
Post No. 11,441
Date uploaded in London – 13 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
விருட்ச ஆயுர்வேதம் எனப்படும் துறையில் இந்தியா 1500 ஆண்டுகளுக்கு முன்னரே நூல்கள் எழுதி உலகில் புதுமை செய்ததை முந்தைய கட்டுரையில் கண்டோம். உலகிலேயே பிராணிகளுக்கு தனி மருத்துவ மனைகளை நிறுவி இலவச சிகிச்சை அளித்ததும் இந்தியாதான். குறிப்பாக சமண மதத்தினருக்கு அஹிம்சை மிகப் பெரிய கொள்கை என்பதால் மெளரியர் காலத்திலேயே இப்படி ஆஸ்பத்திரிகள் வைத்து இலவச சிகிச்சை செய்தனர். பிற் காலத்தில் மேலை நாட்டினர் இதையே வெடினரி சயின்ஸ் (Veterinary Science) என்று வைத்து நாய் ,பூனை வளர்ப்பவர்களிடம் கொள்ளை அடிப்பதை இன்றும் லண்டனில் காணலாம்.
என் நண்பரின் பெண்ணுக்கு குழந்தை இல்லை. அவள் ஆயிரம் பவுண்டுக்கு மேல் விலை உள்ள ஒரு நாய்க்குட்டியை வாங்கி வளக்கிறார். அது தும்மல் போட்டால் இவருக்கு ஜலதோஷம் பிடித்துவிடும் நாய், பூனை மருத்துவரிடம் சென்றால் வகையா கத் தீட்டி பர்ஸை காலி செய்து வீட்டுக்கு அனுப்புவார். அதில் வியப்பில்லை,
ஆனால் நாமோ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய அருட் பிரகாச வள்ளலாரைக் கண்ட நாட்டினர். செடி கொடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, அவைகளுக்கு அன்பான பெயரையும் சூட்டி, செடி கொடிகளைச் சுற்றியுள்ள பாத்தியில் பறவைகள் தண்ணீர் குடிப்பதைக் கண்டு மகிழ்ந்த சகுந்தலை வளர்ந்த நாட்டினர். அதை சாகுந்தல காவியத்தில் வடித்த காளிதாசனை இன்று உலகமே போற்றுகிறது இந்த சூழ்நிலையில் வ்ருக்ஷ ஆயூர் வேதம் வளர்ந்ததில் வியப்பில்லை.
மேலும் சில விஷயங்களைக் காண்போம்.
வராஹமிகிஹிரர் (505- 587 CE ) எழுதிய பிருஹத் ஸம்ஹிதாவில் ஒரு அத்தியாயம் முழுதும் தாவர நோய்களுக்கு ஒத்துக்கப்ப்பட்ட போதும் சுரபால எழுதிய நூல்தான் முழுக்க முழுக்க தாவர நோய்கள், சிகிச்சை,ஆரோக்கியமான தாவர வளர்ச்சி பற்றி விவாதிக்கிறது
இவைகளைப் படிக்கையில் அவர் சொல்லும் சில விஷயங்கள் நமக்கு நகைப்பை ஏற்படுத்தலாம். ஆயினும் அந்தக் காலத்தில் இவை பற்றி மக்கள் கவலைப்பட்டதையும், நோய்களைத் தடுக்க முயன்றதையும், விஷயங்களை அறிவியல் முறையில் அணுகியதையும் காண முடிகிறது.
நோய்களில் இருந்து தாவரங்களைக் குறிப்பாக, மரங்களை, பாதுகாக்க எல்லா திசைகளிலும் லோத்ரா மரங்களை நடச் சொல்கிறார். இதை தமிழில் வெள்ளை அத்தி என்பர்.சுரபால பயன்படுத்திய சொல் பில்லோட(bhillota) மரம். மேலும் பனியால் வரக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, புல்லை எரித்து அதன் சாம்பலை துணியில் கட்டி மரங்களுக்கு அடியில் வைக்கச் சொல்கிறார்.
பூச்சிகள், எலிகள், புழுக்களால் ஏற்படும் தாக்குதலைச் சமாளிக்க மந்திரங்களை இலைகளில் எழுதி தாவரத்துக்கு (ஸ்லோகம் 160-163) அ டியில் புதைக்கச் சொல்கிறார். இது நமக்கு விநோதமாகத் தோன்றும்
ஆயினும் அவருடைய அறிவியல் அணுகுமுறையைப் பிற பாடல்களில் காணமுடிகிறது. உதாரணமாக தாவரங்களுக்கு வரும் நோய்களை அவற்றின் உடலில் இருந்து வரும் நோய்கள் என்றும் வெளித் தாக்குதலில் இருந்து வரும் நோய்கள் என்றும் பிரித்துப் பேசுகிறார்.
தாவரங்களுக்கு உள்ளிருந்து வரும் நோய்களை வாதம், பித்தம், கபம் என்று மனிதர்களுக்கு உள்ளது போலவே பி ரிக்கிறார். திருவள்ளுவரும் குறள் 941ல் வளி முதலா எண்ணிய மூன்று என்ற சொற்றொடரில் இதை அப்படியே சொல்கிறார்.
வெளியிலிருந்து வரும் தாக்குதல் பற்றிக் கதைக்கையில் புழுப் பூச்சிகள் , பனி முதலியவற்றைக் குறிப்பிடுகிறார்.
1.வாத பாதிப்பு ஏற்படக்கூடிய தாவரங்கள் :-
ஒல்லியாக, உயரமாக வளரும்; சொர சொர பட்டை இருக்கும் ; கொஞ்சம் வெய்யில் அதிகமானாலும் இலைகள் உதிரும்
2.பித்த தோஷமுள்ள தாவரங்கள்:
வெய்யிலைத் தாங்கி நிற்கும்; கிளைகள் பலமற்று இருக்கும் ; எளிதில் ஒடிந்து விழும்; பூக்களும் பழங்களும் காய்த்துக் குலுங்கும்; பருவமில்லாத காலங்களிலும் பழங்களைக் கொடுக்கும் .
உதாரணம் – கொய்யா, முருங்கை மரங்கள்
3.கப தோஷமுள்ள தாவரங்கள் :-
தடித்த அடிப்பகுதியுள்ள மரங்கள்.தடித்த இலைகள் இருக்கும் ; பூக்களும் பழங்களும் காய்த்துக்கு குலுங்கும்;
அவற்றைச் சுற்றி கொடிகள் படரும்; மேலே ஏறும் .
உதாரணம் – பலா, நாகப்பழ , மா மரங்கள்
(இவைகளை படிக்கையில் அவருடைய அறிவியல் அணுகுமுறையைக் காண முடிகிறது. மரங்களை எவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து இருக்கிறார் என்பதும் புரிகிறது.)
வாத ரோக நோய்கள் வந்தால் தாவரங்களில் சுருக்கங்கள், முடிச்சுகள் காணப்படும். பழங்களில் சாறு இல்லாமல் வறட்சியாக இருக்கும். இதைக் குணப்படுத்த மாமிசம், கொழுப்பு, நெய் அடங்கிய நீர்ப்பாசனத்தை செய்யவும் . சில குறிப்பிட்ட பொருட்களை எரித்து புகை அடிக்கவும். என்ன பொருட்கள் என்பதையும் சுரபால பட்டியல் இட்டுள்ளார்
பித்த ரோகம் வந்தால் இலைகள் மஞ்சள் நிறம் ஆகும். பழங்கள் முன்கூட்டியே உதிரும் இதைக் குணப்படுத்துவதற்கு, பாலும் தேனும்கலந்த தண்ணீரைப் பயன்படுத்தவும்.. த்ரிபலா கஷாயத்துடன் நெய்கலந்து தெளிக்கவும் சர்க்கரை, தேனை எரித்து புகை அடிக்கவும்.
தாவரங்களுக்கு கப ரோகங்கள் வந்தால் இலைகள் சுருங்கும்; தாமதமாகப் பழங்கள் கொடுக்கும். இதைக் குணப்படுத்த காரமான கஷாயங்களைக் கொண்டு சிகிச்சை தரலாம். கடுகு சர்க்கரைக்கு களிம்பு உண்டாக்கி தடவலாம்; பின்னர் எள்ளுப்பொடி கலந்த நீர்ப்பஸனம் செய்யலாம்.அத்தி, வேம்பு முதலிய மரங்களின் கஷாயத்தை ஊற்றவும் .வேர்களில் வெள்ளைக்கடுகு பிண்ணாக்கை வைக்கவும்.
பருவ நிலைக் கோளாறுகளும் , பூச்சிகள் பிராணிகளின் தொல்லையும்
தாவரங்களுக்கு வரும் வெளிப்புறத் தாக்குதல்கள் என்பதை எல்லோரும் அறிவர் இவைகளுக்கும் சிகிச்சைகளை பட்டியல் இட்டுள்ள சுரபால, மரங்களுக்கு வரும் மஞ்சள் காமாலை, அஜீரணக் கோளாறுகள் பற்றிக் கூட பேசுகிறார். பல விஷயங்கள் இன்று பயன்படாமல் போகலாம். ஆயினும் சில விஷயங்களை அதிக பொருட்செலவின்றி பயன்படுத்தலாம்.
சுரபால, எழுத்துக்களில் பாராட்டப்பட வேண்டிய அம்சங்கள, அவர் தாவரங்களைக் கவனித்த விதம். நோயின் குறிகளை பட்டியலிட்ட விதம், மனிதர்களுக்குள்ளது போலவே வாத, பித்த, கப தோஷங்களுக்கு பரிகாரம் சொல்லும் முறை ஆகியன ஆகும். இவை அவரை ஒரு தாவர வியல் விஞ்ஞானியாகவே காட்டுகிறது
சம்ஸ்க்ருதத்தில் இந்த நூலைப் பயிலுவோர் மேலும் பல அறிய விஷயங்களைக் காணலாம்.
— subham —-
S.S Deiva nayagam
/ November 13, 2022ஓம் சிவாய நமஹ!
அற்புதமான தகவல். நன்றி. இப்புத்தகம் தமிழில் கிடைக்குமா
Tamil and Vedas
/ November 13, 2022I HAVE READ IT IN ENGLISH. THERE MAY BE SOME TAMIL BOOKS IN PLACES LIKE SARASVATI MAHAL LIBRRAY IN THANJAVUR..