
Post No. 11,427
Date uploaded in London – 9 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பிரபஞ்சத்திலுள்ள 118 மூலகங்களில் மிகவும் முக்கியமான மூலகம்/தனிமம் நைட்ரஜன் (NITROGEN) .முதலில் சில சுவையான விஷயங்களைக் காண்போம் . ஐரோப்பிய மொழிகளில் இதற்கு வெவ்வேறு பெயர்கள்!
கிரேக்க மொழியிலிருந்து நைட்ரஜன் என்ற சொல் தோன்றியது. நைட்ர்+ ஜென் (NITRE+GENES) , அதாவது நைட்ர் என்னும் உப்பை உண்டாக்கும் பொருள்.பொட்டாசியம் நைட்ரேட் என்ற உப்பை அதிகம் பயன்படுத்திய காலத்தில் அதை நைட்ர் (Nitre ) என்றும் சால்ட் பீட்டர் (saltpetre )என்றும் அழைத்ததால் இப்படி ஒரு பெயர்.
ஆனால் பிரெஞ்சுக் காரர்களும் ஜெர்மானியர்களும் இதை வேறு சொற்கள் கொண்டு அழைப்பர். ஜெர்மானியர்கள் இதை ஸ்டிக் ஸ்டோப் (STICKSTOFF) என்பர் ; இதன் பொருள் மூச்சைத் திணறடிக்கும் பொருள் . பிரெஞ்சுக்காரர்கள் இதை அஸோட் (AZOTE) என்று குறிப்பிட்டனர். அதன் பொருள்- உயிரற்ற பொருள். நைட்ரஜன் கலந்த வாயுவான அம்மோனியா (AMMONIA) இப்படி மூச்சுத் திணறடிக்கும் (PUNGENT) பொருள் ஆகும் . அம்மோன் என்னும் எகிப்திய கடவுளின் பெயர் சூட்டப்பட்டிருந்தது . காரணம் என்னவெனில் அந்தக் காலத்தில் எகிப்து நாட்டில் அம்மோன் (AMMON) கோவிலுக்கு அருகில் அம்மோனியம் க்ளோரைட் (AMMONIUM CHLORIDE) தோண்டி எடுக்கப்பட்டது . இவை அனைத்தும் நைட்ரஜன் தொடர்புள்ளவை நைட்ரஜனும் ஹைட்ரஜனும் கலந்தது அம்மோனியா வாயு.
இரத்தத்தை உறையச் செய்து பாதுகாக்க, திரவ நிலையிலுள்ள நைட்ரஜனைப் (LIQUID NITROGEN) பயன்படுத்துகிறார்கள் . இதே போல ஆண்களின் விந்து , பெண்களின் கரு/ முட்டை ஆகியவற்றைப் பாதுகாக்கவும் திரவ நைட்ரஜன் பயன்படுகிறது . உடலில் தேவையில்லாத திசுக்களை அகற்ற அந்த இடத்தை மிக, மிகத் தாழ்வான வெப்ப, அதாவது மிகவும் குளிர் நிலைக்குக் கொண்டுவந்தால் அவை இறந்துவிடும். அதற்கும் இதை உபயோகிப்பர். அதை க்ரியோ ஜெனிக் சர்ஜரி (CRYOGENIC SURGERY) என்பர்.
வயாக்ரா மர்மம்
நமது மூளையில் நைட்ரிக் ஆக்சைட் சிந்தேஸ் (NITRIC OXIDE SYNTHASE) என்ற என்ஸைம் (ENZYME நொதி) அதிகளவில் உள்ளது. இதுதான் சதைகளைத் தளர்த்த உதவுகிறது. ஆண்களின் வீரிய சக்தியை அதிகரிக்க வயாக்ரா (VIAGRA ) பயன்படுகிறது. அதுவும் நைட்ரிக் ஆக்சைட் நொதிப் பொருளை உண்டாக்கும் .சுவீடனில் உள்ள லண்ட் யுனிவர்சிட்டி ஆஸ்பித்திரி டாக்டர் ஆண்டர்சன்(LUND UNIVERSITY HOSPITAL) நைட்ரிக் ஆக்ஸைடின் அற்புத குணத்தை 1991-ல் நிரூபித்துக் காட்டினார். இது ஆண்களின் வீரியத்தை எப்படி உசுப்பி விடுகிறது என்பதைக் காட்டினார். அதற்கு முன்னர் 1987ல் சால்வடார் மொன்கடா இந்த நைட்ரிக் ஆக்சைட் (NITRIC OXIDE) நம் உடலில் முக்கியப் பொருளாக (Messenger) இருந்து சதைகளை தளர்த்த (relaxing muscles) உதவுகிறது என்பதை முதல் முதலில் அறிவித்தார். இன்று இந்தக் கண்டுபிடிப்பு பல்வேறு வகைகளில் உதவுகிறது.
இது நீண்ட நேரம் செயல்படாது ; ஆனால் சவ்வுகள் வழியாக வேகமாகப் பரவும்.

நேரடியாக நைட்ரிக் ஆக்ஸைடை உடலில் பயன்படுத்த இயலாது. ஆகையால் இதை மெதுவாகத் தோற்றுவிக்கும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவர்.1867ம் ஆண்டிலேயே இதை அறிந்து ‘அமைல் நைட்ரைட்’ (Amyl Nitrite Vapour )ஆவியைப் பயன்படுத்தி ரத்த அழுத்தத்தைக் குறைத்தனர் .அஞ்ஜைனா (Angina ) என்னும் மார்புவலி நோயைக் குணப்படுத்த இந்த ஆவியைப் பயன்படுத்தினர். முதலாம் உலக யுத்த காலத்தில் நைட்ரோ கிளிசரின் என்ற வெடிமருந்து அதிகம் பயன்படுத்தப்பட்டது.. அந்த வெடிமருத்துத் தொழிலாளாளிகளின் இரத்த அழுத்தம் வழக்கத்துக்கு மாறாக இருப்பதை டாக்டர்கள் அறிந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு இதை இரத்த அழுத்தத்தைக் குறைக்க நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம் என்பது தெரிந்தது. அதன் விளைவாக இரத்தக் குழாய்களை விரிவாக்கும் வாஸோ டைலேட்டர் (Vasodilator) மருந்துகள் உருவாகின.
நைட்ரிக் ஆக்சைட் உயிர் காக்கும் பொருள் மட்டும் அல்ல; உயிர் போக்கும் பொருளும் ஆகும். ஒரு நோயாளி உயிருக்குப் போராடும்போது , அந்தக் கிருமிகளை எதிர்த்துப் போராட அதிக அளவில் நைட்ரிக் ஆக்சைட் சுரந்துவிடும். அப்போது இரத்த அழுத்தம் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்குத் தாழ்ந்துவிடும். ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் திடீரென இறப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.அந்த நேரத்தில் டாக்டர்கள் வந்து நைட்ரிக் ஆக்சைட் சிந்தேஸ் என்ற என்சைம் சுரப்பதைத் தடுக்க (inhibitors )மருந்துகளைக் கொடுப்பார்கள்.
PET Scanning (Positron Emission Tomography)
இயற்கையில் நைட்ரஜன் 14, நைட்ரஜன்- 15 என்ற இரண்டு ஐசடோப்புகள் (தனிமத்தின் பிற அவதாரங்கள்) கிடைக்கின்றன. அவைகளுக்குக் கதிரியக்கம் இல்லை ; ஆயினும் நாம் உண்டாக்கும் நைட்ரஜன்-13 ஐசடோப்புக்கு கதிரியக்கம் உண்டு அதன் அரை வாழ்வு (Hale life) பத்தே நிமிடங்கள் தான். அதை மனித உடலில் செலுத்தும்போது அது அழியத்தொடங்கும்; அப்போது பாஸிட்ரான்களை (Positrons ) வெளியிடும் ; அவற்றை எலெக்ட்ரான்கள் தாக்கி அழிக்கும். அப்போது வெளியாகும் கதிரியக்கம் எக்ஸ் ரே கிரணங்களைப் போன்றவை ; அதைப் படம்பிடிக்கும்போது முப்பரிமாண படங்கள் நமக்கு கிடைக்கின்றன. இதனால் நோயாளியின் உடல் பகுதியின் பாதிப்பினை நன்றாக அறியலாம். இதை பாசிட்ரான் எமிஸ்ஸன் டோமோகிராபி (Positron Emission Tomography) அல்லது PET Scanning/ பெட் ஸ்கானிங் என்று சொல்லுவார்கள்.
அடுத்த கட்டுரையில் போர்க்கள நைட்ரஜன் , பொருளாதார நைட்ரஜன் பயன்களைக் காண்போம்
To be continued……………………………………tags-வயாக்ரா ,மர்மம், PET Scanning/, பெட் ஸ்கானிங், நைட்ரஜன்