ராமாயணத்தில் வரும் நதிகள்! – 2 (Post No.11,471)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,471

Date uploaded in London – –   25 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

ராமாயண வழிகாட்டி!

ராமாயணத்தில் வரும் நதிகள்! – 2

ச. நாகராஜன்

22) பாவனி: கங்கையின் ஏழு ஓடைகளில் ஒன்று. அவற்றில் கிழக்கு

           முகமாகப் பாயும் மூன்றில் ஒன்று இது.

23) சைலதா : உத்தரகுரு பிரதேசத்தின் அருகில் பாயும் நதி இது. அங்கு   

             கீசகா என்ற ஒரு விசேஷமான மூங்கில் வளர்கிறது.

             அந்த மூங்கில் உதவியுடன் தான் சித்தர்கள் சைலதா

             நதியின் மறுகரைக்குச் செல்வது வழக்கம்.

24. சதத்ரு :   தசரதர் மரணம் அடையவே, அயோத்திக்கு பரதனும்

             சத்ருக்னனும் திரும்பி வருகின்ற வழியில் பாயும் நதி

             இது.

25. சரஸ்வதி : கிழக்கில் பாயும் நதி இது. எல்லையற்ற மகிமை

               கொண்டது.

26. சரயு : பிரம்மாவினால் கைலாயத்தில் படைக்கப்பட்ட மானஸம்

          என்ற புனிதமான ஏரியிலிருந்து உருவான புனித நதி சரயு.   

          அயோத்தியைச் சுற்றி ஓடும் நதி இது. இக்ஷ்வாகு

           வம்சத்தில் பரம்பரை பரம்பரையாக மன்னர்களால்

           வழிபடப்படும் நதி. விஸ்வாமித்திரரின் அறிவுரையின்

          பேரில் ராமரும் லக்ஷ்மணரும் தாடகையை வதம் செய்யப்

          போகும் போது சரயு நதியை வழிபட்டனர். ராமரால்

          கைவிடப்பட்ட நிலையில் லக்ஷ்மணர் தன் உடலை இந்த

          நதியில் உகுத்தார். பின்னர் பரதர், சத்ருக்னர் மற்றும் இதர

          மக்களுடன் ராமர் சரயு நதியில் இறுதியில் பிரவேசித்தார்.    

          மகாகவி பாரதியார் ‘பலர் புகழும் ராமனுமே ஆற்றில்

           மாண்டான்’ என்று இதைக் குறிப்பிடுகிறார்.

27. சிந்து : எல்லையற்ற மகிமை கொண்ட இது கங்கையிலிருந்து

           மேற்கே பாயும் ஒன்று. விந்து சரோவரத்திலிருந்து

           இத்துடன் இன்னும் இரு ஓடைகளான சீதா மற்றும்

           சுகக்ஸு ஆகியவையும் பாய்கின்றன.

28. சிந்து : வடமேற்கே பாயும் நதி இது.

29. சீதா :  விந்து சரோவரத்திலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வது இது.

30. ஸ்தாணுமதி : கேகய நாட்டின் தலைநகரான ராஜக்ரஹத்திலிருந்து

                 அயோத்திக்குச் செல்லும் வழியில் பாய்வது இது.

31. சுகக்ஸு : விந்து சரோவரத்திலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வது

              இது.

32. சுதாமா : கேகயம் மற்றும் அயோத்தி நாடுகளுக்கு இடையே ஓடும்

             நதி இது.

33. ஸ்யாந்திகா : தண்டகா வனத்திற்குப் போகும் வழியில் இந்த

                  நதியை ராமர் கடந்தார்.

34. தமஸா : கங்கையின் அருகே பாயும் தமஸா நதி களிமண், தூசி

            அற்ற தூய நீரைக் கொண்டது. இதன் கரையில் தான்

            வால்மீகி முனிவர் க்ரௌஞ்ச பக்ஷிகளில் ஒன்று தனது

            துணை கொல்லப்பட்ட சமயத்தில் வருந்திப்

            புலம்பியதைக் கண்டார். இதைக் கண்டு வருத்தமுற்ற

            அவர் நான்கு பாதங்கள் கொண்ட ஒரு

             ஸ்லோகத்தைச் சொன்னார். அதுவே ராமாயணம்

             உருவாகக் காரணமாக அமைந்தது.

35. த்ரிபதாகா : கங்கை ஸ்வர்க்கத்திலிருந்து கிளம்பி பூமி வழியே

               பாதாள லோகத்தை அடையும் போது இப்படி

               அழைக்கப்படுகிறது.  இப்படியாக மூன்று

               லோகங்களிலும் கங்கை பாய்கிறது.

36. வைதரணி : வைவஸ்வத யமனின் ஆளுகைக்கு உட்பட்ட

               பிரதேசத்தில் பாய்வது இது. யமனை எதிர்க்க ராவணன்

               இங்கு வந்த சமயத்தில் பாவிகளான பலர் இதை

               மீண்டும் மீண்டும் கடக்கச் செய்வதைப் பார்த்தான்.

               இதே பெயரில் இன்று ஒரிஸாவில் ஒரு நதி பாய்வது

               குறிப்பிடத் தகுந்தது.

37. வாருதி : நந்திகிராமத்தில் இருந்த பரதனிடம் ராமர் திரும்பி

              வருகிறார் என்ற செய்தியைச்  சொல்ல வந்த

               ஹனுமாரால் கடக்கப்பட்ட நதி இது.            .

38. வேதஸ்ருதி : கோசலத்தைத் தாண்டி உள்ள இந்த நதியை ராமர்

                  தண்டக வனம் செல்லும் போது கடந்தார்.

39. விபாஸா; அயோத்தியிலிருந்து கேகயம் செல்லும் வழியில் உள்ள

             நதி இது. தசரதர் இறக்கவே, பரதனையும்

             சத்ருக்னனையும் அழைத்து வருமாறு வஸிஷ்ட

              மஹரிஷி தூதர்களை அனுப்பிய போது அவர்கள் இந்த

              நதியைக் கடந்து சென்றனர்.

40. யமுனா: பாரதத்தின் வடக்கே உள்ள இந்த நதியின் பெருமை

            எல்லையற்றது. இங்கு தான் பரத்வாஜ மஹரிஷி  தவம்

            செய்தார். ப்ரயாகை என்னும் த்ரிவேணி சங்கமமான

            கங்கை யமுனை சரஸ்வதி கூடும் இடத்திற்கு அருகில்

            உள்ளது யமுனா நதி!

ஏரிகளும்குளங்களும்கிணறுகளும்!

41. மானஸம் : கைலாயத்தில் உள்ள புனிதமான ஏரி. பிரம்மாவினால்  

               படைக்கப்பட்டது. மனதிலிருந்து உருவானது என்ற

               பொருளைக் கொண்டது மானஸம் என்ற வார்த்தை. 

               இதிலிருந்து சரயு நதி உற்பத்தியானது.

42. மதங்கஸாரா : மதங்க மஹரிஷியின் பெயரால் அழைக்கப்படும்

                  அழகிய குளம் இது. பம்பாவின் ஒரு பகுதி இது.

                  ரிஷ்யமுக மலைக்குச் செல்லும் போது ராமர் இங்கு

                  குளித்தார்.

43. பம்பா : அனைவரையும் கவரும் அழகிய புனிதமான ஏரி இது.

           தாமரை மலர்கள் நிரம்பியது. ரிஸ்யமுக மலைக்கு மிக

           அருகில் வனபிரதேசத்தில் உள்ளது. இங்கு தான் மதங்க

           மஹரிஷியின் ஆஸ்ரமம் உள்ளது. இந்த அழகிய தூய

           நீரைப் பார்த்தவுடன் சீதையை நினைத்து ராமரின் இதயம்

           உருகியது.

44. பஞ்சப்ஸரா : ஸ்படிகம் போன்ற நீரையும் சிவந்த மற்றும்

                வெள்ளைத் தாமரைகளையும் கொண்ட அழகிய ஏரி

                இது. மந்தகர்னி ரிஷியின் சக்தியால் அன்னங்களும்,

                கொக்குகளும் இதர பக்ஷிகளும் இங்கு கொண்டு

                வரப்பட்டது. அவர் இந்த ஏரியில் தனது அழகிய ஐந்து

                அப்ஸரஸ் மனைவிகளுடன் வசித்து வந்தார். அக்னி

                மற்றும் இதர தேவதைகளால் அந்த அப்ஸரஸ்கள்

                முனிவரின் தவத்தைக் கலைக்க அனுப்பப்பட்டனர்.

                 அவர்களது இனிய கானங்களும் அவர்களது

                 ஆபரணங்களுடன் இசைக்கருவிகள் எழுப்பிய

                 ஓசையும் ஏரியின் அருகில் இருந்த அனைவரையும்

                 மயக்கியது. சீதை, லக்ஷ்மணருடன்  தண்டக வனம்

                 செல்லும் வழியில் ராமரை ஆவல் தூண்ட அவருக்கு

                 இந்த ஏரி பற்றி விரிவாகச் சொல்லப்பட்டது.

45. சால்மலி : அயோத்தியிலிருந்து கேகயம் செல்லும் வழியில் உள்ள

             ஏரி இது. பரதனையும் சத்ருக்னனையும் அழைத்து வரச்

             சென்ற போது அவர்களை அழைத்து வரச் சென்ற 

             தூதர்கள் இந்த ஏரியைப் பார்த்தனர்.

46. சுதர்ஸனா: அன்னங்களும் தாமரை மலர்களும் நிரம்பி உள்ள

              அழகிய ஏரி இது. அப்ஸரஸ்கள், கின்னரர்கள்,

              கந்தர்வர்கள் விளையாடும் புனித நீர் நிலை இது.

47. வனாயு : அழகிய சிறந்த குதிரைகளுக்குப் பெயர் பெற்ற பிரதேசம்.

48. விந்துசரோவரம் : சிவபெருமான் கங்கையைத் தன் தலையிலிருந்து

                     இறக்கி வைத்த இடம் இது.  விந்து

                     சரோவரத்திலிருந்து கங்கை ஏழு பிரிவுகளாகப்

                     பிரிந்து கிழக்கேயும் மேற்கேயும் பாய

                     ஆரம்பித்தது.

49. வ்ரணா : இது ஒரு கிணறு. மருகாந்தார பிரதேசத்தில் ராமரால்

             உருவான கிணறு இது.

***

புத்தக அறிமுகம் 122

பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்                                                       

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.  இனம் தெரியாத பறக்கும் பொருள்கள்

2.  அறிவியல் கூறும் விளக்கங்கள்

3.  அயல் கிரகவாசி பிடிபட்டாரா?

4.  ரஷ்யாவில் இறங்கிய பறக்கும் தட்டு

   5. பறக்கும் தட்டின் வேகம்

   6. செவ்வாய் கிரகத்தில் உயிரினம் உண்டா?

   7. செவ்வாய் பற்றிய அமெரிக்க ஆராய்ச்சி

   8. அயல் கிரகவாசிகள் பேசும் மொழி

   9. வாஷிங்டனில் பறக்கும் தட்டு

   10. பறக்கும் பொருள் சேஸ்!

   11. சந்திரனில் ஓடுபாதை

   12. உண்மையும் பொய்யும்

   13. டெலிவிஷன் குழுவினர் எடுத்த போட்டோ

   14. அயல் கிரகவாசிகளின் தோற்றம்

   15. பறக்கும் தட்டுகள் பரப்பும் மணம்

   16. சஹாரா, சைபீரியா விந்தைகள் 

       17.   விண்வெளிக் கடத்தல்காரர்கள்

   18. நீலப் புத்தகம் ஆய்வுத் திட்டம் – 1

   19. நீலப் புத்தகம் – 2

   20. நீலப் புத்தகம் – 3

   21. நீலப் புத்தகம் – 4

   22. நீலப்புத்தகம் – 5

   23. பிரமிப்பூட்டும் திரைப்படங்கள்

   24. பரபரப்பூட்டிய புத்தகங்கள்

   25. ஜன்னல் கண்காணிப்புகள்

   26. விசித்திரச் செய்திகள்

   27. மெக்ஸிகோ பறக்கும் தட்டு

   28. குறையாத ஆர்வம்

   29. தொடரும் மர்மம்!

 *

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

The unidentified Flying Objects UFO, are unexplainable mysterious objects which are beyond scientific explanation. American researchers have spent millions of dollars to find out the truth behind the UFO. The details of Project Blue Book, the interviews with the people who encountered the UFO’s and Aliens are given in detail in this book in 29 chapters. The Editor of Kalaimagal a leading Tamil monthy praises the book for its style and contents. 

நவீன அறிவியலாலும் விளக்க முடியாத விஷயங்களுள் ஒன்று பறக்கும் தட்டு! அமெரிக்காவில், பல லட்சம் டாலர் செலவழித்துப் பறக்கும் தட்டுகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ‘ப்ராஜக்ட் ப்ளூ புக்’ என்று பெயரிடப்பட்ட அந்த ஆய்வின் முழு விவரங்கள், பறக்கும் தட்டுக்களைப் பார்த்தோர், அயல் கிரகவாசிகளுடன் பேசியோர், அவர்களால் கொண்டு செல்லப்பட்டோர் என ஏராளமான அதிசய நிகழ்வுகளை விளக்கும் அரிய நூல்! ‘கலைமகள்’ ஆசிரியர் திரு.கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் இந்நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில் “நூலாசிரியரின் பேனா பல இடங்களில் வித்தை காட்டி இருக்கிறது” எனப் பாராட்டுகிறார். பறக்கும் தட்டுக்கள், அயல்கிரகவாசிகள் பற்றியெல்லாம் அறிய விரும்புவோருக்கு ஓர் அற்புதக் கருவூலம்!*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: