சேவையே பிரார்த்தனை! (Post No.11,450)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,450

Date uploaded in London – –   17 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

சேவையே பிரார்த்தனை! 

ச.நாகராஜன்

ஜன்மாஷ்டமி அன்று சரியான செயல்!

 கேரளத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர ராவா. ஏழைகளுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்ட அவர் சேவையையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார்.

காடுகளில் உள்ள வனவாசிகளுக்கும் கடற்கரை ஓரத்தில் வசித்து வரும் மீனவர்களுக்கும் சேவை செய்வதில் அவர் மிகவும் உற்சாகம் கொண்டார். ஒரு சிறிய குடிசையில் தான் அவர் வாழ்ந்து வந்தார்.

காட்டில் என்னென்ன பிரச்சினை என்று கேட்டு அதை அவர் தீர்த்து வைப்பார்.  அனைத்து மக்களையும் ஒருங்கு திரட்டி ராமசரிதமானஸத்தைச் சொல்லி உற்சாகப்படுத்துவார். இதர நல்ல ஆன்மீக விஷயங்களையும் எடுத்துரைப்பார். குடி, சூதாட்டம், புகை பிடித்தல் ஆகியவற்றை விட்டு விடுமாறு அவர் அந்த மக்களுக்கு அன்புரை கூறுவார். குழந்தைகளைக் கல்வி கற்கச் செய்யுங்கள், வீடுகளை சுத்தமாக வைத்திருங்கள் என்று அவர் போதிப்பது வழக்கம்.

கிராமத்தை அபிவிருத்தி செய்ய வனவாசி கல்யாண சேவா ஆஸ்ரமம் என்று ஒரு ஆஸ்ரமத்தையே அவர் நிறுவினார்.

ஒரு சமயம் ஜன்மாஷ்டமி தினத்தன்று ஒரு வயதான பெண்மணி காலரா வியாதியால் பீடிக்கப்பட்டார்.

உடனே பாஸ்கர ராவா அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மும்முரமாக ஈடுபட்டார்.

அப்போது அவரது நண்பர்கள் அவரிடம் வந்து, “இன்று ஜன்மாஷ்டமி தினம். நாம் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யலாம்” என்று கூறி அவரை அழைத்தனர்.

அதற்கு அவர், “இந்த ஆதரவற்ற வயதான பெண்மணிக்கு சேவை செய்வதை விட  கோவில் தரிசனம் முக்கியமானதா என்ன? ஒன்றுமே இல்லாத, உதவி தேவைப்பட்டு அவஸ்தைப்படும் இந்தப் பெண்மணிக்கு உதவுவதும் பக்தியின் ஒரு அம்சம் தான்” என்றார் அவர்.

இதைக் கேட்ட அனைவரும் மனம் உருகிக் கண்ணீர் உகுத்தனர்.

அவர் சேவை இப்படித் தொடர்ந்து நடைபெற்றது.

*

சர்ச்சில் செய்வதை விட சிறந்த பிரார்த்தனை!

ரவீந்திரநாத் தாகூரால் ஈர்க்கப்பட்ட தீனபந்து ஆண்ட்ரூஸ் சாந்திநிகேதனுக்கு வந்து தியானம் உள்ளிட்டவற்றில் ஈடுபடலானார்.

ஒரு நாள் அவரது பழைய தொடர்பில் இருந்த கிறிஸ்தவ பாதிரி அவரைப் பார்க்க வந்தார்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பாதிரியார், “இங்கு கோவில் ஒன்று இருக்கிறதே! அப்படியானால் சர்ச்சும் இருக்க வேண்டுமே” என்றார்.

ஆண்ட்ரூஸ், “இங்கு சர்ச் இல்லை” என்றார்.

“அப்படியானால் ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால் சர்ச்சுக்குச் செல்ல முடியாதே!” என்றார்.

“எனது பிராத்தனை எல்லாம் சேவை, சாதனா, படித்தல் ஆகியவை தான். ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழைகள் மற்றும் தொழுநோயாளிகள் இருக்குமிடம் செல்கிறேன். அவர்களுக்கு சேவை செய்கிறேன்.  இதை விட சிறந்த பிரார்த்தனையை சர்ச்சில் செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

பாதிரியார் மௌனமாக அகன்றார்.*

புத்தக அறிமுகம் – 116 

நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்! 

பொருளடக்கம் 

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்!

2. காமனை எரித்த சிவனின் நட்சத்திரம் திருவாதிரை!

3. கார்த்திகை மைந்தா கந்தா சரணம்!

4. பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்.. அந்த நாளும் வந்திடாதோ!

5. வானில் நாம் காணும் அர்ஜுனனும் திரௌபதியும்  

6. வானில் ஒரு மாபெரும் மஹாபாரதப் போர்!  

7. சப்த ரிஷி மண்டல அதிசயங்கள்!  

8. ஒன்பது கோடி சூரியன்களை தனக்குள் அடக்கக்கூடிய அதிசய

   கேட்டை நட்சத்திரம்!

9. அதிசயமான அகத்திய நட்சத்திரம்! 

10. வானத்தில் ராமாயணக் காட்சிகள்!

11. அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!

12. வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! – 1 

13. வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! – 2 

14. அஸ்வினி ரஹஸ்யம்! – 1  

15. அஸ்வினி ரஹஸ்யம்! – 2  

16. நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 1

17. நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 2

18. விண்ணிலே வீணை மீட்டும் சரஸ்வதியும், பிரம்மாவும்!

19. ரேவதி ரஹஸ்யம்!    

20. 27 நட்சத்திரங்களின் பெயர்களும் வானவியல் பெயர்களும்

21. நலம் தரும் நட்சத்திர சூக்தம்! 

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது: 

The mysteries of Stars are beautifully explained by Vedas, Myths and Epics. Many incredible truths are coming out when the results of modern space exploring devices are coinciding with the Vedic facts quoted many centuries ago. A must read for both Agnostics and Devotees.

நட்சத்திர ரகசியங்களை வேதங்களும், புராணங்களும், இதிகாசங்களும் அழகுறத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளன. நவீனச் சாதனங்கள் மூலம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வானியல் உண்மைகள் வேத, இதிகாசக் கூற்றுகளுடன் ஒப்பிடப்படும்போது அரிய உண்மைகள் தெரிய வருகின்றன! ஆன்மிக அன்பர்கள் மட்டுமின்றி அதை நம்பாத அறிவியல் கட்சியினரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது!

      *

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

 Tags-  ஆண்ட்ரூஸ், சேவை, பிரார்த்தனை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: