
Post No. 11,492
Date uploaded in London – 1 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பிராக்ருத மொழியில் ஒரு பிரபல நூல் இருக்கிறது. அதன் பெயர் காதா சப்த சதி (GSS- GATHA SAPTA SATI) அதன் பொருள் 700 கவிதைகள் என்பதாகும். ஸம்ஸ்க்ருத்தின் பேச்சு வழக்கு பிராகிருதம்; அதாவது கொச்சை மொழி. தமிழில் உள்ள நாட்டுப்புற பாடல்கள் அல்லது இப் போதுள்ள தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கு ஒப்பிடலாம். இதன் உள்ளடக்கம் கிராமப்புற காதல் ஓவியங்கள் (Love and Sex in Villages) ஆகும். தமிழில் உள்ள அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை நூல்களுடன் ஒப்பிடலாம். இதை தமிழில் ஜெகந்நாத ராஜா ஓரளவுக்கு மொழிபெயர்த்தார். இது பற்றி உண்மைகளை யாரு ம் சொல்வதில்லை வெறும் புகழுரைகளை மட்டும் சொல்லுவார்கள். அது மட்டுமல்ல;காளிதாசன் இதிலிருந்து காப்பி அடித்தானா? தமிழ்ப் புலவர்களை இந்த பிராக்ருதக் கவிஞர்கள் காப்பி அடித்தார்களா என்று அரை வேக்காட்டுத் தனமான கட்டுரைகளையும் எழு துவர் .
3 உண்மைகளை முதலில் அலசி ஆராய்வோம்
1. இதை ஹாலன் என்ற முதல் நூற்றாண்டு மன்னன் தொகுத்ததாகச் சொல்லுவார்கள். அது தவறு; ஏனெனில் பிற்காலத்தவர், குறிப்பாக பிற்கால மன்னர்களின் கவிதைகளும் இதில் உள்ளன
2. இந்த நூலின் பெயர் 700 கவிதைகள். ஆனால் இதை முதல் முதலில் உலகின் பார்வைக்குக் கொ ண்டுவந்த ஜெர்மானிய அறிஞர் வீபர் (ALBRECHT WEBER IN 1881) பதிப்பில் 964 பாடல்கள் உள்ளன . அவர் 17 பதிப்புகளை — ஓலைச் சுவடிகைளை– ஒப்பிட்டு அதைக் கொணர்ந்தார் . அவரும் பிறரும் கண்ட பதிப்புகளில் உள்ள பொதுவான கவிதைகள் 430 மட்டுமே. ஆகையால் இதை 700 கவிதை — காதா சப்தசதி என்று அழைப்பது நாலும் நாலும் பத்து (4+4=10) என்று சொல்வது போல ஆகும். வீபர் (ALBRECHT WEBER IN 1881) ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். ஆக, 150 ஆண்டுகளா கத்தான் உலகிற்கு இந்தக் கவிதைகள் தெரியும். ஸம்ஸ்க்ருத்த்தில் கவிகள் புனைந்த காளிதாசன் முதலிய கவிஞர்களையும் 650 நாடகங்கள் இயற்றிய நாடக ஆசிரியர்களையும் அதற்கு முன்னரே உலகம் அறியும்.
XXX
3.இந்த நூல் பற்றி இந்திய அறிஞர்களுக்கும் அதிகம் தெரியாது. பாண என்ற ஏழாம் நூற்றாண்டு அறிஞர்தான் (Bana, author of Harsha Saritha) முதலில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.ஆகையால் இதை எவரும் காப்பி (Copy) அடித்திருக்க முடியாது. காளிதாசனுடைய காலமோ கி.மு (BCE) முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை சங்க இலக்கியத்திலுள்ள 200 க்கும் மேலான உவமைகள் காட்டுகின்றன.
xxxx
இந்தக் கவிதைகள் அனைத்தும் மஹாராஷ்டிர பிராகிருத வழக்கில் இருக்கின்றன. மேலும் கோதாவரி அல்லது அதற்கு அப்பாற்பட்ட பிரதேசம் தொடர்பான பின்னணி உடையவை. ஆகையால் தமிழர்களை அவர்கள் பார்த்து எழுதினர் என்பதும் சரியல்ல.
பாரதியார் சொல்கிறார்- சொல்லித் தருவது அல்ல மன்மதக் கலை – என்று; காதல், காமம் தொடர்பான உணர்ச்சிகள் பொதுவானவை. அதை எவரும் அவரவர் முறையில் கவிதையில் வடிக்கலாம். எடுத்துக் காட்டு-இக்கால திரைப்படப் பாடல்கள் .
XXX
இனி மேற்கூறிய தகவல்களுக்கு ஆதாரம் என்ன என்பதைக் காண்போம்.:
ஹாலன் (HALAN of SATAVAHANA DYNASTY)
ஹாலன் என்ற சாத வாஹன மன்னன் குறுகிய காலமே ஆண்டான். அவனுக்கு கவிதை என்றால் உயிர் மூச்சு. தானும் கவி இயற்றி மற்றவர்களையும் ஊக்குவித்தான். இவை அனைத்தும் உண்மையே; அவன் இயற்றிய 44 கவிகள் நூலில் உள்ளன. ஆயினும் அவனுக்குப் பின்னர் ஆட்சி புரிந்த வாகடக, ராஷ்டிரகூட மன்னர்கள் பெயர்களிலும் கவிதைகள் உள்ளன. ஹாலன் என்பவன் எவ்வளவோ பாடல்களுக்கு இடையே 700 கவிதைகளைத் தெரிந்தெடுத்தான் என்ற பாடலும் நூலின் மூன்றாவது கவிதையாக வருகிறது . ஆயினும் இதிலுள்ள கவிகளின் பெயர்களை வைத்து காலத்தைக் கணக்கிட்டால் அது ஏழாம் நூற்றாண்டு வரை செல்கிறது
நூலிலுள்ள பெரும்பாலான கவிஞர்கள் ஊர் பேர் தெரியாதவர்கள் மட்டுமல்ல. கவிதைகளின் வரிசையும் பதிப்புக்கு பதிப்பு மாறியுள்ளது. அப்படியி ருக்கையில் இதை ஒரு ஒட்டு மொத்த நூலாகவும் கருத முடியவில்லை.
XXX
முட்டாள் மன்னர்கள்
துவக்க கால சாதவாஹன மன்னர்களுக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது ; அவர்களை முட்டாள்களாகக் காட்டும் கதைகளும் உள்ளன . இ ந்த நூலின் கவிதைகளில் கூட ஏ முட்டாளே , ஏ அறிவிலியே என்ற பேச்சுக்கள் அதிகம் உள.
மா உதக = மோதக கதையை முன்னரே ஒரு கட்டுரையில் கொடுத்துள்ளேன்; இதோ சுருக்கம்:
சம்ஸ்க்ருதம் தெரிந்த பேரழகியை- ராஜகுமாரியை- ஒரு சாதவாகன மன்னன் கல்யாணம் கட்டுகிறான் ; ஒரு நாள் இருவரும் நீரில் குடைந்து விளையாட ஆற்றுக்குச் செல்கின்றனர். விளையாட்டுக்காக சாதவாகன மன்னன் அவள் மீது தண்ணீரைப் பீச்சி அடிக்கிறான். அவள் சம்ஸ்க்ருதத்தில் மா உதக= தண்ணீரை அடிக்காதே என்று கெஞ்சுகிறாள் – கொஞ்சுகிறாள் ; அவள் கொஞ்சல் மொழிகளை தவறாகப் புரிந்து கொண்ட மன்னன், அவள் மோதகம்/ கொழுக்கட்டை கேட்கிறாள் என்று எண்ணி சேவகர்களுக்கு உத்தரவிடுகிறான் – உடனே மகாராணிக்கு கொழுக்கட்டை/ மோதகம் கொண்டுவாருங்கள் என்று. மஹாராணியும், தோழிகளும் சிரி சிரி என்று சிரிக்கின்றனர். மன்னன் அறியாமைக்கு வெட்கித்து தலை குனிந்து சம்ஸ்க்ருதம் கற்கிறான்; இயற்கையிலேயே கவிதைகளில் ஆர்வம் பிறக்கிறது.
முதல் இரு நூற்றாண் டுகளுக்குள் ருத்ர தாமன் கல்வெட்டு, காம சூத்திரம், காளிதாசனின் கவிதைகள் , பாஷா ,சூத்ரகன் நாடகங்களைக் கண்ட நாட்டில் காதா சப்த சதி உதயமானதில் அதிசயம் ஒன்றுமில்லை
XXXX

காமச் சுவை
காமச் சுவையை ரசிப்பவர்களுக்கு இதில் நிறைய விஷயங்கள் உண்டு. பெரும்பாலும் பெண்களின் பேச்சுக்களாக அமைந்த —ஆர்யா அணி – இரண்டுவரிக் கவிகளுக்கு அவரவர் இஷ்டம் போல பொருள் கொள்ளலாம்
தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இலந்தப் பழம் இலந்தப் பழம் போன்ற பாட்டுகளுக்கும் காட்டுராணி கோட்டையிலே கதவுகள் இல்லை போன்ற பாட்டுகளுக்கும் செக்சி SEXYஉரை எழுதுவது போல விமர்சகர்கள் எழுதித் தள்ளியுள்ளனர் ; ஆகையால் இளம் உள்ளங்களுக்கு கவிதை விருந்தாக இந்த நூல் அமைந்ததில் வியப்பொன்றுமில்லை
வாத்ஸ்யாயன மகரிஷி (KAMASUTRA OF VATSYAYANA) சம்ஸ்க்ருதத்தில் எழுதிய முதல் செக்ஸ் SEX புஸ்தகத்தை ஆராய்ச்சி நூல் என்றும் இதை கிராமப்புற பிராக்டிகல் கைடு என்றும் ஒப்பிடலாம்.
XXXX
ஒரு சில எடுத்துக் காட்டுகள்
கணவனிடம் கடிபட்ட இலந்தைப் பழத்தை ஒரு பெண் காட்டுகிறாள் ;
அதை புன் சிரிப்புடன் கணவன் கைகளில் கொடுக்கிறாள் ;
அது குழந்தையின் கடி பட்ட பழம்
உடனே உரைகாரர்கள் கற் பனை சிறகடித்துப் பறக்கிறது
1.மகனுக்குப் பற்கள் முளைத்து விட்டன ; இனிமேல் தாய்ப்பால் அருந்த வரமாட்டான்
நானும் நீங்களும் கூடிக் குலவலாம்
2. மற்றோர் உரை :– இது அவன் கடித்த பல் தட மல்ல ; நன் செய்த வேலைதான்; அர்த்தம் புரிகிறதா ?
(என்னைக் கடியுங்கள் )
3.இன்னும் ஒரு உரைகாரர் :–இதே போல நானும் உன் மீது தடம் பதிக்கக் காத்து இருக்கிறேன்; வா, வா
XXXX
சிலேடைகளும் நிறைந்த கவிதைகள் உள்ளன ; இதோ
பெண்களின் மார்பக அழகைக் கண்டு மயங்காதோர் உண்டா?
அவைகள் கவிதைகள் போன்றவை ;
(அர்த்த) புஷ்டியுள்ளவை ; படிக்க/ பிடிக்க ஆனந்தம் தருபவை ;
இறுக்கமானவை; கனமானவை (பொருள் நிறைந்தவை);
அணிகள் அழகு செய்பவை (செய்யுள் அணிகள்; தங்க அணிகள்)
இப்படி 964 கவிதைகள் இருந்தால் யார்தான் படித்து, ரசித்து, ருசிக்க மாட்டார்கள்?
xxxx
காதா சப்த சதி – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › க…
25 Sept 2021 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. தோள் கண்டார் தோளே …
காதா சப்த சதியிருந்து சில சுவையான கவிதைகள்
https://tamilandvedas.com › காத…
·
11 Jan 2015 — நான், காதா சப்தசதி என்னும் நூலை ஆங்கில … இந்த சப்த சதி 700 காதல் கவிதைகள் …
காதா சப்தசதியில் அதிசயச் செய்திகள்!
https://tamilandvedas.com › காத…
9 Jan 2015 — கட்டுரை 4:- இதில் 700 காதல் கவிதைகளைக் கொண்ட பிராக்ருத —-காதா சப்த சதி— கவிதை …
புகழ் மிகு பிராக்ருத காதல் நூல் தோன்றிய கதை
https://tamilandvedas.com › புகழ…
6 Jan 2015 — பிராக்ருத மொழியில் காதா சப்த சதி என்ற ஒரு காதல் நூல் இருக்கிறது.
Brahmachari | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › bra…
8 Jan 2015 — இதே போல கயமனார் (சப்த சதியில் கஜன், கஜதத்தன்) … காதா சப்த சதி என்பது அகத்துறை …
–சுபம்–
Tags- காதா சப்த சதி , காதல் நூல், குழப்படி , வீபர் , ஹாலன்