
Post No. 11,491
Date uploaded in London – 1 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 87
தன் பெயரையே விருதுப் பெயராகக் கொடுத்த உத்தமச் சோழன்!
ச,நாகராஜன்
தாராபுரம் தாலுகாவில் காங்கேயம் பிரிவில் (நத்தக்) கரையூர் என்னும் ஊருக்கும், ஆணூருக்கும் தலைமை பெற்றவர்கள் சர்க்கரை என்ற பெயரைக் கொண்ட குடியினர்.
அந்த மரபில் தோன்றிய ஒருவர் உத்தமச் சோழ சக்கரவர்த்தி அரசாண்ட காலத்தில் அவரிடத்தில் சேனாபதிப் பதவி பெற்றுச் சிறப்பாகப் பணியாற்றினார்.
அவர் சேனையை நடத்தி, வெற்றி பெற்று வரலாயினார்.
இதைக் கண்ட மன்னன் மனம் மிக மகிழ்ந்தான்.
உத்தமச் சோழன் என்ற தன் பெயரையே விருதுப் பெயராக சேனாபதிக்குக் கொடுத்து கௌரவித்தான்.
இதற்குச் சான்றாக விளங்கும் ஒரு பாடல் இது:
ஓங்கு சொட்டைக் காரர்கண்ட னுத்தமக்கா மிண்ட னென்றே
ஈங்குலகி லுன்னையல்ல லேவர்க்காகிலும் வருமோ
(நல்லத்தம்பிச் சர்க்கரை காதல்)
நத்தக்காரையூர் சயங்கொண்டநாத ஈஸ்வரர் ஆலயத்தில் உள் தூணில் உத்தமச் சோழக்காமிண்டன் நட்ட தூண் என வெட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.
மடவளாக சிவாலய கர்ப்பகிரஹத்தின் வட புறச் சுவரில் வெட்டப்பட்டுள்ள சாஸனம் –
கட்டளைக் கலித்துறை
“சரங்கொண் டிலங்கை சமைத்தபெற் றான்றரி யாரிறைஞ்ச
உரங்கொண்ட காரைம னுத்தமச் சோழ னுபயபுய
மிரங்கும் படியரு ளான்மட வீரினி யென்னுயிரைக்
குரங்கின் கையிற்பட்ட பூமாலை யாக்குங் குளிர்த்தென்றலே”
என்று காணப்படுகிறது.
பழைய கோட்டை பட்டக்காரர்கள் உத்தமச் சோழன் என்னும் பட்டப் பெயர் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தமிழ் வேந்தர்கள் தன் கீழுள்ள சிற்றரசர்களுக்கும் மந்திரி தந்திரிகளுக்கும் தம் பெயரை விருதுப் பெயராகக் கொடுப்பது வழக்கம். (பழைய கோட்டை என்பது நாட்டு வழக்காகும்)
சைவம் வளர்த்த சேக்கிழார் புராணச் செய்யுள் ஒன்றைக் காணலாம் :
அத்தகைய புகழ்வேளாண் மரபிற்சேக்கி ழார்குடியில்
வந்தவருண் மொழித்தே வர்க்குத்
தந்துபரி வளவனுந்தன் செங்லோ லோச்சுந்
தலைமையளித்தவர் தமக்குத் தனது பேறு
முத்தமச்சோ ழப்பல்ல வன்றா னென்று
முயர்பட்டங் கொடுத்திடவாங் கவர்நீர் நாட்டு
நித்தனுறை திருநாகே சுரத்திலன்பு நிறைதலினான்
மறவாத நிலைமை மிக்கார்
என்று சொல்லவவர் தமையழைத்தரச னிவரமைச்சரிவர் பட்டமும்
மன்றன் மாலைபுனை தொண்டைமானென வகுத்தபின் றமதுமண்டலம்
அன்றுவற்கம்வர வந்தடைந்தவரை யாற்றல் செய்து தொண்டை மண்டலம்
நின்று காத்தபெரு மானெனத் தமது பெயரை யெங்கும் நிறுத்தினார்
இன்னன வகையிற் கூறி யினப்படை முற்றுங் காட்ட
மன்னனிவ் வீரனைப் போற் கண்டிலே மெனமகிழ்ந்து
கொன்னுற வழைத்து நாமங் கொந்தகப் பெருமானென்றே
நன்னெறிப் பட்டங் கட்டி நல்கினான் பரிவட்டங்கள்
– மெய்காட்டிட்ட திருவிளையாடல்
இங்கு ‘கொந்தகப் பெருமான்’ என்ற சொற்றொடர் வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கொந்தகை வேளாளர் என ஒரு வகுப்பினர் உள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.
மேற்கூறியவற்றால் அரசர் மகிழ்ச்சி அடையும் போது அதற்குக் காரணமாக அமைந்தவர்களுக்கு தனது பெயர் அல்லது கொள்வோரின் இனம் பற்றிய பெயர், காரணமான பெயர் முதலியவற்றைப் பட்டமாகக் கொடுத்து வந்திருக்கின்றனர் என்பது விளங்குகிறது.
வேளாளர்கள் மந்திரி, தந்திரி, சேனாதிபதிகளாக இருந்து வந்ததை மானக்கஞ்சாற நாயனார் புராணத்தில் “அரசர் சேனாபதியாம் விழுமிய வேளாண் குடி’ என்றும் ‘வளவர் சேனாபதிக் குடியாம் பொன்னி நாட்டு வேளாண்மையிலுயர்ந்த பொற்பினது” எனக் கூறப்பட்டமையாலும் காணலாம்.
இந்த வரலாற்றை கொங்கு மண்டல சதகம் தனது 87வது பாடலில் பெருமையாக் குறிப்பிடுகிறது.
பாடல்:
இத்தரை மீதினிற் சேன பதியா யிருந்து வெற்றி
யொத்து வரப்பெற்ற தற்காத் தனக்கிங் குறுபெயராம்
உத்தமச் சோழனென் றன்பாத் தாப் பெறு மோங்குபட்ட
வர்த்தனன் வாழ்வுறு மாணூர் திகழ்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் :
இந்த உலகத்தில் சேனாபதியாக இருந்து, சென்ற போர்களில் வெற்றி பெற்று வருவதைக் கண்ட உத்தமச் சோழன் என்னும் மன்னன், தன் பெயரான உத்தமச் சோழன் என்னும் பெயரைப் பட்டப் பெயராகக் கொடுக்கப் பெற்று (சர்க்கரை) வாழும் ஆணூர் கொங்குமண்டலம் என்பதாம்.
கொங்குமண்டல சதகத்தில் பல பாடல்கள் ஆணூர்ச் சர்க்கரையின் மரபினரைக் குறித்துப் பாடப்பட்டவையாகும்.
51, 52, 53, 57, 66, 67 ஆகிய பாடல்கள் சர்க்கரை மரபினர் பற்றியதாகும்.
இவர்களின் குல முதல்வன் அல்லது மூல புருஷன், சர்க்கரை என்னும் பெயரை உடையவனாதலின் பட்டத்துக்கு வருபவர்கள் ஒவ்வொருவரும் இப்பெயரை உத்தமச் சோழன் – காமிண்டன் – மன்றாடி என்று தனித் தனியாகத் தம் முன்னோர் பெற்ற விருதுப் பெயர்களையும் இணைத்து இட்டு வழங்கி வருகின்றனர்.
இப்படிப்பட்ட பட்டங்கள் ஒரு காலத்தினதோ அல்லது ஒருவருடையதோ அல்ல. வேறு வேறு காலத்தில் அந்தக் குடியில் உதித்தவர் எனக் கொள்ளலாம்.
***
புத்தக அறிமுகம் 128
WHO IS MORE INTELLIGENT, MALE OR FEMALE?
CONTENTS
Foreword
Chapters
I LITERATURE
1. Journalist V.Santhanam: an inspiration to the young! 2. Who Is More Intelligent and Clever? Male or Female?
3. Sex – Hinduism shows the scientific way!
4. No Divorce! Secrets to have a Happy Relationship! 5. Who is a Poet? Hundreds of Definitions! All are beautiful! 6. Love Poems in Sanskrit Literature 7. Satiric Verses in Sanskrit Language 8. Pun in Sanskrit Literature. 9. Wonderful Inspirational Sanskrit Subhasita Verses 10. Let Us Salute the Great American, Sanskrit Scholar Ludwik Sternbach 11. Number One to Ten : Sayings of the Wise 12. The Poetical Works of Tiruloka Sitaram With Translation and Notes. 13.The Poetical Works of Tiruloka Sitaram With Translation and Notes – Part II.
II HINDU GLORY
14. Wit and Wisdom of Bhagavan Ramana maharishi! 15. Paul Brunton – by Annie Cahn Fung 16. If You Want to Know India, Read Swami Vivekananda! 17. Forgotten Arts in India 18. What you have learnt is Handful, what you haven’t learnt is…. 19. Swami Ramathirtha’s Notes 20. Taj Mahal is a Hindu Temple reveals the book ‘World Vedic Heritage’ 21. Hindu Destiny in Nostradamus by G.S.Hiranyappa 22. Jesus Christ Visited India and Died in Kashmir
III SELF IMPROVEMENT
23. Napoleon’s Leadership Qualities 24. Miraculous Incidents Due to Positive Emotions From Day to Day Life and History 25. Confidence: The Key to Success. 26. Secrets to Success 27. Be A Tough Minded Optimist! 28. Thinking for Results 29. Management Stories which you must definitely read! – 1 30. Management Stories which you must definitely read! – 2 31. LAWYERS JOKES 32. Adam and Eve: Jokes. 33. Nature’s Numbers by Ian Stewart 34. The Power of Subconscious Mind
IV BOOKS TO READ
35. ‘Awaken the Giant Within’
36. God Is Not Dead 37. Damn Good Advice. 38. Voice of Senses 39. A Journey Towards the Infinite Absolute 40. 1001 Movies You Must See Before You Die by Steven Jay Schneider. 41. Life And Contribution of Mridanga Vidwans By Dr Madurai K. Thiagarajan
*
நூலில் இடம் பெற்றுள்ள என்னுரை :
Foreword
It is with great pleasure I am presenting this book to the learned readers.
The book has been divided into Four parts.
In the first part we are coming into contact with the vast literature of India.
Interesting verses are quoted so that one may get inspiration to explore the treasure that India offers to the world!
In the second part the never-ending glory of the great nation Bharat that is India is highlighted.
The third part is devoted to self- improvement. Along with the secrets to success, in a lighter vein we may enjoy some management stories and jokes also!
The fourth part is a Book review section in which some good books are recommended for reading.
These articles have been published in www.ezinearticles.com and attracted more than one lakh eighteen thousand readers all over the world. These articles have been reprinted in around 1900 + magazines around the world.
Some of the articles have been published in www.tamilandvedas.com.
Readers are requested to have a glimpse at the vast literature of India, the glory of Bharat and principles of Self- Improvement which may be applied to lead a meaningful life.
Good Luck to all.
Sanfrancisco S.Nagarajan
4th October 2022
VIJAYA DASAMI
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**