
Post No. 11,467
Date uploaded in London – – 24 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயண வழிகாட்டி!
ராமாயணத்தில் வரும் நதிகள்! – 1
ச. நாகராஜன்
உலகின் ஆதி காவியமான ராமாயணம் அதிசயிக்க வைக்கும் காவியம்.
மனிதப் பண்புகளின் உச்ச கட்டத்தையும், மனிதன் கோரமான, அதம ரூபத்தையும் விளக்கிக் காட்டி, அறம், மறத்தை வெல்வதைச் சித்தரிக்கிறது ராமாயணம்.
இது ஒரு கலைக் களஞ்சியம்.
இதை ஆதி காலம் தொட்டு இன்றைய செல்போன், கணினி யுகம் வரை ஆராய்ந்தோர், ஆராய்ந்து வருவோர் ஏராளம்.
ராமாயணத்தில் இடம் பெறும் நதிகளைப் பற்றித் தனியே ஆய்வு நடத்தலாம்.
கம்பன் கோதாவரி நதியை கவிதையுடன் ஒப்பிட்டு கவிதைக்கு இலக்கணம் சொன்னான்.
இதோ வால்மீகி ராமாயணத்தில் இடம் பெறும் 49 நதிகளின் பெயர்களைப் பார்ப்போம்.
1) பாகீரதி : கங்கையின் இன்னொரு பெயர் தான் பாகீரதி. பகீரதன் பிரம்ம பிரயத்தனம் செய்து கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான். அவர்களது முன்னோர் கடைத்தேற அவன் இந்த மாபெரும் செயலைச் செய்தான். படைப்புத் தெய்வமான பிரம்மா இதனால் மனம் மிக மகிழ்ந்தார். கங்கை பகீரதனின் மூத்த புதல்வியாகக் கருதப் படுவாள் என்றும் அவள் பெயர் பாகீரதி என அழைக்கப்படும் என்றும் அவர் சொன்னார். ஆகவே கங்கை பாகீரதி என்ற பெயரைப் பெற்றாள்.
2) கங்கா : வார்த்தையால் வர்ணிக்க முடியாத மஹிமையைக் கொண்ட தெய்வ நதியான கங்கை சொர்க்கம், பூமி, பாதாளம் என மூன்று லோகங்கள் வழியே பாய்ந்த நதி. இதைப் பற்றிய ஏராளமான வரலாறுகள் உண்டு. அவற்றைச் சித்தரிக்கும் புத்தகங்கள் உண்டு.
அவற்றைப் படித்தால் கங்கையின் மஹிமை ஒரு சிறிது நமக்குப் புரிய வரும்.
3) கோதாவரி : பஞ்சவடிக்கு அருகில் உள்ள நதி கோதாவரி. ராமருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நதி. வனவாசத்தின் போது சீதையுடனும் லட்சுமணனுடன் நெடுங்காலம் ராமர் பஞ்சவடியில் கழித்தார். ஆகவே கோதாவரியிலும் குளித்து மகிழ்ந்தார். அகத்திய மாமுனியின் யோசனையைக் கேட்டு தன் முன்னோர்களுக்காக உரிய சடங்குகளையும் இங்கு அவர் செய்தார். தெளிவான, புனிதமான நீரைக் கொண்டது கோதாவரி. அப்ஸரஸ்கள் – தேவ கன்னிகைகள் – இங்கு வந்து குளித்து நீர் விளையாடலில் ஈடுபடுவதுண்டு. சீதையை மீட்டு அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் ஏறி ஆகாயமார்க்கமாகத் திரும்பும் போது ராமர் கோதாவரியை சீதைக்குச் சுட்டிக் காட்டுகிறார்.
4) கோமதி : கங்கை வழியே கடலை நோக்கிப் பாய்ந்து கடலில் சேரும் புனித நதி கோமதி. ராமர் சீதை லட்சுமணருடன் இந்த நதியைக் கடக்கிறார். அழகிய பசு மந்தை இருக்கும் இடம் கோமதி நதிக் கரை.
5) ஹ்லாதினி : கங்கையிலிருந்து கிழக்கு முகமாகப் பாயும் மூன்று ஓடைகளில் இதுவும் ஒன்று. பரதன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்குச் செல்லுகையில் இதைக் கடந்து சென்றான்.
6) இக்ஷுமதி : புனிதமான நதி இக்ஷூமதி. ஏராளமான பறவைகள் வசிக்குமிடம் இக்ஷுமதி பிரதேசம். இக்ஷ்வாகு குல மன்னர்களால் காத்து வரப்பட்ட நதி இது. பரதரையும் சத்ருக்னரையும் அயோத்திக்குக் கூட்டி வரச் சென்ற தூதர்கள் இந்த நதியைக் கடந்து கேகயம் சென்றனர்.

7) ஜாஹ்னவி : கங்கையின் இன்னொரு பெயர் ஜாஹ்னவி. ஜானு என்ற பெரும் தபஸ்வியின் புதல்வி என்ற அர்த்தத்தில் ஜாஹ்னவி என்ற பெயர் ஏற்பட்டது.
8) காலாமாஹி : கிழக்கே பாயும் நதி இது. வனங்களும் மலைகளும் உள்ள பிரதேசம் காலாமாஹி பிரதேசம்.
9) காளிந்தி : சித்ரகூடம் செல்லும் வழியில் உள்ள நதி இது. சீதாதேவி இதைப் போற்றி வணங்குகிறாள்.
10) கபிவதி : கிழக்கே உள்ள நதி இது.
11) கௌஸிகி : இன்று கோசி என்று அழைக்கப்படும் கௌஸிகி கிழக்கே உள்ள நதி. இங்கு தான் விஸ்வாமித்திரர் தனது கடும் தவத்தை மேற்கொண்டார். சுக்ரீவனால் சீதையைத் தேடுவதற்காக அனுப்பப்பட்ட வானரர்களின் குழு இந்த நதியைக் கடந்து சென்றது.
12) காவேரி : தெற்கே தமிழகத்தில் பாயும் புனித நதி. இதன் பெருமை சொல்லில் அடங்காது. அப்ஸரஸ்கள் விளையாடி ஆனந்திக்கும் நதி காவேரி.
13) க்ருஷ்ணவேணி : தென்னிந்தியாவில் பாயும் அழகு நதி இது.
14) குலிகோடிகா: கேகயத்திற்கு அயோத்திக்கும் இடையே பாயும் நதி இது.
15) குலிங்கா : அயோத்திக்கு அடுத்துள்ள மலையில் பாயும் நீரோடை.
16) மாஹி : சீதையைத் தேடி சுக்ரீவன் ஆணையின் பேரில் புறப்பட்ட வானரங்கள் கிழக்கே பாயும் இந்த நதியைக் கடந்து சென்றனர்.
17) மாலினி : கேகய நாட்டின் வடக்கே ப்ரலம்பா பகுதியில் பாய்வது மாலினி.
18) மால்யவதி : மந்தாகினி நதியின் இன்னொரு பெயர் மால்யவதி.
19) மந்தாகினி : சித்ரகூட பிரதேசத்தில் பாயும் அழகிய நதி இது. ஸ்படிகம் போன்ற இதன் தூய நீரைப் பார்த்து ராமரும் சீதையும் ஆனந்தப்பட்டனர். அதில் குளித்தனர். சீதையை மகிழ்ச்சி அடையச் செய்வதற்காக ராமர் மந்தாகினி நதியை வர்ணிக்கிறார். இதன் கரையில் கனி கொடுக்கும் ஏராளமான அழகிய மரங்கள் உள்ளன.
20) நளினி : கங்கையின் ஏழு உபநதிப் பிரிவுகளுள் ஒன்று நளினி. ஹ்லாதினி மற்றும் பாவனியுடன் இது விந்துசரோவரம் நோக்கிப் பாய்கிறது.
21) நர்மதா : புனிதமான அழகிய நதி இது. மாஹிஷ்மதி நகருக்கு அருகே பாயும் நதி இது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த நதியில் தான் ராவணன் குளித்து விட்டு சிவனை நோக்கி தனது பாவம் தொலைய பிரார்த்தனை செய்தான். அப்போது நர்மதையின் வேகம் மாஹிஷ்மதியின் அரசனான கார்த்தவீர்யார்ஜுனனின் கைகளால் தடுக்கப்பட்டது. அவன் நர்மதாவின் இன்னொரு பக்கம் ஸ்தீரிகளுடன் விளையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ஆகவே ராவணன் அர்ச்சித்த மலர்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் கோபம் அடைந்தான் ராவணன். ராவணனுக்கும் கார்த்தவீர்யார்ஜுனனுக்கும் இடையே கடும் போர் ஏற்பட்டது. கார்த்தவீர்யார்ஜுனன் ராவணனைத் தோற்கடித்து அவனை மாஹிஷ்மதி நகருக்குக் கைதியாகத் தூக்கிச் சென்றான்.
ராமாயணம் விளக்கமாகக் கூறும் இந்த நதிகளின் பெருமை இன்று வரை பாரத தேசத்தில் வசிக்கும் ஒவ்வொருவராலும் போற்றப்பட்டு வருகிறது.
மீதியுள்ள நதிகளை அடுத்துப் பார்ப்போம்.
*** தொடரும்
புத்தக அறிமுகம் 121 – 2
அற்புத அவதாரம் சத்யசாயிபாபா
(அம்ருத சாகரம் இணைப்பு)
பொருளடக்கம்
நூலில் அம்ருத ஸாகரம் என்னும் சாயி உபதேச மஞ்சரி தரப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாபாவின் 108 அருளுரைகள் இதில் தரப்பட்டுள்ளது. அந்த 108 அருளுரைகளின் தலைப்புகள் ;
1. என்னை பூஜிப்பதன் பலன்
2. சாயி என்றால் அர்த்தம் என்ன?
3. சாயி மொழிகளும் சாயி வழியும்
4. அவதார காரணம்
5. அவதார பணி
6. பக்தர்களிடம் நான் நேரே வருவேன்! யார் மூலமாகவும்
செயல்படுவதில்லை!!
7. பிரேமை என்ற கட்டணமே போதும்!
8. பிரேமையே சாயியின் நிதி
9. சாயி நிதி!
10. அவதாரங்களின் நோக்கம்
11. சாயி பக்தன் யார்?
12. சாயி பக்தர்களுக்கு அறிவுரை
13. இரும்பு குண்டு போன்ற உறுதி தேவை!
14. கூட்டு பிரார்த்தனையின் மகிமை
15. நாம மகிமை!
16. ஆதாரமும் ஆதேயமும்
17. நாமம் சக்தி வாய்ந்தது
18. நால்வகை சங்கீர்த்தனமும் நாமலிகிதமும்
19. நாம ஸ்மரணமே வழி
20. பாரதத்தின் அடிப்படை
21. ஐந்து பிரார்த்தனைகள்!
22. சரணாகதியே நேரடி தொடர்பு
23. சரணாகதி செய்க
24. அனுக்ரஹம் எப்போது கிடைக்கும்?
25. சத்சங்க மகிமை!
26. மனச்சாட்சியே சத்சங்கம்
27. சனாதன மத ஸ்தாபகர் யார்?
28. வேதங்களின் மகத்துவம்
29. ஈஸாவாஸ்ய உபநிஷத்
30. ‘ஓம்’கார மகிமை
31. பிரக்ஞானம் என்றால் என்ன?
32. பிரசாந்தி என்றால் என்ன?
33. தீபத்தின் ஆற்றல்
34. காயத்ரி
35. காயத்ரி – 2
36. பகவத் கீதை
37. ‘யோகக்ஷேமம்’ என்பதன் உட்கருத்து
38. கிருஷ்ணரும், அர்ஜுனனும்
39. குரு பக்தி
40. விநாயக தத்துவம்!
41. கணபதி வழிபாடு
42. துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி
43. சிவராத்திரி ஏன்?
44. ராதை யார்?
45. எங்கும் உள்ள தெய்வம்!
46. கடவுளின் அஷ்ட ஐஸ்வர்யங்கள்
47. கடவுளுக்கு என்ன வேண்டும்?
48. ஒருமைப்பாட்டை உணர்தல் வேண்டும்
49. தாயும், கடவுளும்
50. அனைத்து மதங்களும் சுட்டிக் காட்டும் இறைத்தன்மை ஒன்றே!
51. எம்மதமும் சம்மதமே!
52. ஐந்து மதங்களும் ஒரு கரத்தின் ஐந்து விரல்களே
53. கர்ம பலன்களிலிருந்து தப்பிக்க வழி!
54. செயலுக்கு ஏற்றபடியே விளைவு இருக்கும்!
55. கர்மம், ஜன்மம், தர்மம், மர்மம்
56. உலகம் ஒரு கண்ணாடி, உன்னையே பிரதிபலிக்கும்!
57. மனித சக்தியும், தெய்வ சக்தியும்
58. சரீரம், மனது, ஆன்மா, மூன்றும் இணைந்து செயல்படுவதே
மனிதத் தன்மை
59. முயற்சி தேவை
60. ஆறு வகை பக்தி
61. சுவர்க்கத்தின் கதவுகள் எப்போது திறக்கும்?
62. இறைவன் கருணை பெற மாசற்ற பிரேமை தேவை!
63. காமமும் மோகமும்
64. காமம், குரோதம், லோபம்
65. எட்டு வித அகங்காரங்கள்
66. திருப்பதி மொட்டையின் அர்த்தம்
67. கர்மமும், ஞானமும்
68. தியானமே யோகம்
69. மூன்று சரீரங்களும் ஐந்து கோசங்களும்
70. ஆன்மீகம் காட்டும் இறுதி நிலை
71. சேவையே சிறந்த வழிபாடு
72. ஒரே வரியில் 18 புராணங்களின் சாரம்!
73. தியாகம் ஒன்றே வழி!
74. ஆனந்தம் பெற வழி!
75. ராமராஜ்யம் ஏற்பட வழி
76. கலியின் விளைவிலிருந்து விடுபடுங்கள்
77. நீங்கள் அறங்காவலர்களைப் போல
78. தபஸ் என்றால் என்ன?
79. காம்பஸ் போல கடவுளை நோக்கி இரு!
80. ஆசைகளுக்கு வரையறை தேவை
81. சமமாக அனைவரையும் நேசி
82. மூன்று விதத் தூய்மை
83. நிந்திக்காதே
84. பொறுமை
85. உலக அமைதிக்கு வழி தெய்வ ப்ரீதி, பாப பீதி, சங்க நீதி
86. சத்தியத்திலிருந்து சாந்திக்கு
87. வாழ்க்கையின் நான்கு படித்தரங்கள்
88. ஐந்து நியமங்கள்
89. சுத்தம்
90. மனக் கண்ணாடி
91. பாரதத்தின் ஆதாரம் தர்மமே
92. தெய்வ ப்ரீதி, பாப பீதி, சங்க நீதி
93. பெண்ணே ஆதாரம்!
94. மகளிர் கடமை
95. அமரத்வம் அடைய வழி!
96. இயற்கையை ஆராய மூன்று தகுதிகள் தேவை
97. பயமின்றி இருக்க வழி
98. நிகழ்காலத்தில் வாழுங்கள்!
99. உணர்ச்சி வசப்பட வேண்டாம்!
100. நாவு சக்தி இழக்க நான்கு காரணங்கள்
101. இரண்டு
102. வாழும் வழி
103. விஜய சாக்ஷி: வெற்றிக்கு வழி
104. உன் துயரம் போக வழி!
105. தவிர்க்க வேண்டியவை!
106. டி.வி.யினால் ஏற்படும் தீய விளைவுகள்
107. இதய நோய்க்கு இடமே இல்லை
108. ஆன்மீகப் புத்தகங்களைப் படியுங்கள்!
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
Linking with the previous incarnation of Shirdi Sai and the expected incarnation of Prema Sai, this book describes in detail the living legend Sri Sathya Sai Baba. The 41 chapters are truly blissful, providing an insight into the miracles of Sathya Sai Baba. Also attached are 108 prime discourses of Sathya Sai Baba. A must read for Sai devotees and spiritually inclined people.
நாம் வாழும் காலத்தில் நம்மோடு வாழ்ந்த அற்புத அவதாரமான ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றைத் தெளிவாக விளக்கும் நூல். அவருடைய முந்தைய அவதாரமான ஷீர்டி சாயி பற்றியும் அடுத்து அவர் பிரேம சாயியாக அவதரிக்கப் போவது பற்றியும் நூலில் காணலாம். 41 அத்தியாயங்களில் சாயியின் அற்புத வரலாற்றை விரிவாகப் படிப்பது ஆனந்தமான அனுபவம்! அத்துடன் ஸ்ரீ சாயிபாபாவின் 108 முக்கியமான உரைகளின் தொகுப்பும் நூலில் இரண்டாவது பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. சாயி அன்பர்களும் ஆன்மீக நாட்டம் உடையவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘அற்புத அவதாரம் சத்யசாயிபாபா!’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
*