குருநானக் பொன்மொழிகள்- டிசம்பர் 2022-  நற்சிந்தனை காலண்டர் (Post.11,484)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,484

Date uploaded in London – 29 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

சீக்கிய மத ஸ்தாபகர் குரு நானக் தேவின் பொன்மொழிகள் இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.

விழா நாட்கள் – 3 கீதா ஜயந்தி ; 6 பரணி தீபம் , திருவண்ணாமலை  தீபம் ; 7 சர்வாலய  தீபம் ; 8 பாஞ்சராத்ர  தீபம் ; 11 மஹா கவி பாரதியார் பிறந்த தினம்; 16 மார்கழி/ தனுர் மாத துவக்கம் ; 25 கிறிஸ்த்மஸ் பண்டிகை

பெளர்ணமி -8; அமாவாசை -23; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 3/ 4, 19.

சுப முகூர்த்த தினங்கள்- 11,12, 14

xxx

டிசம்பர் 1 வியாழக் கிழமை

உலக பந்த பாசத்தைப் பொசுக்குங்கள் ; அந்த சாம்பலைக் குழைத்து மை தயாரியுங்கள் ; உங்கள் இதயமே எழுதுகோலாக ஆகட்டும் ;உங்கள் புத்தி எழுத்தர் ஆகட்டும்;ஆதி அந்தமற்ற அவனை எழுதுங்கள் – ஸ்ரீ குரு கிரந்த சாஹிப் எனப்படும் ஆதிக் கிரந்தத்தில் குரு நானக்ஜி சொன்னது

Xxxx

டிசம்பர் 2 வெள்ளி  கிழமை

தன்னையே நம்பாதவனுக்கு இறைவனிடத்தில் நம்பிக்கை ஏற்படாது (தன்னம்பிக்கை அவசியம்)

Xxxx

டிசம்பர் 3 சனிக்  கிழமை
 

மஹத்தான சாம்ராஜ்யமும், மலைபோலச் செல்வமும் உடைய அரசன் கூட இறைவனின்  அன்பு நிரம்பிய எறும்புக்கும் சமம் ஆக மாட்டான்.

டிசம்பர் 4 ஞாயிற்றுக் கிழமை

உங்கள் உள்ளத்தில் சாந்தி நிலவ வாழுங்கள்; மரண தூதன் உங்களைத் தொட்டே முடியாது – குரு நானக்

Xxxx

டிசம்பர் 5 திங்கட்  கிழமை

உலகமே நாடகம்; கனவில் நாடகம் நடக்கிறது. – குரு நானக்

Xxxx


டிசம்பர் 6 செவ்வாய்க் கிழமை

நம் ஒவ்வொருவனுக்கும் இறைவன் படி அளக்கிறான் ; மனமே! என் கவலைப் படுகிறாய்?செங்கால் நாரைகள் தனது குஞ்சுகளை விட்டு விட்டு பல நூறு மைல்கள் பறக்கவில்லையா! அவைகளுக்கு உணவளிப்பது யார்? உண்ணக் கற்றுக்கொடுத்தது யார்? எப்போதாவது இதை எண்ணிப் பார்த்தாயா ? – குரு நானக்

xxxx

டிசம்பர் 7  புதன்  கிழமை

எல்லோரையும் சமமாக நடத்துவோனே மதத்தைப் பின்பற்றுவோன் ஆவான்

xxxx

டிசம்பர் 8 வியாழக் கிழமை

உனக்கு மதிப்பும் மரியாதையையும் ஏற்படுத்தும் சொற்களை மட்டும் செப்பு

Xxxx

டிசம்பர் 9 வெள்ளி  கிழமை 

நானக், உலகமே துயரத்தில் மூழ்கிக் கிடக்கிறது.அவனுடைய பெயரில் நம்பிக்கை உடைவான் வெற்றி அடைகிறான்

Xxxx

டிசம்பர் 10 சனிக்  கிழமை

ஒருவன் எதை விதைத்து , பருவத்தில் பாசனம் செய்கிறானோ அதே பயிர் அந்த கணங்களி உடைய விதைகளுடனே முளைக்கும்

Xxxx

டிசம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை

இந்த உலகில் நாம் இன்பத்தை நாடுகிறோம்; ஆனால் துன்பமே முன்னுக்கு வந்து நிற்கிறது.

xxx

டிசம்பர் 12 திங்கட்  கிழமை

யார் அன்புடன் வாழ்கிறார்களோ அவர்களே இறைவனைக் கண்டவர்கள் ஆவர்.

xxxx

டிசம்பர் 13 செவ்வாய்க் கிழமை

எல்லாம் வல்லவன் என்னை எங்கு வைக்கிறானோ, அதுவே எனக்கு சொர்க்கம்

Xxxx

டிசம்பர் 14  புதன்  கிழமை

சத்தியத்தை (இறைவன்) உணர்வதே எல்லாவற்றையும் விட  மேலானது ; அதையும் வீட்டா மேலானது நேர்மையான வாழ்க்கை .

XXXX

டிசம்பர் 15 வியாழக் கிழமை

 பாவத்தின் மூலமும் தீய வழிகள் மூலமுமே செல்வத்தைச் சேர்க்கமுடியும்.

Xxxx

டிசம்பர் 16 வெள்ளி  கிழமை

வறட்டு புத்தியினால் மனமும் வறண்டு விடுகிறது. அப்போது இனிப்புடன் அதில் உட்கார்ந்த ஈயையும் சேர்த்தது உண்டுவிடுகிறான்.

xxxx

டிசம்பர் 17 சனிக்  கிழமை

இறைவா, நீ என் மீது பொழியும் கருணைதான் எனக்குக் கிடைத்த சமூக அந்தஸ்து

XXXX

டிசம்பர் 18 ஞாயிற்றுக் கிழமை

யாரும் மாயையில் உழலவேண்டாம் ; குரு இல்லாமல் மறு கறைக்குச் செல்ல முடியாது

Xxxx

டிசம்பர் 19 திங்கட்  கிழமை

ஒருவன் தன்னந்தனியாக அவனது ஆன்ம தாகத் தைத் திடீர்ப்பவன் குறித்து தியானிப்பானாக ; தனியாக தியானிப்பவனே பரம ஆனந்தத்தை அடைகிறான்

XXXX

டிசம்பர் 20 செவ்வாய்க் கிழமை

ஆண்டாண்டுக்கு காலம் சிந்தித்தாலும் விசாரணை/ஆராய்சசி மூலம் அறியக்கூடியவன் அல்ல ஆண்டவன்

Xxxx

டிசம்பர் 21 புதன்  கிழமை

ஆண்டவனிடம் அவன் புகழை  மகிழ்ச்சியோடு பாடுங்கள் ; அவன் பெயர்கண்ட இடத்த்தில் சேவை செய்யுங்கள்; அடியார்க்கு அடியாராக மாறுங்கள்

Xxxxx

டிசம்பர் 22 வியாழக் கிழமை

நான் எப்போதும் அவன் பாதம் பணிகின்றேன் ; எப்போதும் குருவினைப் பிரார்த்திக்கிறேன்; ; உண்மையான குரு , அவன், எனக்கு வழிகாட்டிவிட்டான் .Xxxx

டிசம்பர் 23 வெள்ளி  கிழமை

நான் பிறக்கவே இல்லை; எனக்கு மரணமும் பிறவியும் ஒரு பொருட்டல்லவே

xxxx

டிசம்பர் 24 சனிக்  கிழமை

யோகியானவன்  எதைக் கண்டு பயப்படுவான்? மரங்கள், செடி கொடிகள் ஆகிய அனைத்தின் உள்ளும் புறமும் அவன்தானே இருக்கிறான்.

Xxxx

டிசம்பர் 25 ஞாயிற்றுக் கிழமை

நான் குழந்தையும் அல்ல; இளைஞனும் அல்ல; புராதன புருஷனும் அல்லன் ; எனக்கு ஜாதி ஏதும் இல்லை

xxxx

டிசம்பர் 26 திங்கட்  கிழமை

அறியாமை  காரணமாக கயிற்றைப் பாம்பாகப் பார்க்கிறான் ;அவ்வாறே நம் ஆன்மாவையும் அழியக் கூடியதாக , நம்முடையதாக, வரையரை க்குட் பட்டதாகக் கருதுகிறோம்.

டிசம்பர் 27 செவ்வாய்க் கிழமை

உண்மையாக மரணம் எய்தும் முறையை அறிந்துவிட்டால், யாரும் மரணத்தைக் குறை சொல்லமாட்டார்கள்

XXXX

டிசம்பர் 28 புதன்  கிழமை

நான் ஆணுமல்ல; பெண்ணுமல்ல; அலியுமல்ல.நான் சாந்தமே வடிவானவன்; சுயம் பிரகாசி; ஒளியோடு பிரகாசிக்கிறேன்

XXXX

டிசம்பர் 29 வியாழக் கிழமை  

கடவுள் ஒருவனே; அவன் பெயர் சத்தியம்; அவனே நம்மைப் படைத்தவன்; யார்க்கும் அஞ்சாதவன்,வெறுப்பற்றவன்; பிறப்பு இறப்பு எனும் சுழற்சிக்கு அப்பாற்பட்டவன்; அவன் சுயம் பிரகாசி; உண்மையான குருவின் அருள் கிடைத்தால் அவனை அறியலாம்.

xxxx

Golden Temple at Amritsar அமிர்தசரஸ் பொற்கோவில்

டிசம்பர் 30 வெள்ளி  கிழமை

இந்த யுகம் தோன்றியபோதும் யுகம் பெருகியபோதும்,இப்போதும் எப்போதும் உண்மைப் பொருளாக விளளங்குபவன் அவன்

XXX

டிசம்பர் 31 சனிக்  கிழமை

அவன் அருளாலே சிலருக்கு பரிசு கிடைக்கிறது ; அவன் கட்டளையினால் பலர் பிறப்புச் சுழலில் சிக்குகிறார்கள்;; எல்லோரும் அவன் கட்டளைக்குட் பட்டவர்களே; எவரும் விதி விலக்கல்ல ; ஆண்டவன் கட்டளையை அறிந்தவர்களுக்கு அஹம்காரம் வராது.

-subham-

Tags- குருநானக் பொன்மொழிகள்குருகிரந்த சாஹிப்சீக்கிய மதம்அமிர்தசரஸ் பொற்கோவில்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: