Post No. 11,398
Date uploaded in London – 30 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கடல் என்பதே என்ன என்று தெரியாத நாடு ஆஸ்திரியா. ஏனெனில் ஐரோப்பாவில் எட்டு நாடுகளுக்கு இடையே சிக்கித் (LAND LOCKED COUNTRY) தவிக்கும் நாடு அது. ஆயினும் அதன் தலைநகரான ( VIENNA, CAPITAL OF AUSTRIA) வியன்னாவை நோக்கி சுற்றுலாப்பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். காரணம் என்ன தெரியுமா ? ஓவியக் கலைஞர்களுக்கும் இசைக் கலைஞர்களுக்கும் புகழ் பெற்ற நகரம் வியன்னா . மொசார்ட் , பீத்தோவன் , ஷுபர்ட் , ஸ்டிராஸ் (Mozart, Beethoven, Schubert, Strauss) ஆகிய பலர் அங்கே பிறந்தனர் அல்லது நீண்ட காலம் வாழ்ந்தனர். விமான நிலையத்தில் ட்யூட்டி பிரீ DUTY FREE SHOPS கடைகளுக்குச் சென்றாலும் மொசார்ட் படத்துடன் உள்ள பெரிய சாக்லெட் டப்பாக்களை வாங்கலாம். நாங்கள் தீபாவளி நேரத்தில் 5 நாட்களுக்கு வியன்னாவில் தங்கினோம். எனக்கு மொசார்ட் (MOZART) மியூசியத்துக்கும் பீதோவன் (BEETHOVEN) மியூசியத்துக்கும் போக ஆசை. ஆனால் அப்படி தனித்தனியே போக நேரம் இல்லாததால் இரண்டு பேரையும் சேர்த்துக் காட்டும் ஹவுஸ் ஆப் மியூசிக் HAUS DER MUSIK (சங்கீத இல்லம்) காட்சி சாலைக்குச் சென்றோம். ஆறு மாடிகளில் அமைந்த கட்டிட மியூசியம் அது.
நிறைய சிறுமிகளை அம்மாமார்கள் அழைத்து வந்திருந்தனர். இசையில் ஆர்வம் உடைய இளம் சிட்டுகளுக்கான காட்சியகம் அது ; பெரியவர்களும் போகலாம். ஏனெனில் ஆறு புகழ்பெற்ற இசைக்க கலைஞ ர்களின் வாழ்க்கைப் படங்கள், வரலாறுகள், முக்கிய பாடல்கள் அங்கே காட்சி தருகின்றன. அது மட்டுமல்ல ஒலி /சப்தம் /இசை/Sound என்பதன் விஞ்ஞான பின்னணியும் (Physics of Sound) அறிவியல் ரீதியில் விளக்கப்பட்டுள்ளது இளைஞர்களே Inter Active இயக்கி இன்பம் அடையும் பல உபகரணங்கள் அங்கே உள்ளதால் அவற்றை சிறுவர் சிறுமியர் இயக்கி ஆனந்தம் அடைகின்றனர்.
மொத்தத்தில் இசைப் பிரியர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும்
என்ன என்ன, எப்படி என்று விளக்குகிறேன்.
மாடியில் ஏறிச் செல்லும்போது ஒவ்வொரு படியை மிதிக்கும்போதும் ஒரு இசை ஒலி கேட்கும். நம்ம ஊரில் புகழ் மிகு கோவில்களில் இருக்கும் இசைத் தூண்கள் , இசைப் படிக்கட்டுகள் (Musical Pillars, Musical Steps) போன்றது அவை. நாமும் இப்படி இளம் உள்ளங்களைக் கவர்ந்து இழுக்கும் சங்கீத மியூசியத்தை திருவாரூரில் அமைக்க வேண்டும். மும்மூ ர்த்திகளால் சிறப்பு அடைந்த ஊர் அல்லவா திரு ஆரூர் .படிகளில் ஏறும்போது ஸ, ரி, க ,ம ப த நி, ஸ வந்தால் இளம் உள்ளங்கள் விடுமா ? இரண்டு கல்லூரி மாணவிகள் அந்தப் படிகளில் குதித்துக் குதித்து, மாறி மாறி, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதற்கும் மேல் மாடிக்குச் சென்றால் பெரிய T V Screen டெலிவிஷன் ஸ்க்ரீன். அதற்கு முன்னால் 4 மரப்படிகள் ; அதில் ஏறி நின்றால் அங்கேயுள்ள சின்ன டெலிவிஷன் திரையில் சூதாட்டத்தில் பயன்படுத்தும் (Dice) பகடைக் காய்கள் இருக்கும். அதைக் கையால் பிடிப்பது போல (திரையிலேயே நம் கைகள் தெரியும்) பாவனை செய்து அதை வீசி எரிய வேண்டும். உடனே அது உருண்டு ஓடுவதைக் காட்டும் பெரிய திரை அதை சங்கீத நோட்டுகளாக மாற்றி இசைக்கும். நாலு சிறுவர் சிறுமியர் சேர்ந்து செய்யும் போது இனிமையான ஒலிகள் கிளம்பும் . இப்படி நாமும் இன்டர் ஆக்டிவ் Inter Active Musical Museum சங்கீத மியூசியம் அமைக்க வேண்டும் .
அடுத்த மாடிக்குச் சென்றால் ஒரு கீ போர்டும் Key Board ஏ , பி சி டி ………….. போன்ற எழுத்துக்களும் இருக்கும். மனம் போன படி அவைகளை அமுத்தி (வாசித்து ) நிறுத்திய அடுத்த நிமிடத்தில் திரையில் நீங்கள் Compose கம்போஸ் செய்த இசை ஒலிக்கும் . அதாவது ஒரு நிமிடத்தில் நீங்கள் மொசார்ட் அல்லது பீத்தோவன் ஆகிவிடுவீர்கள்.
அதற்கும் மேல் மாடிக்குச் செனறால் ஒரு இருட்டு அறையில் விரிக்கப்பட்ட கம்பளத்தில் அம்மாக்கள் , அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுடன் படுத்து மேலே தெரியும் திரையில் உள்ள பிரபஞ்ச இசையைக் (Music of the Universe) கேட்கலாம். நாஸா NASA முதலிய பெரிய விண்வெளி ஆராய்ச்சி சாலைகளில் பணிபுரிவோர் இப்போதும் பிரபஞ்சத்தின் ஒரு கோடியிலிருந்து ஒலிக்கும் அபூர்வ இசையைக் கேட்டு வியப்புறுகின்றனர். இதைக் காட்டும் வகையில் மேல் திரையில் கோலங்கள் போட்டது போல வண்ண வண்ண வரிகள் வரும்போது பிரபஞ்ச இசையைக் கேட்கலாம்.
இன்னொரு அடுக்கிற்கு ஏறிச் சென்றால் நீங்களே Conductor கண்டக்டர் ஆகலாம். வெள்ளைக்கார ஆர்கெஸ்டராவைப் பார்ப்போருக்கு கண்டக்டர் பற்றித் தெரியும். சங்கீத மாஸ்டர் கையில் ஒரு கம்பை வைத்துக்கொண் டு மேலே, கீழே என்று ஆட்டுவார். அதைப் பார்த்துக்கொண்டு அவரவர் இசைக்கருவியை இயக்குவார்கள் ; அதைப் போல ஒரு பெரிய திரை முன்னால் நின்றுகொண்டு நீங்களும் ஒரு குச்சியைக் கையில் வைத்துக்கொண்டு ஆபராவை நடத்தலாம். உங்கள் குச்சியின் அசைவுக்கு ஏற்ப திரையில் பெரிய ஆபரா ஒலி கிளம்பும் .
எனக்கு அந்த அளவுக்கு சமங்கீத அறிவு கிடையாது. ஆகையால் அனைத்தையும் வேடிக்கை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்த இரண்டு விஷயங்களைச் சொல்லி முடிக்கிறேன்
1. ஒரு இருட்டு அறையில் ஆறு இசை மேதைகளின் ஹோலோ கிராம் Hologram Images வைத்துள்ளனர். அவை இருக்கும் கண்ணாடிப் பெட்டியில் மட்டும் ஒளி இருக்கும். அவை சுழன்றுகொண்டே இருக்கும். அவைகளைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்தேன்.
2.மற்றோர் விஷயம் – ஒவ்வொரு இசை மேதையின் வரலாற்றையும் ஆண்டு வாரியாக (Time line) ஒரு போர்டு காட்டும். அதாவது அவர்கள் வாழ்க்கையில் முக்கியமான ஆண்டுகளில் என்ன நிகழ்ந்தது என்பதை ஒரு போர்டில் பொறித்து வைத்துள்ள்ளனர் இவ்வாறு ஆறு கலைஞர்களின் வாழ்க்கையும் கிடைக்கும்.
இது தவிர அவர்கள் வாழ்க்கை பற்றிய பெரிய சித்திரங்களும் சுவர்களை அலங்கரிக்கின்றன.
நாமும் ஏன் சங்கீத முமூர்த்திகளான தியாகராஜர் , முத்துசாமி தீட்சிதர் , சாமா சாத்திரிகளுக்குச் செய்யக்கூடாது? அவர்களோடு தமிழ் இசை மன்னர்களையும் கனக தாசர், புரந்தரதாசர் , நாராயண தீர்த்தர், சதாசிவ பிரம்மேந்திரர் , அன்னமாச்சார்யார் ஆகியோரையும் சேர்த்து ஊருக்கு ஊர் மியூசியம் — இன்டெர் ஆக்டிவ் மியூசியம்– அமைக்கலாமே ! இப்படி இந்து மதத்துக்கும் இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கும் இன்டர் ஆக்டிவ் மியூசியம் (Inter Active Museum for Hinduism) அமைக்கலாமே! யாரிடமாவது பணம் இருந்தால் சொல்லுங்கள். நான் இலவச ஆலோசகராக சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்.
நிர்வாண ஓவியங்கள் (Nude, Semi Nude Paintings) பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.
TO BE CONTINUED…………………………………….
tags —-.வியன்னா, இசை, ஹோலோக்ராம் , மேதைகள், மியூசிக், மியூஸியம்