போர்க்களத்தில் நைட்ரஜன்– நோபல் பரிசின் கதை (Post No.11,430)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,430

Date uploaded in London – 10 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

முந்தைய கட்டுரையில் (9-11-22) மருத்துவத்தில், குறிப்பாக வயாக்ரா VIAGRA என்னும் வீரிய மாத்திரையில் நைட்ரஜன் (NITROGEN) உப்புகள் எப்படி பயன்படுகின்ற்ன என்று கண்டோம். 

இதோ போர்க்கள, பொருளாதார பயன்கள்:

நோபல் பரிசின் கதை NOBEL PRIZE

பொட்டாசியம் நைட்ரேட் (Potassium Nitrate) என்னும் நைட்ரஜன் உப்புதான் முதல் முதலில் வெடி மருந்துகளில் பயன்பட்டது. அந்தக் காலத்தில் இதை டாய்லெட்- கழிப்பறைகளிலிருந்து சுரண்டி எடுத்தார்கள் கழிவுப்பொருட்களில் உள்ள நைட்ரஜன் அங்குள்ள பாக்டீரியாவின் தாக்குதலால் பொட்டாசியம் நைட்ரேட் படிகங்களை லெட்ரின், சாக்கடைச் சுவர்களில் படியச் செய்யும். அத்தோடு கரி மற்றும் கந்தகத்தைக் கலந்தால் வெடி மருந்து (Gun Powder)  கிடைக்கும் .

இதற்குப் பின்னர் 1846-ம் ஆண்டில் நைட்ரோ கிளிசரின் என்ற அதிக சக்தியுள்ள வெடிப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. நைட்ரிக் அமிலம் அல்லது  கந்தக அமிலத்துடன் கிளிசரின் (GLYCOL க்ளைகால்) என்ற பொருளைக்   கலந்தால்  நைட்ரோகிளிசரின் கிடைக்கும். இது சுரங்கம் தோண்டும் தொழிலிலும் கல் உடைக்கும் மலைப் பாறைகளிலும் பயன்பட்டது. ஆயினும் இது எப்போது வெடிக்கும் என்பது தெரியாததால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டன. சுவீடிஷ் விஞ்ஞானியான ஆல்ப்ரெட் நோபல் (1833-1896) ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தார். நைட்ரோ கிளிசரினை களிமண் கட்டியில் உறியவைத்துவிட்டால் நாம் வேண்டும் போது அதை வெடிக்கச் செய்யலாம்; இதற்கு மற்றோர் வெடித்திரி இருந்தால் போதும்; அதைக்கொளுத்தும்போது அது வெடிக்கும்; பாறைகளை , பாதுகாப்போடு தகர்க்கலாம் என்று அறிவித்தார். இந்தக் கண்டுபிடிப்பு அவருக்கு ஏராளமான செலவத்தை ஈட்டித் தந்தது. இதுதான் டைனமைட் (Nitro-glycerine and Dynamite). தனக்குக் கிடைத்த செல்வத்தில் ஒருபகுதியை ஒதுக்கி 1901-ம் ஆண்டில் நோபல் சமாதானப் பரிசை நிறுவினார்.

இதற்குப் பின்னர் 1863-ம் ஆண்டில்  TNT என்னும் மேலும் சக்திவாய்ந்த வெடிப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் நைட்ரஜன் கொடுத்த ரசாயனப் பொருளே. இது ட்ரை நைட்ரோ டாலுயீன் (TRI NITRO TOLUENE) என்பதன் சுருக்கம். பின்னர் அம்மோனியம் நைட்ரேட்டையும் கூட வெடிமருந்தாக்கலாம் என்று அறிந்தனர். இவை அனைத்தும் போர்க்களத்திலும் பயன்பட்டன. ஆனால் தற்காலத்தில் இவை எல்லாம் பழங்கதைகள் ஆகிவிட்டன. இப் போது RDX மற்றும் HMX என்ற மிகவும் சக்திவாய்ந்த வெடி மருந்துகள் வந்துவிட்டன. இவைகளையே ராணுவம் பயன்படுத்துகிறது.

இது எல்லாவற்றிலும் என்ன நடக்கிறது என்றால், அந்த ரசாயனப்பொருளில் இருக்கும் நைட்ரஜன் மீண்டும் வாயுவாக மாற ஆசைப்பட்டு விரிவடைகிறது. அப்போது பிரம்மாண்ட வெப்பமும் வீச்சும் ஏற்படுகிறது .

மிகப்பெரிய விபத்துகள்

கனடாவில் நோவா ஸ்காட்டியா  பகுதியில் (HALIFAX) ஹாலிபாக்ஸ் என்னும் நகரம் உள்ளது. 1917ம் ஆண்டில் 2750 டன்  வெடிப்பொருளுடன் வந்த கப்பல் மற்றொரு கப்பலின் மீது மோதியதில் அந்த நகரின் பெரும்பகுதி வெடித்துச் சிதறியது. அதில் 1600 பேர் கொல்ல ப்பட்டனர்  ; 9000 பேர் காயம் அடைந்தனர்

அமெரிக்காவில் டெக்சாஸில்(TEXAS)  அம்மோனியம் நைட்ரேட் ஏற்றி வந்த கப்பலில்  மிகப்பெரிய தீ விபத்து நடந்தது . அங்கு சேமித்து வைக்கப்பட்ட 5000 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் 552 பேர் இறந்தனர் 3000 பேர் காயம் அடைந்தனர். . கப்பலுக்கு ஒரு மைல் வட்டாரத்தில் இருந்த அத்தனை கட்டிடங்களும் தூள் தூளாயின. மக்கட் தொகையைக் குறைப்பதில் நைட்ரஜன் ஆற்றும்  கைங்கர்யம் கொஞ்சந ஞ்சமல்ல!!

Xxx

ரசாயன/ வேதியியல் குறிப்புகள்

குறியீடு – N

அணு எண் – 7

உருகு நிலை – மைனஸ்  210 டிகிரி C

கொதி நிலை – மைனஸ்  196 டிகிரி C

இயற்கையில் உள்ள ஐசடோப்புகள் – நைட்ரஜன் 14, நைட்ரஜன் 15

பொதுவாக இது மணம் , நிறம் அற்றது;

வாயு ரூபத்தில் காற்றில் இருக்கிறது.

நம் சுவாசிக்கும் காற்றில் 78 சதவிகிதம்  நைட்ரஜன் இருக்கிறது . இதற்கு அதிகமானால் மூச்சுத்திணறல் ஏற்படும். ஆயினும் உயிரினங்கள்  நைட்ரஜன் இல்லாமல் வாழமுடியாது ஏனெனில் மரபணுவில் DNA யில் இது இருக்கிறது  உடலில் சுரக்கும்  நொதி என்னும் என்சைம் களிலும் அமினோ அமிலங்களிலும் , ரத்தத்திலுள்ள சிவப்பு அணுவான ஹீமோகுளோபினிலும் ஒரு நரம்பிலிருந்து மற்றோர் நரம்புக்கு செய்தி அனுப்பும் நரம்பு நுனியிலும்  நைட்ரஜன் ரசாயனம் இருக்கிறது.

Xxx

பொருளாதார உபயோகங்கள்

பூமியின் காற்று மண்டலத்தில் 3 மில்லியன் பில்லியன் டன் நைட்ரஜன் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர். காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவில் 45  மில்லியன் டன் வாயுவை தொழிசாலைகள் உபயோகிக்கின்றன . அதாவது ரசாயனப் பொருட்களாக மாற்றிப் பயன்படுத்துகின்றன. நைட்ரஜன் வாயுவை திரவ நிலைக்கு குளிரச் செய்து திசுக்கள், ரத்தம், விந்து/ கரு ஆகியவற்றை பாதுகாக்கின்றனர் . வாயுவை எண்ணெய்க் கிணறுகளில் செலுத்தி மேலும் எண்ணை எடுக்கின்றனர்.

வெடி மருந்து முதல் அம்மோனியா வாயு வரை,  நூற்றுக்கணக்கான  நைட்ரஜன் ரசாயனப் பொருட்கள் பயன்படுகின்றன. நைட்ரிக் அமிலம்தான் , அமில வகைகளில் அதிக சக்தி உடையது. இதுவும் அம்மோனியா வாயுவும் உருவாக்கும் பொருட்கள், பிளாஸ்டிக், நைலான் முதலிய துணி வகைகள், பாலிதீன், புகைப்படத் தொழில் ரசாயனங்கள் , ராக்கெட் எரிபொருள், சாயத் தொழில் ஆகியவற்றில் பெரும் அளவு பயன்படுத்தப்படுகிறது.

எரிமலை கக்கும் நைட்ரஜன் , மின்னல் உண்டாக்கும் நைட்ரஜன் ,அவரை முதலிய பயறு வகை தானியங்களில் காணப்படும் நைட்ரஜன்  சுழற்சி, ஆகியவற்றை அடுத்த பகுதியில் காண்போம் 

–தொடரும்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: