
Post No. 11,393
Date uploaded in London – – 29 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதரும் தமிழும்! – 3
ச.நாகராஜன்
அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.
முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.
பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.
அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.
21) சுவாமிமலை
அருமறை தமிழ்நூல் அடைவே
தெரிந்து உரைக்கும் புலவோனே
பாடல் எண் 221 : தெருவினில் நடவா எனத் தொடங்கும் பாடல்
பொருள் : அருமையான வேதங்களையும் தமிழ் நூல்களையும் முழுமையாக கேட்பவரின் தரம் அறிந்து விரித்து உரைத்தருளும் புலவோனே
22) சுவாமிமலை
சிலகாவி யத்துறைக ளுணர்வோர் படித்த தமிழ்
செவியார வைத்தருளு – முருகோனே
பாடல் எண் 227 : பலகாதல் பெற்றிடவு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சில காவிய நூல்களின் உண்மைப் பொருளை அறிந்த அறிஞர்கள் ஓதிய தமிழை செவி குளிர ஏற்றருளும் முருகனே!
23 & 24) திருத்தணிகை
(இரு இடங்களில் தமிழ் எனும் சொல் வருகிறது)
இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய – கவி நாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத – லறியாதே
பாடல் எண் 242 : இருப்பவல் திருப்புகழ் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்றும் அகத்துறைப் பாக்கள், இலக்கணம், இலக்கியம் என்றும் நால்வகைக் கவிகளையும் உள்ளத்தில் தரிப்பவர்கள், உரைப்பவர்கள், நினைப்பவர்கள் ஆகிய உன் அடியார்களை மிகவும் இவ்வுலகில் புகழாமல்…
25) திருத்தணிகை
துவலைச் சிமிழ்த்து நிற்பவள் நாணத்
தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்
சுருதித்த மிழ்க் கவிப் – பெருமாளே
பாடல் எண் 257 : கவடுற்ற எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உதிரிப் பூக்களை மாலையாகக் கட்டி அணிந்து நின்ற வள்ளி நாணும்படியாக அவளைத் தொழுது புகழ்ந்த முக்தனே, அழகிய மதில்கள் சூழ்ந்த திருத்தணியில் எழுந்தருளி இருக்கும் வேதமாகிய தேவாரத் தமிழ்க் கவிதைகளைத் தந்த (திருஞான சம்பந்தப்) பெருமாளே!
26) திருத்தணிகை
தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்
போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்
சாற்றுதமிழ்க்குரை ஞாளியை நாள்வரை – தடுமாறி
பாடல் எண் 272 : தாக்கமருக்கொரு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நற்பயனை விடுத்து வீணிலே உழலும் பாவியை (நாத்திகனை), புலவர் போல நடித்துக் கொண்டு அன்போடு உன்னை நினையாமல் சண்டை செய்து தமிழிலே வைது வாதிட்டுக் குரைக்கும் நாயினை (நாய் போன்றவனை), இந்த நாள் வரைக்கும் தடுமாற்றம் அடைந்து…
27) திருத்தணிகை
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய – பெருமாளே
பாடல் எண் 275 : தொக்கறாக் குடில எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உன்னை வணங்காதவர்களுக்கு அரியவனாகி பாசங்களிலிருந்து நீங்கியவனே. தமிழ்ப் பாக்களால் உன்னைத் துதிப்போர்க்கு எளிமையாக இருக்கும் பெருமாளே!
28) திருத்தணிகை
சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந்
திருத்தணி மேவும் – பெருமாளே
பாடல் எண் 284 : பெருக்கவுபாயங் கருத்துடை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சிறப்புற்ற ஞானமும் முத்தமிழும் விரிவாக விளங்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே!
29) திருத்தணிகை
அமரு மிடனன லெனுமொரு வடிவுடை
யவனி லுரையவன் முதுதமி ழுடையவ
னரியொ டயனுல கரியவ னடநவில் – சிவன் வாழ்வே
பாடல் எண் 292 : முகிலு மிரவியு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (அபிராமி தனது இடது பாகத்தில்) அமரும் படியாக வாய்த்தவனும், நெருப்பு என்னும் ஒப்பற்ற உருவத்தினன், உரைக்கு எட்டாதவன், பழைய தமிழுக்கு உரியவன், திருமாலும், பிரமனும், உலகோரும் அறிதற்கு அரியவன், நடனம் செய்பவன் ஆகிய சிவபெருமானின் செல்வனே!
30) திருத்தணிகை
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய – பெருமாளே
பாடல் எண் 298 : வட்ட வாள் தன எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உன்னை வணங்காதவர்களுக்கு அரியவனாகி பாசங்களிலிருந்து நீங்கியவனே. தமிழ்ப் பாக்களால் உன்னைத் துதிப்போர்க்கு எளிமையாக இருக்கும் பெருமாளே!
***
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.
புத்தக அறிமுகம் – 97
அறிவியல் அதிசயங்கள் (பாகம் 4)

பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. ஆங்கார யானைகளை விரட்டும் தேனீக்களின் ரீங்காரம்!
2. ரொபாட்டுடன் கல்யாணம்!
3. இனிமேல் எல்லோரும் ஆயிரம் ஆண்டுகள் வாழலாம்! (1)
4. இனிமேல் எல்லோரும் ஆயிரம் ஆண்டுகள் வாழலாம்! (2)
5. இனிமேல் எல்லோரும் ஆயிரம் ஆண்டுகள் வாழலாம்! (3) 1
6. எதிர்கால அறிவியல் – 1
7. எதிர்கால அறிவியல் – 2
8. எதிர்கால அறிவியல் – 3
9. எதிர்கால ந்யூரல் இயந்திரங்கள்! – 1
10. எதிர்கால ந்யூரல் இயந்திரங்கள்! – 2
11. எதிர்கால ந்யூரல் இயந்திரங்கள்! – 3
12. எண்ணங்களைப் பேச்சாக்கலாம்!
13. மரணத்திற்குப் பின் மனித வாழ்க்கை?
14. தேனீக்களின் கற்கும் திறன்!
15. நம் வாழ்வில் நேனோ தொழில்நுட்பம் செய்யும் புரட்சி -1
16. நம் வாழ்வில் நேனோ தொழில்நுட்பம் செய்யும் புரட்சி -2
17. கடவுளின் மொழி
18. எதிர்கால மெஷின் – மனிதன்! – 1
19. எதிர்கால மெஷின் – மனிதன் – 2
20. முடிவுரை
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
The greatest achievement of science in this century would be the research about the human brain. The functions of left and right brains and the way they govern the behaviours and activities are clearly explained in this book. It is discovered from the research that the brains are not worked out to their full potential. Methods are easily explained to use all of it. Articles that speak about Future Neural Engines, Alternative fuels and Bio intelligence are included in this book. A must read for everyone.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனை என்றால் அது மனித மூளை பற்றிய ஆராய்ச்சியாகத்தான் இருக்கும். இடப்பக்க, வலப்பக்க மூளைப் பகுதிகளின் குணாதிசயங்களும், அவை மனிதர்களின் பண்புகளில், நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கும் நூல். மனிதர்களின் மூளை அதன் தகுதிக்கேற்பச் செயல்படுத்தப்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளையின் முழுமையான செயல்பாட்டிற்கான முறைகள் இந்நூலில் எளிமையாக விளக்கிக் கூறப்பட்டுள்ளன. கூடவே, எதிர்கால நியூரல் எந்திரங்கள், மாற்று எரிபொருள், தாவரங்களின் அறிவு ஆகியவை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் அதிசயங்கள் -பாகம் 4’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
*