
WRITTEN BY B. KANNAN, Delhi
Post No. 11,502
Date uploaded in London – 3 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Part Two
மேலும் தொடர்கிறார்
बाह्यैर्वर्णाडम्बरैर्मा भ्रमन्तु
च्छित्वा गर्भाभ्यन्तरं शोधयन्तु ।
निर्णेतारो नीरसत्वेन को
डिण्डीराणां डिण्डिमानां च भेदः ।४।
பாஹ்யை வர்ணாடம்ப ரைர்மா ப்ரமந்து
ச்சித்வா கர்பாப்யந்தரம் ஷோதயந்து |
நிர்ணேதாரோ நீரசத்வேன கோ வா
டிண்டிராணாம் டிண்டிமாநாம் ச பேத: || (4)
(பாஹ்யை= வெளிப்பாடு/ அந்நியம், வர்ணாடம்ப=தரம் பொருந்திய, ரைர்மா=பண்பு, இயல்பு, ப்ரமந்து=மயங்கி, ச்சித்வா=பரிசீலனை, ஷோதயந்து=விளக்கம், நிர்ணே தாரோ= தீர்மானித்தல், நீரசத்வேன=குறைகளின்றி, டிண்டிராணாம்=நீர்க்குமிழி, டிண்டிமாநாம்= மத்தளம் பேத:= (இரண்டுக்குமுள்ள) வித்தியாசம்
(ஓரு பொருளின் புறத் தோற்றத்தைக் கண்டு மயங்கிவிடுதல் போற்றுதற்குரிய விஷயமல்லவே) ஒரு கிரந்தத்தை ஆராயும் விமர்சகர்கள் அது எடுத்துக் காட்டும் வெளிப்படையான இயல்பு, பண்புகளால் மட்டும் ஈர்க்கப்படாமல் அதில் அடங்கியி ருக்கும் சாராம்சம் எந்தக் குறைபாடு இன்றிச் சொல்லப் பட்டிருக்கிறதா என்பதையே தேட வேண்டும்- தொட்டால் உடையும் நீர்க்குமிழியா, தொடுவதால் நாதமெழுப்பும் மத்தளமா என அப்போதுதானே தெரியும்?
இப்படியாகத்தானே அவர்களிடையே கடுமையானச் சொற்போர் விவாதம் நடந்தது. சிங்கத்தின் முன் குள்ளநரி எதிர்த்துப் போராட முடியுமா? சுவாமிதேசிகரே முடிவில் வெற்றிவாகைச் சூட, தவறை உணர்ந்த டிண்டிமா கவி அவரிடம் சரணடைந்து, சுவா மியைப் போற்றிப் புகழ்ந்தார், இதோ இப்படித்தான்……
घोटीधाटीकठोरस्फुटविकटकथाटोपवाचाटकोटी-
कोटीराघाटपेटीपुटघटितमणीसङ्घसङ्घट्टिताङ्घ्रिः ।
खर्वीकुर्वन् सगर्वं जयति कविततेस्सर्वतन्त्रस्वतन्त्रो
वेदान्ताचार्यवर्यो विघटितजडधीसङ्कटो वेङ्कटेशः ।५।
கோடீதாடீ கடோரஸ்ஃபுடவிகடகதாடோப வாசாடகோடீ
கோடீராகாடபேடீ புடகடிதமணீ சங்கசங்கடிட தாங்க்ரி:|
கர்வீகுர்வந் சகர்வம் ஜயதி கவிததேஸ சர்வதந்த்ர ஸ்வதந்த்ரோ
வேதாந்தசார்யவர்யோ விகடித ஜடதீ சங்கடோ வேங்கடேச: ||
இப்பாடலில் புலவர் செய்யும் வார்த்தைஜாலம் நம்மை வியக்க வைக்கிறது! அவர் பயன்படுத்தியுள்ள மோனை அலங்கார அணி(ALLITERATION) செய்யுளைத் திரும்பத் திரும்பப் படிக்க வைக்கிறது என்பது என்னவோ, உண்மையே!
(கோடீதாடீ=குதிரைப் பந்தய சூதாட்டம், கடோர்=மும்முறம், ஸ்ஃபுட=தீவிரத்தைக் குறைக்க, விகடகதாடோப= சமாளிக்க முடியாத வாதாடுபவர், வாசாட=பேச்சுப் போட்டி,
கோடீ=மகுடம்,ராகாடபேடீ=பொருள் வைக்கும் பெட்டி, புடகடிதமணீ= பளபளக்கும்மணி, சங்கசங்கடிட=பிறருடன் மோதுதல், கர்வீகுர்வந்=காயப்படுத்தும் செயலை அகற்றுதல், சகர்வம்=மிகப்படுத்திய தற்பெருமை, கவிததேஸ=எல்லாம் அறிந்த, விகடித=பயமுறுத்தும், ஜடதீ =மந்தம்,முட்டாள்தனம்)
ஶ்ரீவேங்கடேச தவச்சீலரே! தாங்கள் பங்கேற்ற தர்க்க விவாத நிகழ்ச்சிகள் யாவும் குதிரைப் பந்தயத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பணயம் வைத்து விளையாடுவது போல் நீண்டுப் போய்க் கொண்டிருக்கும், அல்லவா! மும்முறமாய் கடுமையாக வாதம் செய்வோர் பலர் அதிமேதாவிகள், சமாளிக்க முடியாத அளவுக்கு விதண்டா வாதமிடுபவர்கள், சிலர் மந்தபுத்தியுடையோர், இவர்கள் அனைவரும் தற்பெருமை எனும் மின்னும் மகுடத்தைத் தங்கள் ”தலைப் பெட்டி” மேல் சூடியிருப்பதாகப் பீற்றிக் கொள்வர். இவர்களை வாதத்தில் வென்று, அவர்கள் அணிந்திருக்கும் செருக்குஎன்ற மகுடத்தை வீழ்த்தி, ஆணவம், ஆடம்பரம் மற்றும் வீண் கர்வத்தை அடக்கியுள்ளீர்! தாங்கள் கவிஞர்களுள் தலை சிறந்தவர். இதை அறிந்துகொள்ளாத இச்சிறியோனை மன்னித்து அருள்வீராக!” — எனக் கூறித் தன் கன்னங்களில் “பளார்பளார்” என்று அறைந்து கொண்டு சுவாமி தேசிகரைத் தண்டனிட்டார். பின்பு கீழ்கண்டவாறு போற்றித் துதித்தார்…..
द्विचतुष्पदपरिवर्तन-
गर्वितकविशरभगण्डभेरुण्डः ।
खण्डनखण्डनकविरिह
डिण्डिमकविगण्डडिण्डिमो जयति ।६।
த்வி சதுஷ்பத பரிவர்தன
கர்வித கவிஷரப கண்டபேருண்ட: |
கண்டந கண்டந கவிரிஹ
டிண்டிமகவி கண்ட டிண்டிமோ ஜயதி ||
(த்வி சதுஷ்பத=2 அல்லது4 சொற்களை மட்டும், பரிவர்தன= கையாண்டு, கர்வித கவிஷரப= கர்வமிக்க கவிகுஞ்சரம்,

கண்டபேருண்ட:=கண்டபேருண்ட விலங்கு*
கண்டந கண்டந=கன்னத்தில் போட்டுக் கொண்டு, கண்ட டிண்டிமோ= மத்தளம் தட்டுவது )
ஸ்வாமி! டிண்டிமா என்கிற இந்தப் புலவன் தன் அடாதசெயலுக்கு வருந்தி, மத்தளத் தைத் தட்டுவது போல் கன்னத்தில் அறைந்துகொண்டு தங்களிடம் மன்னிப்பு கோரு கிறான். நீங்கள் அதிசயக் கண்டபேருண்டா விலங்குப் பறவை(!) போன்றவர். தங்க ளுக்குத் தெரிந்த இரண்டு (அ) நான்குச் சொற்களை வைத்துக் கொண்டு கவிதையில் வார்த்தை ஜாலம் காட்டித் தங்களைப் பலமிக்கக் குட்டிச் சிங்கம், யானைக்குட்டி என இறுமாப்புடன் சுற்றி வரும் போலி கவிஞர்களின் மமதையை அடக்கி ஆளுபவர், நீங்கள்! உங்களுக்கு முன் நான் எம்மாத்திரம்?” எனக் கூறி சரணடைகிறான்.
*கண்டபேருண்ட=பயங்கர முகத்தையுடைய மகத்தான மந்திர தந்திரப் பலம் வாய்ந்த இரட்டைத் தலைக் கழுகு. மகேசன் கோபாவேச நரசிம்மரைச் சாந்தப்படுத்த எடுத்த ஷரபேஸ்வரர் வடிவம். தனது கூரிய வளைந்த நகத்தாலும்,அலகாலும் யானையைத் தூக்கிப் பிடித்திருக்கும். சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத் தைப் போல் நீண்ட மயிலிறகு போன்ற முடி கொண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப்பற்களும், யாளியைப் போன்ற உரு வமும் உடையவராகச் சித்தரிக்கப்படுகிறார்.
ஹோய்சால சாம்ராஜ்ஜியத்தின் அரசு சின்னமாக இருந்துள்ளது.
டிண்டிமா சர்வபௌமா அத்துடன் நிற்காமல் தேசிகர் மீது ஒருமங்கல ஸ்லோகத்தை யும் உடனுக்குடன் இயற்றி வணங்கினார். மிகவும் எளிமையான, விரைவில் புரிந்து கொள்ளக் கூடியச் சொற்களையே இங்குப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. தினமும் ஶ்ரீவேதாந்த தேசிகர் சஹஸ்ர நாமாவளியைச் சொல்லுகையில் இந்த ஸ்லோகத்தைக் கூறி முடிப்பது ஒவ்வொரு வைணவரின் கடமையில்ஒன்றாக விளங்குகிறது.
“वेदेसन्जत –खेदे मुनि जन वचने प्राप्त नित्यावमाने
संकीर्णे सर्व वर्णे सति तदनुगुन्णे निश्प्रमणे पुराणे |
मायावादे समोदे कलि कलुस वसत सुन्य वादे विवादे
धर्म त्राणाय यो भूत स जयति भगवान विष्णु घंटावतार !”||
வேதே சந்ஜத கேதே முனி ஜன வசனே ப்ராப்த நித்யாவமானே
சங்கீர்ணே சர்வவர்ணே சதி தத அநுகுன்ணே நிஷ்ப்ரமணே புராணே |
மாயாவாதே சமோதே கலி கலுச வசத சுன்ய வாதே விவாதே
தர்ம த்ராணாய யோ பூதஸ ஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார! ||
கேதே=தளர்வு,நலிவு, அநுகுன்ணே= பரிவர்த்தனை, நிஷ்ப்ரமணே=குழப்ப நிலை,
கலுச=திறமையற்ற, த்ராணாய =ரட்சிக்க, காப்பாற்ற
(எங்கு பார்த்தாலும் கொந்தளிப்பு, கொடுமை,திறமையற்றப் போக்கு என கலிகாலத்து இலட்சணங்கள் தெரிகின்றன.தவறான முறையில் வேதநெறிகள் விளக்கப்படுவதால் அவை தளர்வடைந்து அவதிக்கு உள்ளாகின்றன;அறிஞர்களின் அறிவுரைகள் புறக்க ணிக்கப் படுகின்றன; அனைத்து வகுப்புகளிலும் புனிதமற்றக் கலாச்சார பரிவர்த்த னைக் காணப்படுகிறது; இந்தக் குழப்பமானப் பின்னணியில் நமது புராண-இதிகாசங் கள் அதன் மகத்துவத்தைச் சிறிது சிறிதாக இழக்க ஆரம்பிக்கின்றன; வஞ்சகமும், சூழ்ச்சியும் தலைவிரித்து ஆடுகின்றன; ஆன்மிகம், ஒழுக்கநெறிகள் பின்னடைவைச் சந்திக்கின்றன; நாத்திகவாதம் தலைத்தூக்குவதைக் காணமுடிகிறது; இந்த இக்கட்டா னத் தருணத்தில் தான் ஶ்ரீவேதாந்த தேசிகர், தர்மத்தை நிலைநாட்டவும், தர்மசிந்த னையை ரட்சிப்பதற்காகவும் ஶ்ரீமந்நாராயணனின் ஓங்கி நாதமெழுப்பும் கண்டாமணி யின் மறுபதிப்பாய் இப்பூவுலகில் அவதரித்தார்; அதில் அவர் அடையும் வெற்றியின் பிரகாசத்தில் பிரமாதமாய் ஒளிர்கிறார். அப்படிப்பட்ட அவருக்கு நமது அநேக நமஸ் காரங்கள் உரித்தாகட்டும்! )
டிண்டிமாகவியின் ராகவாப்யுதயம் காவியத்தை விடச்சிறந்த யாதவாப்யுதயம் காப் பியத்தை நமக்கு அருளிய ஆச்சாரியன் வேதாந்ததேசிகரை வணங்கித் துதிப்போம்.
அடுத்து மற்றொரு விவாத நிகழ்வைக் காண்போம்.
—————————————————————————————————–
tags- டிண்டிமாகவி, ராகவாப்யுதயம் , யாதவாப்யுதயம், வேதாந்ததேசிக