அருணகிரிநாதரும் தமிழும்! – 2 (Post No.11,389)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,389

Date uploaded in London – –    28 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதரும் தமிழும்! – 2 

ச.நாகராஜன்

 அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.

முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.

பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.

அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.

11) திருச்செந்தூர்

செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி

   செந்திற் பதிநக – ருறைவோனே

 பாடல் எண் 96 : வஞ்சத்துடனொரு எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  செம்மை பொருந்திய சொற்களை ஆளும் புலவர்களின் கூட்டம் புகல்கின்ற தமிழைச் சூடிக் கொண்டு திருச்செந்தூர் நகரில் உறைந்திருப்பவனே!

12) பழநி

சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை

  பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர இனி வரவேணும்

பாடல் எண் 115 : இத்தாரணிக்குள் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : உன்னுடைய உண்மை ஞானத்துக்கு உறைவிடமான திருவடித் தாமரைகளைப் பற்றுக் கோடாக அடைந்து தமிழ்க் கவிதைகளை ஓதிப் பணிந்து உருகும்படியான அன்பை இன்று அடியேனுக்குத் தர இனி வந்தருள வேண்டும்.

13) பழநி

   வற்றா மதுக் கருணை உற்றே மறைக் கலைகள்

       ஓதித் தெரிந்து தமிழ் சோதித்து அலங்கல் அணி

        அத்தா

பாடல் எண் 115 : இத்தாரணிக்குள் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : வற்றாத தேன் போலக் கருணையைப் பூண்டு, வேத நூல்களை ஓதி நன்கு பயின்று தமிழை ஆராய்ந்து தேவாரப் பாமாலைகளைத் தந்தைக்குச் சூட்டிய திருஞானசம்பந்தராக வந்த ஐயனே!

 14) பழநி

தமிழ்க் காழி மருதவன மறைக்காடு திருமருகல்

  தநுக்கோடி வருகுழகர் – தருவாழ்வே

பாடல் எண் 121 : உயிர்க்கூடு விடுமளவும் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : சம்பந்தரின் திருநெறித்தமிழ் எனப்படும் செந்தமிழ் தேவாரத்துக்குப் பிறப்பிடமாகிய சீகாழி திருவிடைமருதூர், வேதாரணியம், திருமருகல், தநுஷ்கோடி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமான் தந்த குமரனே!

 15) பழநி

                      மெய்ப் பலகை

சதுபத் துநவப் புலவர்க் கும் விபத் – தியில் ஞான

படலத் துறுலக் கணலக் யதமிழ்த்

 த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப்

    பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் – குருநாதா

பாடல் எண் 126 : கடலைச் சிறை வைத்து எனத் தொடங்கும் பாடல்

பொருள் : சங்கப் பலகையில் வீற்றிருந்த நாற்பத்தொன்பது புலவர்களுக்கும் வேறுபாடு இல்லாத முறையில் ஞானப் பகுதியில் உள்ள இலக்கண இலக்கிய (இயல், இசை, நாடகம் ஆகிய) முத்தமிழில் (சிவபெருமான் இயற்றிய) அகப்பொருள் விளக்கத்தைக் குற்றமின்றி உணர்வித்து அருளிய வித்தகனே, சற் குருநாதனே!

16) பழநி

 சம்ப்ரம மானகு றத்திக் கின்புறு

   கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர

     தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய – பெருமாளே

 பாடல் எண் 155 : சிந்துர கூரமருப்பு எனத் தொடங்கும் பாடல்

பொருள் : சிறப்பு மிக்க குறத்தியாகிய வள்ளியின் இன்பம் பொலியும் மார்பகத்தை விரும்பி மேவும் சாமர்த்திய அழகனே, தண்ணிய தமிழ் வழங்கும் பழநி மலையில் தங்கி வீற்றிருக்கும் பெருமாளே!

17பழநி

       சொர்க்கமுமீதே

இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் றமிழ்பாட

 இருபதமுற் றிருவினையற் றியல் கதியைப் – பெறவேணும்

பாடல் எண் 167 : திடமிலி சற்குணமிலி எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : சொர்க்க உலகத்தில் இடம் பெறத் தகுதி இல்லாதவன் யான். கைகளால் ஒரு தானமும் கொடுத்து அறியாதவன் யான். உன்னை நல்ல தமிழ்ப் பாடலால் பாடுவதற்கு ஏற்ற சொல்வன்மை இல்லாதவன் யான். (இத்தகைய குறைபாடுகள் உள்ள அடியேன்) உனது இரண்டு திருவடிகளையும் அடைந்து, நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும் தீர்ந்து உயர்ந்த முக்தி நிலையைப் பெற்று உய்ய வேண்டும்.



18) பழநி

கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்

  வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு

  கற்பனை நெற்பல அளித்த காரண – னருள்பாலா

பாடல் எண் 172 : நெற்றி வெயர்த்துளி எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : நன்கு கற்ற தமிழ்ப் புலவனாகிய சுந்தரர் மீது மகிழ்ச்சி பூண்டு ஒரு பொன் கொடி போன்ற அவரது மனைவியார் (பரவையார்) களிப்புற, தாம் இட்ட கட்டளைப்படி வந்து குவிந்த நெல் மலையை அளித்த மூலப் பொருளான சிவபெருமான் அருளிய பாலனே!

 விளக்கம் : இங்கு பாடலில் குறிப்பிடப்படும் சம்பவம் இது:

சுந்தரர் பரவையாரோடு திருவாரூரில் வாழ்ந்து வந்த போது குண்டையூர் கிழவர் என்பவர் சுந்தரருக்கு நெல்லைத் தவறாது அளித்து வந்தார். ஒரு சமயம் மழை இல்லாமல் போகவே நெல் கொடுக்க முடியாமல் அந்தக் கிழவர் வருந்தினார். அவரது வருத்தம் நீங்கும் படி சிவபெருமானே நெல் மலை அளித்தார்.

இந்த வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது.

19) பழநி

பலபல பைம்பொற் பதக்க மாரமு

 மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப் பனீரொடு

  பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு – மணிவோனே

  பாடல் எண் 183 : மலரணி கொண்டை எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : பற்பல விதமான பசும் பொன்னால் ஆகிய பதக்கங்களையும், மாலைகளையும், அடிமையாகிய நான் சொல்லுகின்ற திருப்புகழ் என்னும் தமிழ்ப் பன்னீரையும், நறுமணம் மிக்கு வீசும் கடப்ப மாலையையும் அணிபவனே!

 20) சுவாமிமலை

அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க

  அரியதமிழ் தான ளித்த – மயில்வீரா

  பாடல் எண் 216 : சரண கமலாலயத்தை எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : சிவந்த தாமரை இதழ் போன்ற உன் பாதங்களைத் தினந்தோறும் நான் துதிப்பதற்கு அருமையான தமிழ் ஞானத்தைத் தந்த மயில் வீரனே!

*** 

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.

புத்தக அறிமுகம் – 96 

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 3) 

பொருளடக்கம்

 நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. நீங்களும் படைப்பாளி ஆகலாம்!  

 2. இசை கேட்டால் அறிவு வளரும்  

 3. குழந்தைகளும் ‘யோசனை’ கூறலாம்   

 4. குழந்தைகளின் அறிவுத்திறன்

 5. அறிவு வளர குழந்தைகளுடன் பேசுங்கள்    

 6. குட்டிக் குழந்தைகள் பேசுகின்றன…

 7. உங்கள் குழந்தைகளை சாதனையாளர் ஆக்குவது எப்படி?    

 8. ஜாக்கிரதை! வருகிறது ந்யூரோ மார்க்கடிங்!  

 9. அறிவியல் அலசலில் ‘காதல்’

10. கர்ப்பம், பிரசவம் இல்லாமல் குழந்தை! 

11. இதோ கருத்தடைப் பட்டை! இனி வேண்டாமே மாத்திரைகள்!!

12. மார்பகப் புற்றுநோய் இனி பயமில்லை…

13. மார்பகத்தை பாதுகாக்க டிப்ஸ்…   

14. மொபைல் போன்

15. வேண்டாமே சிசேரியன்!

16. ஏ டு இஸட் – உங்கள் கணவரை அலசுங்கள்

17. உடல் பேசும் மொழி   

18. நூறு வரும் வாழும் சூப்பர் மனிதன்!   

19. ஹிட்லரின் சங்கேத மெஷின்!    

20. ஹிட்லரின் தங்கப் புதையல்!

21. ஷீபா ராணியைத் தேடி…    

22. விந்தை மனிதர் செஷைர்   

23. கில்லடின் கதை  

24. உலகின் முதல் அணுகுண்டைப் போட்டவர்! 

25. வினாடிகளுக்குப் பின்னர் குண்டு வெடித்தது 

26. கல் வட்டம்

27. கல்மரங்கள்

28. உலகிலேயே தன்னந்தனியான சின்னத்தீவு   

29. மான் வடிவத்தில் ஒரு தோட்டம்! 

30. பயோமெட்ரிக் பாஸ்போர்ட்! 

31. கான்சர் நோய்க்கு ஒலி சிகிச்சை  

32. நோய் தீர்க்கும் காந்தசக்தி!  

33. சேற்றைப் பூசினால் பொலிவு கூடும்!   

34. மனிதனுக்குப் பன்றியின் உறுப்புகள்!   

35. ஆர்டர் கொடுத்தால் உங்கள் குரூப் ரத்தம் தயார்!  

36. ஆக்சிஜன் குளியல்    

37. விஷமே வியாதிக்கு நிவாரணம்  

38. கிரீனிச்

39. உப்பு உயிரைக் குடிக்கும்!   

40. சாக்லெட், சாக்லெட்!                                          

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது: 

The marvels of science and inventions are expanding in an amazing way, so the book has come in its third installment to astonish the readers. Reading the three parts altogether, makes the reader to go awe. The very names of the articles such as Kaalap Payanam (Time Travel), Jaakkirathai! (Caution!), Varugirathu Neuro Marketing (Here comes the Neuro Marketing) and Manithanukkup Pandriyin Uruppugal (Pig’s Organs for Humans) enthrall the readers. Read the full book to reach the peak of excitement.

அறிவியல் அதிசயங்களும், கண்டுபிடிப்புகளும் வியக்கத்தக்க வகையில் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. எனவே ‘அறிவியல் அதிசயங்கள்’ நூல் மூன்றாம் பாகமாக வெளிவந்துள்ளது. மூன்று பாகங்களும் சேர்த்துப் படித்தால், விஞ்ஞானத்தின் வளர்ச்சியை எண்ணிப் பிரமிக்கச் செய்கின்றன.‘காலப் பயணம்’, ‘ஜாக்கிரதை! வருகிறது ந்யூரோ மார்க்கெடிங்’, ‘மனிதனுக்குப் பன்றியின் உறுப்புகள்’ என நூலின் சில அத்தியாயங்களின் பெயர்களே மிரள வைக்கின்றன. முழு நூலையும் படித்துப் பார்த்தால் வியப்பின் உச்சிக்கே செல்லலாம்.*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் அதிசயங்கள் -பாகம் 3’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Previous Post
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: