கோயில் இல்லாத ஊர், அறிஞர் இல்லாத சபை பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post.11,501)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,501

Date uploaded in London – 3 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PART TEN OF ARAPPALEECHURA SATAKAM WITH LONDON SWAMINATHAN’S COMMENTARY

ஒன்று இல்லாமற் பயன்படாதவை

10.கோவில் இல் லாதவூர், நாசியில் லாமுகம்,

     கொழுநன் இல் லாத மடவார்,

  குணமதில் லாவித்தை, மணமதில் லாதமலர்,

     குஞ்சரம் இலாத சேனை,

காவல்இல் லாதபயிர், பாலர்இல் லாதமனை,

     கதிர்மதி யிலாத வானம்,

  கவிஞர்இல் லாதசபை, சுதிலயை இலாதபண்,

     காவலர் இலாத தேசம்,

ஈவதில் லாததனம் நியமம்இல் லாதசெபம்,

     இசை லவணம் இல்லா தவூண்,

  இச்சையில் லாதபெண் போகநலம், இவை தம்மின்

     ஏதுபலன் உண்டு? கண்டாய்!

ஆவியனை யாட்கிடம் தந்தவா! கற்பதரு

     ஆகும்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

      (இ-ள்.) ஆவி அனையாட்கு இடம் தந்தவர் – உயிரனைய

உமையம்மைக்கு மெய்யில் இடப்பங்கை அருளியவனே!, கற்ப தரு ஆகும்

– கற்ப தரு என உலகிற்குப் பயன்படுகிற எமது ……. தேவனே!. கோவில்

இல்லாதவூர் – திருக்கோயில் இல்லாத ஊரும், நாசி இல்லா முகம் – மூக்கு இல்லாத முகமும், கொழுநன் இல்லாத மடவார் – கணவன் இல்லாத பெண்களும், குணமது இல்லா வித்தை – நற்பண்பையூட்டாத கல்வியும்,

மணமது இல்லாத மலர் – நறுமணம் இல்லாத பூவும், குஞ்சரம் இல்லாத

சேனை – யானை இல்லாத படையும், காவல் இல்லாத பயிர் –

வேலியில்லாத பயிரும், பாலர் இல்லாத மனை – மழலைச் சிறுவர் இல்லாத இல்லமும், கதிர்மதி இல்லாத வானம் – ஞாயிறுந் திங்களும் உலவாத வானமும்கவிஞர் இல்லாத சபை –புலவர்கள் இல்லாத அவையும், சுதி லயை இலாத பண் – இசையுந் தாள

அளவும் இல்லாத சங்கீதமும், காவலர் இலாத தேசம் – அரசன் இல்லாத  நாடும்ஈவது இல்லாத தனம் – கொடையில்லாத பொருளும், நியமம் இல்லாத செபம் – ஒழுங்கு இல்லாத வழிபாடும், இசை லவணம் இல்லாத

வூண் – ஏற்ற அளவு உப்பில்லாத உண்டியும், இச்சை யில்லாத பெண்

போகம் – விருப்பமற்ற மங்கையின் இன்பமும், இவை தம்மின் – ஆகிய இவற்றால், ஏது பலன் உண்டு – என்ன நன்மை யுண்டு? கண்டாய்

     (க-து.) கோயில் இல்லாத வூர் முதலானவை பயனற்றவை.

xxxx

கோவில்கள்

தமிழர்களைப் போல கோவில்களைப் போற்றியோர் வேறு எவருமிலர் .

ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோபுர தரிசனம் கோடி புண்ணியம்கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற ஆன்றோர் மொழிகளைத் தமிழ் சிறுவர்களும் அறிவார்கள். அதை எல்லாம் வீட தமிழ் நாட்டில்தான் 40, 000 கோவில்கள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கானவை வானளாவிய கோபுரங்களை உடையன . பன்னிரு திருமுறைகளும் திவ்வியப் பிரபந்தமும்  கோவில்களால்  எழுந்த பாடல்களே . இன்று கோவில்கள் மூலம் பிழைப்போர் தொகையும் கோடி கோடியாகும் .

அச்சன்கோவில், நாகர்கோவில், வைத்தீஸ்வரன்கோயில், திருமலைக் கோயில்  என்று கோவில் பெயர்களிலேயே ஊர்கள் இருப்பதும் தென்னாட்டில்தான் .

xxxx

கணவன் இல்லாத பெண்கள்

இந்த வகைப் பெண்கள் முதலில் மேலை நாட்டில் மட்டுமே அதிகமாக இருந்தனர் . ஏனெனில் அ ங்கு விவாக ரத்து செய்து / divorce வாழும் பெண்களுக்கு அரசாங்கம் பணத்தை வாரி வழங்குகிறது. மேலும் பணக்காரர்களைக் கல்யாணம் கட்டி ,எட்டி உதைந்தால், ஜீவனாம்சம் alimony என்ற பெயரில், வேலை செய்யாமலே காசு பெற முடிகிறது . பல ஆண்கள் அவர்களைச் சுற்றி வட்டமிட்டு ஏமாறுவதில், அவர்கள் பல காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். இவ்வளவு இருந்தாலும் அவர்களுக்குப் பின்னால், முதுகுக்குப் பின்புறத்தில், ஆண்களும் பெண்களும் பேசும் ஏச்சுப் பேச்சுக்களால் அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் முகம் காட்ட முடிவதில்லை.

Xxxxx

நற்பண்பையூட்டாத கல்வி

அந்தக் காலத்தில் ஒருவரை மெத்தப் படித்தவர் என்று அறிமுகப் படுத்தினால் அவர்கள் அந்தக் கல்விக்கு ஏற்ற ஒழுக்கம் உடையவர் என்று அர்த்தம் . இதனால்தான் வள்ளுவனும்

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக. — குறள் 391  என்றான் .

மேலும் இப்போதெல்லாம் அறநெறிக் கல்வி moral education மிகவும் குறைந்துவிட்டது . கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகள் வன்முறை மற்றும், ஆபாச வீ டியோக்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர். ஆசிரியர்களின் ஒழுக்கமோ பத்திரிகைகளில் வரும் கைது செய்திகளில் news about arrests of teachers பிரதிபலிக்கிறது . இதையெல்லாம் எண்ணித்தானோ   குணமதில் லாவித்தை என்று அம்பலவாணர் இந்த சதகத்தில் கூறினார் போலும் !

Xxx

சந்திரன் இல்லா வானம், தாமரை இல்லாப் பொய்கை,

மந்திரி இல்லா வேந்தன், மதகரி இல்லாச் சேனை,

சுந்தரப் புலவர் இல்லாத் தொல்சபைசுதர்இல் வாழ்வு,

தந்திகள் இல்லா வீணைதனம் இலா மங்கை போல் ஆம்.

என்று விவேகசிந்தாமணியில் ஒரு அருமையான பாடல் உள்ளது. இந்த சதகத்தில் உள்ள. குழந்தைகள் இல்லாத வீடு, இன்பம் தராத மங்கை. முறையற்ற இசை, நிலவு இல்லாத வானம் ஆகியன இதிலும் உளது.

மதகரி இல்லாச் சேனை — மதம் பொருந்திய யானைகள் இல்லாத சேனையும்,     சுந்தரப் புலவர் இல்லாத் தொல்சபை — சிறந்த புலவர்கள் இல்லாத பழமையான சபையும்,     சுதர் இல் வாழ்வு — நல்ல மக்கள் பேறு இல்லாத வாழ்வும்,

Xxx

குறள் 66

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்

மழலைச் சொல் கேளாதவர்

[அறத்துப்பால்இல்லறவியல்மக்கட்பேறு]

என்று சொல்லும் வள்ளுவன் பத்து குறட்பாக்களில்  புத்திரப் பெரு பற்றி விளக்கிவிட்டான். இதே கருத்தைப் புறநானூற்றிலும் (168) காணலாம்

படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்

உடைப் பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்

குறுகுறு நடந்துசிறுகை நீட்டி,

இட்டும்தொட்டும்கவ்வியும்துழந்தும்,

நெய்உடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,

மயக்கு உறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே.

—-புறநானூற்றுப் பாடல் 168 . பாண்டியன் அறிவுடை நம்பி பாட்டு.

Xxxx

வள்ளுவனின் செக்சி Sexy  உவமை

இன்பம் தர முடியாத மங்கைகள் பற்றி வள்ளுவனும் அறிவான் ; அவன் பயன்படுத்தும் Sexy உவமையில் அது வருகிறது

குறள் 402

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று

[பொருட்பால், அரசியல், கல்லாமை]

Xxx

சூரிய சந்திரர்கள்

சூரியனும் சந்திரனும் எவ்வளவு முக்கியம் என்பதை சிலப்பதிகாரக்

கடவுள் வாழ்த்திலும் காண்கிறோம்

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-

கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்

அம் கண் உலகு அளித்தலான்.

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-

காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு

மேரு வலம் திரிதலான்.

Xxxx

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே  என்ற பழமொழி உப்பின் அவசியத்தைக் காட்டும் (லவணம் = உப்பு)

xxx

நேற்று வெளியிட்ட விளக்க உரையில் பர்த்ருஹரி நீதி சதகப் பாடல்களையும் கருத்திற்கொள்க

 –subham—

tags-கோவில், இல்லாத, கல்வி, சபை , புலவர் 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: