ஆஹா! அதிரடிச் செய்திகள்! (Post.11,447)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,447

Date uploaded in London – –   16 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆஹா! அதிரடிச் செய்திகள்!

ச. நாகராஜன் 

இன்று (15-11-2022) டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் புரட்டிய போது, ஆஹா, பல அதிரடி செய்திகளைப் பார்க்க முடிந்தது.

800 கோடி பேர்!

உலகத்தின் ஜனத்தொகை 8 பில்லியனை இன்று எட்டி விட்டதாம்.

அதாவது 800 கோடி பேர் உலகில் இன்று வாழ்கின்றனர்!

2100ஆம் ஆண்டு வாக்கில் 10 பில்லியனை உலக ஜனத்தொகை எட்டுமாம்.

அதாவது ஆயிரம் கோடி!

மலைக்க வைக்கும் இந்த எண்ணிக்கையுடன் விரிவான விளக்கம் ஒன்றும் தரப்பட்டுள்ளது.

2100 இந்தியாவும் சீனாவும் உலக ஜனத்தொகையைக் குறைப்பதில் வழிகாட்டும் தலைமை இடத்தில் இருக்குமாம்!

மதமாற்றம் தேசத்திற்கு எதிரான செயல்! நீதிபதிகள் கருத்துரை!

இதே இதழில் (15-11-2022) சுப்ரீம் கோர்ட்டின் அருமையான கருத்துரை ஒன்றும் வெளியாகியுள்ளது.

Forced conversions a threat to national security, says SC

Court Asks Govt to detail steps it has taken to curb Trend

இது தான் தலைப்பு.

திங்கள் கிழமையன்று (14-11-2022) அஸ்வினி உபாத்யாயா என்பவர் போட்டிருந்த ஒரு பெடிஷன் மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் அருமையான கருத்துக்களைத் தந்துள்ளது.

மத சுதந்திரம் என்றால் அவரவர் மதத்தைக் கடைப்பிடிக்க உள்ள சுதந்திரம் தான். அடுத்தவரை மதமாற்றம் செய்ய உள்ள முயற்சிகள் தேச துரோகமாகும். இதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்ற வினாவை எழுப்பியுள்ளது சுப்ரீம் கோர்ட்.

நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் ஹிமா கோஹ்லி தங்கள் கருத்துரையில் பல விஷயங்களைக் கூறியுள்ளனர்.

பெடிஷனர், கடந்த இருபது ஆண்டுகளில் ஷெட்யூல்டு வகுப்பினரை ஆசைகளைக் காட்டி ஏமாற்றி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் போக்கைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

2010இல் மட்டும் ஹூஸ்டனை தளமாகக் கொண்டு இயங்கும்  சென்ட்ரல் கிறிஸ்டியன் மிஷன் 3.2 லட்சம் பேர்களை மதம் மாற்றியுள்ளது. மத்திய இந்தியாவில் மட்டும் 1.9 லக்ஷம் பேர் மதம் மாற்றப்பட்டுள்ளனர்.

2010 அக்டோபரில் ஜாய்ஸ் மேயர் மினிஸ்ட்ரீஸ் ஒரு வார மருத்துவ  முகாம் ஒன்றை கொல்கத்தாவில் நடத்தியது.அதில் 3200 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 1300 பேர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புதிய சர்ச்சுகளைக் கட்ட ஒரு குழு தனியே இயங்குகிறது.

ஏமாற்றி ஆசை வார்த்தைகள் சொல்லி ஏழ்மையையும் இதர ஷெட்யூல்ட் வகுப்பினரின் பிரச்சினைகளையும் அடிப்படையாக வைத்து மதம் மாற்றும் போக்கு அதிகரித்து வருகிறது.

நீதிமன்றம் மிகச் சரியான அணுகுமுறையை மேற்கொண்டு உரிய நேரத்தில் கொடுத்துள்ள எச்சரிக்கை இந்தியா கிறிஸ்தவ நாடாக ஆகி மீண்டும் அடிமைப்படுத்தப்படும் நிலையைத் தடுக்கும் ஒன்று என்பதில் ஐயமில்லை.

யூ டியூப் காணொளிக் காட்சிகள்!

இந்த அதிரடி செய்தியைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் நுழைந்தால் யூ டியூபில் இப்போதுள்ள வீடியோக்கள் 33 பில்லியன் என்ற எண்ணிக்கையைப் பார்த்து மயக்கம் போடும் நிலை வருகிறது.

அதாவது 3300 கோடி யூ டியூப் வீடியோக்கள் இன்று உள்ளன.

இவற்றிற்கு எந்த விதக் கட்டுப்பாடும் சரிபார்க்கும் தன்மையும் இல்லை.

பல கோடி பொய்கள். பல ஆபாச வீடியோக்கள். எது உண்மை எது பொய் என்றே எந்தச் செய்தியிலும் தெரியாத நிலை நோக்கி உலகம் போய்க் கொண்டிருக்கிறது.

எந்தச் செய்தி உண்மை என்பதே தெரியாத நிலையை அடைகிறோம் என்பதே பரிதாபகரமான உண்மை!

சமூக ஊடகங்களால் மனச்சோர்வு, ஏமாற்றம் அடைவதாக பலரும் சொல்ல இது ஒரு வியாதியாக உருப்பெறுவதை உளவியல் மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இவ்வளவும் அதிரடிச் செய்திகள்!

300 கோடி டாலர் உதவி!

இதில் ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தியாக  16-9-2022 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தந்துள்ள செய்தி ஒன்று நம்மைக் கவர்கிறது.

படகோனியா (Patagonia)    நிறுவனத்தின் உரிமையாளரான வான் சூயினார்ட் (Yvon Chouinard) தனது 300 கோடி டாலர் நிறுவனத்தை ஒரு டிரஸ்டுக்கு உரிமையாக்கி அந்த டிரஸ்ட் உலக தட்பவெப்ப மாற்றத்தின் சீர்கேடுகளைத் தடுக்க தனது முழு சக்தியையும் பணத்தையும் பயன்படுத்தும் என்று அறிவித்திருக்கிறார்.

ஒரு வருடத்திற்கு அந்த நிறுவனம் பெறும் லாபம் பத்து கோடி டாலராம்.

ஆக இப்படி ஒரு  அருமையான செய்தி மனதிற்கு பெரிதும் ஆறுதல் அளிக்கிறது.

உலகம் எப்படிப் போகிறது என்பதை இந்த அதிரடிச் செய்திகள் சொல்கின்றன, சொல்லிக் கொண்டே இருக்கின்றன!

***

புத்தக அறிமுகம் – 115

டயானாவின் கதை                                          

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள் 

1. உலகிற்குப் பெருமை என்ன?   

2. காதல் மலர்ந்தது!  

3. அரண்மனைத் திருமணம் 

4. தேனிலவு

5. நிலவில் ஒரு களங்கம்   

6. புதுவரவு 

7. வசந்த காலம் 

8. பாஷன் ராணி 

9. புதிய காதலன் 

10. மேலும் சில நட்புகள்

   11. சுதந்திர இளவரசி  

   12. அதிரடிப் பேட்டி    

   13. ஓலம் தீர்க்க ஏலம் 

   14. டோடியின் துணை 

   15. ரோஜா உதிர்ந்தது! 

   16. மறைவுக்குப் பிறகு 

   17. பின்னுரை    *

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

 This book is an excellent work that tells the story of British Princess Diana. All the details such as Diana’s birth, upbringing, becoming the British Princess and transformation that made her the favorite angel of the world, are given in this book. It also describes the bitter truth of her fate which ended her life that made her to flee to hide from the eyes of Paparazzi. Diana Lovers! This is going to be a lovable gift to all of you.

 பிரிட்டிஷ் இளவரசியாகி உலகையே கவர்ந்த டயானாவின் வரலாற்றைச் சுவைபடக் கூறும் நூல்! டயானாவின் பிறப்பு, வளர்ப்பு, அவர் பிரிட்டிஷ் இளவரசியானது, உலக மக்களின் அபிமான தேவதையாக மாறியது என அனைத்து விவரங்களையும் இதில் காணலாம். இறுதியில் பாப்பராசிகளின் பிடியிலிருந்து தப்பிக்க அவர் மேற்கொண்ட பயணமே அவர் வாழ்க்கையின் இறுதிப் பயணத்திற்குக் காரணமான நிகழ்ச்சியையும் உருக்கமாக இந்நூல் விளக்குகிறது! டயானா அன்பர்களே நீங்கள் விரும்பக்கூடிய நூல் இது!

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘டயானாவின் கதை!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: