
Post No. 11,425
Date uploaded in London – 8 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
நம்முடைய முன்னோர்கள் அனுபவத்தில் கண்ட உண்மைகளை பொன்மொழிகளாக , பாடல்களாக எழுதிவைத்துள்ளனர்.அவைகளைப் படிப்பதும், பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அளிப்பதும் நம் கடமை. அதைவிடப் பெரியது , அவைகளைக் கூடிய மட்டிலும் பின்பற்றுவதாகும் ; நோய்கள் வந்தவுடன் வருந்துவதை விட வருமுன் காப்பது மேலன்றோ!
வெறும் வயிற்றில் நெல்லிக்காயும் , சாப்பாட்டிற்குப் பிறகு இலந்தைப் பழமும் , எப்பொழுதும் விளாம்பழமும் புசித்தால் உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும். வாழைப்பழம் ஒருபோதும் பத்திய உணவு ஆகாது. நோய் நீங்கி உடல் தேற உதவாது
இதைச் சொல்லும் ஸம்ஸ்ருத சுபாஷிதம்/ பொன்மொழி :
அபுக்த்வா ஆமலகம் பத்யம் புக்த்வா து பதரீ பலம்
கபித்தம் ஸர்வதா பத்யம் கதலீ ந கதாசன
ஆமலகம் – நெல்லி, பதரீ – இலந்தை , கதலீ – வாழைப்பழம், கபித்தம்-விளாம்பழம்.
(என் கருத்து- பொதுவான விஷயங்களையே சுபாஷிதங்கள் சொல்லுகின்றன. ஆனால் உலகில் 2000 வகை அலர்ஜிக்கள் ( உணவு ஒவ்வாத தன்மை ) உள்ளன. யாருக்கு எது பொருந்தும் என்பதை அனுபவத்தாலோ, டாக்டர் மூலமோ அறிதல் நன்மை பயக்கும். இந்த குறிப்பிட்ட ஸ்லோகம் பத்யம் பற்றிப் பேசுகிறது ; நோயே இல்லாதவர்களுக்கு வாழைப்பழமும் நல்லதே )

XXX
தாயில்லாத குழந்தையின் வாழ்க்கையும், கணவன் இல்லாதவளின் யெளவனமும் (பருவச் செழிப்பு, இளமை அழகு), பொறுமை இல்லாத தவமும், புளியம் பழத்தின் புளிப்புச் சுவை இல்லாத உணவும் வீணானதாகும், பயனற்றதேயாகும் .
மாத்ரு ஹீன சிசு ஜீவனம் வ்ருதா , காந்தஹீன நவ யெளவனம் ததா
சாந்தி ஹீன மபி தபோ வ்ருதா, தீந்த்ரீணி ரஸ விஹீன போஜனம்
(எனது கருத்து – சிலருக்குப் புளிப்புச் சுவை தேவை; சிலருக்கு உவர்ப்புச் சுவை தேவை. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது தமிழ்ப் பழமொழி.ஆனால் நாம் தினமும் சாப்பிடும் ரசம், மோர் அல்லது தயிரில் கூட அளவோடு புளிப்புச் சுவை தேவைப்படுகிறது. இந்த சுவையை புளி அல்லது எலுமிச்சம் பழம் மூலம் நாம் பெறலாம்.
எனக்கு லண்டனில் ஒரு இலங்கைத் தமிழர் மிகவும் நெருங்கிய நண்பர். ஒரு நாள் உணவு பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் இடைமறித்து ஒரு விஷயத்தைச் சொன்னார். சுவாமிநாதன் ஸார் , புளியே வாங்காதீர்கள்; எனக்கு ஆர்த்ரைடீஸ் Arthritis இருந்தது; புளியை நிறுத்தி, எலுமிச்சை சாறு பயன்படுத்தியதிலிருந்து அது அறவே குணமாகிவிட்டது என்றார் ; உடனே சம்பாஷணையில்/ கலந்துரையாடலில் கலந்து கொண்ட வேறு ஒரு நண்பர் இடை மறித்து , “நீங்கள் ஒன்று! போங்க ஸார் ; எங்க தாத்தா சாப்பிட உட்காரும் போது கைப்பிடி உப்பை இலையில் வைத்துக்கொண்டுதான் சாப்பிட்டார். அவர் கடைசிவரை நோய் எதுவும் இல்லாமல்தான் இறந்தார்” என்றார் . பின்னர் எங்கள் உரையாடல் வேறு விஷயங்களுக்குத் திரும்பியது. அப்படியானால் முடிவுதான் என்ன? ஒவ்வொருவரின் உடலும் சிறு வயதில் பின்பற்றிய பழக்க வழக்கங்களால் அதற்கு ஈடு கொடுக்கும்படி மாறிக்கொள்ளுகிறது ஆயினும் எதற்கும் ஒரு அளவு உண்டு. ஆகையால் எல்லாவற்றிலும் மிதமான அளவைப் பின்பற்றுவது நோயற்ற வாழ்வினை நல்கும் )
xxx
நோயாளிகளுக்கும் , சிறுவர்க்கும், கிழவர்க்கும் , எப்பொழுதும் நல்லொழுக்க ஆசாரத்தில் இருப்பவருக்கும் விரத நியமங்கள் வேண்டியதில்லை.இதுவே பழமையான சாஸ்திர அறநெறியாம்
ஆதுரே நியமோ நாஸ்தி பாலே வ்ருத்தே ததைவ ச
ஸதாசார ரதே சைவ ஹ்யேஷ தர்மஸ் ஸனாதநஹ
(எனது கருத்து – ஏகாதசி விரதம், ரம்ஜான் விரதம் போன்றன மேற் கூறிவர்களுக்குக் கிடையாது .நான் லண்டனில் நியூஹாம் யுனிவர்சிட்டி ஆஸ்பத்திரியில் 13 ஆண்டுகளுக்கு பகுதி நேர ஹெல்த் அட்வகேட்டாகப் (Health Advocate in Newham University Hospital in East London) பணியாற்றினேன் . நான் தமிழர்களுக்கு மொழிபெயர்ப்பு உதவி செய்வேன். என்னுடன்
வேலை பார்த்த உருது, வங்காளி மொழி ஊழியர்கள் முஸ்லீம்களுக்கு மொழிபெயர்ப்பு உதவி செய்தனர். ரம்ஜான் காலத்தில் சர்க்கரை நோயுள்ள – டயாபடீஸ் — ஆண்களும் பெண்களும் விரதம் இருக்கத் தேவை இல்லை என்று அவர்கள் சொல்லியும் பல முஸ்லீம்கள் தயங்கினர். பின்னர் ஆஸ்பத்திரி இமாமே (Imam) துண்டுப் பிரசுரங்களை அவரவர் மொழியில் வெளியிட்டும் தனி பயிற்சி வகுப்புகள் நடத்தியும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார் . சர்க்கரை நோயுள்ளவர்கள் மாத்திரை எடுப்பதோ இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளுவதோ சாப்பிடுவதோ எல்லாவற்றையும் உரிய நேரத்தில் செய்யவேண்டும். அப்படிச் செய்யாவிடில் வாழ்நாள் முழுதும் டயாலிசிஸ் எந்திரத்துடன் நம்மைக் கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள். பின்னர் என்ன? அந்த மிஷினுடன் கணவன் மனைவி போல வாழலாம். நோயாளிகளுக்கு சமயம் (Religion) தொடர்பான விதிகளில் தளர்வு உண்டு என்பதை எல்லா மதத்தினரும் ஏற்கின்றனர். இதையும் மீறி சிலர் செயல்பட்டால் அவர்களை இறைவனே காப்பாற்றவேண்டும்; டாக்டர்கள் அல்ல.)
Xxxx
மன நலம் காக்க ; கவலையைத் தவிர்க்க !
