
Post No. 11,495
Date uploaded in London – 2 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
This is part 9 — verse 9 of Arappalichur sataka– with London swaminathan’s commentary
ஒன்றற்கொன்று அழகு
வாழ்மனை தனக்கழகு குலமங்கை; குலமங்கை
வாழ்வினுக் கழகு சிறுவர்;
வளர்சிறுவ ருக்கழகு கல்வி;கல் விக்கழகு
மாநிலம் துதிசெய் குணமாம்;
சூழ்குண மதற்கழகு பேரறிவு; பேரறிவு
தோன்றிடில் அதற்க ழகுதான்
தூயதவம், மேன்மை, உபகாரம், விரதம், பொறுமை
சொல்லரிய பெரியோர் களைத்
தாழ்தல், பணி விடைபுரிதல், சீலம், நேசம், கருணை
சாற்றுமிவை அழகென் பர்காண்
சௌரி, மல ரோன், அமரர், முனிவர், முச்சுடரெலாம்
சரணம்எமை ரட்சி யெனவே.
ஆழ்கடல் உதித்துவரு விடம்உண்ட கண்டனே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) சௌரி, மலரோன், அமரர், முனிவர், முச்சுடர் எலாம்
– திருமாலும் பிரமனும் வானவரும் முனிவரும் (மதி யிரவி அங்கி யெனும்)
முச்சுடரும் ஆகிய எல்லோரும் சரணம் எமை ரட்சி என – அடைக்கலம்
எங்களை ஆதரி என்று வேண்ட, ஆழ்கடல் உதித்துவரும் விடம் உண்ட
கண்டனே – ஆழமான கடலில் தோன்றி வந்த நஞ்சம் உண்ட (நீல)
கண்டனே!, அண்ணல் – தலைவனாகிய எமது ……… தேவனே!,
வாழ்மனை தனக்கு அழகு குலமங்கை – வாழும் இல்லத்திற்கு அழகு நற்குடிப் பிறந்த மங்கையாவாள்,
குலமங்கை வாழ்வினுக்கு அழகு சிறுவர் – குலமங்கையின்
வாழ்விற்கு அழகு செய்வோர் நன்மக்கள்,
வளர் சிறுவருக்கு அழகு கல்வி –
வளரும் சிறுவர்களுக்கு அழகு செய்வது கல்வி,
கல்விக்கு அழகு மாநிலம் துதி செய் குணம்ஆம் – கல்விக்கு அழகாவது பெரிய உலகம் புகழும் நற்பண்பாகும்,
சூழ்குணமதற்கு அழகு பேரறிவு – பொருந்திய அந்த
நற்பண்புக்கு அழகுசெய்வது பெருமை மிக்க அறிவு,
பேரறிவு தோன்றிடில் அதற்கு அழகுதான் – பேரறிவு உண்டானால் அதற்கு அழகு செய்பவை,
தூய தவம் – நல்ல தவமும், மேன்மை – பெருந்தன்மையும், உபகாரம் –
(பிறருக்கு) உதவியும், விரதம் – நோன்பும், பொறுமை – பொறையும், சொல் அரிய பெரியோர்களைத் தாழ்தல் – புகழ்தற்கரிய பெரியோர்களை வணங்குதலும்,
பணிவிடை புரிதல் – (அவர்கட்குத்) தொண்டுசெய்தலும்,
சிவநேசம் – சைவப்பற்றும், கருணை – அருளும் (என) சாற்றும் இவை
அழகு என்பர் – கூறப்பட்ட இவை அழகாகும் என்பார்கள் (அறிஞர்கள்.)
காண் : முன்னிலையசைச் சொல்.
(க-து.) இங்குக் கூறப்பட்டவை ஒன்றுக்கொன்று அழகு செய்வன.

வெற்றிவேற்கை நூல் எழுதிய அதி வீர ராம பாண்டியன் சொல்கிறார்
கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
மன்னர்க்கு அழகு செங்கால் முறைமை
வணிகர்க்கு அழகு வரும்பொருள் ஈட்டல்
உழவர்க்கு அழகு உழுதூண் விரும்பல்
மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்
தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்
குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்
விலைமகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்
அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்
வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை
XXXX
பர்த்ருஹரியின் நீதி சதகப் பாடல்
केयूराणि न भूषयन्ति पुरुषं हारा न चन्द्रोज्ज्वला
न स्नानं न विलेपनं न कुसुमं नालङ्कृता मूर्धजाः ।
वाण्येका समलङ्करोति पुरुषं या संस्कृता धार्यते
क्षीयन्ते खलु भूषणानि सततं वाग्भूषणं भूषणम् ॥ 1.19 ॥
பர்த்ருஹரியின் நீதி சதகப் பாடல்
கேயூராணி ந பூஷயந்தி புருஷம் ஹாரா ந சந்த்ரோஜ்வலா
ந் ஸ்நானம்ந விலேபனம் நகுஸுமம் நாளங்ருதா மூர்த்தஜாஹா
வாண்யேகா சமலங் கரோதி புருஷம் யா ஸம்ஸ்க்ருதா தார்யதே
க்ஷீயந்தே கலு பூஷணானி ஸததம் வாக் பூஷணம் பூஷணம்
மனிதனுக்கு அழகூட்டுவது கங்கணமன்று;
நிலவொளி போன்ற மாலைகளும் அழகு சேர்ர்க்காது.
நீர் முழுக்கோ, சந்தனப் பூச்சோ,பூக்களோ, சிகை அலங்காரமோ
ஒருவனுக்கு அழகு அல்ல; பண்பட்ட பேச்சே அழகு தரும்.
ஏனைய எல்லாம் வாடி வதங்கும், உதிர்ந்தும்,உலர்ந்தும் போம்.
நல்ல பேச்சு உண்மையான அணிகலனாக நிற்கும்.
XXXX

மனைவி இல்லாத வீடு சூன்யமானது
(இல்லாள் இல்லாவிடில் அது வீடு இல்லை)
–கதா சரித் சாகரம் (கதைக்கடல்)
அபார்யம் ஹி சூன்யம் க்ருஹபதேர்க்ருஹம்
Xxxx
கணவனின் அரைப்பகுதி மனைவி (ஆணில் பாதி பெண்)
அர்தம் பார்யா மனுஷ்யஸ்ய
Xxxx
மனைவி என்பவள் உலோகத்தால் செய்யப்படாத ஒரு தளை (கைவிலங்கு)
-சாணக்ய நீதி சாஸ்த்ரம்
அலோஹமயம் நிகடம் களத்ரம்
Xxxx
கட்டுபடாத மனைவி எதிரி
-சாணக்ய நீதி
அவிநீதா ரிபு: பார்யா
Xxxx
.மனைவியின் காம வலையில் விழுந்த கணவன், சாவையும் பொருட்படுத்தான்
–பாரத மஞ்சரி
காந்தா கடாக்ஷ ஹ்ருஷ்டோ ஹி ந வேத்தி மரணம் ஜன:
Xxxx
க்ரியாணாம் கலு தர்ம்யாணாம் சத்பத்ன்யோ மூல காரணம்
–குமாரசம்பவம், காளிதாசன்
அறப்பணிகள் அனைத்துக்கும் வேர் போன்றவர் நல்ல மனைவிமார்களே.
Xxxx
பெண்களின் அழகு எது?
“குயிலின் அழகு இனிமையாகக் கூவுதலில் இருக்கிறது;
பெண்களின் அழகு கற்பில் உள்ளது (கணவனைத் தவிர யாரிடமும் விருப்பமின்மை);
அவலட்சணமான தோற்றம் உள்ளவரிடத்தில் அழகு என்பது அவருடைய அறிவுதான்;யோகிகளுக்கு அழகு மன்னிப்பதில் உள்ளது”.
கோகிலானாம் ஸ்வரோ ரூபம் ஸ்த்ரீணாம் ரூபம் பதிவ்ரதம்
வித்யா ரூபம் குருபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம்
–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 9
Xxxx
EDUCATION IS THE BEST ORNAMENT
எது அழகு? நான்கு கவிஞர்கள் கருத்து (Post No.2787)
Date: 6 May 2016; Post No. 2787
கல்வி அழகு
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம் யாமென்னு நடுவு நிலைமையால்
கல்வியழகே அழகு – நாலடியார் 131
சிகை அலங்காரமும், ஆடையினது கரை அழகும், மஞ்சள் பொடி பூசியதால் ஏற்படும் அழகும் அழகல்ல. மனத்தினால் நாம் நல்லவர் என்று எண்ணும் நடுநிலைமையால் கல்வியால் உண்டாகும் அழகே அழகு. (கல்விகற்றால், நல்லவர் ஆவர். அதுவே அழகு)
நாலடியார் என்பது பல கவிஞர்கள் சேர்ந்து படிய 400 பாடல்களைக் கொண்ட நூல்.
சொல் அழகு
மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு
–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)
பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்ரமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.
இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ
டெழுத்தின் வனப்பே வனப்பு
–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)
பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.
வள்ளுவன் கூறுகிறான்
சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்
மண்மாண் புனை பாவை அற்று
–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)
विद्या नाम नरस्य रूपम् अधिकं प्रच्छन्नगुप्तं धनं
विद्या भोगकरी यशःसुखकरी विद्या गुरूणां गुरुः ।
विद्या बन्धुजनो विदेशगमने विद्या परा देवता
विद्या राजसु पूज्यते न तु धनं विद्याविहीनः पशुः ॥ 1.20 ॥
பர்த்ருஹரியின் நீதி சதகப் பாடல்
வித்யா நாம நரஸ்ய ரூபமதிகம் ப்ரச்சன்னகுப்தம் தனம்
வித்யா போககரீ ய்ஸ்ஹ ஸுககரீவித்யா குரூணாம் க்ருஹு
வித்யாம் ப்ந்துஜனோ விதேச கமனே வித்யா பராதேவதா
வித்யா ராஜஸு பூஜ்யதேந து தனம் வித்யா விஹீனஹ பசுஹு
கல்வி என்பது ஒருவனுக்கு அழகு சேர்க்கிறது;
அவனுடைய ரஹஸிய செல்வம் அது;
வளமும், மகிழ்ச்சியும், புகழும் நல்குவது.
‘குரு’க்களுக்கு எல்லாம் ‘குரு’ கல்வி;
வெளி நாடு சென்றால் தெரியாத மக்களிடையே இருக்கையில் அது ஒருவனுக்கு நண்பன்;
கல்வியே உயர்ந்த கடவுள்.
மன்னர்களிடையே செல்வத்துக்கு மதிப்பு இல்லை; ஆனால் கற்ற கல்விக்கு மதிப்பு உண்டு. கல்வி கற்காதவன் ஒரு விலங்கு.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரோடு ஏனையவர்– குறள் 410
XXX
பர்த்ருஹரியின் நீதி சதகப் பாடல் 37
நீதி சதகம் 37
அரசனுக்கு ஆபத்து கெடு மதி உடையவரின் ஆலோசனை;
சந்யாசிக்கு ஆபத்து பந்தங்கள் (மடம், சொத்து, சுகம்);
புதல்வனுக்கு ஆபத்து அதிக செல்லம்;
அறிவாளிக்கு ஆபத்து தொடர்ந்து படியாமை;
குடும்பத்துக்கு ஆபத்து கெட்ட மகன்/ மகள்;
நற்பெயர்க்கும் மரியாதைக்கும் ஆபத்து கெட்டவர் சஹவாசம்;
புத்திக்கு ஆபத்து கள் குடித்தல்;
விவசாயத்துக்கு ஆபத்து நிலத்தைக் கவனியாமை/ பராமரிக்காது இருத்தல்;
அன்புக்கு ஆபத்து உறவினரை விட்டு வெளிநாடு செல்லல்;
வளத்துக்கு ஆபத்து விவேகமின்மை;
செல்வத்துக்கு ஆபத்து மெத்தனம்.– நீதி சதகம் 37
வள்ளுவன் ஈரடியில் ஏழுக்கும் மேலான சொற்களில் சொல்லுவதை பர்த்ருஹரி மிகச்சொற்பமான சொற்களில் சொல்கிறான்.
Bhartruhari Nitisataka 37
दौर्मन्त्र्यान्नृपतिर्विनश्यति यतिः सङ्गात्सुतो लालनात्
विप्रोஉनध्ययनात्कुलं कुतनयाच्छीलं खलोपासनात् ।
ह्रीर्मद्यादनवेक्षणादपि कृषिः स्नेहः प्रवासाश्रयान्
मैत्री चाप्रणयात्समृद्धिरनयात्त्यागप्रमादाद्धनम् ॥ 1.42 ॥
த்ரௌர் மந்த்ர்யான் ந்ருபதிர் விநஸ்யதி யதிஹி சங்காத் ஸுதோ லாலனாத்
விப்ரோ அனத்யயனாத் குலம் குதநயாத்சீலம் கலோபாசனாத்
ஹ்ரீர்மத்யாதனவேக்ஷணாதபி க்ருஷிஹி ஸ்நேஹக ப்ரவாஸாஸ்ரயான்
மைத்ரீ சா ப்ரணயாத் ஸம்ருத்ததிரனயா த்யாகப்ரமாதாத்தனம்
XXXX

நல்லாரைக் காண்பதுவும் நன்றே / சத் சங்கம்
அவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே! இனியது எது?’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:
“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”
பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!
இதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:
“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)
இம்மையில் சுவர்க்கம்
நற்குணன் உடைய வேந்தை
நயந்து சேவித்தல் ஒன்று;
பொற்பு உடை மகளிரொடு
பொருந்தியே வாழ்தல் ஒன்று;
பற்பலரோடு நன்னூல்
பகர்ந்து வாசித்தல் ஒன்று;
சொற்பெறும் இவைகள் மூன்றும்
இம்மையில் சுவர்க்கம் தானே! —(விவேக சிந்தாமணி)
மூன்று வகை சொர்க்கலோக இன்பங்களில் ‘வாசகர் வட்டமும்’ ஒன்று. அந்த வாசகர்கள் நன்னூலை வாசித்து , விவாதித்து பகிர்ந்து கொள்வராம்; அதாவது சத் சங்கம்!
XXXX
பரோபகாரம் இதம் சரீரம்
“எவனொருவன் பிறருக்காக வாழ்கிறானோ அவனே உயிர் வாழப்வன் மற்றவர் எல்லோரும் இருந்தும், இறந்தோருக்குச் சமம்
“They alone live who live for others, the rest are more dead than alive”.
வள்ளுவரும் இதையே சொன்னார்
ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் – குறள் 214
சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் பொன்மொழித் தொகுப்பு நூலும் இதையே பகர்கிறது:
பரம் பரோபாகாரார்த்தம் யோ ஜீவதி ச ஜீவதி : எவன் பிறருக்கு உதவி செய்யும் வாழ்க்கை உடையவனோ அவனே வாழ்பவன்.
(1).பரோபகாராய பலந்தி வ்ருக்ஷா:
பரோபகாராய வஹந்தி நத்யா:
பரோபகாராய துஹந்தி காவ:
பரோபகாரார்த்தம் இதம் சரீரம் – விக்ரம சரிதம்
பொருள்:–
மற்றவர்களுக்காகவே மரங்கள் பழுக்கின்றன
மற்றவர்களுக்காகவே நதிகள் ஓடுகின்றன
மற்றவர்களுக்காகவே பசுக்கள் பாலைப் பொழிகின்றன
மற்றவர்களுக்காகவே இந்த உடல் இருக்கிறது
(2).பரோபகாராய சதாம் விபூதய: – சமயோசித பத்ய மாலிகா
நல்லோருடைய செல்வம் பிறருக்காகவே உளது
(3).விபாதி காய: கருணாபராணாம் பரோபகாரைர்ன து சந்தனேன – பர்த்ருஹரி
ஒருவனுடைய உடல் ஒளிருவது சந்தனத்தால் அல்ல; பிறருக்கு உதவி செய்வதன் மூலமே.
(4).சர்வ பூத உபகாராச்ச கிம் அன்யத் சுக்ருதம் பரம் – கதாசரித் சாகரம்
எல்லா உயிர்களுக்கும் உதவி செய்வதைவிடப் புண்ணியமானது எது?
“பரோபகாராய புண்யாய, பாபாய பரபீடணம்”
பொருள்: பிறருக்கு உதவி செய்வது புண்ணியம்; பிறருக்கு தீங்கிழைப்பது பாபம்.
இதைப் புரிந்து கொண்டால் உலகம் அமைதியுடன், ஆனந்தமாக வாழும்!
xxxx
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
சொல்லடி சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் — உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன், — நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீச்சுடினும் — சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; — இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
– மகாகவி பாரதியார்
—SUBHAM—
Tags–அழகு, எது , பர்த்ருஹரி, குஞ்சி அழகு, பரோபகாரம், சுபாஷிதம், விவேகானந்தர், பாரதியார்