வாழ்க்கையின் ஒரு கணத்தைக் கூட கோடி ரத்னங்களாலும் பெற முடியாது! (Post.11,479)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,479

Date uploaded in London – –   27 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷித செல்வம்

வாழ்க்கையின் ஒரு கணத்தைக் கூட கோடி ரத்னங்களாலும் பெற முடியாது!

ச.நாகராஜன்

அனந்தம் பத மே வித்தம் யஸ்ய மே நாஸ்தி கிஞ்சன் |

மிதிலாயாம் ப்ரதீப்தாயாம் ந மே தஹதி கிஞ்சன் ||

ஜனக மாமன்னன் கூறுவது இது:

எனது பொக்கிஷம் அளவில்லாதது. என்றாலும் கூட எனக்கு ஒன்றுமே இல்லை. மறுபடியும் மிதிலை மீண்டும் எரிக்கப்பட்டு சாம்பலாக ஆனாலும், என்னுடையது எதுவும் எரிக்கப்படாது.

My treasures are immense, yet I have nothing. If again the whole of Mithila were burnt and reduced to ashes, nothing of mine will be burnt. (Translation by C.Roy)

 மஹாபாரதத்தில் வரும் ஸ்லோகம் இது. ஆசைசுகபோகம் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட ஜனக மஹாராஜன் மனதால் முக்தி அடைந்த மன்னன். ஜனகரைப் பற்றி மஹாபாரதத்தில் நிறையப் படித்து அறிந்து கொள்ளலாம்.

**

அனத்யன்யபி ரத்னானி லப்யந்தே விபவை: சுகம் |

துர்லபோ ரத்னகோடத்யாபி க்ஷணோபி கதாயுஷ: ||

விலை மதிக்கவே முடியாத ஒரு ரத்னத்தைக் கூட சுலபமாக பணத்தைக் கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் ஒருவனின் வாழ்க்கை முடிய இருக்கும் தருணத்தில் ஒரு கணத்தைக் கூட கோடி ரத்னங்களைக் கொடுத்தும் கூடப் பெற முடியாது.

Even an invaluable jewel can be easily obtained for money; but one whose life (is due) to expire cannot obtain even a moment (of life) for millions of jewels.

**

அனர்த்தமகராநாராத்  அஸ்மாத் சம்சாரஸாகராத் |

உட்டீயதே நிருத்வேகம்  சர்வத்யாகேன புத்ரக் ||

மகனேஎல்லா வித ஆசைகளையும் துறந்துஅபாயங்களாக வரும் முதலைகளின் இருப்பிடமான உலக வாழ்க்கை என்னும் சமுத்திரத்தின் கவலை இன்றி ஒருவன் பறக்கிறான் (சொர்க்க மகிழ்ச்சிக்கு),

By giving up all (attachments),  O, son, one flies up (to the happiness of heaven), without worry from the ocean of worldly life which is veriable abode of alligators in the form of dangers. (Translation by A.A.R)

**

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்ய க்ஷேத்ரே வினஷ்யதி |

புண்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் வஜ்ரலேபோ பவிஷ்யதி ||

வேறு ஒரு இடத்தில் ஒருவன் செய்த பாவம் புண்ய க்ஷேத்ரத்தில் போய் விடுகிறது. ஆனால் ஒரு புண்ய க்ஷேத்திரத்தில் செய்த பாவம் அவனை வஜ்ரம் போல ஒட்டிக் கொள்கிறது.

A sin committed in some other place perishes (is remedied) in a holy place.

But a sin committed in a holy place will be attached to him as by adamantine glue. (Translation by A.A.R)

**

புத்தக அறிமுகம் 124

அறிவியல் வியக்கும் மந்திர மஹிமை, மனோசக்திமறுபிறப்பு,  காலம் பற்றிய உண்மைகள்!

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1) ஒலியின் ஆற்றல்! – 1

2) ஒலியின் ஆற்றல்! – 2

3) ஒலியின் ஆற்றல்! – 3

4) ஒலியின் ஆற்றல்! – 4

5) ஒலியின் மஹிமை: விஞ்ஞானம் தரும் ஆச்சரியமூட்டும் புதிய

   தகவல்!

