
Post No. 11,480
Date uploaded in London – 27 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
THIS IS FIFTH VERSE WITH LONDON SWAMINATHAN’S COMMENTARY
5. நல்லாசிரியர் இயல்
வேதாந்த சித்தாந்த வழிதெரிந் தாசார
விவரவிஞ் ஞானபூர்ண
வித்யாவி சேடசற் குண சத்ய சம்பன்ன
வீரவை ராக்ய முக்ய
சாதார ணப்பிரிய யோகமார்க் காதிக்ய
சமாதிநிஷ் டானு பவராய்ச்,
சட்சமய நிலைமையும் பரமந்த்ர பரதந்த்ர
தருமமும் பரச மயமும்
நீதியின் உணர்ந்து, தத்துவமார்க்க ராய்ப், பிரம
நிலைகண்டு பாச மிலராய்,
நித்தியா னந்தசை தன்யராய், ஆசையறு
நெறியுளோர் சற்கு ரவராம்
ஆதார மாய்உயிர்க் குயிராகி யெவையுமாம்
அமல! எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆதாரமாய் உயிர்க்கு உயிராகி எவையும் ஆம் அமல –
உலகுக்கு ஆதரவாய், உயிர்களுக் கெல்லாம் உயிராகி, எவ்வகைப்
பொருளும் ஆகிய தூய பொருளே! எமது ………. தேவனே!’ வேதாந்த
சித்தாந்த வழிதெரிந்து – வேதாந்த சித்தாந்த நெறிகளை ஆராய்ந்தறிந்து,
ஆசார விவரம் – ஒழுக்கத்தெளிவு, விஞ்ஞான பூர்ணம் – விஞ்ஞானத்தின்
நிறைவு, வித்தியா விசேடம் – கல்விச் சிறப்பு, சற்குணம் – நற்பண்பு,
சத்தியம் சம்பன்னம் – உண்மையாகிய செல்வம், வீரவைராக்கியம் –
உறுதியான வீரம் (மிகுவீரம்), முக்கியம் – தலைமை, சாதாரணப் பிரியம் –
அருள், யோகமார்க்க ஆதிக்கியம் – யோக நெறியிலே மேன்மை (என்பவற்றுடன்), சமாதி நிஷ்ட அனுபவராய் – சமாதி கூடுதலிற் பயிற்சி
யுடையவராய், சட்சமய நிலைமையும் மேலான மந்திரம் மேலான தந்திரம்
என்பவற்றின் நிலையையும், பரசமயமும் – பிற மதங்களையும், நீதியின்
உணர்ந்து – நெறிப்படி அறிந்து, தத்துவ மார்க்கராய் – உண்மை
நெறியினராகி, பிரம நிலைகண்டு – தூய பொருளின் நிலையை அறிந்து,
பாசம் இலராய் – (உலகப்) பற்று நீங்கியவராய், நித்திய ஆனந்த
சைதன்யராய் – உண்மையின்ப அறிவுருவினராய், ஆசை அறு
நெறியுளோர் – பற்றற்ற நெறியில் நிற்போர். சற்குரவர்ஆம் –
நல்லாசிரியராவார்.
XXXX

எனது விளக்க உரை
இந்தப் பாடல் முழுதும் ஸம்ஸ்க்ருதச் சொற்களால் ஆக்கப்பட்டுள்ளது. சத் குரு – நல்லாசிரியர் யார் என்பது பற்றிய பாடல் இது. தான் இயற்றிய குரு பாதுகா அஷ்டகத்தில் குருவை ஏன் வணங்க வேண்டும் என்று ஆதி சங்கரர் காட்டுகிறார். கந்த புராணத்திலுள்ள குரு கீதா என்பது குருவினைப் போற்றும் பாடல்களில் மிகவும் உன்னதமானது. அதில் சற்குருவின் இலக்கணம் விரிவாக இருக்கிறது.
பாரதியார் கனமான குருவைத் தேடிக் கொள் என்கிறார். குரு என்றால் பொதுவாகச் சொல்லப்படும் அர்த்தம் அஞ்ஞான இருளை அகற்றுபவர். சம்ஸ்க்ருதத்தில் பொதுவாக கனம் என்பதற்கும் இச்சொல் பயன்படும்.
இந்துக்கள் உலக மஹா வானியல் நிபுணர்கள்; வேத காலம் முதல் ஆயிரக்கணக்கான வானியல் குறிப்புக்களைப் போகிறபோக்கில் சொல்லிவைத்தனர். சூரியனைச் சுற்றிவரும் கிரகங்களில் மிகப்பெரியது குரு JUPITER . பெரிய கிரகம் என்பதை அறிந்து பிருஹஸ்பதி, வியாழன் என்று சொன்னதோடு அதற்கு குருவின் அந்தஸ்த்தைக் கொடுத்தனர். கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய கண்டுபிடிப்பு இந்துக்களை உச்சாணிக் கொம்புக்கு ஏற்றிவைத்துவிட்டது
அதாவது குரு கிரஹத்தின் ஈர்ப்புவிசை விண்வெளிக் கலங்களை உந்தி விடுகிறது SLINGSHOT EFFECT. இதனால் அந்த ராக்கெட்டுகள், விண்கலங்கள் எரிபொருள் இல்லாமல் நீண்ட பயணம் செய்ய முடியும். இதை கவண் கல் விளைவு SLINGSHOT EFFECT என்பர். எப்படி ஆன்மீக குரு தனது சீடனை உச்சானிக் கொம்புக்கு தூக்கி விடுகிறாரோ அப்படி குரு கிரகமும் செய்கிறது. இந்துக்கள் மஹத்தான விண்வெளி நிபுணர்கள் என்பது இப்போது புரிகிறது.
The effect known as the gravity assist or slingshot effect is a way of using the motion of a planet to accelerate a space probe on its journey towards the outer planets. Think of a space probe on a journey to Neptune. On its way it will have to pass Jupiter – the largest planet in the Solar System.
சத் குரு என்பவரும் இப்படிப்பட்டவரே ; அவருடைய இலக்கணத்தை வருணிக்கும் திருமூலர் அவரை பரிசன வேதி என்கிறார். அதாவது தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் அற்புதக் குளிகை அது ஆங்கிலத்தில் PHILOSO PHER ‘S STONE என்பர் .
The philosopher’s stone or more properly philosophers’ stone, is a mythic alchemical substance capable of turning base metals such as mercury into gold or silver
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) குருவின் பெருமையைச் சொ ல்லுகையில் குருவின் பாதங்களுக்கு மடத்தில் தினமும் பூஜை நடைபெறுவதைக் குறிப்பிட்டுவிட்டு, கடவுளுக்கு அபராதம் செய்தால் அவரிடம் மன்னிப்புக் கேட்டுத் தப்பித்துவிடலாம் ஆ னால் குருவுக்கு அவமதிப்பு செய்தால் கடவுள் கூட காப்பாற்ற மாட்டார் ; குருவின் காலில் போய் விழு என்று கடவுளே சொல்லிவிடுகிறார். அப்படி உயர்ந்த மதிப்பு குருவுக்கு உண்டு என்று கூறுகிறார்.
xxxxxx

இங்கே சில மேற்கோள்களை மட்டும் கொடுக்கிறன்
ஓம் குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர:
குருஸ்ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:
குரு என்பவர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு சமம் ஆனவர்
அந்த குருவை வணங்குகிறேன்
குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவ ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:
குரு என்பவர் பிறவிப்பிணியை அகற்றும் டாக்டர்.; எல்லா கலைகளுக்கும் இருப்பிடமானவர் . அவர் தட்சிணாமூர்த்தி.
XXX
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே– திருமந்திரம் 139
குருவின் பெருமையை எளிய தமிழில் திருமூலர் செப்பிவிட்டார்
xxxx
பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோற்
குருபரி சித்த குவலயம் எல்லாந்
திரிமலந் தீர்ந்து சிவகதி யாமே – திருமந்திரம் 2054
பரிசனவேதி என்ற குளிகை (Philosopher’s stone) பட்ட உலோகம் எல்லாம் பொன்னாகிவிடும். அது போல குருவானவர் இந்த உலகத்தில் யாரை தொட்டாலும் அவர்கள் மும்மலம் நீங்கி சிவனுடன் ஐக்கியமாவார்கள்.
xxxx
கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்
மறித்து இரும்பு ஆகா வகை அது போலக்
குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்
மறித்துப் பிறவியில் வந்து அணுகானே. திருமந்திரம் 2051
ரசவாத (Alchemy) வேதியியலின்படி கருமை நிறத்து இரும்பானது பொன்னிறமான தங்கமாகிவிடும். ஆனால் தங்கமானது மீண்டும் இரும்பாக மாறாது. அதுபோல ஆன்மாவானது குருவின் அருளினால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில் இருந்தும் விடுவிக்கப் படும் அந்த ஆன்மாவுக்கு மறுபிறவி கிடையாது. ஆன்மாவின் மும்மலங்களையும் நீக்கக் கூடிய குரு இறைவனே ஆகும்.
XXXX
ஸ்ரீ குரு கீதை (392 Slokas) …
எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு
குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை
குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை
குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை
குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை
குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை
குருவிற்கு சமமான உயர்வுமில்லை
சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும்
தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி
பூஜைக்கு மூலம் குருவின் பாதம்
மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்
முக்திக்கு மூலம் குருவின் கிருபை
– “ஸ்ரீ குரு கீதை”
சத் குருவின் மேன்மையை அறிய வேண்டுவோர் குரு கீதையிலுள்ள நூற்றுக்கணக்கான ஸ்லோகங்களைப் படிக்க வேண்டும்.
(குரு கீதை (392 Slokas or Sutras) யைத் தனியாகத் தருகிறேன்.)
XXXXX subham xxxxxx
TAGS: குரு , சற்குரு , சத்குரு , குரு கீதை , அறப்பளீச்சுர சதகம், நல்லாசிரியர் ,பரிசனவேதி , திருமூலர்
santhanam srinivasan
/ December 3, 2022Dea
S.Srinivasan Sent from Yahoo Mail for iPad