திருப்புகழில் கணபதி! (Post No.11,444)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,444

Date uploaded in London – –   15 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருப்புகழில் கணபதி!

ச.நாகராஜன்

1.       கைத்தலநிறைக  – வயலூர் பாடல் 1

கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய

கரிமுகன் அடிபேணி … கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம்,

அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின்

திருவடிகளை விரும்பி,

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை

கடிதேகும் … அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில்

நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே,

என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில்

ஓடிப் போய்விடும்.

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு

திரள்புய மதயானை … ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும்

சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க

திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும்,

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ்

மலர்கொ(ண்)டு பணிவேனே … மத்தளம் போன்ற பெருவயிறு

உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத்

தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன்.

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய

முதல்வோனே … இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல்

முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல்

முதலில் எழுதிய முதன்மையானவனே,

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது

பொடிசெய்த அதிதீரா … (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த

அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத்

தூளாக்கிய மிகுந்த தீரனே*,

அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும் அப்புனம்

அதனிடை இபமாகி … (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத்

துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப்

புனத்திடையில் யானையாகத் தோன்றி,

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம்

அருள் பெருமாளே. … அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச்

சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள்

பாலித்த பெருமாளே.

xxxx

2. பாடல் 353 அஞ்சன வேல்விழி இட்டு – திருவானைக்கா

குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்

கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன் …

யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விக்ன விநாயகன் என்னும்

பெரியோன், (சினத்தை அடக்கும்) அங்குசம், (காமத்தை அடக்கும்) பாசம்

இரண்டும் கையில் கொண்ட பிரசித்தி பெற்றவன், ஒற்றைக் கொம்பன்,

பெரு வயிற்றன், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய) முக்கண்ணன்,

வலிமை வாய்ந்தவன், கணபதி,

கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன்

நக்கர் பெற்று அருள் குன்றைய ரூபக கற்பக பி(ள்)ளை

இளையோனே … துதிப்பவர்களுடைய வினைகளையும் ஆசையையும்

தீர்ப்பவன், எங்கள் விநாயக மூர்த்தி, திகம்பரரான சிவபெருமான்

பெற்றருளிய மலை போன்ற உருவத்தை உடையவன், ஆகிய கற்பக

விநாயகப் பிள்ளைக்குத் தம்பியே,

xxxx

3. பாடல் 127 பழநி கடலை பொரியவரை பாடல்

கடலை பொரியவரை பலகனி கழை … கடலை, பொரி, அவரை,

பலவிதமான பழங்கள், கரும்பு

நுகர் கடின குட உதர … இவற்றைப் புசிக்கின்ற கடினமான குடம்

போன்ற வயிற்றையும்,

விபரீத கரட தட மு(ம்)மத … அதிசயமான மதம் பாய்ந்த

அடையாளத்தையும், மும்மதத்தையும்*

நளின சிறுநயன … தாமரை இதழ் போன்ற சிறிய கண்களையும்

கொண்ட

கரிணி முகவரது துணைவோனே … யானைமுகத்தோருக்கு

இளையவனே,

xxxx

4. பாடல் 1002 பொதுப்பாடல்

கடலை பயறொடு எனத் தொடங்கும் பாடல்

கடலை பயறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை

க(ன்)னல் கதலி இ(ன்)னமுதொடு … கடலை, பயறு

இவைகளுடன், துவரை, எள், பொரி, சுகியன், வடை, கரும்பு, வாழை

இனிய அமுது போன்ற சுவையுடன்

கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாகக் கடல்

கொள் புவி முதல் துளிர்வொடு வளம் உற … பழுத்துள்ள முதிர்ந்த

பலவிதமான பழ வகைகள் நல்லபடியாக இவைகளை இன்பத்துடன்,

கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ளவர்கள் முதல் யாவரும் தழைத்து

வளப்பம் பெறுவதற்காக,

அமுது துதி கையில் மனம் அது களி பெற கருணையுடன்

அ(ள்)ளி திருவருள் மகிழ்வுற … அமுதாக தனது துதிக்கையில்

மனம் மகிழ்ச்சி பெற கருணை மிகுந்து அள்ளி எடுத்து திருவருள் பாலிக்க,

நெடிதான குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும்

ஒரு முருக சண்முக என … பெரிய குடம் போன்ற வயிற்றினில்

அடைக்கின்ற மத யானை போன்ற கணபதியின் பின் தோன்றிய ஒப்பற்ற

முருகனே, ஷண்முகனே என்று

xxxx

5. பாடல் 409 கரிமுகக் கடகளிறு எனத் தொடங்கும் பாடல் –

திருவருணை

கரிமுகக் கடகளிற் றதிககற்பக … யானை முகத்தையும் மதத்தையும்

கொண்ட களிறு, சிறந்த கற்பக விநாயகர்,

மதக் கஜமுகத்து அவுணனைக் கடியானை … மதங்கொண்ட

யானைமுகத்து கஜமுகாசுரனை அடக்கிய யானை,

கடலை எள் பயறு நற் கதலியிற் கனிபலக் கனி … கடலை, எள்,

பயறு, நல்ல கதலி வாழைப்பழம், பலாப் பழம்

வயிற் றினிலடக்கிய வேழம் … முதலியவற்றை வயிற்றினில் அடக்கிய

யானை,

அரிமுகத்தினன் எதிர்த்திடு களத்தினின் … அழகிய முகத்தை

உடையவன், எதிர்த்துச் சண்டைசெய்யும் போர்க்களத்தில்

மிகுத்து அமர்புரிக் கணபதிக்கு இளையோனே … பெரிய போரைச்

செய்யும் கணபதிக்குத் தம்பியே,

–subham–

புத்தக அறிமுகம் – 114

விலங்கு உலகப் புதுமைகள்                                               

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. மிருகங்கள் பேசும் மொழி   

2. இது மனித காதல் அல்ல   

3. ஆணா, பெண்ணா எது வேண்டும்?

4. மிருகங்களின் செக்ஸ் வாழ்க்கை!

5. மிருகங்களின் புத்திசாலித்தனம்   

6. மிருக ஆராய்ச்சி 

7. கடல் நாகம்

8. ராட்சஸ மிருகம் ஒகோபோகோ! 

9. கடல் வேதாளம் 

10. நிலா ஜெல்லி மீன்!  

11. டார்ச்போல் விளக்காக ஒளிரும் மீன்! 

12. தேவதை மீன்  

13. புதிய கடல் வாழ் உயிரினங்கள் கண்டுபிடிப்பு   

14. அன்னத்துக்கு என்றுமே ஒரு துணைதான்! 

15. நீலத் திமிங்கலங்களின் ஓலக்குரல்   

16. நீர் யானையும், கடல் சிங்கமும்!

17. நட்புக்கு ஒரு யானை

18. யானை ஆஸ்பத்திரி  

19. யானைகள் ஜாக்கிரதை

20. பழங்கால கம்பளி யானை மண்டை ஓடு!  

21. அதிசயக் கிளி! 

22. ‘A’ to ‘Z’ பட்டர்ஃப்ளைஸ்   

23. எருமை அளவுள்ள சீமை பெருச்சாளி 

24. ராஜ நண்டு

25. திரும்பி வந்த பூனை

26. யமனுக்கும் நாய்க்கும் என்ன தொடர்பு?    

27. அதிசய நாய்   

28. குரங்கினால் உயிர் பிழைக்கும் பறவைகள் 

29. பேசும் குரங்குகள்!   

30. பல் வலிக்கு உதவி கேட்கும் குரங்கு 

31. டாக்டர் குரங்கு 

32. உலகின் பெரிய ஆமைகள் உலவும் தீவு!   

33. இராட்சஸ கடல் சிலந்திகள்

34. சிலந்தி வலையிலிருந்து சில ரகசியங்கள்   

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது: 

The world of animals has been barely explored by humanity. Though we attempt to analyze human anatomy by studying the behavior of animals, there are several thousands species of animals which have not been completely understood. This book spells out several interesting facts regarding animals. In addition to discussion regarding how animals communicate amongst themselves, there are descriptions about rare animal species – a monstrous animal named Ogobogo, self-illuminating fishes, incredibly huge rats, etc. The readers are sured to be lured into a discovery channel-like world while reading this book.

விலங்குகளின் உலகம் ஓர் அதிசய உலகம்! அங்கு பல ரகசியங்கள் உள்ளன! மனிதனின் இன்றைய அறிவியல் முன்னேற்றத்திற்கு உயிரினங்களின் செயல்பாடுகளை ஆராய்வது ஒரு முக்கிய விஷயமாகி விட்டது. உயிரினங்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் மொழி பற்றியும், ஓகோபோகோ எனும் ராட்சச விலங்கு, விளக்கு போல் ஒளிரும் மீன், எருமை அளவுள்ள சீமைப் பெருச்சாளி போன்ற அதிசய விலங்குகள் பற்றியும் கூறுகிற இந்த நூல் ஓர் எழுத்து வடிவ டிஸ்கவரி சேனல் என்றால் அது மிகையாகாது!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘விலங்கு உலகப் புதுமைகள்!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

* 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: