அருணகிரிநாதரும் தமிழும்! – 8 (Post.11,409)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,409

Date uploaded in London – –    3 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதரும் தமிழும்! – 8

 ச.நாகராஜன்

 அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.

முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.

பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.

அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.

71) பொதுப் பாடல்

 எழிற்கமலத் திணைக்கழலைத்

  தமிழ்சுவையிட் டிறப்பறஎய்த்

   திடக் கருணைத் திறத்தெனைவைத் தருள்வாயே

 பாடல் எண் 1021 : வினைத்திரளுக்கு  எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : உனது அழகிய தாமரை போன்ற இரண்டு திருவடிகளை தமிழ்ச் சுவை பொருந்தும்படி வாழ்த்தி, நான் சாகாத நிலை பெற்றிட ..

 72) பொதுப் பாடல்

 திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு புலவோனே

 பாடல் எண் 1072 : இருந்த வீடு  எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : திருத்தமான முறையில் வேதத்தை இன்பமான தமிழ் மொழியில் தேவாரமாக உலகோர் அறியத் தந்தருளிய (திருஞானசம்பந்தப்) புலவனே!

 73) பொதுப் பாடல்

 குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்த

  குமரகு றத்தி நம்பு – பெருமாளே

  பாடல் எண் 1081 : மடவியர் எச்சில்  எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : அகத்திய முனிவர் கற்க அன்று தமிழ் ஞானத்தை அவர் காதில் சொல்லி ஊட்டிய குமரனே, குறத்தியாகிய வள்ளி, நம்பித் தொழும் பெருமாளே!

வரலாறு : அகத்திய முனிவர் சிவபெருமானை வணங்கித் தமிழ் ஞானம் வேண்டினார்.  அவர் அகத்தியரைத் திருத்தணிகை முருகனை அணுகுமாறு பணித்தார். அங்ஙனமே அகத்தியர் முருகனை பூஜித்துத் தமிழ் ஞானம் பெற்றார். அந்த வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது.

 74) பொதுப் பாடல்

 கதல மீதிற் பகர்தமிழ் பாடற்

  செழுமறை சேர்பொற் – புயநாதா

 பாடல் எண் 1082 : கரு மயல் ஏறி எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : இந்தப் பூமியில் புகழ்ந்து பேசப்படும் தமிழ்ப் பாட்டுக்களால் ஆகிய பாமாலைகளும், செழுமை வாய்ந்த வேத மொழிகளும் மாலையாக அணிந்த அழகிய புயங்களைக் கொண்டவனே!

 75) பொதுப் பாடல்

 அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை

  அடைவடைவு கேட்ட – முருகோனே

 பாடல் எண் 1089 : இருவினைகள் ஈட்டும் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : அருமையான வேத மொழிகளைச் சேர்த்து உரைக்கப்பட்ட (சங்கத்) தமிழ்ப் பாடலை (திருமுருகாற்றுப்படையை) முற்ற முழுவதும் கேட்ட முருகனே!

 76) பொதுப் பாடல்

 அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டு

 அரியதமிழ் வாது வெற்றி – கொளும் வேலா

 பாடல் எண் 1098 : நடை உடையிலே எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : வலிமை மிக்க (மந்திர மொழி) எழுதப்பட்ட ஏட்டினைப் பெருகி ஓடுகின்ற (வைகை நதியின்) நீரில் எதிர் ஏறச் செய்து, அருமை மிக்க தமிழ் பாடலால் (சமணரை) வாதத்தில் (திருஞானசம்பந்தராக வந்து) வெற்றி கொண்ட வேலா!

வரலாறு : இங்கு மதுரையில் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடலை எழுதி வைகை ஆற்றில் இட அது நீரை எதிர்த்து வந்த வரலாறு குறிப்பிடப்படுகிறது.

 77) பொதுப் பாடல்

 தொக்கில் நெடு மாமார்பு – தொளையாகத்

  தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால

  சுத்ததமி ழார்ஞான – முருகோனே

 பாடல் எண் 1109 : கட்டமுறு நோய் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : தோல் கொண்ட, அகன்ற மார்பில் தொளை படும்படிச் செலுத்திய கூர்மையான வேல் வீரனே, ஊழிக்கூத்து செய்யும் சிவபெருமானுடைய பாலனே, பிழையற்ற தமிழை நன்கு அறிந்த ஞானமுள்ள முருகனே!

 78) பொதுப் பாடல் 

 இடைவைத்துச் சித்ரத் தமிழ்கொடு

 கவிமெத்தச் செப்பிப் பழுதற

   எழுதிக்கற் பித்துத் திரிபவர் – பெருவாழ்வே

 பாடல் எண் 1171 : பகல்மட்க எனத் தொடங்கும் பாடல் 

 பொருள் : பாட்டின் இடையே பொருந்த வைத்து அழகிய தமிழால் பாடல்களை நிறையப் பாடியும், குற்றமில்லாமல் எழுதியும் கற்பித்தும் திரியும் பாவலர்களின் பெரும் செல்வமே

 79) பொதுப் பாடல் 

 விபுதர் பதி யங்கதல மேவிச் சாற்றிய – தமிழ்நூலின்

  பாடல் எண் 1173 : பரதவித புண்டரிக எனத் தொடங்கும் பாடல் 

 பொருள் : தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய உடம்பில் உள்ள அடையாளக் குறியை விரும்பிப் பாடிய தமிழ் நூல்களின் பரப்பின்…

 வரலாறு : கௌதம முனிவரின் அகலிகையைக் கூட எண்ணி அவர் இல்லாத சமயத்தில் அவர் உருவம் எடுத்து அவளைச் சேர வந்த இந்திரன், முனிவர் சாபத்தால் ஆயிரம் பெண் குறிகள் உண்டாயின. அகலிகை கல்லாகுமாறு சபிக்கப்பட்டாள். பின்னால் ராமாவதாரத்தில் ராமனின் காலடி அந்தக் கல்லின் மேல் பட சாப விமோசனம் ஏற்பட்டு அகலிகை மீண்டும் தன் சுய உருவம் பெற்றாள். அந்த வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது.

 80) பொதுப் பாடல்

 வெளியாசையொ டடைபூவணர்  மருகாமணி முதிராடக

  வெயில்வீசிய அழகா தமிழ் – பெருமாளே

 பாடல் எண் 1186 : மதனேவிய கணை எனத் தொடங்கும் பாடல் 

 பொருள் : ஆகாயம், திசைகள் எல்லாம் நிறைந்துள்ள, காயாம்பூ போன்ற நீலவண்ணத்து திருமாலின் மருகனே! ரத்தினம், செம்மை முதிர்ந்த பொன் ஆகியவற்றின் ஒளி கலந்து வீசுகின்ற அழகனே, தமிழர்களின் பெருமாளே!

 குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.

 ***

புத்தக அறிமுகம் – 102

அறிவியல் துளிகள் (பாகம்2)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1) வந்துவிட்டது ந்யூரோபோன்! 

2) உங்கள் மூளையால் எதிர்காலத்தைப் பார்க்க முடியும்!   

3) நமக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மூளை!

4) அதிகம் டி.வி. பார்த்தால் ஆயுள் குறையுமா?  

5) செக்ஸ் இன்பத்திற்கு வருகிறது செக்ஸ் சிப்!! 

6) பயமறியாப் பெண்மணி! விஞ்ஞானிகள் திகைப்பு!!  

7) உலகையே மாற்றப் போகும் பத்து பிரமாண்டமான

  கண்டுபிடிப்புகள் – 1

8) உலகையே மாற்றப் போகும் பத்து பிரமாண்டமான

  கண்டுபிடிப்புகள் – 2

9) உலகையே மாற்றப் போகும் பத்து பிரமாண்டமான

  கண்டுபிடிப்புகள் – 3

10) நட்சத்திரப் பயணம்!   

11) உடல் பயிற்சிகள் மூலம் மூளை ஆற்றல் கூடுகிறது!   

12) மனதின் குணப்படுத்தும் ஆற்றல்! 

13) சந்திரன் சீனாவுக்குச் சொந்தமாகப் போகிறதா?    

14) ஆற்றலைக் கூட்டினால் ஏழரை லட்சம் பேரை உயர்த்த முடியும்!  

15) அமெரிக்க விஞ்ஞானியின் அறிவுரை: உங்கள் இலட்சியத்தை

   யாரிடமும் சொல்லாதீர்கள்! 

16) செவ்வாய் வீரர்களுக்கு 520 நாட்கள் நடந்து முடிந்த

   அதிசய சோதனை!

17) சூரியப் புயலால் பூமி வெடித்துச் சிதறுமா?  

18) மிஸ்டர் டூம்!

19) வாழ்க்கையை மாற்றும் ஆற்றல் கனவுகள்!  

20) தண்ணீர் ரகசியங்களை அறிவிக்கும் விஞ்ஞானி!  

21) புதிய பொன்னான எதிர்காலம் 2020இல் ஆரம்பம்!  

22) இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் பற்றிய

   அறிவியல் விமரிசனம்!

23) மூளையைப் பற்றிய தவறான ஒன்பது அறிவியல் தகவல்கள்! – 1  

24) மூளையைப் பற்றிய தவறான ஒன்பது அறிவியல் தகவல்கள்! – 2  

25) மூளையைப் பற்றிய தவறான ஒன்பது அறிவியல் தகவல்கள்! – 3  

26) நூறு கோடி மடங்கு அதிக ஆற்றலுடன் எதிர்கால

   மனிதனின் மூளை

27) செயற்கைக் கால்களால் ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்தவர்!

28) சந்திரனில் குகைப் பள்ளங்கள்!   

29) காமெடியில் சைபர்னெடிக்ஸ்!

30) ரோபாட் டிரைவர் ஓட்டும் விபத்தில்லாத கார்!

31) மூளையே இனி போர்க்களம்!

*

இந்த நூலுக்கு பிரபல விஞ்ஞானியான திரு K.G.நாராயணன் அவர்கள் அணிந்துரை அளித்துள்ளார்.·          

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது: 

A must buy book for your home library, this is an interesting second part of Ariviyal Thuligal. It talks about recent inventions, technology improvement in science. This book is flooded with scientific information.

‘அறிவியல் துளிகள்’ நூலின் சுவைமிக்க இரண்டாம் பாகம்! இந்நூலில், வளர்ந்து வரும் நவீனக் கண்டுபிடிப்புகளையும் அறிவியல் முன்னேற்றங்களையும் சிறப்பாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர். அறிவியல் துளிகள் என்பதைக் காட்டிலும் அறிவியல் வெள்ளம் என்றே சொல்லலாம்! அந்த அளவிற்குத் தகவல்கள் நிறைந்துள்ள இந்நூல் அனைவரின் வீட்டிலும் தவழ வேண்டிய தொகுப்பு!

*இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் துளிகள் -பாகம் 2’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: