
Post No. 11,420
Date uploaded in London – – 7 November 2022
November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹெல்த்கேர் அக்டோபர் 2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
நீடித்த ஆரோக்கிய வாழ்விற்கு ஆயுர் வேதம் தரும் அன்புரை!
ச.நாகராஜன்
நம் முன்னோர்கள் நீடித்த வாழ்வை ஒருவன் எப்பாடுபட்டேனும் அடைதல் வேண்டும் என்று வலியுறுத்தியதோடு அப்படிப்பட்ட நீடித்த வாழ்க்கை ஆரோக்கியத்துடன் இருத்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பஸ்யேம சரத சதம்; ஜீவேம சரத சதம் – ஒளிரும் சூரியனை நூறு ஆண்டுகள் பார்ப்போம்; நூறு ஆண்டுகள் வாழ்வோம் என இப்படி அன்றாடம் நூறு ஆண்டு வாழ்வதை உறுதிப் படுத்திக் கொள்ளச் சொல்கிறது வேதம்.
நோய் நொடியில்லா வாழ்வு வாழ்வதற்கான அன்புரைகளை முன்னோர்கள் பல அற நூல்களிலும், வாழ்க்கை முறை நூல்களிலும் பழமொழிகள் வாயிலாம் கூறினர்.
அவற்றில் சில:
தினமும் சூரியோதயத்திற்கு முன்பாக எழுதல் வேண்டும்.
பற்களை நன்கு சுத்தம் செய்வதோடு நாக்கையும் சுத்தம் செய்தல் அவசியம்.
கண்களையும் நீரினால் நன்கு கழுவுதல் வேண்டும்.
வெந்நீரில் குளித்தல் நலம். மசாஜ் செய்து கொள்வது நல்லது.
வெந்நீர் அருந்துதல் ஜீரணத்திற்கு உதவும். சாப்பிடும் போது நீரை அருந்துதல் கூடாது.
வேகமாக உணவை உட்கொள்வது வாயு பிரச்சினையை உருவாக்கும்.
நிதானமான சுவைத்துச் சாப்பிடுதல் அவசியம். அமைதியாக யாருடனும் பேசாமல் உணவில் மட்டுமே கவனம் செலுத்தல் வேண்டும்.
வயிறு முட்ட முட்டச் சாப்பிடாமல் ஒரு சிறிது காலியாக இருக்கும் படி உணவின் அளவை நிர்ணயித்துக் கொள்ளல் வேண்டும்.
வாத, பித்த, சிலேஷம் என மூவகைப் பட்ட உடல் வாகுவில் நாம் எந்த வகை என்பதை அறிந்து அதற்குத் தக உணவுத் திட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வாதவற்றை அறவே நீக்க வேண்டும்.
உணவு மிகவும் குளிர்ந்து போனதாகவும் இருக்கக் கூடாது; மிக மிக சூடானதாகவும் இருக்கக் கூடாது. அன்றாடம் அவ்வப்பொழுது சமைத்த உணவே உடலுக்கு ஏற்றது.
நினைத்த போது சாப்பிடுதல் என்பது அறவே கூடாது. காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு இவற்றிற்கான நேரத்தின் படியே உணவை உட்கொள்ளல் வேண்டும்.
இரவு உறங்கப் போகும் முன்னர் குறைந்த பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.
சாப்பிட்டவுடன் நூறு அடி நடக்க வேண்டும். இரவு உணவிற்குப் பின்னர் இப்படி நடப்பது ‘சத பதம்’ எனப்படும்.
உடல் பயிற்சி, யோகாசனம், மூச்சுப் பயிற்சி – இவற்றை தக்க ஆசான் மூலம் கற்று கடைப்பிடிக்க வேண்டும்.
குளிர் பானங்களை அருந்துதல் கூடாது. தற்காலத்தில் வரும் பாக்கேஜ் உணவு, நொறுக்குத் தீனி இவற்றை விலக்க வேண்டும்.
மதுவை அறவே நீக்க வேண்டும்.
சிகரட், போதைப் பொருள்கள் ஆயுளைக் குறைக்கும்.
சைவ உணவே சாலச் சிறந்தது. பச்சை கறிகாய்களை நன்கு உரிய முறையில் வேக வைத்துச் சாப்பிட வேண்டும்.
இரவு உறக்கம் இன்றியமையாதது.
உணவில் பசு நெய் சேர்த்தல் வேண்டும்.
உடலுக்குத் தக பால், தயிர் இவற்றைச் சேர்க்க வேண்டும்.
பழ வகைகளை அவ்வப்பொழுது எடுத்து உண்ண வேண்டும்.
சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றின் அளவு சரியாக இருத்தல் வேண்டும்.
(வேகமாக வாகனங்களை ஓட்டுதல் உட்பட்ட) உடலுக்கு ஒவ்வாத சாகஸ வேலைகளைச் செய்தல் கூடாது.
பெரியோர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுதலும், இறை வழிபாடும், அவ்வப்பொழுது கோவில் தரிசனமும், தல, தீர்த்த யாத்திரையும் முக்கியம்.
ஆன்மீக உரைகளை வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கேட்க வேண்டும். ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களைப் படிப்பதோடு வீட்டில் உள்ள இளம் குழந்தைகளுக்கும் அதைச் சொல்ல வேண்டும்.
(தொலைக்காட்சி பார்த்தலை மிகுந்த கட்டுப்பாடுடன் ஒரு அளவுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.)
இசை கேட்டல் நல்லது.
அன்றாட வாழ்க்கையில் நகைச்சுவை முக்கியம். அனைத்தையும் மிக சீரியஸாக எடுத்தல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே நகைச்சுவை நூல்களைப் படித்தல் அவசியம்.
தன்னை மூன்றாவது நபராக வைத்து தியானம் செய்வது அனைத்துப் பிரச்சினைகளும் தீர்வதற்கான ஒரு அருமையான வழி. இப்படிச் செய்யும் போது பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் தாமாக வரும்.
ஊரிலுள்ள வைத்தியரை நன்கு மதிப்பதோடு அவரின் வாழ்க்கை நலத்தை மனதில் கொண்டு அவரை ஆதரிக்க வேண்டும். அவர் கூறும் பரிந்துரைகளை அப்படியே மேற்கொண்டு நடக்க வேண்டும்.
வாஸ்து அமைப்பிலான வசிப்பிடம் அவசியம் தேவை.
நீர், காற்று, இடம் ஆகியவற்றின் சுத்தத்தை மனதில் கொண்டு வாழ்தல் வேண்டும்.
உயிர் வாழ் இனங்களுடன் அன்புடன் நடந்து கொண்டால் இயற்கை நம்மை நன்கு வாழ வைக்கும். சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டை மனதில் கொண்டு நடப்பதால் சுற்றுப்புறமும் மேம்படும்; சமுதாயத்தில் கொரானா போன்றவையும் பரவாது.
இப்படி சொந்த நலம், குடும்ப நலம். சமுதாய நலம் என அனைத்து நலங்களையும் கூறும் ஆயுர் வேத நூல்களைப் படிப்போம்.
ஆயுர் வேத வழி நடப்போம்; அருமையாக வாழ்வோம்!
***
புத்தக அறிமுகம் – 106
அறிவியல் துளிகள் (பாகம்–6)

பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. வித்தியாசமான விஞ்ஞானி ஜங் – 1
2. வித்தியாசமான விஞ்ஞானி ஜங் – 2
3. வித்தியாசமான விஞ்ஞானி ஜங் – 3
4. வித்தியாசமான விஞ்ஞானி ஜங் – 4
5. வித்தியாசமான விஞ்ஞானி ஜங் – 5
6. இனி வரப்போகும் அதிசய மாற்றங்கள் – 1
7. இனி வரப்போகும் அதிசய மாற்றங்கள் – 2
8. ஸ்டீபன் ஹாகிங்கின் ‘எனது சுருக்கமான சரித்திரம்’
9. வெற்றி பெற ஐ.க்யூ மட்டும் போதாது!
10. க்ரிட் டெஸ்ட்!
11. நூறாவது குரங்கு!
12. அதிசய ஆராய்ச்சியாளர் லியால் வாட்ஸன்! – 1
13. அதிசய ஆராய்ச்சியாளர் லியால் வாட்ஸன்! – 2
14. கம்ப்யூட்டர் கவிதை எழுதுமா?
15. எழுத ஆசையா? இதோ டிப்ஸ்!
16. பிரபஞ்சத்தில் பயணம் செய்யும் ஒரு காதலியின் இதயத்துடிப்பு!
17. கம்ப்யூட்டர் விளையாட்டுக்களை விளையாடலாமா?
18. காலம் பர்றிய வித்தியாசமான ஆராய்ச்சிகளும்
கண்டுபிடிப்புகளும் – 1
19. காலம் பர்றிய வித்தியாசமான ஆராய்ச்சிகளும்
கண்டுபிடிப்புகளும் – 2
20. காலம் பர்றிய வித்தியாசமான ஆராய்ச்சிகளும்
கண்டுபிடிப்புகளும் – 3
21. காலம் பர்றிய வித்தியாசமான ஆராய்ச்சிகளும்
கண்டுபிடிப்புகளும் – 4
22. உங்களை அறியாமலேயே நீங்கள் போருக்கு உதவுகிறீர்களா?
23. அதிசய மூலகம் டான்ட்டாலம்!
24. லெனினின் மூளை பற்றிய ஆராய்ச்சி
25. பேரழகி கிளியோபாட்ரா ஒரு விஞ்ஞானியா?
26. விசித்திர சோதனைகள்!
·
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
After astonishing the readers with his five serials on “Science Facts” here comes the sixth of the series by Nagarajan. . Stephen Hawking’s “My short History”,”To win IQ alone is not enough”, “Hundredth Monkey”, “Diverse Research and Findings of Time” – If you are bewildered with these kind of chapter headers, needless to mention what is contained within this sixth article.
‘அறிவியல் துளிகள்’ எனும் தலைப்பில் ஏற்கெனவே ஐந்து பாகங்கள் எழுதி வாசகர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்ற ச.நாகராஜனின் மற்றுமொரு பாகம் இது. பல்வேறு கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. ஸ்டீபன் ஹாகிங்கின் ‘எனது சுருக்கமான சரித்திரம்’, வெற்றி பெற ஐ.க்யூ மட்டும் போதாது, நூறாவது குரங்கு, காலம் பற்றிய வித்தியாசமான ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் – இப்படி, அத்தியாயங்களின் தலைப்புகளே வியப்பூட்டுகின்றன என்றால் உள்ளடக்கத்தை தனியே சொல்ல வேண்டியதில்லை.
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் துளிகள் -பாகம் 6’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
*