சிதையில் உள்ள பிணத்தைக் காட்டிலும் , சிந்தையானது / மனக் கவலையானது பெரியது /கொடியது எப்படியெனில் சிதைத் தீ பிராணன் போன பின்னர் வெறும் உடலையே எரிக்கிறது சிந்தையோ பிராணனுடன் கூடிய சரீரத்தையே தஹிக்கிறது / கொளுத்துகிறது இதனால் மனவருத்தம் (சிந்தை ) கூடாது என்பது அறியத்தக்கது
சிதா சிந்தா அநயோர் மத்யே சிந்தா நாம கரீயஸி
சிதா தஹதி நிர்ஜீவம் சிந்தா ப்ராணாயுதம் வபுஹு
(எனது கருத்து – இது முற்றிலும் உண்மை; மனக் கவலையால் நோய்களின் தீவிரம் அதிகரிக்கும். அதைத் தவிர்க்க, கோவில், குளங்களுக்குச் செல்லுவது மூலமோ கலைகளின் பக்கம் மனத்தைச் செலுத்துவதன் மூலமோ மாற்றலாம். மன நலம் குன்றிய பல இலங்கைத் தமிழருக்கு நான் மொழி பெயர்ப்பு உதவி செய்தேன் ; அதில் ஒருவருக்கு படம் வரைவதிலும் வண்ணம் தீட்டுவதிலும் அபார திறமை இருந்தது. அவரை ஆர்ட் தெரபி ART THERAPY பிரிவுக்கு அனுப்பினர் . அங்குள்ள மன நல மருத்துவர், வாரம் தோறும் அவருடன் ஒருமணி நேரம் செலவழித்தார்; நோயாளி வந்தவுடன் முதல் பதினைந்து நிமிடம் வழக்கமான கேள்விகள்; பின்னர் படம் வரைதல் ; அந்த 3 மணி நேரம் அவருடைய எண்ணம் கவலை இல்லாமல் இருக்கும்; (தெரபி வகுப்புக்குப் போக ஒரு மணி ; வீட்டிற்குப் போக ஒரு மணி; டாக்டருடன் ஒரு மணி) சில காலத்துக்குப் பின்னர் அவருக்கு பிரிட்டனில் தங்க விசா கிடைத்தது. உடனே அவர் மன நோயும் அகன்றது )
Xxx
போகாத இடந்தனிலே போக வேண்டாம் !
கிராமத்திற்காவது, வீட்டுக்காவது திரும்பிச் செல்லுகையில் தவறான பாதையில் செல்லக் கூடாது ; இரவு நேரத்தில் மரத்தின் கீழே செல்லக் கூடாது ; இவைகளைத் தொலைவிலேயே தவிர்க்க வேண்டும்
அத் வாரேண ச நாத்மீயம் கிராமம் வா வேச்சம வா விசேத்
ராத்ரெள ச விருக்ஷ மூலானி தூரதஹ பரிவர்ஜயேத்
(எனது கருத்து : இப்பொழுது பள்ளிக்கூட படிப்பிலேயே இதைச் சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள் . பகல் நேரத்தில் மரம் செடி கொடிகள் கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை(Carbon di Oxide) எடுத்துக்கொண்டு நல்ல ஆக்சிஜனை (Oxygen) நமக்கு அளிக்கிறது. இரவு நேரத்தில் இது நடைபெறாது. மேலும் பூச்சிகளும் மிருகங்களும் இரவு நேரத்தில் அதிகம் செயல்படும் போகாத இடந்தனிலே போக வேண்டாம்- என்று சிறுவயதிலேயே உலக நீதிப்பாடலில் கற்றுக்கொண்டுள்ளோம்; ஆகவே தெரிந்த பாதையில் செல்லுவது நலம் பயக்கும் ; அண்மையில் இந்தியாவுக்குச் சென்றபோது அபிராமி அன்னையை தரிச்சிக்கவும் உறவினரின் சஷ்டி அப்தப் பூர்த்தியில் கலந்து கொள்ளவும் திருக்கடையூர் சென்றிருந்தோம் ; மறு நாள் காலையில் வைதீஸ்வரன் கோவில் செல்ல திட்டம். இரவு நேரத்தில் எங்கள் டாக்சி ட்ரைவர் வேறு ஒரு டிரைவருடன் பேச்சு கொடுத்ததில் அவர் ஒரு சுருக்கு வழியைச் (Shorter Route) சொல்லிக்கொடுத்தார். அந்தச் சுருக்கப்பாதை , (under Road repair) சாலை செப்பனிடும் பெரும் பாதை. ஒவ்வொரு பர்லாங் சென்ற பின்னரும் கற்கள் நிறைந்த – தார் போடாத — அரைகுறை ரோடு . அதில் கார் செல்லும்போது பஞ்சர் (Puncture) ஆகாமல் இருக்க வேண்டும் என்று உலகத்தில் உள்ள எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டோம். ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்றபோதும் இறைவன் தரிசனம் கிட்டியது; டிரைவரும் வழக்கமாகச் செல்லும் தெரிந்தவழியில் செல்லாதது தவறு என்று சொல்லி எங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் . தெரிந்த வழியே சிறந்தது!)
Xxxx
உடலூனம் உள்ளவரை இகழாதீர்
உடலுறுப்புக் குறை உள்ளவனையும் (அங்கஹீன), உடலுறுப்பை அதிகமாகக் கொண்டவனையும், அதிக குட்டை, அதிக உயர, நீள அவயமுள்ளவனையும் படிப்பில்லாதவனையும், வயதில் மூத்தோரையும் , அழகு, செல்வம், ஜாதி இவைகளால் குறைந்தவர்களையும் நிந்திக்கக்கூடாது
ஹீநாங்கான் அதிகரித்தாங்கான் வித்யாஹீனான் வயோதிகான்
ரூபா திரவிய விஹீனான் ச ஜாதிஹீனான் ச நாக்ஷி சிபேத்
(எனது கருத்து – வீட்டிலுள்ள முதிய வயதுள்ளவர்களை கிழடு , கிழவி என்று திட்டுவதையும் உறுப்பு குறைந்தவர்களை குருடன், நொண்டி, முடவன் செவிடன் என்று திட்டுவதையும் காண்கிறோம். மேலை நாடுகளில் இப்போது புதிய அகராதியை உருவாக்கியுள்ளனர் பொது இடங்களிலும் பத்திரிக்கைகளிலும் புதிய சொற்களைத்தான் பயன்படுத்தலாம். கருப்பர்களை நீக்ரோ/ Negro என்றோ கருப்பன் (Black) என்றோ சொல்லக் கூடாது. இதை நம்மவர்கள் அந்தக் காலத்திலேயே எழுதியாவது வைத்தார்கள் !!!)
Black people are referred to as ‘Afro- Caribbean person ‘
xxx
பிரிட்டிஷ் அரசாங்க அறிவிப்பு:–
Words to use and avoid
Avoid passive, victim words. Use language that respects disabled people as active individuals with control over their own lives.
Avoid | Use |
(the) handicapped, (the) disabled | disabled (people) |
afflicted by, suffers from, victim of | has [name of condition or impairment] |
confined to a wheelchair, wheelchair-bound | wheelchair user |
mentally handicapped, mentally defective, retarded, subnormal | with a learning disability (singular) with learning disabilities (plural) |
cripple, invalid | disabled person |
spastic | person with cerebral palsy |
able-bodied | non-disabled |
mental patient, insane, mad | person with a mental health condition |
deaf and dumb; deaf mute | deaf, user of British Sign Language (BSL), person with a hearing impairment |
the blind | people with visual impairments; blind people; blind and partially sighted people |
an epileptic, diabetic, depressive, and so on | person with epilepsy, diabetes, depression or someone who has epilepsy, diabetes, depression |
dwarf; midget | someone with restricted growth or short stature |
fits, spells, attacks | seizures |
—subham—tags- நெல்லிக்காய், இலந்தைப் பழ, மகிமை:, மருத்துவப் பொன்மொழிகள்