6) மந்திரங்களின் மஹிமை – 1

7) மந்திரங்களின் மஹிமை – 2

8) மந்திரங்களின் மஹிமை – 3

9) மனதின் அபூர்வமான சக்தி! – 1

10) மனதின் அபூர்வமான சக்தி! – 2

11) மறைந்திருக்கும் ஆற்றல் : அலெக்ஸாண்டர் கானானின்

    புத்தகம் – 1

12) மறைந்திருக்கும் ஆற்றல் : அலெக்ஸாண்டர் கானானின்

    புத்தகம் – 2

13) மறைந்திருக்கும் ஆற்றல் : அலெக்ஸாண்டர் கானானின்

    புத்தகம் – 3

14) மறு பிறப்பு உண்டா என்ன? –சரகர் தரும் பதில்!!

15) ஹென்றி ஃபோர்டின் வெற்றிக்குக் காரணம் மறுபிறப்பு நம்பிக்கையே!                 

16) காலம் என்னும் மர்மம்! – 1 

17) காலம் என்னும் மர்மம்! – 2

18) காலம் என்னும் மர்மம்! – 3

19) சுழற்சி பற்றிய அபூர்வமான ஹிந்து தத்துவம்!

20) மேடம் ப்ளாவட்ஸ்கி நிகழ்த்திய அற்புதங்கள்                       21) அதீத உளவியல் ஆற்றல் கொண்ட நினா குலாஜினா!                                  22) சில மனிதர்களின் அதிசய சக்திகள்!

23) மந்திரம், யந்திரம், தந்திரம் எல்லாம் உங்கள் பெயரில் இருக்கிறது!

24) எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் – பால் பிரண்டனின்                                     நேரடி அனுபவம் – 1                                                                                                                  25) எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் – பால் பிரண்டனின்                                     நேரடி அனுபவம் – 2                                                                                                                   26) எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் – பால் பிரண்டனின்                                     நேரடி அனுபவம் – 3                                                                                                                  27) அதிசய ஒற்றுமைகள்! – 1                                                                                                28) அதிசய ஒற்றுமைகள்! – 2                                                29) அதிசய ஒற்றுமைகள்! – 3

*

நூலில் இடம் பெற்றுள்ள என்னுரை :

என்னுரை

நாளுக்கு நாள் நாம் காணும் அறிவியலின் வளர்ச்சி பிரமிக்க வைக்கும் ஒன்று.

ஆனால், அறிவியல் விளக்க முடியாத பல்லாயிரம் விஷயங்கள் இன்றும் உள்ளன. அதே போல பல விஷயங்களைப் பற்றி ஆய்வு நடத்தி அறிவியல் வியக்கும் விஷயங்களும் பல உள்ளன.

அதீத உளவியல் சம்பந்தமான ஆராய்ச்சிகளை அறிவியல் கடந்த இருநூறு வருடங்களுக்கும் மேலாக மேற்கொண்டு வந்திருக்கிறது.

மந்திரங்களின் மஹிமை, மனம், கற்பனைக்கும் அப்பாற்பட்ட பல மனித சக்திகள், காலம் பற்றிய மர்மம், பிரக்ஞை, விண் மண்டலம் ஆகியவை பற்றிய அறிவியலின் வியப்பு அவ்வப்பொழுது பல்வேறு விஞ்ஞானிகளால் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கிறது.

இவை பற்றிய ஹிந்து மத அணுகு  முறை ஆழமானது; வியக்கத் தக்கது; நுணுக்கமான விவரங்களைக் கொண்டது.

இவை பற்றி பல கட்டுரைகளைப் பல ஆண்டுகளாக எழுதி வந்துள்ளேன்.

அறிவுக்கும் அப்பால் உள்ளிட்ட எனது புத்தகங்களில் இவற்றைக் காணலாம்.

ஹெல்த்கேர், ஞான ஆலயம், www.tamilandvedas.com ஆகியவற்றில் வெளியான சில கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ஹெல்த்கேர் ஆசிரியர் திரு ஆர்.சி.ராஜா, ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ், தமிழ் அண்ட் வேதாஸ் ப்ளாக் வெளியீட்டாளர் லண்டன் திரு ச.சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி உரித்தாகுக.

அழகிய முறையில் இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

நன்றி

சான்பிரான்ஸிஸ்கோ                                                                          .நாகராஜன்                                                 15-9-2022

·          

 நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: