
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,452
Date uploaded in London – – 18 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 1
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
திருப்புகழை ஓதி விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் அருளை வேண்ட விழையும் அன்பர்கள் இந்தப் பாடல்களை ஓதும் போது பரவசம் அடைவது இயல்பு.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
1) விநாயகர்
இன்பரசத் தே பருகிப் – பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் – றருள்வாயே
பாடல் எண் 3 – உம்பர் தரு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இன்பச் சாற்றை நான் உண்ணும்படி பலமுறை என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக!
விநாயகரிடம் அருள் வேண்டிப் பாடும் பாடல் இது.
2) விநாயகர்
கலவிதனில் மூழ்கி – வறிதா
கயவறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர – அருள்வாயே
பாடல் எண் 5 – விட மடைசு வேலை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சுக போகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும் அறிவில்லாதவனும் ஆகிய அடியே உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளை சேர அருள்வாயாக!
விநாயகரிடம் அருள் வேண்டிப் பாடும் பாடல் இது.
3) திருப்பரங்குன்றம்
நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
இசைத்து நன்கொடு மனமது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற – அருள்வாயே
பாடல் எண் 10 – கறுக்கும் அஞ்சன எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கண்டத்தோடு நடித்து எழுகின்ற புட்குரல் குமுகுமு குமுவென்று ஒலி செய்ய, நன்றாக மனம் கலங்கும்படி பசப்பி மயக்கும் விஷம் போன்ற விலைமாதர்களால் வரும் துன்பம் நீங்க நீ அருள்வாயாக!
4) திருப்பரங்குன்றம்
பஞ்சஇந் த்ரிய வாழ்வைக்
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே
பாடல் எண் 15 – தடக்கை பங்கயம் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஐம்பொறிகளால் ஆட்டுவிக்கப்படும் இந்த வாழ்வை, நொடியிலே வந்து என் இதயமாம் இடத்தைத் திருத்தி வீரக்கழல்கள் அணிந்த நின் அழகிய திருப்பாதங்களுக்குத் தொண்டு செய்ய என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக!
5) திருப்பரங்குன்றம்
துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்
புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்
துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் – றருள்வாயே
பாடல் எண் 16 – பதித்த செஞ்சந்த எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கட்டுப்பட்டிருக்கும் பாவியாகிய பித்தன், பொய்யன் நான். இப்பூமியில் என்னுடைய மனதிலும், புத்தியிலும் உள்ள மயக்கத்தை விட்டொழிக்க உனது தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளை எனக்குத் தந்து அருள்வாயாக!
6) திருப்பரங்குன்றம்
இசைத்திடுஞ் சந்த பேதம்
ஒலித்திடுந் தண்டை சூழும்
இணைப்பதம் புண்ட ரீகம் – அருள்வாயே
பாடல் எண் 20 – வரைத்தடங் கொங்கை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இசையுடன் கலந்த பல வகையான சந்த ஒலிகளை எழுப்பும் தண்டைகள் சூழ்ந்த நினது திருவடிகளாகிய தாமரைகளைத் தந்து அருள்வாயாக!
7) திருச்செந்தூர்
திங்கு நின்றதென் வீடே வாரீ
ரென்றி ணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழா – தருள்வாயே
பாடல் எண் 21 – அங்கை மென்குழலாய்வார் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நான் இங்கு நிற்கும் இந்த வீடு என்னுடையது தான், உள்ளே வாருங்கள் என்று மனப் பொருத்தம் பேசும் விலைமாதரின் மாயா லீலைகள் ஆகிய இன்பமாகிய நஞ்சுக் குழியில் வீணாக விழாத வண்ணம் அருள்வாயாக!
8) திருச்செந்தூர்
செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர – மருள்வாயே
பாடல் எண் 28 – அறிவழிய மயல் பெருக எனத் தொடங்கும் பாடல்
பொருள் : என்னை நெருங்கியுள்ள நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும், என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் ஒழிந்து நீங்கும்படியாக உனது உயர்ந்த திருவடிகளை அணுக எனக்கு வரம் அருள்வாயாக!
9) திருச்செந்தூர்
முழுமதி புரிந்த சிந்துர அரிவைய ருடன்க லந்திடு
முகடியு நலம்பி றந்திட – அருள்வாயே
பாடல் எண் 32 – இரு குழையெறிந்த எனத் தொடங்கும் பாடல்
பொருள் : முழுநிலாப் போன்ற திலகம் இட்டுக் கொண்டுள்ள விலைமாதர்களுடன் கலந்திடும் கசடனாகிய எனக்கும் நன்மை பிறக்க அருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
** (தொடரும்)
புத்தக அறிமுகம் – 117
ஜோதிடம் உண்மையா?
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. ஜோதிடத்தை நம்பாதே – விஞ்ஞானிகளின் அறிக்கை!
2. ஆரூட ராணி லெனார்மனா!
3. ஜீன் டிக்ஸனின் பிரசித்தி பெற்ற ஜோதிடக் கணிப்புகள்!
4. ஜங்கும் சிக்மண்ட் ப்ராய்டும்
5. ஜோதிடம் பொய்யே என்று நிரூபிக்கத் துடித்தவர்
6. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மாயக்கலை ஜோதிடம்!
7. வானில் உள்ள கிரகங்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?
8. வியாழ கிரக ஈர்ப்பும் நர்ஸ் குழந்தை மீது ஏற்படுத்தும் ஈர்ப்பும்!
9. நான்கே நான்கு பிரபஞ்ச விசைகள்
10. நேருஜியின் கடிதம்!
11. லண்டனில் விவேகானந்தரை எதிர் நோக்கிய கேள்வி!
12. சுவாமிஜி பஞ்சாங்கம் பார்த்துத் தேர்ந்தெடுத்த நாள்!
13. சங்க இலக்கியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட
ஜோதிடக் குறிப்புகள்! -1
14. சங்க இலக்கியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட
ஜோதிடக் குறிப்புகள்! -2
15. சனி தப்பினாலும் செங்கோல் மழை தரத் தப்பாது!
16. ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்
17. இரும்புத் திரை நாட்டில் மெடிகல் அஸ்ட்ராலஜி!
18. நியூட்டனின் பதில்!
19. உயிர்காக்கும் கலையே ஜோதிடம்!
முடிவுரை
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
Everyone knows that Scientists have always been disagreed with the concept of Astrology. But this book analyses the astrology in a scientific manner. Jeane Dixon, who was a famous American astrologer was initially claimed to be fake by Michale Conklin, later accepted and astonished by her ability to predict precise astrology. He proved this by comparing the various phenomenons like the impact of The Moon in human mentality and accurate calculation of rain by Almanac and so on! A must read book, not for the believers but who would disagree with Astrology.
விஞ்ஞானிகளால் மறுக்கப்படும் கலை ஜோதிடம் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் ஜோதிடத்தை அதே அறிவியல் நோக்கில் ஆய்வு செய்யும் நூல் இது. அமெரிக்காவின் பிரபல ஜோதிடர் ஜீன் டிக்ஸன், பொய்யென்று சொல்ல வந்து பிரமித்துப் போன மைக்கேல் காக்லின், ஜோதிடம் உண்மையே என்பதற்கான பத்து அறிவியல் காரணங்கள், சந்திரன் மன நிலையைப் பாதிப்பது பற்றிய அறிவியல் தகவல்கள், பஞ்சாங்கத்தின் மழைக்குறிப்பு விஞ்ஞான பூர்வமாகப் பலிப்பது பற்றிய ஆதாரங்கள் என ஏராளமான தகவல்கள் அடங்கிய ஆய்வு நூல்! ஜோதிட ஆர்வலர்களை விட ஜோதிடத்தை நம்பாதவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ஜோதிடம் உண்மையா?’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
*