
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,437
Date uploaded in London – – 12 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷித செல்வம்
பாரேன், படைத்தவனின் புத்திசாலித்தனத்தை, தூ!
ச.நாகராஜன்
புலவர் ஒருவர் முத்தைப் பார்க்கிறார், தாமரையைப் பார்க்கிறார், மணமணக்கும் கஸ்தூரி எங்கிருந்து கிடைக்கிறது என்று பார்க்கிறார். அட, முத்து கிளிஞ்சலில், தாமரையோ சகதியில், மணமணக்கும் கஸ்தூரியோ மானிடம்!
இது என்ன படைப்பு விசித்திரம்! தூ , படைத்தவனின் புத்திசாலித்தனத்தைப் பாரேன் என்று நகையாடுகிறார்.
பாடல் இதோ:
க்வ ஷுக்தய்: க்வ முக்தா வா க்வ பங்க: க்வ ச பங்கஜம் !
க்வ ம்ருக: க்வ ச கஸ்தூரி திக் வித்யாதுர்விதக்ததாம் ||
சிப்பி எங்கே, முத்து எங்கே? சகதி எங்கே, தாமரை எங்கே? மான் எங்கே கஸ்தூரி எங்கே? தூ! பாரேன், படைத்தவனின் புத்திசாலித்தனத்தை! – தூ!!
Where are the oysters and where the pearls? Where is the. Mud and where the lotus? Where is the deer and where the. Musk? Ah, fie upon the (wretched) cleverness of the Creator! (Translation by S.B. Nair)
*
க்வ வஸந்தி ஸ்ரேயோ நித்யம் பூம்ருதாம் வத கோவித |
அஸாவதிஷய: கோபி யுதுக்தமபி நோஹ்ருதே ||
ஓ, புத்திசாலியே கொஞ்சம் சொல்லேன்! ஒரு அரசனின் செழுமை எங்கே உள்ளது? இதற்கான பதில் இந்தச் செய்யுளிலேயே இருக்கின்ற போதும் கூட அதை உணராமல் இருப்பது ஆச்சரியம் தான்! (விடை அசா – அசா என்றால் வாள் என்று பொருள். ஆகவே ஒரு அரசனின் செழுமை அவன் வாளில் அதாவது அவனுக்கு வெற்றி தந்து வலிமையூட்டும் வாளில் தான் உள்ளது)
Tell me O wise man,Where does the properity of a king reside? This is, indeed, wonderful that though the answer is mentioned (in the verse itself), it is not recognized. (Translation by S.B. Nair)
*
க்ரோதோ ஹி சத்ரு: ப்ரதமோ நராணாம்
தேஹஸ்திதோ தேஹவிநாஷானாம்
யதா ஸ்தித: காஷ்டகதோ ஹி வஹ்னி:
ஸ ஏவ வஹ்னிர் தஹதே சரீரம் ||
கோபமே மனிதனின் தலையாய எதிரி. அது உடலை அழிப்பதற்காக உடலிலேயே உள்ளது. எப்படி காய்ந்த விறகில் தீ இருந்து அதன் ஆதாரத்தையே (விறகையே) அழிக்கிறதோ அது போலத் தான்!
Anger is the foremost enemy od men, it remains in the body for the destruction of body itself; just as fire, that remains in dry wood itself, burns its own substratum (wood) (Translation by S.B. Nair)
*
க்ரோதோ வைவஸ்வதோ ராஜா த்ருஷ்ணா வைதரணீ நதி |
வித்யா காம துகா தேனு: சந்தோஷோ நந்தனம் வனம் ||
கோபம் என்பது எமன். ஆசை என்பது வைதரிணி நதி.
வித்யை என்பதை அனைத்தையும் தரும் காமதேனு. சந்தோஷம் அதாவது திருப்தி என்பது நந்தன வனம்.
எமன் – மரண தேவதை; வைதரிணி – நரகத்தில் இருப்பது. நந்தன வனம் – இந்திரனுடைய வனம்.
Anger is King Yama (god of death); greed is Vaitarani (river of hell); correct knowledge is all giving Kamadenu (and) contentment is Nandana – garden (of Indra). Translation by S.B. Nair)
***
***

புத்தக அறிமுகம் – 111
ஆஹா! அப்படியா!!
(விஞ்ஞான கேள்வி பதில்கள்)
பொருளடக்கம்
இந்த நூலில் இருநூறுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விடைகள் அளிக்கப்பட்டுள்ளன.
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
This book answers various questions about science and general knowledge! Approximately two hundred questions have been answers in a detailed manner in this book! Don’t miss to read this book to know answers to many of your longing questions like The Secret Smile of Mona Lisa, Gnome Project and acid rain and so on.
வாசகர்களின் அறிவியல், பொது அறிவு சார்ந்த நுணுக்கமான கேள்விகளுக்கு விடை தரும் நூல் இது! சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விரிவான விடைகள் தரப்பட்டுள்ளன! மோனாலிஸா புன்னகையின் மர்மம், ஜெனோம் ப்ராஜெக்ட், அமில மழை என நீங்கள் வெகு நாட்களாக விடை தேடிக் கொண்டிருந்த பல கேள்விகளுக்கு விடையளிக்கும் இந்நூலைப் படிக்கத் தவறாதீர்கள்!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ஆஹா! அப்படியா!!’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
*