இதாலியில் அதிசய கண்டுபிடிப்பு! வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்!!(11,432)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,432

Date uploaded in London – 10 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

இதாலியில் அதிசய கண்டுபிடிப்பு– வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்

அதிசயங்களுக்குக்  குறைவே இல்லை; விஞ்ஞானிகள் மட்டும்தான் வாரம்தோறும் அதிசயக் கண்டுபிடிப்புகளை சொல்லுவார்கள் என்று நாம் நினைக்கலாம். வரலாற்று அறிஞர்களும் வாரம்தோறும் புதிய செய்திகளை அளித்த வண்ணம் இருக்கின்றனர். மேலை நாடுகளில் இதற்காக பல மாதப்பத்திரிக்கைகள் விற்பனை ஆகின்றன. அதில் யார்  எங்கே என்ன புதையலைக் கண்டுபிடித்தார்கள், எந்த வரலாற்று ஆவணத்தை, கலைப் பொருளை  என்ன விலைக்கு ஏல நிறுவனங்கள் விற்றன என்ற புதிய செய்திகள் நூற்றுக் கணக்கில் வெளியாகின்றன. ஆனால் 8-11-2022 அன்று எல்லா முக்கிய நாளேடுகளும் வெளியிட்ட செய்தி இத்தாலியின் வரலாற்றையே மாற்றி எழுதும் அளவுக்கு முக்கியமானவை என்று பத்திரிக்கைகள் கொட்டை எழுத்தில் செய்திகளை வெளியிட்டன.. அப்படி என்ன அதிசயம் ?

முதலில் எட்ருஸ்கன் நாகரீகத்துக்கும் , இந்துக்களுக்கும் உள்ள தொடர்பை  அறிந்தால் இதன் முக்கியத்துவம் இன்னும் அதிகம் ஆகும்

இந்துக்களைப்  போல அவர்களும் ‘சுவஸ்திகா’ சின்னத்தை அதிக அளவு பயன்படுத்தினர்.

அவர்களும் பறவை சகுனத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர் ;

அவர்கள் பாபிலோனியர் போல கல்லீரல் ஜோதிடம், ஆரூடத்தில் நம்பிக்கை உடையவர்கள் ;

இந்துக்களைப் போலவே தாயத்துக்கள் , காணிக்கைகள் செய்தனர்; குழந்தையின் ஆரோக்கியத்துக்காக குழந்தை உருவம் செய்து காணிக்கையாகக் கொடுத்தல் முதலியன குறிப்பிட்டத்  தக்கவை.

ETRUSCAN- HINDU/ TAMIL LINK – Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/07/28 › etruscan-hin… 

28 Jul 2012 — Etruria is the modern day Tuscany and part of Umbrian Italy. They ruled Rome from 616-509 BC. Roman civilization was greatly influenced by …

DIVINATION in The Vedas, Babylonian and Etruscan

https://tamilandvedas.com › 2015/04/10 › divination-in…

10 Apr 2015 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. DIVINATION in The Vedas, Babylonian and Etruscan.

ஆரூடம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஆ… 

·Translate this page

இதாலி நாட்டில் இருந்த எட்ருஸ்கன் நாகரீகம் இந்துக்கள் போலவே பறவைகள் சகுனத்தில் .. 

எனக்கு இந்த ஆராய்ச்சியில் மிகவும் ஈடுபாடு இருப்பதால் இத்தாலிக்கு இரு முறை சென்றபோது ரோம் நகரின் ஒதுக்குப் புறத்திலுள்ள எட்ருஸ்கன் மியூசியத்துக்குச் (ETRUSCAN MUSEUMIN ROME) சென்று வரலாற்று கலைப் பொருட்கள் சின்னங்களை நேரில் கண்டேன்.

புதிய செய்தி இதோ :

இதாலியில் ஒரு ஊற்றுக்கு அடியில் 24 சிலைகளைக் கண்டுபிடித்துள்ளனர். அவைகளில் எட்ரூஸ்கன் மற்றும் லத்தீன் மொழியில் பெயர்களும் வேறு சில குறிப்புகளும் காணப்படுகின்றன . இவைகளை கிறிஸ்தவர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்னாள் கற்களைப் போட்டு அடைத்துவைத்தனர். அதற்கு முன்னர் அகஸ்டஸ் ஸீஸர் முதலிய புகழ்பெற்ற மன்னர்கள் அங்கே வந்து பழைய தெய்வங்களை வழிபட்டனர் . பழைய தெய்வங்களை வழிபடக்கூடாதென்பதற்காக பெரிய கற்களைப் போட்டு அந்த இடங்களை கிறிஸ்தவ வெறியர்கள் மூடிவைத்தனர். இப்பொழுது பெரிய கற்களை அகற்றியபோது 24 உலோக விக்ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது இயற்கையான வெந்நீர் ஊற்று. மக்கள் அங்கே வந்து குளித்துவிட்டு கிறிஸ்துவுக்கு முந்தைய ரோமானிய தெய்வங்களை வழிபட்டனர். அப்படிச் செய்கையில் நல்ல அதிர்ஷ்டம் அடிப்பதற்காக காசுகளை ஊற்றில் எறிவார்கள். குழந்தைகளுக்காக  வேண்டிக்கொண்டு உருவங்களையும் தண்ணீரில் எறிவார்கள் ; அப்படிப்பட்ட 5000 நாணயங்களும் கலைப்பொருட்களும் 2019 முதல் கிடைத்துவந்தன. இப்பொழுது கிறிஸ்தவர்கள் அடைத்துவைத்த கற்களை அகற்றியபோது பெரிய அதிசயம் காத்திருந்தது 24 உலோக விக்ரகங்கள் கிடைத்தன. அவற்றில் ஐந்து, ஆள் உயரம் உடையவை. எட்ருஸ்கன்கள் வழிபட்ட தெய்வங்கள் அவை.

டஸ்கனி பிரதேசத்தில் சியெனா பகுதியில் சான் காசியானோ என்ற சிறிய ஊர் உள்ளது அங்குள்ள இயற்கையான வெந்நீர் ஊற்று 2500 ஆண்டுகளாக பயன்படுகிறது அதிலுள்ள உப்புகள் , உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பதால் அகஸ்டஸ் சீசர் என்ற புகழ்பெற்ற மன்னர் முதல் பாமரர் வரை அங்கே வந்து குளித்தனர்.(a thermal bath in San Casciano, a small town in the province of Siena, Tuscany.). கிறிஸ்தவ மதம் பரவியவுடன் பழைய தெய்வங்கள் இருந்த பகுதிகளை கிறிஸ்தவ வெறியர்கள் அடைத்துவிட்டு புதிய ஊற்றுப் பகுதியை உண்டாக்கினர் ; காலப்போக்கில் அது சகதி நிறைந்த பகுதியாகி கேட்பாறற்றுக் கிடந்தது. 2019 முதல் அங்குள்ள பல்கலைக்  கழகப் பேராசிரியர் தலைமையில் ஆராய்ச்சி துவங்கியது .  நவம்பர் எட்டாம் தேதி (2022) முக்கிய அறிவிப்பு வெளியிட்டு என்ன என்ன கிடைத்தன, அதன் முக்கியத்துவம் என்ன என்பதை தொல்பொருட் துறையினர் அறிவித்தனர்.

பல காலத்துக்கு கிறிஸ்தவர்களும் எட்ருஸ்கன்க்ளும் இங்கே கூட்டாக வந்து வழிபட்டது தெரிகிறது ஆனால் வெளியே அவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் குடுமி பிடிச்சண்டைகள் நடந்தன. பிறமத வழிபாட் டை  அழிக்க முடியாததால் பெரும் கற்களால் அப்பகுதியை கிறிஸ்தவர்கள் மூடினர்.

இப்போது கண்டெடுக்கப்பட்ட சிலைகள் விவரம் வருமாறு:-

இவை 2300 ஆண்டுகளுக்கு முன்னர் படைக்கப்பட்டவை .

Hindu Swastika in Etruscan

ரோமானியர்களும் கிரேக்கர்களும் ஆரோக்கிய தேவதையாக வழிபட்ட தேவியின் பெயர் ஹைஜியா ; அவள் கையில் ஒரு பாம்பு சுற்றியிருக்கும். அவனுடைய சிலை அருகில் படுத்திருக்கும் இளைஞனுடன் கிடைத்திருக்கிறது sleeping ephebe lying next to Hygeia, the goddess of health, with a snake wrapped around her arm.

அப்பாலோ (APOLLO) சிலை மற்றும் குழந்தைகள் விக்ரகங்கள், மன்னர்கள் என்று கருதப்படும் விக்ரகங்களும் கிடைத்துள்ளன. 1972-ம் ஆண்டில் தாடியுடன் கூடிய இரண்டு கிரேக்க உருவங்கள் கிடைத்தன. அதற்குப்பின்னர் கிடைத்த பொக்கிஷம் இவை என்று இதாலிய மியூசிய டைரக்டர் மாஸிமோ ஓசன்னா கூறினார்.

தொல் பொருட் துறை அறிஞரும் அங்குள்ள பல்கலைக்கழகப் பேராசிரியுமான ஜாகோபோ தபோல்லி இந்த ஆராய்ச்சிகளை 4 ஆண்டுகளாக நடத்திவருகிறார்.. எட்ரூஸ்கன்கள் கி.மு 900 முதல் டஸ்கனி அம்ப்ரியா பகுதியில் வாழ்ந்தனர். முதல் நூற்றாண்டில் ரோமானிய பேரரசு ஸ்தாபிக்கப்படும் வரையில் அவர்கள் கொடிகட்டிப் பறந்தனர். பின்னர் அது கிறிஸ்தவ மதத்தில் கரைந்துபோய்விட்டது.

காணிக்கையாக செலுத்தப்பட்ட ரோமானிய தெய்வங்களின் சிலைகளும் இளையோர் முதியோர் உருவங்களும் பெயர்களுடன் காணப்படுகின்றன. அவை லத்தீன் மற்றும் எட்ருஸ்கன் பெயர்களாக இருப்பதால் இரு பிரிவினரும் முதல் 500 ஆண்டுகளுக்கு கூட்டாக வழிபாடுசெய்ததும்  தெரிகிறது.

–SUBHAM—

Tags- எட்ருஸ்கன் , இதாலி , புதிய விக்ரககங்கள், சிலைகள், வெந்நீர் ஊற்று

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: