
Post No. 11,448
Date uploaded in London – 16 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Picture: This board is found in Vazhachal, Athirappilly Panchayath of Thrissur district in Kerala
1.
वायूनां शोधकाः वृक्षाः रोगाणामपहारकाः ।
तस्माद् रोपणमेतेषां रक्षणं च हितावहम् ।।”
20,000– க்கும் மேற்பட்ட ஸம்ஸ்க்ருத சுபாஷிதங்களில் இருந்து மரங்கள், செடி, கொடிகள் பற்றிய சுவையான பொன்மொழிக் கவிதைகளைக் காண்போம்
வாயூனாம் சோதகாஹா வ்ருக்ஷாஹா ரோகாணாமபஹாரகாஹா
தஸ்மாத் ரோபணமே தேஷாம் ரக்ஷணம் ச ஹிதாவஹம்
மரங்கள் காற்றைத் தூய்மையாக்குகின்றன ; நோய்களை விரட்டுவதில் உதவி புரிகின்றன..ஆகையால் மரங்களை நட்டு வளர்ப்பதும் பாதுகாப்பதும் உயிரினங்களுக்குநன்மை பயக்கும்.
Xxx
2
“त्वक्शाखापत्रमूलैश्च पुष्पफलरसादिभिः।
प्रत्यङ्गरुपकुर्वन्ति वृक्षाः सद्भिः समं सदा ।।”
த்வக் சாகா பத்ர மூலைஸ் ச புஷ்ப பல ரஸா திபிஹி
ப்ரத்யங்க ரூப குர்வந்தி சத்பிஹி ஸமம் ஸதா
மரங்களும் நல்லோரைப் (முனிவர்களைப் ) போல பட்டை, கிளைகள் வேர், பூக்கள், பழங்கள், சாறு முதலியன மூலம் உயிரினங்களுக்கு நன்மை செய்கின்றன.
Xxx
3
पश्यैतान् महाभागान् पराबैंकान्तजीवितान्।
वातवर्षातपहिमान सहन्तरे वारयन्ति नः॥”
பஸ்யைதான மஹாபாகான் பராபைங்கான்தா ஜீவிதாம்
வாதவர்ஷாதப ஹிமான் ஸஹந் தரே வாரயந்தி நஹ
மரங்கள் மற்றவர்களுக்காகவே வாழும் மஹத்தானவை (ஏனெனில் ).அவைகள் யார் உதவியும் இன்றி, தாங்களாகவே புயல், மழை, குளிர், வெப்பம் அனைத்தையும் பொறுத்துக் கொள்கின்றன
Xxx
4
“अहो एषां वरं जन्म सर्वप्राण्युपजीवनम्।
सुजनस्यैव येषां वै विमुखा यान्ति नार्थिनः॥”
அஹோ ஏஷாம் வரம் ஜன்ம ஸர்வ ப்ராண யுபஜீவனம்
சுஜனஸ்யைவ யேஷாம் வை விமுகா யாந்தி நார்த்தினஹ
இதன் பிறப்பு நல்லதாய்ப் போயிற்று; அதனால்தான் மற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. ஒரு நல்ல வள்ளலைக் காண வந்த எவரும் வெறும் கையோடு போவதில்லை ; அது போலவே மரத்தை நாடிய எவரும் வெறும் கைகளோடு போவதில்லை .
Xxx
5
“पत्रपुष्प फलच्छाया मूलवल्कलदारुभिः।
गन्धनिर्यासभस्मास्थितौस्मैः कामान वितन्वते॥”
பத்ர புஷ்ப பலச்சாயா மூல வல்க லதாருபிஹி
கந்தனிர்யாச பஸ்மாஸ்தி தெளஸ்மைஹி காமான் விதன்வதே
அவை (மரங்கள் ) நம் விருப்பங்களைப் பூர்த்தி செய்கின்றன.( எப்படியெனில் )நமக்கு எழுதுபொருள் (ஓலை , மரவுரி), பூக்கள், பழங்கள், நிழல்,வேர், விறகு, மரம், நறுமணம் சாம்பல், விதைகள், காய்கள் கிளைகள் ஆகியவற்றைத் தருகின்றன.
xxx

6
दश कूप समा वापी, दशवापी समोहद्:।
दशहृद समः पुत्रो, दशपुत्रो समो द्रुमः।”
A pond equals ten wells, a reservoir equals ten ponds.
A son equals ten reservoirs, and a tree equals ten sons!
dasha-kūpa-samā vāpī, dasha-vāpī-samo hradaḥ |
dasha-hrada-samaḥ putro, dasha-putra-samo drumaḥ ||
Matsya-purāṇa 154:512
தச கூப ஸமா வாபி தச வாபி ஸமோ ஹ்ரதஹ
தசஹ்ரதஹ ஸமஹ புத்ரோ தச புத்ரோ ஸமோ த்ருமஹ
–மத்ஸ்ய புராண ஸ்லோகம்
பத்து கிணறுகளுக்குச் சமம் ஒரு குளம், ; பத்து குளங்களுக்குச் சமம் ஒரு ஏரி ; பத்து ஏரிகளுக்குச் சமம் ஒரு மகன். பத்து மகன்களுக்குச் சமம் ஒரு மரம்.
–Subham–
tags- ஒரு மரம் , 10 மகன்கள் ,மரம், நோய்,சுபாஷிதம்