
Post No. 11,476
Date uploaded in London – 26 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கலப்பு திருமணம் Okay! Okay !ஓகே
ஸ்த்ரியோ ரத்னானி யதோ வித்யா தர்மஸ் செளசம் சுபாஷிதம்
வி நிதானி ச சில்பானி சமேதாயானி ஸர்வதஹ
நல்ல குணமுள்ள பெண்கள், ரத்தினக் கற்கள் , கல்வி, அறநெறி,
தூய்மை, பொன்மொழிகள் நல்ல கலைகள்/கலைப் பொருட்கள் எங்கிருந்து வந்தாலும் ஏற்கலாம்.
Xxx
பெண்களை நம்பாதே! கண்களே பெண்களை நம்பாதே!!
நான்னம் அத்யாத் ஏகவாஸாஹா ந நக்னஸ் ஸ்நானம் ஆசரேத்
நாச்லீலம் கீர்த்தயேத் தீமான் ந குர்யேத் ஸ்த்ரீ வதக்வசிதி
ஒரு துணியை மட்டும் உடுத்திக்கொண்டு உண்ணக் கூடாது;
நிர்வாணமாக குளிக்கக் கூடாது ; தீமையான கெட்ட வார்த்தைகளைச்
சொல்லக்கூடாது பெண்கள் பேச்சைக் கேட்கக்கூடாது பெண்களைக் கொலைசெய்யக்கூடாது .
XXX
சிரத்த தானாத் சுபாம் வித்யாம் ஆததீதா (அ) வராதபி
அந் த்யாதபி பரம் தர்மம் ஸ்த்ரீ ரத்னம் துஷ்குலாதபி
-மனு ஸ்ம்ருதி
தாழ்ந்த ஜாதியில் பிறந்தவர்களிடமும் நல்ல வித்தைகளைக் கற்கலாம்;
நல்ல குணங்களை சண்டாளர்களிடமும் அறிந்துகொள்ளலாம்;
நல்ல குணமுள்ள பெண்களை தாழ்ந்த ஜாதியிலிருந்தும் திருமணம் செய்யலாம்.
Xxx
பெண்கள் கழுத்தில் தங்கச் சங்கிலி; ஆண்கள் காலில் இரும்புச் சங்கிலி
நரஸ்ய பந்தார்த்தாய ச்ருங்கலா ஸ்த்ரீ ப்ரகீர்த்திதா
லெள ஹபத்தோபி முச்யதே ஸ்த்ரீ பத்தோ நைவ முச்யதே
பெண் என்பவள் மனிதனைக் கட்டிப்போடும் சங்கிலி ;
இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டவனுக்கு ஒருகாலத்தில் விடுதலை கிடைக்கும் ; ஆனால் பெண் என்னும் சங்கிலியால் கட்டப்பட்டவனுக்கு ஒருபோதும் விடுதலை இல்லை
தமிழிலும் கூட, கட்டுங்கடங்காத காளையாகத் திரியும் இளைஞனைக் கட்டுப்படுத்துவதற்கு ,
பையனுக்குக் “கால்கட்டு ” (திருமணம்) போட வேண்டும் என்றே சொல்லுவார்கள்.
xxxxx
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே!
ஸ்த்ரியோ ஹி மூலம் நிதனஸ்ய பும்ஸ ஹ
ஸ்த்ரியோ ஹி மூலம் வ்யஸனஸ்ய பும்ஸஹ
ஸ்த்ரியோ ஹி மூலம் நரகஸ்ய பும்ஸஹ
ஸ்த்ரியோ ஹி மூலம் கலஹஸ்ய பும்ஸஹ
பெண்களே, மனிதனுடைய அழிவுக்குக் காரணம்
பெண்களே, மனிதனுடைய துக்கத்துக்குக் காரணம்
பெண்களே, மனிதனுடைய நரகத்துக்குக் காரணம்
பெண்களே, மனிதரிடையே கலகத்துக்குக் காரணம்
மங்கை கைகை (கைகேயி) சொற்கேட்டு மன்னர்
புகழ் தசரதனும் மரணம் ஆனான்
செங்கமலச் சீதை சொல்லை ஸ்ரீராமன்
கேட்டவுடன் சென்றான் மான் பின்;
தங்கை அவள் சொல்லைக் கேட்டு இராவணனும்
கிளையோடும் தானும் மாண்டான்
நங்கையற் சொற் கேட்பதெல்லாம் கேடுதரும்
பேர் உலகோர் நகைப்பர்தாமே.–விவேக சிந்தாமணி
Xxxx
ஸர்வஸ்ய த்வே சுமதி குமதீ ஸம்பத் ஆபத்தீ ஹேது
ஏகோ கோத்ரே ப்ரபவதி புமான் யஹ குடும்பம் பிபர்த்தி
வ்ருத்தோ யூனா ஸஹ பரிசயாத் யஸ்யதே காமிநீபிஹி
ஸ்த்ரீ பும்வத் ச ப்ரபவதி யதா தத்தி கேஹம் விநஷ்டம்
எல்லோருக்கும் செல்வத்துக்கும் ஆபத்துக்கும் காரணமாக
இருப்பவை நல்ல புத்தியும் கெட்ட புத்தியும் ஆகும் ;
ஒரே வம்சத்தில் ஒருவன் குடும்பத்ததையே தாங்கி ஆதரிக்கிறான் ;
மற்றவன் வயது அதிக மானலும் பெண்களால் போற்றப்படுகிறான்;
எப்போது ஒரு பெண், ஆண்களைப் போல அதிகாரம் செய்கிறாளோ
அப்போது அந்தக் குடும்பம் அழியும் (உலக இயற்கை பற்றி வியக்கும் கவிதை இது)
பெண்டுகள் சொல் கேட்கின்ற பேயரெனும்
குணம் மூடப் பேடி லோபர்
முண்டைகளுக்கு இணையில்லா முனை வீரர்
புருடரென மொழியொணாதே
உண்டுலகம் உதிர்ப்பாருள் கீர்த்தியறம்
இன்ன தென உணர்வே யில்லார்
அண்டினவர் தமைக் கெடுப்பார் அழிவழக்கே
செய்வதவர் அறிவுதானே.–விவேக சிந்தாமணி

Xxxx
பெண்ணின் எச்சில் கூடாது
ஸ்த்ரீபாத்ர புங் நரஹ பாபஹ ஸ்த்ரீணாம் உச்சிஷ்டபுக் ததா
தாபிஸ் ஸஹச யோ புங்தே ஸ புங்தே மத்யமேவ ச
பெண்களும் ஆண்களும் ஒரே தட்டிலிருந்து உண்ணுவதும்,
பெண்கள் உண்ட எச்சிலை உண்ணுவதும் , பிற பெண்களோடு சேர்ந்து உண்ணுவதும் பாபமாகும். அப்படி உண்ணப்படும் உணவு தூய்மையற்றதாகும்
உணவு உண்ணப்படும்போது காம உணர்வுகள் எழாமல் இருப்பதற்காகச் செய்யப்படும் பாதுகாப்பு இவை. அதுமட்டுமல்ல நல்ல எண்ணங்களுடன் உண்ணும் உணவு தனக்கும், அன்னமிட்ட பெண்களுக்கும் நன்மை செய்யும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. சாப்பிட்டு முடிந்தவுடன் மந்திரம் சொல்லி அன்னத்தை வாழ்த்துவர். அன்னதாதா சுகீ பவ; அன்னமிட்டவர் வாழ்க, என்று வாழ்த்தி எழுந்திருப்பார்கள். உணவை உண்ணும் முன்பும் உணவை அமிர்தம் என்று சொல்லி, இறைவனை வாழ்த்தி உண்ணத் தொடங்குவர். அப்படிப்பட்ட சமுதாயத்துக்குச் சொன்ன பொன்மொழி இது.
Xxxx subham xxxx
tags- கழுத்து, சங்கிலி, ஆண் , பெண் , கால் , சுபாஷிதம்