நவம்பர் 2022 காலண்டர்: காஞ்சி பரமாசார்யாள் பொன்மொழிகள் (11,401)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,401

Date uploaded in London – 31 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பண்டிகை நாட்கள் – 8 குரு நானக் ஜெயந்தி, சந்திர கிரஹணம், ;14- குழந்தைகள் தினம்; 21, 28- சிவன் கோவில்களில் சோமவார சங்காபிஷேகம்; 23-சத்ய சாய் பாபா பிறந்த தினம்;

பெளர்ணமி- 8; அமாவாசை- 23; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்- 4, 19; ;

சுப முகூர்த்த நாட்கள்-  11,14, 20

XXXX

Book with 1957-1960 Madras Discourses 

காஞ்சி சங்கராச்சார்யார் (1894-1994) உபன்யாசத்திலிருந்து எடுக்கப்பட்ட பொன்மொழிகள். சென்னை நகரில் 1932-ம் ஆண்டில் செய்த உபந்யாங்கள்; Source Book –நமது தர்மம், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியீடு , பிப்ரவரி 1950

நவம்பர்  1 செவ்வாய்க் கிழமை

சில மதஸ்தர்கள் முக்கியமான புஸ்தகத்துக்கு கோயில் கட்டி வணங்குகிறார்கள் ஸீக்கியர்கள் அவ்வாறு செய்து வருகிறார்கள். அவர்களுடைய மதப் புஸ்தகத்தை  அவர்கள் கிரந்த ஸாஹேப்  என்று மரியாதையாகச் சொல்லுவார்கள் .

xxx

நவம்பர்  2 புதன்  கிழமை

நம்முடைய மதத்தில், மதத்தைப் பற்றி படிப்பதே கிடையாது  அப்படிப் படிக்காததனால் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது? வேறு எந்த மதத்துக்காவது ஆள் வேண்டுமானால் , நம்முடைய மதத்திலிருந்து பிடித்துப் போகிறார்கள் .

xxx

நவம்பர்  3 வியாழக்  கிழமை

நம்முடைய மதக் கிரந்தங்களை நாமே தூஷிக்கிறோம், அழிக்கிறோம் . மற்றவர்கள், பிற மத புஸ்தகங்களை அழிக்கிறார்கள் . நமக்கு புஸ்தகத்தின்  பெயரே தெரியவில்லை படிப்பதால் என்ன பிரயோஜனம் என்றும் கேட்கிறோம் . பிரேமை இருந்தால் காரணம் வேண்டியதில்லை

xxx

நவம்பர்  4 வெள்ளிக்  கிழமை

மத விஷயங்கள் பால்யத்திலேயே தெரிந்திருந்தால் ஸந்தேகமே வராது .மதப் படிப்பை இளம் பருவத்திலே படித்திருந்தால் எல்லோருடைய அபிப்பிராயமும் ஒன்றாக இருக்கும் . ஸந்தேகம் இருக்காது .

xxx

நவம்பர்  5 சனிக்  கிழமை

நமக்குள்ள ஸந்தேகங்களையும் கஷ்டங்களையும் போக்கிக் கொள்வதற்காக நாம் பெரியவர்களிடம் போகிறோம்; புஸ்தகங்களை வாசிக்கிறோம்; நல்லவர்களிடம்  உபதேசம் பெறுகிறோம் ; மஹா க்ஷேத்திரங்களுக்குப் போகிறோம் ; தீர்த்த ஸ்நானம் செய்கிறோம்; அப்படிச் செய்வதால் மனது கொஞ்சம் கொஞ்சமாக சாந்தி அடைகிறது

xxx

நவம்பர்  6 ஞாயிற்றுக்  கிழமை

இன்பத்துக்குப் பொருள் சாதனமாக இருப்பது போல , பொருளுக்கு தர்மம் சாதனமாக இருக்கிறது .தர்மம் அர்த்தத்துக்கு சாதனம் ; அர்த்தம் இன்பத்திற்கு சாதனம் .

xxx

நவம்பர்  7  திங்கட்  கிழமை

எந்தக் காரியம் செய்தால் நல்லதோ அது தர்மம்ன்ன மாதிரி கொடுத்தால் நாம் பின்னால் செளக்கியமாக இருக்கலாமோ அது தர்மம்

xxx

நவம்பர் 8 செவ்வாய்க் கிழமை

ஸங்கீதம் , ஸாஹித்யம் என்னும் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் — ஸாஹித்தியம் உயர்ந்தது ; மருந்தின் மேலே வெல்லம் தடவிக் கொடுப்பது போல  ஸாஹித்தியத்தை எல்லாரும் கேட்பதற்காக ஸங்கீதம் உபயோகப்படுகிறது என்கிறார் சிவ லீலார்ணவம் கவி.

xxx

நவம்பர் 9 புதன்  கிழமை

கவியினுடைய நல்ல வார்த்தைகள் அமிருதத்தைப் போன்றவை .அமிருதம் சாகாது. கவியின் பாவத்தை இருதயத்தில் வாங்கினால் அது சாகாது. உள்ளுக்குள்ளே இருந்து நினைக்க நினைக்க இன்பத்தைத் தரும்

xxx

நவம்பர் 10 வியாழக்  கிழமை

வேறே உள்ள மதப் புஸ்தகங்களெல்லாம் மனிதன் அடையவேண்டியது பரலோகம் என்று சொல்லுகிறது. மோக்ஷத்தைப் பரலோகம் என்றே  சொல்லுகின்றன. ஆனால் நம்முடைய புஸ்தகங்கங்களில் பரலோகம் என்று வேறு இல்லை . இங்கேயே மோக்ஷத்தை அடையலாம்

xxx

நவம்பர் 11 வெள்ளிக்  கிழமை

தர்மத்தைச் சொல்லும் புஸ்தகங்கள் 14; அவை ஆறு அங்கங்கள், நாலு வேதங்கள்,, மீமாம்ஸை , புராணம், நியாயம்,தர்ம சாஸ்திரம் . வேதமோடாறங்க மாயினானை என்று தேவாரம் சொல்லுகிறது.

xxx

Book with 1932 Madras Discourses 

நவம்பர் 12 சனிக்  கிழமை

ஒரு ஜாமம் 3 மணி ஆகும்; அதாவது ஏழரை நாழிகை; 5 நாழிகை உஷத் காலத்திலும் இரண்டரை நாழிகை பிரதோஷ  காலத்திலும்  போய்விடும்; 30 நாழிகை பகற் காலத்தில்  போய்விடும்; மிச்சம் இருப்பவை 3 ஜாமங்கள் ; அதனால்தான் ராத்திரிக்கு த்ரி யாமா என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது

xxxx

நவம்பர் 13 ஞாயிற்றுக்  கிழமை

சிராத்தம் என்பதற்கு சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்; சிரத்தைதான் நமக்கு முக்கியம் ;ஒரு காரியம் என்று பண்ண ஆரம்பித்தால் சட்டப்படிதான் பண்ண வேண்டும்.;  காரியத்துக்குச் சட்டம் வேண்டும்; பக்திக்கும் ஞானத்துக்கும் ஒன்றும் வேண்டாம்.

Xxxx

நவம்பர் 14  திங்கட்  கிழமை

இந்த மாதிரி வேஷ்டி கட்டிக்கொள்வது , ருத்ராக்ஷம் போட்டுக்கொள்வது இவைகளை எப்பொழுது ஆரம்பித்தார்கள்?இங்கிலீஸ்காரர்கள் இன்ன இன்ன காலத்தில்  இன்ன இன்ன உடை இருந்தது ; இன்ன உடை இப்பொழுதிலிருந்து உண்டாயிற்று என்று எழுதிப் படம் போட்டிருக்கிறார்கள. நாம் அந்த மாதிரி செய்யப் பார்த்தால் நமக்கு அகப்படாது .

xxx

நவம்பர்  15 செவ்வாய்க் கிழமை

சாப்பிடுவதற்கு முன் வைச்வதேவ ஹோமம் பண்ணி பலி கொடுக்க வேண்டும். மனிதர்களை உத்தேசித்து ஹந்தா என்று போட வேண்டும்; தேவர்களை உத்தேசித்து ஸ்வாஹா  என்று போட வேண்டும்; பிதுருக்களை உத்தேசித்து ஸ்வதா என்று போட வேண்டும்.

xxx

நவம்பர்  16 புதன்  கிழமை

இந்தப் பிரபஞ்சத்தில் எவ்வளவு பிராணிகள் இருக்கின்றனவோ அவை எல்லாவற்றுக்கும் வைச்வதேவத்தில் பலி உண்டு. நாய், காக்கை, சண்டாளன் இவைகளுக்கெல்லாம் பலி உண்டு.

xxx

நவம்பர் 17 வியாழக்  கிழமை

ஷட்கர்ம நிரதர்களான (அறுதொழில் அந்தணர்) என்று  காகிதம் எழுதுகிற வழக்கம்  உண்டு . யஜனம், யாஜனம் , அத்யயனம் , அத்யாபனம், பிரதானம் , பிரதிக்ரஹம் என்று சொல்லுவது ஒரு வகை .

Xxx

 நவம்பர் 18 வெள்ளிக்  கிழமை

காயத்ரீ மந்திரம் ஆயிரம் ஜபிப்பது உத்தமம் ; நூறு ஜபிப்பது மத்யமம்; பத்து ஜபிப்பது அதமம் .

தைத்திரீய ஆரண்யகம் ” ஸஹஸ்ர பரமா தேவீ சதமத்யமா தசாவரா ” என்று சொல்கிறது .

xxx

நவம்பர் 19 சனிக்  கிழமை

ஒரு சின்ன ஸ்லோகம் இருக்கிறது ; அதில் பிரதிதினமும் பண்ணவேண்டிய ஆறு காரியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஸந்த்யா ஸ்நானம் ஜபோ ஹோமோ தேவதானாம் ச பூஜனம்

ஆதித்யம் வைச்வதேவம் ச ஷட் கர்மாணி தினே தினே

xxx

நவம்பர் 20 ஞாயிற்றுக்  கிழமை

நாள்தோறும் செய்யவேண்டிய ஆறு — ஸ்நானம் , ஸந்தியாவந்தனம், ஹோமம் (ஒளபாஸனம்), சிவ பூஜை, ஆதித்யம் (அதிதிக்கு அன்னம் இடுதல்), வைச்வதேவம் .

xxx

நவம்பர்  21 திங்கட்  கிழமை

காந்தி விதவா விவாஹம் தான் பண்ணிக்கொள்ளவேண்டும் என்று சொன்னார் காந்தி படம் அநேகமாக எல்லோருடைய வீட்டிலும் இருக்கிறது ஆனாலும் அவர் சொன்னபடி எவ்வளவு பேர் கேட்டார்கள்?

xxx

நவம்பர் 22 செவ்வாய்க் கிழமை

நான் கிராப் (crop) பை எடுத்துவிட வேண்டும் என்று சொல்லுகிறேன்; எத்தனை பேர் எடுத்தார்கள்? அதையும் கேட்கத் தயாரில்லை;  இதையும் கேட்கத் தயாரில்லை ; ஸங்கடப்படுகிறார்கள்

xxx

Kanchi Shankaracharya in Madurai Dinamani Office

நவம்பர் 23 புதன்  கிழமை

வேத சம்பந்தமான எல்லா கிரியைகளிலும் கோ ப்ராஹ்மணேப்யஹ சுபமஸ்து நித்யம் என்று சொல்லுவது வழக்கம். இந்த வாக்கியத்தில் பசுவைத்தான் முதன்மையாகச் சொல்லப்பட்டிருக்கிறது

xxx

நவம்பர் 24 வியாழக்  கிழமை

‘கோ’ வானது லோகத்திற்கே தாயாக இருக்கிறது கோ- வைத்தவிர பாக்கி பிராணிகள் எல்லாம் அவற்றின் சிசுக்களுக்கு மாத்திரம் பால் கொடுத்து ரக்ஷிக்கின்றன  . பசுவோ ஆயுள் உள்ள வரை எந்த ஜாதிக்கும் பால் கொடுத்து ரக்ஷிக்கிறது .இதையெல்லாம் உத்தேசித்துத்தான் சாஸ்திரங்களில் கோ- வை ரக்ஷிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறது .

xxxx

நவம்பர் 25 வெள்ளிக்  கிழமை

சமணர்களுக்கும் சம்பந்தருக்கும் நடந்த போட்டியில் வைகை ஆற்றில் நீரோட்டத்தை எதிர்த்துச்  செல்லும் ஓலையே வெல்லும் என்றும் அதுதான் உண்மையான மதம் என்றும் தீர்மானித்து எழுதினர் ; அந்த ஓலையில் திரு ஞான சம்பந்தர் எழுதிய வாழ்த்துப் பதிகத்தில் வாழ்க அந்தணர் வானவர் ஆன்  இனம் என்பதே முதல் வரி . அதுதான் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்று திருவேடகம் என்னும் சிவ ஸ்தலத்தை அடைந்தது .

xxx

நவம்பர் 26 சனிக்  கிழமை

அந்த ஸ்தலத்தில் இருக்கிற பரமேஸ்வரனுக்கு பத்திரிகா பரமேசுவரன் என்று ஸம்ஸ்க்ருதத்தில் பெயர். பத்திரிகை என்றால் ஏடு என்று அர்த்தம். ஏடு அங்கே தங்கியதால் சுவாமிக்கு அப்பெயர் ஏற்பட்டது

xxx 

நவம்பர் 27 ஞாயிற்றுக்  கிழமை

ஈசுவரன் நமக்கு ஐசுவரியத்தைக் கொடுக்கிறார் .அதை வைத்துக்கொண்டு பரோபகாரம் செய்யவேண்டும் . தங்கள் தங்கள் சக்திக்கு ஏற்றபடி ஒரு தர்மத்தைச்  செய்யவேண்டும் ; செய்ய முடிந்தபொழுது உடனே செய்யவேண்டும் ; அப்புறம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது .

xxx

நவம்பர் 28  திங்கட்  கிழமை

ஸந்யாஸ ஆச்ரமத்தை உடையவர்கள் அஹிம்சையைப் பூர்ணமாக அனுஷ்டிக்கவேண்டும். ஸந்யாஸம் வாங்கிக் கொள்ளும்போதே  அவர்கள் அஹிம்ஸன் ஸர்வ பூதான் யன்யத்ர தீர்த்தேப்யஹ  (சாந்தோக்யோபனிஷத் ) என்று பிரதிக்ஞை செய்துகொள்கிறார்கள் ‘ ஸகல பிராணிகளுக்கும் என்னால் பயமில்லை என்பது அதன் தாத்பர்யம்

xxx

நவம்பர்  29 செவ்வாய்க் கிழமை

ஸத்தியத்திற்கு லக்ஷணம் (definition)  ஒன்று உண்டு —வாங்மனஸயோரைகரூப்யம்  ஸத்யம்   — மனதும் வாக்கும் ஒரே விஷயத்தைச் செய்வதுதான் ஸத்தியம் .

xxx

நவம்பர்  30 புதன்  கிழமை

அஹிம்ஸா ப்ரதிஷ்டாயாம் தத் ஸன்னிதெள  வைரத்யாகஹ — என்று பாதஞ்ஜல யோக ஸூத்ரம் – 4 சொல்லுகிறது அஹிம்ஸையை  திரிகரணங்களாலும் ஸாதித்து விட்டோமானால் நமக்கு எதிரில் யாவரும் சாந்தம் அடைவார்கள் (கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி எல்லா உயிரும் தொழும் – குறள் 260)

–subham–

Tags- காஞ்சி , பரமாசார்யாள்,  சுவாமிகள் , பொன்மொழிகள், நவம்பர் 2022 காலண்டர் 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: