
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,411
Date uploaded in London – – 4 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன்
அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.
முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.
பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.
அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.
81) பொதுப் பாடல்
தன்னிறை சடையிறை யென்முனி பரவரு
இன்னிசை யுறுதழிழ் தெரிவோனே
பாடல் எண் 1233 : கன்னியர் கடு விடம் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தனக்குத் தானே தலைவனான, சடையை உடைய சிவபெருமான் எனப் போற்றப்படும் கடவுளைத் துதிப்பதற்கு அருமையான இனிய இசை அமைந்த தமிழ் மறையை (தேவாரத்தை, திருஞானசம்பந்தராக வந்து) உலகோர் தெரியச் சொன்னவனே,
2) பொதுப் பாடல்
நின்பதயு கப்ர சித்தி யென்பனவ குத்து ரைக்க
நின்பணித மிழ்த்ர யத்தை – யருள்வாயே
பாடல் எண் 1234 : ‘கிஞ்சுகம் என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உனது திருவடியிணைகளின் பெரும் புகழை வகைப்படுத்தி எடுத்துரைக்க, உனக்குப் பணி செய்ய, முத்தமிழ் ஞானத்தை (எனக்கு) அருள் புரிவாயாக!
83) பொதுப் பாடல்
சித்தர்சிச் தத்துறப் பற்றிமெத் தப்புகழ்ச்
செப்புமுத் தித்தமிழ்ப் – பெருமாளே
பாடல் எண் 1260 : பற்ற நெட்டை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சித்தர்கள் தமது மனத்தில் ஆழ்ந்து நிலைக்கும்படி நிரம்ப உனது புகழைப் பாட, முக்தியைத் தர வல்ல பெருமாளே, தமிழ்க் கடவுளாகிய பெருமாளே!
84) பொதுப் பாடல்
க்கப் புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த
சித்ரத் தமிழ்க் கொற்ற – முடையோனே
பாடல் எண் 1266 : மக்கட் பிறப்புக்குள் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நான்கு திசைகளிலுள்ள புறங்களுள்ளும் அழியாதிருக்க (திருஞானசம்பந்தராக வந்து) சிவபெருமானின் புகழைப் பரப்பிய, அழகிய தமிழ் பாடும் வெற்றியை உடையவனே!
85) பொதுப் பாடல்
தம்பந்த மறத்தவ நோற்பவர் – குறைதீரச்
சம்பந்த னெனத் தமிழ் தேக்கிய – பெருமாளே
டல் எண் 1282 : என் பந்த வினை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தங்களது பந்தபாசம் அகல்வதற்காக தவநிலையில் இருப்பவர்களது குறைகள் நீங்க திருஞானசம்பந்தராக அவதரித்து தமிழை நிரம்பப் பருகி தேவாரமாக உலகுக்குத் தந்த பெருமாளே
த்தொடரில் தரப்படும் ஏராளமான பாடல்களில் முருகனே திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்று அருணகிரிநாதர் திடமாக நம்புவதைக் குறிக்கும் கவின் மிகு சொற்றொடர்களைக் காணலாம்.
86) பொதுப் பாடல்
தெள்ளுதமிழ்ப் பாடத் தெளிவோனே
பாடல் எண் 1291 : துள்ளு மத வேள் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இனிமையான தமிழில் பாடல்களைப் பாடவல்ல தெளிவு கொண்ட திருஞான சம்பந்தப் பெருமானே!
87) பொதுப் பாடல்
அங்கத்தைப் பாவைசெய் தேயுயர்
சங்கத்திற் றேர்தமி ழோதிட
அண்டிக்கிட் டார்கழு வேறினர் – ஒரு கோடி
பாடல் எண் 1331 : பந்தப் பொற்பார எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உயர்ந்த சங்கத் தமிழ்ப் பாடல்களை ஓதிட ஒரு கோடி சமணர்கள் கழுவேறினர்.
வரலாறு: வாதுக்கு அழைத்திட்ட சமணர்கள் தோற்றனர். அவர்களில் ஒரு கோடி பேர் கழுவில் ஏறினர். இப்படி சமணர்கள் கழுவேறிய இடம் ‘கழுவர் படை வீடு’ என்று அழைக்கப்பட்டது. இந்த இடம் இப்போது ‘கழுகேர்கடை’ என அழைக்கப்படுகிறது. இந்த ஊர் திருப்பூவணத்திற்கு அருகில் உள்ளது. திருவிளையாடல் புராணத்திலும் திருப்புகழிலும் இந்த ஊர் திருப்பூவணத்துடன் இணைத்தே பாடப்பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். திருப்பூவணத்தில் நடைபெறும் 10 நாள் திருவிழாவில் சமணர் கழுவேறும் இந்த விழா ஆறாம் நாள் திருவிழாவாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
‘தமிழ்’ என்ற சொல்லை அருணகிரிநாதர் ஆண்ட இடங்களை மேலே பார்த்தோம். இன்னும் பல இடங்களில் தமிழைப் புகழ்ந்து அவர் பாடும் சொற்கள் உள்ளன. அவற்றையும் படித்து மகிழலாம்.
கந்தரலங்காரம் 22வது பாடலில் ‘முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்’ என்ற அவரது சொற்றொடரால் தமிழுக்கும் முருகனுக்கும் உள்ள அளவிலா பாசப் பிணைப்பை அறிய முடிகிறது.
தமிழில் முருகன் புகழ் பாடிடும் திருப்புகழை தினமும் ஓதுவோம்; முருகன் அருள் பெறுவோம்!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.
***
இந்தத் தொடர் முற்றும்
புத்தக அறிமுகம் – 103
அறிவியல் துளிகள் (பாகம்-3)
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
பொருளடக்கம்
1. ஐ.பி,எம். நிறுவனம் தயாரிக்கும் மனம் அறியும் கருவிகள்!
2. அறிவியல் ஆராய்ந்து வியக்கும் தியானம்!
3. முதல் ரொபாட்டின் விண்வெளிப் பயணம்!
4. எடையற்ற காப்பியை கோப்பையில் அருந்திய முதல் விண்வெளி
வீரர்!
5. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தொடர்ந்து தூங்கத்தான் வேண்டுமா?
6. இளம் பெண்கள் முன்னால் மூளை ஆற்றலை இழக்கின்றனர்
இளைஞர்கள்!
7. வலியைக் குறைக்கும் காதல்!
8. கனவு தந்த புத்தகங்கள்! – 1
9. கனவு தந்த புத்தகங்கள்! – 2
10. கனவு தந்த நோபல் பரிசு!
11. கனவு உருவாக்கிய அமெரிக்க கோடீஸ்வரி; கனவில் உருவான
தையல் மெஷின்!
12. ராமானுஜர் முதல் ரஜினிகாந்த் வரை!
13. செவ்வாய் ஹீரோ – ஜான் கார்டர்!
14. அறிவியல் புனைகதைகளின் வகைகள்!
15. வியக்க வைக்கும் ஜூல்ஸ்வெரினின் படைப்புகள்! – 1
16. வியக்க வைக்கும் ஜூல்ஸ்வெரினின் படைப்புகள்! – 2
17. ஜூல்ஸ்வெரினின் ட்வெண்டி தௌஸண்ட் லீக்ஸ் அண்டர் தி சீ!
18. ஹெச். ஜி. வெல்ஸின் அன்றைய கற்பனைகளும் இன்றைய
நிஜமும்! – 1
19. ஹெச். ஜி. வெல்ஸின் அன்றைய கற்பனைகளும் இன்றைய
நிஜமும்! – 2
20. ஐஸக் அஸிமாவ்- அறிவியல் நாவல்கள் எழுதிய அற்புத
எழுத்தாளர்!
21. ஆர்தர் க்ளார்க்கின் அற்புத ‘ஸ்பேஸ் ஒடிஸி’
22. அறிவியல் துறைகள் அனைத்தையும் தொட்ட ராபர்ட் ஹெய்ன்
லெய்ன்!
23. கடவுள் துகளைக் கண்டோம்! – 1
24. கடவுள் துகளைக் கண்டோம்! – 2
25. நியூட்ரினோ பயணம் ஒளியை விஞ்சி உலகத்தை அதிசயத்தில்
ஆழ்த்துகிறது!
26. வியக்க வைக்கும் முடிவுகளை அறிவிக்க செர்ன் செயல்படும்
விதம்!
*
இந்த நூலுக்கு பிரபல விஞ்ஞானியான திரு K.G.நாராயணன் அவர்கள் அணிந்துரை அளித்துள்ளார்.
·
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
There are a lot of scientific facts to be known in this world. By knowing and understanding the same we can enrich our general knowledge. To know Science ARIVIYAL THULIKAL PART I and PART II were published. In continuation Part III is now released. Selected articles in Science find a place in this work. We know the instruments that measure the depth of the sea. There are scientific instruments to find the depth of the human mind. It finds a place under the caption ”INSTRUMENTS TO UNDERSTAND THE MIND”. To understand the SPACE, first robot’s (ENTHIRAN) space travel, to know about Mars- Mars Hero Jonn Karter, Kinds of Scientific stories in Tamil, Julevern’s productions that surprise us, recently happened scientific big research, we saw God’s particles and such new scientific findings, find a place in this book as information.
உலகில் அறிவியல் செய்திகள் ஏராளம் உள்ளன. அவற்றை அறிந்துகொள்வதன் மூலம் நம் பொதுஅறிவை மேம்படுத்திக் கொள்ளமுடியும். அறிவியலை அறிந்துகொள்ள அறிவியல் துளிகள் பாகம் 1 மற்றும் பாகம் 2 வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பாகம் 3 வெளியாகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவியல் தொடர்பான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கடலின் ஆழ்த்தை அறியும் கருவிகளை அறிவோம். மனித மனத்தை அறியவும் அறிவியலில் வழி கருவிகள் உள்ளன. அது மனம் அறியும் கருவிகள் என்னும் தலைப்பில் கட்டுரையாக உள்ளது , வானவெளியை அறிந்துகொள்ள முதல் ரொபாட்டின்(எந்திரன்) விண்வெளிப் பயணம், செவ்வாய் கிரகம் பற்றி அறிய செவ்வாய் ஹீரோ ஜான் கார்டர், தமிழில் வெளிவந்துள்ள அறிவியல் புனைகதைகளின் வகைகள், நம்மை வியக்க வைக்கும் ஜூல்வெர்னின் படைப்புகள், அண்மையில் நிகழ்ந்த அறிவியல் பேராய்வு கடவுள் துகளைக் கண்டோம் என்பன போன்ற புத்தம் புதிய அறிவியல் நிகழ்வுகளின் பதிவுகள் தகவல்களாக இடம்பெற்றுள்ளன.*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் துளிகள் -பாகம் 3’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
*