
Post No. 11,475
Date uploaded in London – – 26 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 5
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
37) சுவாமிமலை
நீடார் ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
நீகாணெ னாவ னைச்சொ லருள்வாயே
பாடல் எண் 223 – நாவேறு பாமணத்த எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பெருமை பொருந்திய ஆறு ஆதாரங்களையும் கடந்து சஹஸ்ராரத்தில் பெரிய பொருள்களுக்கு எல்லாம் பெரிய பொருளான சிவத்தை நீ காண்பாயாக என்று அந்த ஐக்கிய வசனத்தை உபதேசித்து அருள்வாயாக!
38) சுவாமிமலை
உறவுகொள் மடவர்க ளுறவாமோ
உனதிரு வடியினி யருள்வாயே
பாடல் எண் 225 – நிறைமதி முகமெனும் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சொந்தம் கொண்டாடுகின்ற மாதர்களின் உறவு ஆகுமோ? ஆகாது என்பதால் உன்னிரு திருவடிகளை இனியாகிலும் தந்தருள்வாயாக!
39) சுவாமிமலை
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
பாடல் எண் 228 – பாதி மதிநதி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : எமன் என்னை அணுகா வகைக்கு உன் இரு திருவடிகளில் வழிபடும் புத்தியை அருள்வாயாக!
40) சுவாமிமலை
பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற
பெருவாழ்வு பற்ற அருள்வாயே
பாடல் எண் 230 – மருவே செறுத்த எனத் தொடங்கும் பாடல்
பொருள் : என் பிழைகளைப் பொறுத்து உன் இரு திருவடிகளிலும் பொருந்தியுள்ள பேரின்ப பெருவாழ்வை யான் பற்றும் படியாக அருள்வாயாக!
41) சுவாமிமலை
அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி
னடிமை யாகு முறைமை யொன்றை அருள்வாயே
பாடல் எண் 231 – முறுகு காள எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தன் வசம் அழிந்து மனம் உருகுகின்ற அடியார்களு கலந்து கூடி அதனால் உண்டாகும் அன்பினால் அடிமை என்னும் ஒழுக்க முறைமை பெறக் கூடிய ஒரு பேற்றை அருள்வாயாக!
42) திருத்தணிகை
பிறவிகள் தொறு மெனைநலி யாத
படியுன தாள்கள் அருள்வாயே
பாடல் எண் 243 – இருமலு ரோக எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஒவ்வொரு பிறவியிலும் என்னைப் பீடிக்காதபடி உன்னுடைய திருவடிகளைத் தந்தருள்வாயாக!
43) திருத்தணிகை
தொலைவி லாத பேராசை துரிச றாத வோர் பேதை
தொடுமு பாய மேதோசொ லருள்வாயே
பாடல் எண் 244 – உடலினூடு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : முடிவற்ற பேராசையும் குற்றமும் நீங்காத ஓர் மூடனாகிய அடியேன் அடைவதற்கு உரிய வழி எதுவோ, அந்த உபதேச மொழியைச் சொல்லி வழிகாட்டி அருள்வாயாக!
44) திருத்தணிகை
வாடி முகம் வேறாய்
நலியுமுன மேயு னருணவொளி வீசு
நளின இரு பாத மருள்வாயே
பாடல் எண் 245 – உடையவர்கள் ஏவர் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : அகம் வாடி முகம் களை மாற, அப்படி வருந்தும் முன்னதாகவே, உனது சிவந்த ஒளி வீசுகின்ற தாமரை போன்ற இரு பாதங்களையும் தந்தருள்வாயாக!
45) திருத்தணிகை
குரவணி நீடும் புயமணீ நீபங்
குளிர்தொடை நீதந் தருள்வாயே
பாடல் எண் 256 – கலை மடவார் தம் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : குரா மலர்களைத் தரித்துள்ள நீண்ட புயங்களில் அணிந்துள்ள கடப்ப மலரால் தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலையை நீ தலைவிக்குத் தந்தருள்வாயாக!
குறிப்பு : இப்பாடல் அகத்துறையில் ‘நாயக-நாயகி’ பாவத்தில் பாடப்பட்ட பாடல். முருகனைப் பிரிந்த தலைவிக்காகப் பாடிய பாடல் இது. ஊர்ப் பெண்களின் ஏச்சும், கடல், அலைகள், குயிலின் ஓசை, சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள் ஆகியவையும் தலைவியின் பிரிவுத் துயரைக் கூட்டுகின்றன. முழுப்பாடலில் இதைக் காணலாம்.
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
***. தொடரும்
புத்தக அறிமுகம் 123
ஆன்மீக ரகசியங்கள்!
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. பெண்கள் காயத்ரி மந்திரம் ஓதலாமா?
2. பரம மங்களம் தரும் பாராயணம்
3. பாரத ஸாவித்ரியும், அரவிந்த ஸாவித்ரியும்
4. ரிஷிசக்தி
5. வளமான வாழ்க்கைக்கு வாஸ்துவும் ஃபெங் சுயியும்!
6. பாஞ்சாலி சொன்ன தாம்பத்ய ரகசியம்!
7. ஆதித்ய ஹ்ருதயமும் ராம ஹ்ருதயமும்
8. கஷ்டங்களைக் காற்றோடு போக்கும் ஸ்தோத்திரங்கள்
9. சேது தரிசனம் பாப விமோசனம்!
10. அற்புத புருஷரைச் சந்தித்து ஆனந்தமடைந்த அதிசய சித்தர்!
11. அறிவியல் வியக்கும் ஸ்ரீசத்ய சாயிபாபா!
12. சொல்லுவதறியேன் வாழி! தோற்றிய தோற்றம் போற்றி!!
13. நீங்கள் செய்த தர்மம், கர்மம் எவ்வளவு, எவ்வளவு?
14. முப்பத்திரண்டு அறங்கள்!
15. ரகசியமாய் ஒன்பது ரகசியங்கள்!
16. யமாய நமஹ! யம பயம் தீர யமனைப் பற்றி படியுங்கள்..
17. ஆதி விநாயகர்
18. சாபம் பலிக்குமா?
19. எண்ணங்களால் தலைவிதியை மாற்றலாமே!
20. அம்பாளின் பெருமை!
21. திருப்பதியில் பூப்பறித்தல் விழா!
22. ரமண நட்சத்திரம்!
23. கண்ணன் இதழ் குழலே, காட்டும் வெற்றி ஒளியே!
24. பலன் அளிக்கும் பத்து முத்திரை ரகசியங்கள்!
25. சரித்திர நாயகன்
26. கலியுகத்தில் கடைத்தேற வழி!
*
இந்த நூலுக்கு அழகிய முன்னுரை தந்து சிறப்பித்தவர் மாபெரும் எழுத்தாளரான திரு அசோகமித்ரன் அவர்கள்!
இந்த போட்டோ திரு அசோகமித்ரன் அவர்கள் இல்லத்தில் எடுத்த போட்டோ. வருடம் 2008. இடமிருந்து வலத்தில் முதலாவது ச.நாகராஜன், மூன்றாவது திரு அசோகமித்ரன் இரண்டாவது, நாலாவது : நிலாச்சாரல் மின்னிதழ் குழுவினர்.
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
When the divine secrets and hidden truths behind our religion are explained scientifically, we become spell bound at the knowledge and capacity of our ancestors. This book consists of 27 essays written by S. Nagarajan, and introduction is written by the leading Tamil novelist and great writer, Asokamitran. He has mentioned the lines in his introduction, “ When I read the 27 articles of this book’ Divine Secrets’ , I was really impressed.” Further, he continues, ”At present, owing to the increase of the population and the abnormal development of the information technology, without censorship now our sacred religious places would become almost picnic spots. Changes according to times are inevitable. Here, the question of right or wrong never arises. Under this sort of changing times, man is able to safe guard himself through the beliefs and values which he carries from generation to generation. I this way, S. Nagarajan’s book plays an important place.”
விஞ்ஞான நோக்கில் ஆன்மிக ரகசியங்கள் விளக்கப்படும்போது நம் முன்னோர்களின் அறிவும் ஆற்றலும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன! இந்த நூலுக்குப், புகழ்மிக்க பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் உயர்திரு.அசோகமித்திரன் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார். அவர், “திரு.ச.நாகராஜன் அவர்கள் எழுதிய ‘ஆன்மீக ரகசியங்கள்’ நூலைப் படித்தபோது எனக்குப் பிரமிப்புதான் ஏற்பட்டது!” என்கிறார்! மேலும் “மாறி வரும் சூழ்நிலையிலும் மனிதனை நிலை தடுமாறாது பாதுகாப்பது, காலம் காலமாக மனித இனத்தைப் போஷித்து வரும் நம்பிக்கைகளும் மதிப்பீடுகளுமே! அந்த வகையில் நாகராஜனின் இந்த நூல் மிகவும் முக்கியமானது!” என்று சிலாகித்துக் கூறுகிறார்.
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ஆன்மீக ரகசியங்கள்’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
* முக்கிய குறிப்பு : இத்துடன் 123 புத்தகங்களின் அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் 62 புத்தகங்கள் பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. 62 முதல் 123 முடிய உள்ள 61 புத்தகங்கள் லண்டனிலிருந்து வெளி வரும் இணையதள இதழான www.nilacharal.com மூலம் திருமதி நிர்மலா ராஜு அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.