
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,434
Date uploaded in London – – 11 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தன்னேர் இலாத தமிழின் பெருமை!
ச.நாகராஜன்
இறைவனே தந்த தமிழ் மொழியின் பெருமையை முற்றிலுமாக யாராலும் உரைக்க முடியாது.
சங்க காலத்தில் இருந்து தற்காலம் வரை தமிழின் புகழைச் சொல்லி வந்திருக்கின்றனர் ஆன்றோர்.
அவற்றில் மிக முக்கியமான ஐந்து பாடல்களை பெருந்தொகை திரட்டில் பார்க்க முடிகிறது.
பொருளியல் பகுதியில் 2157, 2158, 2159, 2160, 2161 என்ற வரிசையில் இந்தப் பாடல்கள் தரப்பட்டுள்ளன.
பாடல்கள் இதோ:
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருள்கடியு – மாங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.
இந்தப் பாடலின் பெருமையை முற்றிலுமாக யாராலும் உரைக்க முடியாது. அப்படிப்பட்ட அற்புதமான பாடல் இது.
இருள் கடியும் என்பதற்கு பதிலாக இருள் அகற்றும் என்றும் ஒரு பாடம் உண்டு. (நான் இருள் அகற்றும் என்பதையே பயன்படுத்தி வருகிறேன்._
ஓங்கல் என்றால் உதயகிரி, பொதியமலை என்று கூறலாம்.
இந்தப் பாடல் தண்டியலங்காரத்தில் காணப்படுகிறது,
அடுத்த பாடல்:
பைங்க ணிளம்பகட்டின் மேலானைப் பான்மதிபோற்
றிங்க ணெடுங்குடையின் கீழானை – யங்கிரந்து
நாம் வேண்ட நன்னெஞ்சே நாடுதிபோய் நானிலத்தோர்
தாம்வேண்டுங் கூடற் றமிழ்
பாடபேதம் – ணிளம்பகட்டின் என்பதற்கு பதிலாக ணிளம்பகட்டு,
யங்கிரந்து என்பதற்கு பதிலாக தங்காது
நாம் வேண்ட என்பதற்கு பதிலாக நாம் வேண்டு
பத்துப்பாட்டு நூலில் மதுரைக் காஞ்சியில் இறுதியில் இது தரப்பட்டுள்ளது.

மேலானை, கீழானை ‘இரந்து தமிழ் வேண்டுதி’ என்றது பாண்டிய மன்னனின் தமிழ்த் தலைமையைக் குறிக்க வந்தது. கூடல் தமிழால் வேண்டுதி என்றும் கொள்ளலாம்.
அடுத்து ஒரு அருமையான பாடல்:
சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்
நல்லிருந் தீதாது நாறுதலான் – மல்லிகையின்
வண்டார் கமழ்தாம மன்றே மலையாத
தண்டாரான் கூடற் றமிழ்
இதுவும் பத்துப் பாட்டு நூலில் காணப்படும் ஒரு பாடலாகும்.
தீதாது என்ற சொல்லை தீந்தாது என்று திருத்திக் கொள்ளல் வேண்டும்.
மலையாத தண்டாரான் – “ஏனையோரால் அணியப்படாத ஆரத்தைப் பூண்டவன். இதன் பொருள் : இந்திரனால தரப்பட்ட ஆரத்தை (மாலையை) அணிந்தவன் என்று பொருள். பாண்டியனின் பெருமை இதனால் புகழப் படுகிறது.
அடுத்த பாடல்:
மாவடு வென்ன்னு மலர்புரை கண்ணினாய்
பாவெடுத்துப் பாடும் பயனோக்கி – மேவி
எடுத்த வினத்தினா லின்பஞ்சொற் சேரத்
தொடுத்து மொழிவ தமிழ்
யாப்பருங்கல விருத்தியில் காணப்படும் பாடல் இது.
அடுத்த பாடல்:
செந்தமிழ்ச் செய்யுட் டிறந்தெரிந்து செந்தமிழ்க்கண்
வந்த வடமொழியு மாற்றாதே – சந்தம்
வழுவாமற் கொண்டியற்று மாண்பினார்க் குண்டே
தழுவாமை நிற்குந் தமிழ்
இதுவும் யாப்பருங்கல விருத்தியில் காணப்படும் பாடலாகும்.
அடுத்து சமீப காலத்தில் தோன்றிய கவியோகி சுத்தானந்த பாரதியார் அழகுற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றைத் தந்துள்ளார்:
காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிர் பூந்தாமரையும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழ்க!
இந்தப் பாடலில் குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் என்னும் அற்புதமான ஐந்து காப்பியங்களை ஆபரணமாகத் தமிழ்த் தாய்க்குச் சொல்லி வாழ்த்து கூறுவதைப் பார்த்து வியக்க முடிகிறது.
குண்டலம் என்பது காதில் அணியும் ஆபரணம். அதுவே குண்டலகேசி.
வளையல் என்பது கைகளில் மகளிர் அணியும் ஆபரணம். அது வளையாபதியாகத் திகழ்கிறது.
மாணிக்கப் பதக்கங்கள் மணி மாலைகளுடன் மார்பில் அணியப்படும் ஒரு ஆபரணம். அதுவே சீவக சிந்தாமணியாக அமைகிறது.
மேகலை மகளிரால் இடுப்பில் அணியப்படும் ஒரு ஆபரணம். அதுவே மணிமேகலையாகத் திகழ்கிறது.
காலில் அணிவது சிலம்பு. அதுவே அன்னையின் பாதங்களில் சிலப்பதிகாரம் என்ற காப்பியமாக ஒலி செய்து விளங்குகிறது.
அற்புதமான கவினுறு கற்பனையைக் கைக் கொண்டு தமிழ் அன்னையை வாழ்த்துகிறார் கவியோகி.
இந்தப் பாடல்களை அனைத்து மாணவ மாணவியரும் கற்றுத் தெளிய இவற்றைப் பாட புத்தகங்களில் சேர்க்க வேண்டும்.
தமிழின் பெருமையை இளம் உள்ளங்களில் பதிய வைக்க வேண்டும்.
செய்வோமா?
***
TAGS- தமிழின் பெருமை, யாப்பருங்கல விருத்தி
புத்தக அறிமுகம் – 110
ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. வானத்தை வசமாக்கும் புதிய பயணங்கள்!
2. பூமியின் வெப்பம் அதிகமாகிறது!
3. கவா… கவா!
4. விண்வெளிக் குப்பை!
5. விலங்குகளின்மீது வியப்பூட்டும் அறிவியல் சோதனைகள்!
6. உலகை மாற்றிய தாவரங்கள்!
7. புதிய கிரகம் கண்டுபிடிப்பு!
8. நீலத் திமிங்கிலங்களின் தகவல் பரிமாற்றமுறை!
9. தேவை புத்துணர்ச்சி தரும் தூக்கம்!
10. சிகரெட்டும் அபாயகரமான போதைப் பொருளே!
11. வால் நட்சத்திரத்தில் இறங்கத் திட்டம்!
12. சாட்லைட் கண்டுபிடித்த பழைய நகரம்!
13. வயர்லெஸ் பல்ப் எரிய விட்ரிசிடி!
14. அருகி வரும் அரிய விலங்கு வகைகள்!
15. என்றுமே இளமையாக இருப்பது பற்றிய அறிவியல் ஆய்வு!
16. நவீன ரொபாட்!
17. நீடித்த மகிழ்ச்சிக்கு அறிவியல் காட்டும் வழி!
18. மீன்வளம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?
19. சும்மா இருக்குமா மூளை?
20. முகபாவமே அனைத்தும் சொல்லும்
21. நீர் நிறைந்த புதிய பூமி கண்டுபிடிப்பு!
22. மாறப் போகும் தொழிலகங்கள்!
23. புதிய தொழில் முறை!
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
This is a collection of 23 science articles written by the famous author
S. Nagarajan. Besides being amazing in the essence, every article is really precise not more than two pages. Thus makes the book not only suitable for elders but also serves as a good gift for the children. Simply the names of the articles are astounding such as Transporting anywhere in the world within two hours, Laser broomstick for the galaxial garbage, the communication of Blue Whales and the replacement of Electricity by Vitricity and so on.
பிரபல எழுத்தாளர் ச.நாகராஜன் எழுதியிருக்கும் 23 அறிவியல் செய்திக் கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகள் ஒவ்வொன்றும் சுவையாகவும் புதுமையான தகவல்களைக் கொண்டதாகவும் இருப்பது மட்டுமல்லாமல் எளிமையாகவும் ஓரிரு பக்கங்களிலேயே அடங்குபவையாகவும் இருக்கின்றன. இதனால் பெரியவர்கள், தாங்கள் படிப்பதோடு நில்லாமல் குழந்தைகளுக்கும் இந்நூலைப் பரிசளிக்கலாம். இரண்டு மணி நேரத்திற்குள் உலகின் எந்த மூலைக்கும் சென்று விடக் கூடிய அளவுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பம், விண்வெளிக் குப்பைகளுக்கான லேசர் விளக்குமாறு, நீலத் திமிங்கலங்களின் தகவல் பரிமாற்ற முறை, எலக்ட்ரிசிடிக்கு மாற்றாக வரவிருக்கும் விட்ரிசிடி என நூலில் இடம் பெற்றிருக்கும் சில அத்தியாயங்களின் பெயர்களே வியப்பூட்டுகின்றன.
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
*