.53.33।।

ववौ स्वास्थ्यकरो देव्याः प्रालेयानिलशीतलः।

ஹநுமஜ் ஜனகஸ் சாபி  புச்சானலயுதோ அனிலஹ

வவெள ஸ்வாஸ் த்ய கரோ தேவ்யாஹா ப்ராலேயானில சீதலஹ 

தெய்வீகப்  பெண்ணின் (சீதையின்) மனதைச்  சாந்தப்படுத்தும் முகமாக,  வாயு பகவானும் அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ மீது குளிர்ந்த காற்றை வீசினான்.

(அனல = அனல்/ தீ ; அநில= காற்று; சீதல   = குளிர்ச்சி), புச்சம்= வால்

Xxx

दह्यमाने च लाङ्गूले चिन्तयामास वानरः।।5.53.34।।

प्रदीप्तोऽग्निरयं कस्मान्न मां दहति सर्वतः।

தஹ்யமானே ச லாங்கூலே சிந்த்யாமாச வானரஹ

ப்ரதீப்தோ அக்னிரயம்  கஸ்மான்ன மாம் தஹதி ஸர்வதஹ 

வால் எரியும்போது , எல்லா பக்கங்களிலும் எரியும் தீ  எப்படி தன்னைச் சுடவில்லை என்று அந்த வானரமும் வியப்புற்றது .

வானர = மனிதக் குரங்கு= வன+ நர = வனத்தில் வாழும் மனிதன்/நரன்

லாங்கூலம் = வால் ; தஹ்ய = தகித்தல் ; மாம் = என்னை; சிந்த்யா = சிந்தித்தது ; அக்னி = தீ

Xxx

दृश्यते च महाज्वालः करोति न च मे रुजम्।।5.53.35।।

शिशिरस्येव सङ्घातो लाङ्गूलाग्रे प्रतिष्ठितः।

த்ரச்யதே ச மஹா ஜ்வாலஹ கரோதி  ந ச மே ருஜம்

சிசிரஸ்யேவ ஸங்காதோ  லாங்கூலாக்ரே ப்ரதிஷ்டிதஹ

இந்த பெரிய தீ எனக்கு கெடுதல் எதையும் செய்யவில்லை ; என்னுடைய வாலில் ஐஸ் கட்டியை வைத்தது போலல்லவா இருக்கிறது (மேலும் வால் பகுதிக்கு மேல், தீ பரவவும் இல்லை )

லாங்கூல அக்ரே – வாலின் நுனியில் மட்டும்; ப்ரதிஷ்டிதஹ = நிலையாக நிற்கிறதே

xxxx

अथवा तदिदं व्यक्तं यद्दृष्टं प्लवता मया।।5.53.36।।

रामप्रभावादाश्चर्यं पर्वत स्सरितां पतौ।

அதவா ததிதம் வ்யக்தம் யத் த்ருஷ்டம் ப் லவதா மயா

ராம ப்ரபாவாதாஸ்சர்யம் பர்வத ஸரிதாம் பதெள

ராமபிரானின் சக்தியால்தான் இது நிகழ்கிறது . நான் கடலைக் கடக்கும்போது கூட எனக்கு பாதுகாப்பு தருவதற்காக (ஓய்வு எடுப்பதற்காக ) ஒரு அற்புத மலை எழுந்து நின்றது (இப்போது வால் எரியாமல், சுடாமல் இருப்பதற்கும் ) ராமனின் சக்திதான் என்பது வெளிப்படை

Xxx

यदि तावत्समुद्रस्य मैनाकस्य च धीमतः।।5.53.37।।

रामार्थं सम्भ्रमस्तादृक्किमग्निर्न करिष्यति।

யதி தாவத்  ஸமுத்ரஸ்ய  மைநாகஸ்ய  தீமதஹ

ராமர்த்தம் ஸம்ப்ரமஸ்தா த்ரவ்கிமக்னீர்  ந கரிஷ்யதி

கடல் என் மீது காட்டிய அக்கறை காரணமாக , புத்திசாலியான மைநாக மலையே எனக்காக எழுந்து வந்ததே ! மலை கூட ராமனுக்கு சேவை செய்கையில் தீ செய்ய முடியாதது என்ன ?

xxx

सीतायाश्चानृशंस्येन तेजसा राघवस्य च।।5.53.38।।

पितुश्च मम सख्येन न मां दहति पावकः।

ஸீதாயாஸ் சா ன்ருசம் ஸ்யேன தேஜஸா ராகவஸ்ய ச

பிதுஸ்ச  மம  ஸக்யேன ந மாம் தஹதி பாவகஹ

சீதையின் உறுதியான கற்புராமனின் சக்தி அக்னி பகவானுடன்  உள்ள என் தந்தையின் நட்புறவு ஆகியவற்றால்தான் தீ என்னை எரிக்கவில்லை .

மம பிதுஸ்  ஸக்யேன= என் தந்தையின் நட்புறவு ; பாவக = தீ

இந்த கடைசி ஸ்லோகத்த்தில்தான் வால்மீகி முத்தாய்ப்பு வைக்கிறார். ஒரு அற்புதம் நிகழ்கையில், ஒரு மனிதன், மனதில் என்ன என்ன எண்ணங்கள் ஏற்பட்டு வியப்புறுவான் என்ற உளவியலை (Psychology) இங்கே பார்க்கிறோம். ஸீதா, ராமனின் மஹத்தான சக்தியைப் புகழ்ந்துவிட்டு இறுதியில் மட்டும் தன் குடும்பத்தை நினைக்கிறார் ; காற்றுக்கும் தீ க்கும் உள்ள நட்புறவு இயற்கையில் நாம் காண்பதே ; அதை வாயு புத்திரனான அனுமன் கடைசியில் நமக்குக் காட்டுகிறான் . வால்மீகி முனிவரின் எளிய சம்ஸ்க்ருத நடையும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். உலகம் முழுதும் தோன்றிய 3000 ராம காதைகள்  , பாடல்கள், கிருதிகள் , திரைப்படங்கள், டிவி சீரியல்கள் எல்லாவற்றுக்கும் மூல புருஷன் வால்மீகி. காலத்தால் அழியாத காவியத்தை நமக்கு அளித்தவர் வால்மீகி!!

— சுபம் —

 தீ எரிக்காது-, இந்து மத அற்புதம்-3 , சுந்தர காண்டம், வால்மீகி 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: