பெண்களை நம்புவதா? புலவர்களை நம்புவதா ? (Post No.11,461)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,461

Date uploaded in London – 21 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 பெண்களை நம்புவதா? புலவர்களை நம்புவதா ? கீழே உள்ளவற்றைப்

படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள் .

Woman  = Light of Billion Galaxies

अतुलं तत्र तत्तेजः सर्वदेवशरीरजम्।

एकस्थं तदभून्नारी व्याप्तलोकत्रयं त्विषा॥

atulaṃ tatra tattejaḥ sarvadevaśarīrajam।

ekasthaṃ tadabhūnnārī vyāptalokatrayaṃ tviṣā॥

 English Translation:

The incomparable radiance that was born from all gods and pervaded the 3 worlds,

came to one place and took the form of a woman.

அதுலம் தத்ர தத் தேஜஹ ஸர்வ தேவ சரீரஜம்

ஏகஸ்தம் தத பூந் நாரீ வ்யாப்த லோக த்ரயம் த்விஷா

–தேவி மஹாத்ம்யம் 2-13

மூவுலங்களில் உள்ள எல்லா கடவுளரின் ஈடு இணையற்ற , ஒப்பற்ற ஒளியும் ஒரு சேர ஒரே பெண்ணின் உருவெடுத்து வந்தது (தேவியானவள் வந்தாள் )

xxxx

ஒளதும்பராணி புஷ்பாணி ஸ்வேத வர்ணம் ச வாயஸம்

மத்ஸ்ய பாதம் ஜலேத் பச்யேத்  ந நாரீ ஹ்ருத்யஸ்திதம்

அத்திப் பூவைக் கண்டாலும் காணலாம் ; வெள்ளைக் காக்கையைக் கண்டாலும் காணலாம் ; நீருக்குள் மீன் கால்களைக் கண்டாலும் காணலாம் ; பெண்களின் உள்ளத்தை மட்டும் அறிந்துகொள்ள முடியாது – மஹா பாரதத்தில் கிருஷ்ணன் சொன்னது .

அறியமுடியாதது

இதை விவேக சிந்தாமணி எழுதிய பெயர் தெரியாத ஒரு புலவரும் அழகாக மொழிபெயர்த்துள்ளார்

அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கை தானும்,

பித்தர் தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதந்தானும்

அத்தன் மால் பிரம தேவ னாலள விடப்பட் டாலும்,

சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவர் இல்லை கண்டீர்.

அத்தி மரத்தில் மலரையும் வெள்ளை உடலை உடைய காக்கையும் பித்தர்களுடைய மனதையும் நீரில் வாடுகின்ற மீனின் பாதச்சுவடையும் பிரம்மாவும் பெருமாளும் காணமுடியாத சிவபெருமானின் முடியையும் அடியையும் காணமுடியாது. இவைகளை காண முடிந்தாலும் பெண்களின் மனதில் உள்ளதை அறிபவர் யாருமில்லை.

Xxx

Gods reside where women are worshipped

यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः।

यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफला क्रिया:॥

yatra nāryastu pūjyante ramante tatra devatāḥ।

yatraitāstu na pūjyante sarvāstatrāphalā: kriyā:॥

English Translation:

Where women are honoured, divinity blossoms there.

And where they are Dishonoured, all actions remain unfruitful.

Source:

Manusmriti 3.56

யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமதே தத்ர தேவதாஹா

யத்ரைதாஸ்து  ந பூஜ்யந்தே  ஸர்வாஸ்த த்ராபலாஹா

மநு ஸ்ம்ருதி 3-56

எங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கே இறையுணர்வு பரிணமிக்கும் ;

எங்கே பெண்கள் மிதிக்கப்படுகிறார்களோ அங்கே செய்யப்படும் அனைத்து

விஷயங்களும் அடியோடு அழியும்

பெண்கள் 2, 4, 6, 8

ஸ்த்ரீணாம் த்வி குணம் ஆஹாரம் புத்திஸ் சாபி தசதுர் குணம்

ஸாஹஸம் ஷட்  குணம் சைவ காமோ  அஷ்ட குண முச்யதே

ஆண்களைக்காட்டிலும் பெண்களுக்கு உணவு விஷயத்தில் இரு மடங்கு விருப்பமும்,

புத்தி/அறிவு விஷயத்தில் நான்கு  மடங்கு அதிக திறமையும் ,

தைரியம், பிடிவாத விஷயத்தில் ஆறு  மடங்கு அதிக ஈடுபாடும்  ,

இன்பம் அனுபவிக்கும் விஷயத்தில் எட்டு   மடங்கு அதிக  ஈடுபாடும்

இருப்பதாக நூல்கள் செப்புகின்றன / என்மனார் புலவர் .

Rough translation

Women are twice better in enjoying food, four times cleverer in learning, six times more involved in adventures/innovations and eight times more involved in enjoying sexual pleasures (in comparison with men).

Xxx

Women must always be protected

பிதா ரக்ஷதி கெளமாரே பர்தா ரக்ஷதி யெளவனே

ரக்ஷந்தி வார்த்தகே புத்ராஹா ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ரீய மர்ஹதி

பெண்களை இளம்  பருவத்தில் தந்தையும் , திருமணம் ஆனவயதுக் காலத்தில் கணவனும் , முதிய பருவத்தில் புத்திரர்களும் காப்பாறுகிறார்கள் ஆகையால் அவர்கள் எப்போதும் பாதுகாப்பில்லாமல் இருக்கக்கூடாது .

This is a very important couplet and always misinterpreted by half bakedpeople. Nowhere in the world women get such a protection. Old parents are thrown into dust bins (what others call Old Age Homes) in the Western World. After teenage, no woman is protected by anyone in the West. The statistics on Rapes, Single Mothers, Divorces and Old Age Homes in the West, stand as biggest proof for my statement.

—subham— 

 tags- பெண்கள், புலவர்கள், நம்புவதா, மநு நூல், தேவி மஹாத்ம்யம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: