தாவரங்களிலும் நைட்ரஜன்- பகுதி 3 (LAST PART)- Post No.11,435

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,435

Date uploaded in London – 11 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Part 3 of Nitrogen (last part)

நைட்ரஜனை யாரும் மறக்க  முடியாது ; வயாக்ராவுக்கும் நைட்ரஜன்; நோபல் பரிசுக்கும் நைட்ரஜன்; ரத்தம், ஆண்களின் விந்து , பெண்களின் கரு /முட்டையைக் பாதுகாக்கவும் நைட்ரஜன், பெட் PET என்னும் உடல் ஸ்கானிங் விஷயத்திலும் நைட்ரஜன் என்று கடந்த இரண்டு பகுதிகளில் கண்டோம்.

இப்போது ‘அவரை’ முதலிய தானியங்களின் வேர்களில் முடிச்சுகளாக இருந்து பலன் தரும் நைட்ரஜன் பற்றிக் காண்போம்.

நைட்ரஜன் முடிச்சு (NODULES)

காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை நிலைப்படுத்த பூமியில் உள்ள பாக்டீரியாக்களும் (CYANO BACTERIA) கடலில் உள்ள (ALGAE) பாசிகளும்  உதவுகின்றன.அவரை, மொச்சை, சோயா பீன்ஸ் போன்ற பயறு வகைத் தாவரங்களின் (LEGUMES) வேர்களில் முடிச்சுக்களைப் (NODULES) பார்க்கலாம். சில வகை பாக்டீரியாக்கள் தாவரங்களுடன் கூட்டுறவு வைத்துக் கொள்கின்றன அதாவது கார்போஹைட்ரேட்டைத் தாவரங்களில் இருந்து பெற்றுக்கொண்டு அம்மோனியா வாயுவை வெளியிடுகின்றன. இவற்றால் மண்வளம் பெருகும். நைட்ரஜன் மெதுவாக காற்றுமண்டலத்தில் கலக்கும். இவ்வாறு செய்வதை நைட்ரஜன் சுழற்சி (NITROGEN CYCLE) என்பர். இதே போல அழுகிய தாவரங்கள், இலை  மக்கு ஆகியனவும் நைட்ரேட்டைஉண்டாகி பின்னர் அது காற்று மண்டலத்திற்குச் செல்ல உதவுகின்றன.

நைட்ரேட்டுகள்(NITRATES) மனித உடலில் புற்றுநோயை உண்டாக்குவதாக சில காலத்துக்கு அச்சம். நிலவியது. இதனால் குடிநீரில் இந்த அளவுக்குத்தான் நைட்ரேட் இருக்கலாம் என்ற கட்டுப்பாடுகளையும் அரசு விதித்தது. மனிதர்களின் குடலில் உள்ள பாக்டீரியாக்களும் நைட்ரேட்  உப்பை உருவாக்குகின்றன. ஆயினும் குடிநீரிலிருந்து உடலில் சேரும் நைட்ரேட் மிகவும் குறைவு. கீரைவகைத் தாவரங்கள், சாலட் SALAD டில் பயன்படும் லெட்டஸ் (LETTUCE) ஆகியவற்றிலும் நைட்ரஜன் உப்புகள் இருக்கின்றன.

எரிமலை கக்கும்  நைட்ரஜன்

பூமிக்கு நடுவில் உள்ள கருப் பகுதியில் கொதி நிலையில் குழம்பு போல மூலகங்கள் இருக்கின்றன. இவை வெளியே வந்து வளி  மண்டல நைட்ரஜனை உற்பத்தி செய்தது. இப்போதும் எரிமலைகள் வெடித்து தீக்குழம்பு வெளிவரும்போது நைட்ரஜன் வாயுவும் வெளிவருகிறது.இது நைட்ரஜன் உப்புக்களாக மாறி பல வகையில் உதவுகிறது .ஏனெனில் நைட்ரஜன் எதனுடனும்  நேரடியாக வினை ஆற்ற முடியாது. இதற்கு மின்னலும், பூமியில் உள்ள கண்ணுக்குத்  தெரியாத பாக்டீரியா உயிரினங்களும் உதவுகின்றன மனிதர்கள் உண்டாக்கும் நைட்ரஜன், வண்டி வாகனங்களின் புகை, விவசாய உரங்கள் ஆகியவற்றிலிருந்து காற்றில் கலக்கின்றன.

உயிர் காக்கும் காற்றுப் பைகள் (LIFE SAVING AIR BAGS IN CARS)

வெளிநாடுகளில் கார் சீட்டுகளில் காற்றுப் பைகளை (AIR BAGS)பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. ஒரு வண்டி மற்றொரு வண்டி மீது மோதினால்  அப்போது ஏற்படும் அதிர்ச்சியில் அனைவரும் முன் புறம் பாய்ந்து நசுங்கிப் போகிறார்கள் ; இதைத் தடுக்க, அதிர்ச்சி ஏற்பட்ட ஒரு சில வினாடிகளில் பலூன் போல் விரிவடையும் பைகள் பொருத்தப்படுகின்றன . சாதாரண நிலையில் அவை காற்று இல்லாமல் இருக்கும். அதில் 200 கிராம் சோடியம் அசைட் SODIUM AZIDE என்னும் உப்பை வைக்கின்றனர். இது நைட்ரஜன், சோடியம் கலந்த ரசாயனப்பொருள்.. பத்து மைல் வேகத்தில் வரும் கார் மோதினாலும் கூட, எலெக்ட்ரானிக் சென்ஸார் காற்றுப்பையை இயக்குவிக்கும். அப்போது 300 டிகிரி C -யில் (SODIUM AZIDE) சோடியம் அசைட் நைட்ரஜன் வாயுவை உண்டாக்கி காற்றுப்பையை(Air Bags) பெரிய பலூன் ஆக்கி நம் உடலை முன் புறம் மோதாமல் தடுக்கும். ஆக உயிர் காக்கும் தோழனாக நம்முடன் காரில் பவனி வருவதும் நைட்ரஜன் தான்..

நைட்ரஜனால் கிடைத்த நோபல் பரிசு 

நோபல் பரிசு உண்டாக ஆல்ப்ரெட் நோபல் எப்படி நைட்ரஜன் வெடிமருந்தினால் கிடைத்த  பணத்தை ஒதுக்கினார் என்று முன்னர் பார்த்தோம் . ரசாயன நோபல் பரிசு கிடைக்க நைட்ரஜன் உதைவிய செய்தியும் உண்டு; நைட்ரஜனையும் ஹைட்ரஜனையும் குறிப்பிட்ட வெப்பத்தில் குறிப்பிட்ட அழுத்தத்தில் கலந்தால் அம்மோனியா வாயுவை உண்டாக்கலாம் என்பதை ஜெர்மன் ரசாயன நிபுணர் பிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) கண்டுபிடித்தார். பின்னர் இதை, குறைவான வெப்பத்தில், அழுத்தத்தில் உருவாக்கலாம் என்று அவரே அறிவித்தார். இதைக் கண்டு பிடித்ததற்காக அவருக்கு 1918ம் ஆண்டு ரசாயன /வேதி இயல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

எலியைக் கொன்ற நைட்ரஜன்

ஆரம்பகாலத்தில் நைட்ரஜன் வாயு ஒரு தனிப்பட்ட மூலகமே என்று கண்டுபிடிக்க பல காலம் ஆயிற்று.

முதலில் சால் அம்மோனியாக் (Sal ammoniac) என்ற உப்பை நூற்றாண்டுக் கணக்கில் பயன்படுத்தி வந்தனர். அப்போது அதில் நைட்ரஜன் என்னும் வாயு இருப்பதை எவரும் அறியார்.1760 ஆம் ஆண்டில் ஹென்றி காண்வென்டிஷ், ஜோசப் ப்ரீஸ்ட்லி (Henry Cavendish, Joseph Priestly) ஆகியோர் காற்றில் உள்ள ஆக்சிஜனை அகற்றினால் என்ன கிடைக்கும், என்ன மிஞ்சும் என்று தனித் தனியே,  ஆராய்ந்தனர். குடுவையில் ஆக்சிஜன் போக மிஞ்சிய காற்றில் மெழுகு வர்த்தியை ஏற்றிவைத்தால் அது அணைந்து போயிற்று. அந்தக் குடுவையில் ஒரு உயிருள்ள எலியைப் போட்டனர். அது செத்து மடிந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதி வியந்துகொண்டனர். அதற்கு முன்னர் கிறிஸ்தவ பாதிரியும் ஆராய்ச்சி ஆர்வலருமான ஸ்டீபன் ஹெல்ஸ் என்பாரும் இப்படிப் பல ஆராய்ச்சி செய்தார் . ஆயினும் இறுதியில் டேனியல் ரூதர்போர்ட் (Daniel Rutherford) என்ற மாணவர்தான்  இதை நைட்ரஜன் என்று அறிவித்து எடின்பர்க் நகரில் டாக்டர் பட்டமும் வாங்கினார். அதற்குப் பின்னர் பிரீஸ்ட்லீ இதை எழுத்தில் வடித்தார்.

அமெரிக்க விஞ்ஞான கூடங்களில் புதுவகை நைட்ரஜன் மூலக்கூறுகள் (Atomic Nitrogen and N5+ion) உண்டாக்கப்படுகின்றன . அவை விஞ்ஞானிகளுக்கு மட்டுமே பயன்தரக்கூடிய தகவல்கள். ஒரு காலத்தில் பல புதுமைகளை உண்டாக்க அவை உதவலாம். யாரே அறிவார்!!

Tags- நைட்ரஜன் சுழற்சி ,காற்றுப் பைகள், Air bags, நைட்ரஜன் முடிச்சு,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: