கைகண்ட மருந்து/ மந்திரம் ! (Post No.11,424)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,424

Date uploaded in London – 8 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஒரு கைகண்ட மருந்து பற்றி என் அனுபவத்தைச் சொல்லுகிறேன். 1962-ம் ஆண்டில் இந்தியா மீது சீனா  படை எடுத்தது . 1965ம் ஆண்டில் பாகிஸ்தான் நம்மைத் தாக்கியது. 1971ம் ஆண்டில் பங்களாதேஷ் (வங்க தேச) யுத்தம் நடந்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நான் மதுரைக் கல்லூரியில் பி.எஸ்ஸி (B.Sc. in Madura College, Madurai) படித்தேன். யுத்த கால சூழ்நிலை இருந்ததால் கல்லூரியில் என் சி சி (NCC= National Cadet Corps)  பயிற்சி கட்டாயமாக்கப்பட்டது. அப்போது நமக்குத் தேவையான சீருடை, பூட்ஸ் , சாக்ஸ் (Socks)  எல்லாம் கடனாகத் தருவார்கள். ஒவ்வொரு வாரமும் பயிற்சி முடிந்தவுடன் பூரி உருளைக்கிழங்கும் டீயும் இலவசமாகத் தருவார்கள். காலையில் அது முடிந்தவுடன் வீட்டிற்கு ஓடிப் போய் குளித்துவிட்டு முறையான வகுப்புகளுக்குத் திரும்பிவரவேண்டும். வேண்டா வெறுப்பாகச் செய்தோம் . அப்போது அவர்கள் கொடுத்த பழைய சாக்ஸ் அல்லது  பூட்ஸ் மூலம் எனக்கு காலில் எக்சிமா Eczema (சொறி சிரங்கு) பரவியது. பல ஆண்டுகளுக்கு பெட்னோவேட் என் Betnovate N — என்ற மருந்தைப் பயன்படுத்திவந்தேன். அரிப்பு ஏற்படுவது (due to allergy) அலர்ஜியால்; ஆனால் நாம் சொறிந்து சொறிந்து  ஏற்படும் புண்களில் பாக்டீரியா புகுந்து ரணத்தை அதிகரிக்கிறது.

ஒருநாள் இதுபற்றி எங்களுக்கு எல்லாம் மந்திர உபதேசம் செய்த ஆயக்குடி (தென்காசி) சுவாமிஜி கிருஷ்ணாவிடம் முறையிட்டேன் .

அவர், அவருக்கே உரித்தான ஸ்டைலில் தியானம் செய்துவிட்டு வாளாவி ருந்தார் ; சரி இது கருமவினை போலும் என்று அமைதி காத்தேன். இதெல்லாம் மதுரையில் நடந்தது

ஆனால் எங்கள் குடும்ப புரோகிதர் கோபால கிருஷ்ண சாஸ்திரிகளை அழைத்து இந்தப் பையனுக்கு வெற்றிலையில் அல்லது வாழை இலையில் பசு வெண்ணெயை வைத்து தன்வந்திரி மந்திரத்தை 11 முறை மந்திரித்துக் கொடு என்றார் .எத்தனை நாட்கள், வாரங்கள் என்பது எனக்கு இப்போது நினைவு இல்லை. அப்போது அவர் மந்திரம் சொல்லக் சொல்ல நான் முணங்குவேன் . அவ்வளவுதான். பசு மாட்டு வெண்ணெயை சுண்டைக்காயளவு சாப்பிடுவதில் என்ன   கஷ்டம் ?

எக்சிமா(Eczema) நோய் அறவே போகவில்லை ஆனால் காலோடு நின்றது பரவவும் இல்லை. பிறகு தினமணி பத்திரிக்கையில் சீனியர் உதவி ஆசிரியராகப் பணியாற்றியபோது பிரிட்டனில் பிபிஸி தமிழோசையில் ப்ரொட்யூசராக (Producer in BBC World Service, London)  பணியாற்ற அழைப்பு வந்தது . ஒரு பக்கம் சந்தோஷம் ; மற்றோர் பாக்கம் பயம். லண்டனுக்குப் போனால் குளிர் நாடாயிற்றே  ; எப்போதும் சாக்ஸ் / காலுறை , பூட்ஸ் போடவேண்டுமே ; எக்சிமா பெரிதாக அல்லவா ஆகிவிடும் என்று கருதி ஆறு மாத காலத்துக்கு வேண்டிய களிம்பை (Betnovate Cream)  வாங்கிவைத்துக்கொண்டு லண்டன் வந்தேன். என்ன அதிசயம் . இன்றுவரை அந்த நோய் என்னை எட்டிப்பார்க்கவில்லை. லண்டன் வந்தவுடன் அடியோடு ஒழிந்தது

கொஞ்சம்  (மனது அளவில்) ஆராய்ச்சி செய்துபார்த்தேன். சிலவகை பாக்டீரியாக்கள் சில பருவ நிலையில்தான் வளரும்; அதிகரிக்கும். என்னுடைய எக்சிமா-வுக்கு குளிர் என்றால் பயம்போலும்!! (பாக்டீரியாக்கள் இந்தநோயை உருவாக்குவதில்லை அலர்ஜியினால் அரிப்பு ஏற்பட்டு சொரிந்து உண்டாகும் புண்களில் பாக்டீரியாக்கள் குடி புகும்)

xxx

(From Wikipedia நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள்கள்]

சாதரணமான சருமப் பாதுகாப்பு தடையானது பாதிக்கப்படும் போது (வறண்டு போதல், வெடிப்பு விடுதல்), அதனால் பேக்டீரியா உள் நுழைவது எளிதாகிவிடுகிறது. நோயாளி சொறிவதன் காரணமாக நோய்த்தாக்கம் ஏற்படுவதோடல்லாமல் அது பல இடங்களுக்கும் பரவவும் செய்கிறது. இதற்கு மேலும் ஏற்படும் தோல் நோய்த்தாக்கத்தினால் தோலில் எரிச்சல் ஏற்பட்டு தோல் பலவீனமடையக்கூடும். இதற்கு சரியான நுண்ணுயிர் எதிர்ப்புப்பொருள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

xxxx

யாராவது எனக்கு  சாமி படங்கள் கொடுத்தால் தூக்கி எறிய மாட்டேன் . அவை சின்னதாக இருந்தால் புத்தகத்தில் டேக் (Tag) ஆகப் பயன்படுத்துவேன் (படித்த பக்கத்தை அறிய  வைக்கும் காகிதம் அல்லது நூல் போன்றது) . அப்படி வைத்த ஒரு படத்தை அண்மையில்  பார்த்தபோது  தூக்கிவாறிப்போட்டது . எனக்கு கல்லூரி நாட்களில் கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் பசு மாட்டு வெண்ணையை மந்திரித்துக் கொடுத்த தன்வந்திரி மந்திரம் அது . இப்போது தினமும் படித்து வருகிறேன் . நீங்களும் படிக்கலாம்.

xxxx

ஐந்தே வரிகள்தான்

தன்வந்திரி மந்திரம்

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!

தன்வந்தரயே!அம்ருத கலச ஹஸ்தாய !

ஸர்வ ஆமய விநாசநாய

த்ரைலோக்ய நாதாய

ஸ்ரீ மகாவிஷ்ணவே நமஹ

மிகவும் எளிதான மந்திரம் ; தன்வந்திரி என்பவர் மருத்துவ நூலின் தந்தை (Father of Medicine) ஆயுர்வேதத்தை உலகிற்கு நல்கியவர். மகா விஷ்ணுவின் ஒரு அவதாரம். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும்  கடைந்தபொழு து கைகளில் அமிர்த கலசத்தோடு பாற்கடலில் இருந்து எழுந்து வந்தவர்.

ஆகையால் இந்த மந்திரம் அவரை வாசுதேவன் என்று அழைத்து மஹாவிஷ்ணு என்று முடிகிறது

ஹஸ்தம் என்றால் கை ; கையில் அமிர்த கலசத்தோடு இருப்பவர் என்று தியானிக்கிறோம். த்ரை லோக்ய நாதாய – மூன்று உலகங்களுக்கும் தலைவன்

முக்கியமான வரி ஸர்வ = எல்லா , ஆமய = நோய்களும் , விநாசாய = அழிப்பவனுக்கு

மஹா விஷ்ணவே நமஹ = மஹா விஷ்ணு ரூபத்தில் உள்ளவருக்கு நமஸ்காரம்  !

அவரை எங்கே காணலாம் ?

எங்கள் குடும்பத்திற்கு  அவர்  மிகவும் நெருங்கியவர். மாயவரம் பக்கத்திலுள்ள வைத்தீஸ்வரன் எங்கள் குல தெய்வம். நாங்கள் எப்போது இந்தியாவுக்குப் போனாலும் அந்தக் கோவிலில் 5 அர்ச்சனைகள் செய்வோம். அவர்களில் ஒருவர் தன்வந்திரி. இந்த சந்நிதி , பிரகாரத்தில் உள்ளது . மீதி 4 அர்ச்சனைகள் – ஸ்ரீ வைத்யநாத சுவாமி, பாலாம்பிகா , அங்காரகன் (செவ்வாய் சந்நிதி); செல்வ முத்து குமார சுவாமி(முருகன்) .

நீங்களும் உங்கள் ஊர்க்  கோவிலில் உள்ள தன்வந்திரியை பூஜித்து வழிபடுங்கள் ; எப்போதும் ஆரோக்கியம் நீடிக்கும் !

என்னுடைய  எக்சிமா (ECZEMA  )நோய் போனதற்கு அந்த தன்வந்திரி மந்திரமே காரணம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை!

Xxx subham xxxx

Additional Information

HOW BETNOVATE-N CREAM WORKS?

Betnovate-N Cream is a combination of two medicines: Betamethasone and Neomycin. Betamethasone is a steroid which blocks the production of certain chemical messengers (prostaglandins) that make the skin red, swollen and itchy. Neomycin is an antibiotic. It stops bacterial growth on the skin by preventing the synthesis of essential proteins required by bacteria to carry out vital functions (Always consult your family doctor before using any medicine.)

*****

tags- எக்சிமா ,ECZEMA , தன்வந்திரி மந்திரம், கைகண்ட மருந்து, 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: