
Post No. 11,493
Date uploaded in London – 1 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Part 8 of Arappalichchura Satakam
வஞ்சகர் தமைக்கூடி மருவொணா தன்பிலார்
வாசலிற் செல்லொ ணாது;
வாதெவ ரிடத்திலும் புரியொணா தறிவிலா
மடையர்முன் நிற் கொணாது;
கொஞ்சமே னும்தீது செய்யொணா தொருவர்மேல்
குற்றஞ்சொ லொண்ணா தயல்
கோதையர்க ளோடுபரி காசஞ்செ யொண்ணாது;
கோளுரைகள் பேசொணாது;
நஞ்சுதரும் அரவொடும் பழகொணா திருள்வழி
நடந்துதனி யேகொணாது
நதிபெருக் காகின் அதில் நீஞ்சல்செய் யொண்ணாது;
நல்வழி மறக்கொணாது;
அஞ்சாமல் அரசர்முன் பேசொணா திவையெலாம்
அறியும்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) இவையெலாம் அறியும் – இங்குக் கூறப் பட்டவற்றை
யெல்லாம் அறிந்த, எமது ………… தேவனே! வஞ்சகர்தமைக் கூடி மருவ
ஒணாது – வஞ்சகரைக் கூடிப் பழகல் தகாது, அன்பு இலார் வாசலில்
செல்லஒண்ணாது – அன்பு இல்லாதவரின் வீட்டுவாயிலை அடைதல்
கூடாது, வாது எவரிடத்திலும் புரியஒணாது – எவரிடமும் வாதாடல்
கூடாது அறிவு இலா மடையர்முன் நிற்க ஒணாது – அறிவு இல்லாத
பேதைகளின் எதிரிலும் செல்லக் கூடாது, கொஞ்சமேனும் தீது செய்ய
ஒணாது – சிறிதாகினும் தீய செயலைச் செய்தல் ஒவ்வாது, ஒருவர் மேல் குற்றம் சொலஒண்ணாது – ஒருவர்மேல் குறைகூறல் கூடாது, அயல் கோதையர்களோடு பரிகாசம் செய ஒண்ணாது – பிற மங்கையருடன் நகைத்துப் பேசுதல் கூடாது, கோள் உரைகள் பேச ஒணாது – கோள் மொழிகள் கூறல் கூடாது, நஞ்சு தரும் அரவொடும் பழக ஒணாது – நஞ்சைத் தரும் பாம்பொடு பழகல்கூடாது, இருள்வழி நடந்து தனி ஏக ஒணாது –
இருண்ட நெறியிலே தனியே நடந்து செல்லல் கூடாது, நதி பெருக்கு ஆகின்
அதில் நீஞ்சல் செய்ய ஒண்ணாது – ஆறு பெருகிச்சென்றால் அதை நீந்திச் செல்லுதல் கூடாது, நல்வழி மறக்க ஒணாது – நன்னெறியை மறத்தல் கூடாது அஞ்சாமல் அரசர்முன் பேச ஒணாது – அரசரிடம் அச்சமின்றிப் பேசுதல் கூடாது.
(க-து.) இங்குக் கூறப்பட்டவை செய்ய ஒண்ணாதவை.
Xxx

London swaminathan’s commentary on verse 9
இவை அனைத்தும் ஆத்திச் சூடி , உலக நீதி, நீதி வெண்பா முதலிய நூல்களில் கண்ட விஷயங்களே .
நாள்தோறும் பத்திரிகைகளில் வரும் கொலை, களவு, விபத்து பற்றிய செய்திகளைப் படிக்கையில் இவை அனைத்தும் இன்றும் தேவைப்படும் அறிவுரைகளே என்பதை உறுதியிட்டுச் சொல்ல முடியும்
–சுபம்–
உலக நாதர் இயற்றிய உலக நீதியில் கண்டவற்றை ஒப்பிட்டுப் பார்ப்போம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
Never play around with poison
ஒப்பிடு: தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும் –(குறள் 202)
Xxxx
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
ஒப்பிடு: நல்லினத்தி னூங்குத் துணை யில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல் — (குறள் 460)
Neverever associate with fraudulent people
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
ஒப்பிடு: சிற்றினம் அஞ்சும் பெருமை–(குறள் 451)
Don’t move with people of who are not at your wavelength
xxx
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
Never go alone to places you don’t know.
Xxx
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
Don’t go to places that should be avoided
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல் பதாகும் அறிவு — (குறள் 451)
Xxx
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
Don’t talk ill of others
ஒப்பிடுக: இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று —(குறள் 100)
Xxxx
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
ஒப்பிடு: அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது — (குறள் 181)
Don’t talk behind anyone’s back.
Xxx
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
Never covet another’s wife
ஒப்பிடு: பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள் 148)
Xxx
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
Never step into a house where you are not respected
Xxx
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
Don’t use harsh words
ஒப்பிடு: இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது (குறள் 99)
xxx
—subham—
Tags- உலக நாதர் ,உலக நீதி, செய்யக்கூடாத செயல்கள் ,ஒண்ணாது, எவை எவை? –அறப்பளீச்சுர சதகம்