
Post No. 11,496
Date uploaded in London – 2 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
XXXXX
பிரபல இலக்கிய சம்வாதங்கள்-1
WRITTEN BY B. KANNAN, NEW DELHI
கவி தார்த்திக சிங்கமும், ‘டிண்டிம்’ கவியும்!
ॐ राघवा अभ्युदयो उत्कृष्ट यादावा अभ्युदय प्रदाय नमः
ஓம் ராகவா அப்யுதயோ உத்க்ருஷ்ட யாதாவா அப்யுதய ப்ரதாய நம:
{திருக்குடந்தை தேசிகர், அபரதேசிகர் என்று அறியப்படும் கோபாலதேசிகர்
இயற்றிய வேதாந்த தேசிகர் சஹஸ்ரநாமம் (706)}
தென்னிந்தியாவின் இந்து சமஸ்தான மன்னர்கள் தங்கள் அரசவையில் தமிழ்ப் புலவர்கள், கவிஞர்களை ஆதரித்து வந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். அர சாங்க அலுவல்களுக்கு அப்பாற்பட்டு ஒதுக்கப்படும் ‘கேளிக்கை’ இடைநேரத்தில் புதிய நூல் அரங்கேற்றம், புலவர்களுக்குள் சூடான வாத,பிரதிவாதம், கிளுகிளுக்க வைக்கும் தற்புகழ்ச்சி விவாதங்கள் நடந்தேறுவதுண்டு. அவற்றில் நாட்டின் பிற பிர தேசங்களைச் சேர்ந்த அறிஞர்களும் அவ்வப்போது உற்சாகமுடன் பங்கேற்பர்.நக்கீரர்- தருமி, ஒட்டக்கூத்தர்-புகழேந்தி, அருணகிரிநாதர்-வில்லிபுத்தூரர் சம்வாதங்கள்,மதுரை
மாம்பழக் கவிசிங்க நாவலர்- வடநாட்டுக் கவிஞன் விஸ்வநாத பாரதி, நைஷதசரித் திரம் இயற்றிய ஶ்ரீஹர்ஷர்- கன்னோஜ் மன்னன் ஜெயச்சந்திரன், வசிஷ்ட ஶ்ரீகணபதி சாஸ்திரி- அம்பிகாதத்தா, வேதாந்த தேசிகர்-சமண முனிகள், ஆதிசங்கரர்-மண்டன மிஸ்ரர் ஆகியோரது விவாதங்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவற்றுள் சிலவற்று டன் பங்கேற்று இதுவரை அறியாத வேறு சில முக்கியமானச் சம்பவங்களைப் பற்றி யும் இப்போது பார்ப்போம்.
முதலில் பிரபல வைணவ ஆச்சாரியார் ஶ்ரீவேங்கடநாதா எனும் ஶ்ரீவேதாந்த தேசிக ரின் வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்றைக் கவனிப்போம்….
ஶ்ரீதேசிகரின் வாழ்வில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. பல வாதப் பிரதிவாதங்களில் கலந்துகொண்டு வெற்றிவாகையும் சூடியுள்ளார். அதனா லேயே “கவி தார்க்கிக சிங்கம்” என்ற விருதையும் பெற்றுள்ளார். சுவாமி தேசிகர்-டிண்டிமா பட்டா (திண்டிமா என்றும் மருவி அழைக்கப்படுகிறது) கவி இடையே
அவர்களின் புத்திசாதுரியத்தை வெளிப்படுத்தும் விதமாக, அழகானக் கவிதை வாயி லாக நடந்ததாகக் கூறப்படும் அருமையான விவாதமும் இதில் ஒன்றாகும். யார் இந்த டிண்டிமா கவி?
டிண்டிமா கவி என்பது ஒருவரது பெயரைக் குறிக்கவில்லை. மாறாக ஒரு குறிப்பிட் டப் புலவர்கள் குலத்தை அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளது. விஜயநகர அர சர்கள் அவர்களுக்கு ஒரு சிறப்பான அந்தஸ்தத்தையும் அளித்தனர்.அவர்களின் வரு கையைத் தெரிவிக்க “டிண்டிம்” என்று முரசில் ஒலி எழுப்புவார்களாம்,அதனால்தான்
தங்கள் பெயரின் பின்னொட்டாக (SUFFIX) “டிண்டிமா கவி” என்ற பட்டப் பெயரையும் இணைத்துக் கொண்டார்கள்.
இவர்கள் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டு, தற்போதைய வட ஆற்காடு பிரதே சத்தில் விஜயநகரப் பேரரசர்களின் ஆதரவில் 14-16ம் நூற்றாண்டு வரை மிக்கப் புக ழுடன் விளங்கினார்கள். இரண்டாம் ராஜநாதா டிண்டிமா மன்னன் சாளுவ நரசிம்ம னின் போர்க்களத் தீரச் செயல்களைப் பற்றியும், ராஜநாதா டிண்டிமா(3) ராஜா அச்சு தராயர் பிரபாவங்கள் பற்றியும் காவியங்கள் இயற்றியுள்ளனர். கௌடா டிண்டிமா என்பவரும் இக்காலத்தைச் சேர்ந்த ஒரு சிறந்த புலவர் ஆவார். எந்த முரண்பட்டச் சச்சரவுக்குள்ளும் சிக்காமல் இவர்களுள் ஒரு டிண்டிமா பட்டா தான் தர்க்க சாஸ் திர கவிசிம்மத்துடன் வாதித்தார் என்பதாக எடுத்துக் கொள்வோம். மேலே கட்டுரைத் தலைப்பில் கொடுத்துள்ள ஶ்ரீதேசிகர் சஹஸ்ரநாமம் 706-ம் துதியே இதற்குச் சான்று! மேலும், வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் இந்த டிண்டிமா பட்டா, சுவாமி தேசிகர் காலத்துக்கு இரு நூற்றாண்டுகள் பிற்பட்டவர். மன்னன் சாளுவ நரசிம்மனு டன் தொடர்புடையவர் என்றும் அறியப்படுகிறார்.
இந்த டிண்டிமா புலவர், தான் இயற்றிய ஶ்ரீராமர் சரிதத்தை கூறும் அபிநவராமாப் யுதயம் என்ற காவியமே மிகச் சிறந்தது எனத் தற்பெருமை அடித்துக் கொண்டு, அகங்காரத்துடன் நடந்து கொண்டார். ஒருமுறை ஶ்ரீரங்கம் சென்றவர் சுவாமி தேசி கரிடம் தனது நூலைக் காட்டிப் பீற்றிக் கொண்டார். சூடான வாதப் பிரதிவாதமும் நடந்தது. நூலை முழுதும் ஆராய்ந்துவிட்டுத் தன் அபிப்பிராயத்தைச் சொல்வதாகத் தேசிகர் கூறிவிட்டார். அந்தப் புலவர் திரேதாயுத நாயகன் ஶ்ரீராமனின் மீது காவியம் இயற்றியிருந்தார் என்றால், தேசிகரோ, துவாபரயுக நாயகன் ஶ்ரீகிருஷ்ணனின் லீலை களைச் சுவைபடக் கூறும், 24சர்க்கங்கள் கொண்ட யாதவாப்யுதயம் கிரந்தத்தை ஒரே இரவில் இயற்றிக் காட்டினார்.
கிரந்தத்தின் ஆரம்பமே அவரைப் புரட்டிப் போட்டுவிட்டது என்றால் அது மிகையா காது மங்கல ஸ்லோகத்தைப் படித்து, அதில் அடங்கியுள்ளத் தத்துவப் பொருளைப் புரிந்து கொண்டதும் அவரது சப்தநாடிகளும் ஒடுங்கி விட்டன. மேலும், ஆறாவது அத்தியாயம், சித்திரக் கவிப் பாடல்கள் அடங்கிய கோவர்தனக் கிரி அருமைப் பெரு மைகளைக் கூறும் சித்திரச் சர்க்கத்தைப் படித்ததும் அவரது தலைக் கனம் சிதறுக் காயைப் போல் சுக்குநூறாகத் தெறித்து விழுந்து விட்டது. அதன் நடையழகை முற் றிலும் உணர்ச்சிபூர்வமாக ரசித்துப் படித்தவர், அதுவே ஒரு தலைசிறந்த காவியம் என்று தீர்மானித்து மேலே என்ன சொல்வது எனப்புரியாமல் வாயடைத்துப் போனார் வீராவேசமெல்லாம் காற்றிழந்தப் பலூன் மாதிரி ஆகி, கூனிக்குறுகி, பெட்டிப்பாம்பாக மாறிவிட்டார். தேசிகரின் கிரந்தத்துக்கு முன் தனது காவியம் ஒரு பொருட்டேஅல்ல என்பதை நன்கு புரிந்து கொண்டவர், சுவாமிகளைச் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து, தன்னை மன்னித்தருளுமாறு வேண்டினார்………
அவர்களிடையே நடந்த செய்யுள் வடிவ விவாதம் இதோ.…
छित्वा सर्वाण्यरण्यान्यतिविषमलतागुल्मदुर्गाणि सद्यः
प्राप्तं मां पक्कणान्तं बत भषकततिर्भुक्कणैर्धिक्करोति ।
लज्जन्ते हन्तुमेनां मदकरटिघटाकुम्भपीठीविपाट-
क्रीडाधौरेयधारा मम खलु नखराः किं करोमि क्व यामि ।1।
சித்வா சர்வான் ஆரண்யான்யதி விஷமலதாகுல்ம துர்காணி சத்ய:
ப்ராப்தம் மாம் பக்கணாந்தம் பத பஷக: ததிர்புக்கணை அதிக்கரோதி|
லஜ்ஜந்தே ஹந்துமேனாம் மதகர(ட்)டிகடா கும்பபீடிவிபாட்
க்ரீடா தௌரேயதாரா மம களு நக்ரா: கிம் கரோமி க்வயாமி||
(சித்வா=அபாயகரம்,
விஷமலதாகுல்ம=மரம்,முள்செடிகொடி,சத்ய:=குறுக்கிடும்,
பத=பச்சாதாபம், பஷக:=நாய், ததிர்புக்கணை=புலையன் வீட்டைக் காவல் காக்கும்,
மதகர(ட்)டி= மதம் பிடித்தயானை,கடா கும்ப=பானைபோன்ற மத்தகம், தௌரேய
தாரா=கொஞ்சம் காயப்படுத்தி, களு=முறையிடு, நக்ரா:=நகம் )
அவர் தேசிகரிடம் செருக்குடன் சொல்கிறார்-அடர்ந்தக் காட்டுப் பாதையில், வெகு வேகமாக வழியில் குறுக்கிடும் மரம், முள் செடிகொடிகளை அகற்றியபடிவந்திருக்கி றேன். நடுவே, ஒரு புலையன் வீட்டைக் காவல் காக்கும் நாய் வடித்த சோற்றை வயிறு முட்டச் சாப்பிட்ட பிறகும், அதன் மீது பச்சாதாபப்படும் என்னைப் பார்த்துக் குரைக்கிறது. மதம் பிடித்த யானைகளின் மத்தகத்தை இந்தக் கூரிய நகங்களால் அனாயாசமாகக் கிழித்துச் சாகடித்திருக்கிறேன். இப்போது அதே நகங்களால் அல்ப சுவானம் ஒன்றைச் சிறிது கேலியாகக் காயப்படுத்தித் துவம்சம் செய்ய வெட்கப்படு கிறேன். ஐயகோ, என்ன செய்வேன் யாரிடம் போய் முறையிடுவேன்!
இங்கு,அவருடன் வாதிட்ட அதிமேதாவி, இறுமாப்பு மிக்கப் புலவர்களை மதம் கொண்ட யானைக்கு ஒப்பிடுகிறார். கூரிய நகங்கள் அவரது வாதத்திறமை, இலக்கி யப் புலமைக்கு உவமையாகச் சொல்லப்படுகின்றன. தேசிகரை மிகவும் மட்டம் தட் டிப் பேசுகிறார்.

प्राज्ञानामेव राज्ञां सदसि न सहते जल्पमल्पेतरेषां
क्षुद्रेष्वाक्षेपमुद्रां न खलु गणयते डिण्डिमः सार्वभौमः ।
भाङ्कुर्वद्भेककुक्षिंभरिषु भयभरोद्भ्रान्तभोगीन्द्रसुभ्रू-
भ्रूणभ्रंशी किमम्भःफणिषु पतगराट् संभ्रमी बंभ्रमीति ।2।
பிரக்ஞானாமேவ ராஞாம் சதஸி ந சக்தே ஜல்பமல்பேதரேஷாம்
க்ஷுத்ரேஷ்வ ஆக்ஷேபமுத்ராம் ந களு கணயதே டிண்டிம:சார்வபௌம:|
பாங்குர்வத பேக குக்ஷிம்பரிஷு பயபரோத் ப்ராந்த போகீந்த்ர சுப்ரூ
ப்ரூணப்ரம்ஷீ கிமம்ப: ஃபணிஷு பதகராட் சம்ப்ரமீ பம்ரமீதி||
(பிரக்ஞானாம்=பண்டிதர்கள், ஜல்பமல்பேதரேஷாம்=பல அர்த்தமற்றப் பேச்சுகள், க்ஷுத்ரேஷ்வ=வாதமிடும், களு=உண்மையில்/சும்மா, கணயதே=பொறுத்துக் கொள்வது, சார்வபௌம:=சாம்ராட், பா(ங்)=பளபளக்கும், பேக:= தவளை, குக்ஷிம் பரி=நேர்மை/ வயிறு நிரம்ப, பயபரோத்=அநேக பயங்கர, ப்ராந்த=தவறாக, போகீந்த்ர=பாம்பின் உடல், சுப்ரூ=சுபர்ணன், ப்ரூண=கருமுட்டை, ப்ரம்ஷீ=கொல்ல, அம்ப: ஃபணிஷு=தண்ணீர் பாம்பு, ஃபணிஷு==HOOD,பேட்டை, தொப்பி, பதகராட்= முழுங்கு, சம்ப்ரமீ=குழப்பத்தில் வட்ட மிடும், பம்ரம்=வண்டு)
பண்டிதர்கள் நிரம்பிய ராஜசபையில் தங்களை அதிமேதாவிகள், எல்லாம் அறிந்த சூரர்கள் என்று எண்ணிக்கொண்டு, பலதரப்பட்ட அர்த்தமற்ற முட்டாள்தனமான வாதங்களை வாய்க்கு வந்தபடி உளறி வைப்பவர்களின் நடத்தையைக் கவிசாம்ராட் டிண்டிமா என்கிற இந்தப் புலவன் சும்மா பார்த்துக் கொண்டு செவிடன் போலிருக்க மாட்டான்,சிறிதும் பொறுத்துக்கொள்ளவும் மாட்டான். சாமானிய மனிதர்கள் என்மீது வைக்கும் விமரிசனங்களுக்கு நான் ஏன் செவிசாய்க்கவேண்டும்? அழகிய பள பளக் கும் இறக்கைகளையுடைய சுபர்ணா (கருடன்) பெரிய பேட்டைகளுடைய அநேக பயங்கரப் பாம்புகள் மற்றும் அதன் கருமுட்டைகளை வயிறுமுட்டமுழுங்கியுள்ளான். அப்படிப்பட்டவன், வட்டமிடும் வண்டுபோல் குழப்பத்தில் மெய்மறந்துத் தவளையை உண்ணும் தண்ணீர்ப் பாம்பைக் கொல்வதில் நேர்மையாகப் பெருமைப் படுவானா?
என்று மேலும் இகழ்ந்து பேசுகிறான்.தன்னைப் பெரியதிருவடிக்கும், தேசிகரைத் தண் ணீர்ப் பாம்புக்கும் ஒப்பிடுவதைப் பாருங்கள்!
எவ்விதச் சலனமுமின்றி அவ்வளவையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஶ்ரீதேசிகர், பழத்தில் ஊசியேற்றுவது போல் புலவனுக்குத் தக்கப் பதிலடியும் கொடுத் தார்…. அவர் காட்டும் உவமையைப் பாருங்கள்!
स्पर्धन्तां सहजं नु कुञ्जरतया दिक्कुञ्जरैः कुञ्जरा
ग्राम्या वा वनवासिनो मदजलप्रस्विन्नगण्डस्थलाः ।
हा कालस्य विपर्ययं शृणु सखे प्राचीनपल्लीमल-
स्वादस्निग्धकपोलभित्तिरधमः कोलोऽपि संस्पर्धते ।३।
ஸ்பர்தந்தாம் சஹஜம் நு குஞ்சரதயா திக்குஞ்சரை: குஞ்சரா
கிராம்யா வா வனவாசினோ மதஜல ப்ரஸ்வின்ன கண்டஸ்தலா: |
ஹா காலஸ்ய விபர்யயம் ஸ்ருணு சகே ப்ராசீன பள்ளிமல
ஸ்வாதஸ்நிக்த கபோலபித்தி தம: கோலோ அபி சம்ஸ்பர்ததே ||
(ஸ்பர்த=போட்டி,சஹஜ்=சேர்ந்து, நு=எதுவாய் இருந்தாலும்,
குஞ்சரா=யானை/வேழம்
ப்ரஸ்வின்ன= வியர்வை, கண்டஸ்தலா=நெற்றி, விபர்யயம்=மாற்றம்/கோலம்
பள்ளிமல=கிராமத்துக் கழிவு ஓடை, ஸ்நிக்த=மூழ்கித் திளைத்து, கபோலபித்தி=
முகமெல்லாம், தம:=ஊதி,குழப்பி, கோலோ=பன்றி/ கேழல்/ வராகம்)
பட்டணத்தில் வாழும் பழக்கப் படுத்தப்பட்டப் பிராணியானாலும், காட்டில் வெறியு டன் அலையும் அபாயகரமான மிருகமானாலும் தங்களை மதம் பிடித்த,நெற்றியில் வியர்வை ஒழுகும் பலம் வாய்ந்த வேழம் என்று பீற்றிக் கொள்ளட்டும்; எண் திசை களைக் காக்கும் குஞ்சரங்களுடன் போட்டியிடட்டுமே! ஆனால் காலம் செய்யும் கோலத்தைக் கேள், தோழா! கிராமத்துக் கழிவுநீர் ஓடைச் சகதியில் சாவகாசமாக, உற்சாகமாய்த் தலை மூழ்கித் திளைத்துக் கும்மாளமிடும் வராஹங்கள் கூடதிக்கஜங் களுடன் போட்டிபோடத் துடிக்கின்றனவே, என்ன செய்வது?
To be continued…………………………………………………….
Santhanam Nagarajan
/ December 2, 2022அருமை!