அருள்வாயே! – 2 (Post No.11,454)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,454

Date uploaded in London – –   19 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 அருணகிரிநாதர் தொடர்!

அருள்வாயே! – 2

ச.நாகராஜன் 

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

திருப்புகழை ஓதி விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் அருளை வேண்ட விழையும் அன்பர்கள் இந்தப் பாடல்களை ஓதும் போது பரவசம் அடைவது இயல்பு.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

 10) திருச்செந்தூர்

 சந்தப் படியற் றேன்றற் றலையிற்

     சந்தப் பதம்வைத்     –  தருள்வாயே

 பாடல் எண் 51 –  கொங்கைப் பணை எனத் தொடங்கும் பாடல்

பொருள் : பேரின்ப சுக நிலையை நான் அடைய எனது தலையில் உனது அழகிய திருவடியை வைத்து அருள் புரிவாயாக!

 11) திருச்செந்தூர்

  துன்பநோய் சிந்தநற் கந்தவே ளென்றுனைத்

    தொண்டினா லொன்றுரைக் – கருள்வாயே

பாடல் எண் 55 –   சங்கு போல் மென் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : எனது துன்ப நோய் ஒழிய, நல்ல கந்த வேளே என்று உன்னை, தொண்டு செய்யும் வழியில் நின்று பொருந்தி துதி ஒன்றைக் கூற அருள்வாயாக!

12) திருச்செந்தூர்

  இன்பந்தந் தும்பர்தொ ழும்பத

   கஞ்சந்தந் தஞ்சமெ னும்படி

       யென்றென்றுந் தொண்டுசெ யும்படி   யருள்வாயே

பாடல் எண் 65 –   துன்பங்கொண்டு அங்கம் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : இன்பத்தைக் கொடுத்து தேவர்கள் தொழும் உன் பாதத் தாமரையே நமது தஞ்சம் என்று கொண்டு எப்போதும் உனக்குத் தொண்டு செய்யும்படி நீ அருள்வாயாக!

 13) திருச்செந்தூர்

புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்

   புணர்க்கைக் கன்புதந் தருள்வாயே

பாடல் எண் 71 –  நிதிக்குப் பிங்கலன் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : புலன்களால் வரும் துன்பங்களைத் தொலைத்து உன் திருவடியைச் சேர்வதற்கு உரிய அன்பினை வழங்கி அருள்வாயாக!

14) திருச்செந்தூர்

மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு

   மலர்தாட் கமல  மருள்வாயே

பாடல் எண் 72 –  நிலையாப் பொருளை எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : வேதங்களாலும் போற்றுதற்கு அரியதான ஒளியாக விரிந்துள்ள நினது மலர்த் தாமரையைத் தந்தருள்வாயாக!

 15) திருச்செந்தூர்

 உலப்பின் றாறெனு மக்கர முங்கமழ்

    கடப்பந் தாருமு கப்ரபை யுந்தினம்

      உளத்தின் பார்வையி டத்தினி னைந்திட  அருள்வாயே

பாடல் எண் 73 –  நிறுக்குஞ் சூதன எனத் தொடங்கும் பாடல்

 பொருள் :  அழிவில்லாத சரவணபவ என்னும் ஆறு எழுத்துக்களையும், வாசம் மிகுந்த கடப்ப மாலையையும், திருமுகங்களின் ஒளியையும் நாள் தோறும் நான் என் மனக் கண்ணில் நினைக்கும்படி அருள்வாயாக!

16) திருச்செந்தூர்

தண்டைசூழ் கிண்கிணிப் புண்டரீ கந்தனை

   தந்துநீ யன்புவைத் தருள்வாயே

பாடல் எண் 74 –  பங்கம் மேவும் பிறப்பு எனத் தொடங்கும் பாடல்

 பொருள் :  தண்டையும், அவற்றைச் சூழ்ந்துள்ள கிண்கிணியும் அணிந்துள்ள தாமரை போன்ற திருவடியைக் கொடுத்து, நீ என் மீது அன்பு கொண்டு அருள் புரிவாயாக!

 17) திருச்செந்தூர்

வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற்  குழலாலே

  மறுகிடு மருளனை யின்புற் றன்புற் றருள்வாயே

பாடல் எண் 74 –  பரிமள களப எனத் தொடங்கும் பாடல்

 பொருள் :  கோடுகளை உடைய வண்டுகளின் கூட்டம் ஒலிக்கின்ற பூவாசம் மிகுந்த கரும் கூந்தலின் அழகாலும் மயங்கித் திரிகின்ற அடியேனை இன்பத்துடனும் அன்புடனும் ஆட்கொண்டு அருள்வாயாக!

 18) திருச்செந்தூர்

 காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு

   காயம்வி டாம லுன்ற னீடிய தாள்நி னைந்து

     காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க அருள்வாயே

 பாடல் எண் 82 –  பூரண வார கும்ப எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : காயம், வாக்கு, மனம் என்னும் மூன்றும் ஒரு வழிப்பட, அன்பை உடலுள்ள அளவும் விடாமல், உனது அழிவற்ற திருவடிகளை

நினைந்து காட்சியைப் பெறுவதற்கு, மிக்க தவத்தைச் செய்கின்ற யோகிகளைப் போல் நான் விளங்கும் படி அருள் புரிவாயாக!

 குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

                                             ***.                                  தொடரும்

புத்தக அறிமுகம் – 118

பார்த்ததில் ரசித்தது படித்ததில் பிடித்தது (1)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்ளில் பலவற்றின் தலைப்புகள் :

 1. ஈட், ப்ரே, லவ்

 2. புன்முறுவல் ரிஷி!

 3. ஃபாரஸ்ட் கம்ப்

 4. ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! -1

   ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! -2

 5. ஹோம் அலோன்!

 6. சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம் பகுதி – 1

    சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம் பகுதி – 2

 7. ஸிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ் 

 8. காஞ்சி பரமாசார்யாள் அருள கட்டுரை:  “வாழ்க்கை எனக்குப்   

   போதித்தது என்ன?”

 9. ‘தி டேகிங் ஆஃப் பெல்ஹாம் 123’

10. வேத கணிதம் கண்ட ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த   சங்கராசார்ய   

    ஸ்வாமிகள் – 1

    வேத கணிதம் கண்ட ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த   சங்கராசார்ய    

    ஸ்வாமிகள் – 2

11. ‘ப்ளட் ஸ்போர்ட்’

12. வீட்டுக்கு வந்த அன்னியன்!

13. ‘ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்’

14. பூதான இயக்கம் கண்ட புனிதர்! – 1

    பூதான இயக்கம் கண்ட புனிதர்! – 2

    பூதான இயக்கம் கண்ட புனிதர்! – 3

16.உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் – 1

   உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் – 2

   உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் – 3

17. தி கவுண்டர்ஃபெய்டர்ஸ்

18. இசைப் பேரரசியின் வாழ்வில் ஒரு சம்பவம்!- 1

   இசைப் பேரரசியின் வாழ்வில் ஒரு சம்பவம்!- 2

   இசைப் பேரரசியின் வாழ்வில் ஒரு சம்பவம்!- 3

19. வெர்டிகல் லிமிட்

20. கடவுளைத் தேடி ஒரு பயணம்! – 2

   கடவுளைத் தேடி ஒரு பயணம்! – 2

   கடவுளைத் தேடி ஒரு பயணம்! – 3

22. அன்புக் கடவுள்! – 1

   அன்புக் கடவுள்! – 2

   அன்புக் கடவுள்! – 3

23. போனஸ் அயர்ஸ் 1977

24. அனுதினமும் ரமணருடன் – பகுதி 1

   அனுதினமும் ரமணருடன் – பகுதி 2

   அனுதினமும் ரமணருடன் – பகுதி 3

25. ஜீரோ டார்க் தர்ட்டி!

26. அன்னையின் அருளுரைகள்!                                    27. ஆபரேஷன் தண்டர்போல்ட்!

முடிவுரை *

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

People rarely find time to find great books to read and fine pictures to identify and enjoy. Here the popular writer S Nagarajan has selected the books from those he has read and useful and interesting information from the pictures for you in an informative and inspiring manner. One can read the essence of the autobiography of U V Swaminatha Iyer, “In search of God” by the Kanhangad Mahaswami Saint Ramadas, Vedic mathematics and “Loving Lord” on Sri sathya Sai Baba. One can enjoy the essence of heart rending Hollywood films EAT PRAY LOVE, FOREST CAMP” in the “PARTHATHIL RASITHTHATHU” portion of the book. A great book that helps us to improve our literary taste!

சிறந்த நூல்களைத் தேடித் தேடிப் படிக்கவோ, நல்ல படங்களை அடையாளம் கண்டு ரசிக்கவோ அனைவருக்கும் நேரம் இருப்பதில்லை. எனவே உங்களுக்காக, தான் படித்துத் தேர்ந்தெடுத்த நூல்களிலிருந்தும் படங்களிலிருந்தும் சுவாரசியமான, பயனுள்ள பல விஷயங்களை இந்த நூலில் இனிய நடையில் தருகிறார் பிரபல எழுத்தாளர் ச.நாகராஜன் அவர்கள். உ.வே.சுவாமிநாதையரின் என் சரித்திரம், கன்ஹன்காட் மஹான் சுவாமி ராமதாஸ் அவர்களின் கடவுளைத் தேடி, வேதக் கணிதம், ஸ்ரீ சத்யசாயிபாபாவைப் பற்றிய அன்புக் கடவுள் ஆகிய புத்தகங்களின் சாரத்தைச் சுருக்கமாக இதில் படிக்கலாம். மேலும் ஈட் ப்ரே லவ், ஃபாரஸ்ட் கம்ப் முதலான உள்ளத்தைத் தொடும் சிறந்த ஹாலிவுட் படங்களைப் பற்றிய விவரங்களையும் இந்நூலின் ‘பார்த்ததில் ரசித்தது’ பகுதியில் காணலாம். உங்கள் ரசனையை வளர்த்துக்கொள்ளப் படிக்க வேண்டிய படைப்பு!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘பார்த்ததில் ரசித்தது படித்ததில் பிடித்தது (1)’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: