திருப்புகழில் ராமாயணம் (Post No.11,442)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,442

Date uploaded in London – –   14 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருப்புகழில் ராமாயணம்

தொகுப்பு :  ச.நாகராஜன்

திருப்புகழில் ராமாயணச் செய்திகள் பல இடங்களில் உள்ளன.

மூன்று இடங்களை இங்கு காணலாம்!

1. திருச்செங்கோடு  (ஆலகால படப்பை என்று தொடங்கும் திருப்புகழ்)

மேலை வானொரு ரைத்தச ரற்கொரு

     பால னாகியு தித்தொர்மு நிக்கொரு

          வேள்வி காவல்ந டத்திய கற்குரு …… அடியாலே

மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்

     மாது தோள்தழு விப்பதி புக்கிட

          வேறு தாயட விக்குள்வி டுத்தபி …… னவனோடே

ஞால மாதொடு புக்கவ னத்தினில்

     வாழும் வாலிப டக்கணை தொட்டவ

          னாடி ராவண னைச்செகு வித்தவன் …… மருகோனே

ஞான தேசிக சற்குரு உத்தம

     வேல வாநெரு வைப்பதி வித்தக

          நாக மாமலை சொற்பெற நிற்பதொர் …… பெருமாளே.

மேலை வானொர் உரைத் தசரற்கு ஒரு பாலனாகி உதித்து

ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ(க்) கற்கு உரு

அடியாலே மேவியே … மேல் உலகத்தில் உள்ள தேவர்கள் புகழ்ந்த

தசரதற்கு ஒரு குழந்தையாகப் பிறந்து, ஒப்பற்ற விசுவாமித்திர

முனிவருக்கு ஒரு யாகத்தில் காவல் புரிந்து, அந்த கல்லைத்

திருவடியினால் (மிதித்துப்) பழைய வடிவத்தை (அகலிகை)

எய்தும்படிச் செய்து,

மிதிலைச் சிலை செற்று மின் மாது தோள் தழுவிப் பதி

புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே

ஞால மாதொடு புக்கு … மிதிலையில் சனகர் முன் (சிவதனுசு என்ற)

வில்லை முறித்து ஒளி பொருந்திய சீதையை மணம் புரிந்து அயோத்தி

நகருக்குத் திரும்பி வந்து, மாற்றாந் தாயாகிய கைகேயி காட்டுக்குள்

போகும்படிச் செய்ய, தம்பியாகிய இலக்குவனுடன் பூதேவி மகளாம்

சீதையோடு சென்று,

அ(வ்)வனத்தினில் வாழும் வாலி படக் கணை தொட்டவன்

நாடி ராவணனைச் செகுவித்தவன் மருகோனே … அந்தக்

காட்டில் வாழ்ந்த வாலி இறக்கும்படி அம்பைச் செலுத்தியவனும்,

தேடிச் சென்று இராவணனை அழித்தவனுமாகிய ராமனின் மருகனே,

ஞான தேசிக சற் குரு உத்தம வேலவா நெருவைப்பதி*

வித்தக நாக மா மலை சொற் பெற நிற்பது ஒர் பெருமாளே. …

ஞான தேசிகனே, சற் குருவே, உத்தமனனாவனே, வேலவனே,

நெருவூரில் வீற்றிருக்கும் ஞான மூர்த்தியே, திருச்செங்கோட்டில்**

புகழ் பெற விளங்கி நிற்கும் பெருமாளே.

2.  பொதுப்பாடல் (குனகியொரு மயில்  எனத் தொடங்கும் பாடல்)

எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி

     லெனவிரகு குலையாத மாதாவு நேரோத

          இசையுமொழி தவறாம லேயேகி மாமாது …… மிளையோனும்

இனிமையொடு வருமாய மாரீச மானாவி

     குலையவரு கரதூஷ ணாவீரர் போர்மாள

          இறுகிநெடு மரமேழு தூளாக வேவாலி …… யுயிர்சீறி

அநுமனொடு கவிகூட வாராக நீராழி

     யடைசெய்தணை தனிலேறி மாபாவி யூர்மேவி

          அவுணர்கிளை கெடநூறி யாலால மாகோப …… நிருதேசன்

அருணமணி திகழ்பார வீராக ராமோலி

     யொருபதுமொர் கணைவீழ வேமோது போராளி

          அடல்மருக குமரேச மேலாய வானோர்கள் …… பெருமாளே.

எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில் என விரகு

குலையாத மாதாவு(ம்) நேர் ஓத இசையும் மொழி தவறாமலே

ஏகி மா மாது(ம்) இளையோனும் இனிமையொடு … என்னுடைய

பேச்சு தவறாமல் நீ காட்டுக்குப் போவாயாக என்று வஞ்சகம் குறைவு

படாத மாதாவாகிய கைகேயியும் எடுத்துச் சொல்ல, சொன்ன சொல்

தவறாமல் லக்ஷ்மி போன்ற சீதையும் தம்பி இலக்குமணனும்

விருப்பமுடன் கூட வர காட்டுக்குப் போய்,

வரு மாய மாரீச மான் ஆவி குலைய வரு கர தூஷணா வீரர்

போர் மாள இறுகி நெடு மரம் ஏழு தூளாகவே வாலி உயிர்

சீறி … காட்டிடை வந்த மாய மானாகிய மாரீசன் உயிர் துறக்க, போருக்கு

வந்த கர, துஷணர்கள் முதலிய வீரர்கள் கொல்லப்பட, உறுதியாக இருந்த

மராமரங்கள் ஏழும் ராமபாணத்தால் துளைபட, வாலியின் உயிர் மடிய,

அநுமனொடு கவி கூட வாராக(ம்) நீர் ஆழி அடை செய்து

அணை தனில் ஏறி மா பாவி ஊர் மேவி அவுணர் கிளை கெட

நூறி … அனுமனோடு குரங்குகளும் கூடிவர கடலாகிய நீரை

அணையிட்டு அடைத்து, அந்த அணை மீதில் ஏறிச் சென்று பெரிய

பாதகனாகிய இராவணனுடைய ஊராகிய இலங்கைக்குப் போய்

அரக்கர்களுடைய கூட்டம் எல்லாம் மாளப் பொடி செய்து,

ஆலால(ம்) மா கோப நிருதேசன் அருண மணி திகழ் பார

வீராகரா மோலி ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது

போராளி அடல் மருக … ஆலகால விஷம் போல பெரிய

கோபத்துடன் வந்த அரக்கர் தலைவனான இராவணனுடைய சிவந்த

இரத்தினங்கள் விளங்குவதும், கனத்ததுமான மகுடங்கள் ஒரு பத்தும்

ஒரே அம்பால் அற்று விழும்படி தாக்கிய போர் வீரனான திருமாலின்

வலிமை நிரம்பிய மருகனே,

குமரேச மேலாய வானோர்கள் பெருமாளே. … குமரேசனே,

மேம்பட்ட தேவர்களின் பெருமாளே.

3. இராமேஸ்வரம் (வாலவயதாகி எனத் தொடங்கும் பாடல்)

ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்

     வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு

          மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் …… பொடியாக

ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை

     பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ

          யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் …… பெருமாளே.

ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் … கூச்சலிட்டு வந்த

தாடகை, சுபாகு, வளர்ந்திருந்த மரா மரங்கள் ஏழு,

வாலியோடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் ஓத

கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக … வாலி

மற்றும் நீலி, பகன், ஒப்பற்ற விராதன், அலைகள் எழுந்து வீசும் கடல்,

இவைகளுடன் வலிமை வாய்ந்த ராவணனுடைய கூட்டம் யாவும் போரில்

இறந்து பொடிபட்டழிய,

ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு

மார்பன் அரி கேசன் மருகா எனவே … களிப்புடன் நெருப்பு

அம்பை வீசும் வலிமை வாய்ந்த வில், சக்கரம், சங்கு ஆகிய ஆயுதங்களைக்

கையில் ஏந்தியவனும், லக்ஷ்மியை மார்பில் தரித்தவனுமான ஹரி, கேசவன்

ஆகிய திருமாலின் மருகனே என்று

ஓத மறை ராமெசுர மேவும் குமரா … வேதங்கள் ஓதிப் புகழும்

இராமேசுரத்தில் வீற்றிருக்கும் குமரனே,

அமரர் பெருமாளே. … தேவர்களின் பெருமாளே.

xxxx

புத்தக அறிமுகம் – 113

வருவார் காந்திஜி!

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.    வருவார் காந்திஜி!                        

2.    வீர வாஞ்சி                               

3.    பாரதி தரிசனம்                      

4.    ஃபாரின் மோகம்                     

5.    வீட்டுக்கு ஒருவர்                         

6.    விசித்திரக் குடும்பம்                      

7.    மழை நேரத்துக் குடை

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

This book is a dramatical portrayal of the life of Mahatma Gandhi, who uplifted India at a time when it was poverty-stricken and had lost its deliverance and fortitude. A drama that had been broadcasted over the radio week after week and had been marveled by thousands is now out in the form of a book. The book gives a special importance to the incidents that occurred during Mahatma Gandhi’s visit to Southern India. It enlightens the readers with plenty of historical events. A must read for those who are passionate about drama and want to do service through dramas.

இந்த வையத்து நாட்டில் எல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப், பாழ்பட்டு நின்ற பாரதத்தை உய்விக்க வந்த காந்தி மஹான் வாழ்க்கையை நாடக வடிவில் சித்தரிக்கும் நூல்! வானொலி மூலம் வாரா வாரம் பல்லாயிரக்கணக்கானோரை மகிழ்வித்த நாடகம் இப்பொழுது நூல் வடிவில்! காந்தியடிகளின் தென்னாட்டு வருகையின்போது நடந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட நாடகம் என்பது இதன் சிறப்பு! இந்தத் தொகுப்பில் வேறு சில நாடகங்களும் இணைக்கப்பட்டுள்ளன. நாடகம் மூலமாக நற்பணி செய்ய விரும்புவோருக்கும் நாடகப் பிரியர்களுக்குமான நூல் இது! பல வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘வருவார் காந்திஜி!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: