
Post No. 11,504
Date uploaded in London – 4 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
சூடான ஐஸ்க்ரீம் (Hot Ice Cream) இருக்க முடியாது, கோகுலாஷ்டமியும் குலாம்காதரும், அப்துல்காதரும் அமாவாசையும் என்று தலைப்பிட்டாலும் பொருத்தம் இராது .முஸ்லீம் வெஜிட்டேரியன் என்று சொன்னாலும் ஆச்சர்யத்துடன் புருவத்தை உயர்த்துவார்கள் ; சுருங்கச் சொல்லின் பொருத்த மற்ற இரண்டு விஷயங்கள். இதை அறப்பளீச்சுர சதகம் பல எடுத்துக்கட்டுகளால் விளக்குகிறது
LONDON SWAMINATHAN’S NEW COMMENTARY ON VERSE 11 OF ARAPPALEECHURA SATAKAM
11. தகாத சேர்க்கை
பூததயை இல்லாத லோபிய ரிடத்திலே
பொருளைஅரு ளிச்செய் தனை!
புண்ணியம் செய்கின்ற சற்சன ரிடத்திலே
பொல்லாத மிடிவைத் தனை!
நீதியகல் மூடர்க் கருந்ததி யெனத்தக்க
நெறிமாத ரைத்தந் தன்னை!
நிதானம்உள உத்தமர்க் கிங்கிதம் இலாதகொடு
நீலியைச் சோவித் தனை!
சாதியில் உயர்ந்தபேர் ஈனர்பின் னேசென்று
தாழ்ந்துபர வச்செய் தனை!
தமிழருமை யறியாத புல்லர்மேற் கவிவாணர்
தாம்பாட வேசெய் தனை!
ஆதரவிலாமல்இப் படிசெய்ததென் சொலாய்?
அமல! எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அமல – குற்றம் அற்றவனே! எமது ……… தேவனே!, பூத
தயை இல்லாத லோபிய ரிடத்திலே பொருளை அருளிச் செய்தனை –
உயிர்களிடம் இரக்கம் காட்டாத கஞ்சரிடத்திலே செல்வத்தைக்
கொடுத்தருனினை, புண்ணியம் செய்கின்ற சற்சனரிடத்திலே பொல்லாத
மிடி வைத்தனை – நன்மை புரிகின்ற நல்லோரிடம் கொடிய வறுமையைக் குடியாக்கினாய், நீதி அகல் மூடர்க்கு அருந்ததி எனத்தக்க நெறி
மாதரைத் தந்தனை – அறத்தின் நீங்கிய அறிவிலிகளிடம் அருந்ததி
போன்ற கற்புடைய காரிகையரைச் சேர்த்தாய், நிதானம் உள உத்தமர்க்கு இங்கிதம் இலாத கொடு நீலியைச் சேர்வித்தனை – அமைதியான நல்லோர்களுக்குக் குறிப்பறிந்து நடவாத கொடிய புரட்டியைக் (GHOST WOMAN NEELI) கூட்டிவிட்டாய், சாதியில் உயர்ந்த பேர் ஈனர் பின்னே சென்று தாழ்ந்து பரவச் செய்தனை – உயர்குடியிலே தோன்றியவர்கள் இழிந்தவரின் பின்போய் வணங்கிப் போற்றப் புரிந்தாய், தமிழ் அருமை அறியாத
புல்லர்மேல் கவிவாணர் தாம் பாடவே செய்தனை – தமிழின் இனிமையைக் காணாத கயவரைக் கவிஞர்கள் பாடுமாறு புரிந்தாய், இப்படி ஆதரவு இல்லாமல் செய்தது ஏன்? சொலாய்! – இவ்வாறு ஒருவர்க்கொருவர்
பற்றில்லாமற் பண்ணினது ஏன்? கூறுவாயாக.
XXX
. அருந்ததி -வசிட்டரின் மனைவி. கற்புக்கரசி. சங்க இலக்கியத்தில் பலமுறை குறிப்பிடப்படும் கற்புக்கரசி. வானத்தில் மீனாக/ நட்சத்திரமாகக் காட்சி (Northern Star) தருபவள்; அம்மி மிதித்தல் ,அருந்ததி காட்டல் என்ற இந்து மதத் திருமணச் சடங்கின் கதாநாயகி.
xxx
நீலி – வஞ்சகி. நீலியென்பவள் பழையனூரில் ஒரு
வணிகன் மனைவி. இவள் இறந்தபின் பேயானாள். கணவன் காஞ்சிபுரம்
செல்கையில் ஒரு கள்ளிக்கட்டையைக் குழவியாக்கிக்கொண்டு அவன்
மறுமண மனைவியைப்போல் வடிவமெடுத்துப் பின்தொடர்ந்தாள். அவன்
பேயென அஞ்சினான். காஞ்சியிற் சபையோர்முன் தான் அவன்
மனைவியென நம்பச்செய்தாள். அவர்கள் வணிகனுடன் அவளையும்
ஒருவீட்டில் இருத்தினர் கதவைத் தாழிட்டு அவனைக் கொன்று மறைந்தாள். இவளைப்பற்றிய முழுகே கதையையும் என்னுடைய கட்டுரையையிலும் தமிழ்நாட்டை உலுக்கிய பேய் என்ற என் புஸ்தகத்திலும் காணலாம் .
நல்ல குடியில் பிறந்தவர்கள் அரசியல் லாபத்துக்காகவோ பணத்துக்காகவோ ஆட்சியாளர்களுக்குத் துணை போவதை அறிவோம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இப்படி உயர் ஜாதியினர் அவர்களுடைய ஆட்சிக்கு உதவினார்கள் .
கவிஞர்களும் அறிஞர்களும் திடீரென்று சில அரசியல் தலைவர்களை புகழ்ந்து சர்ச்சைக்குள்ளாகின்றனர்.; அண்மைக்கலாத்தில் வாலி (TAMILPOET போன்றோர் மக்களின் நம்பிக்க்கையை இழந்ததைக் கண்டோம்
சில கவிஞர்கள் பொன்னாடைக்கும் அரசாங்க விருதுக்காகவும் ஆட்சியாளருக்கு ஜால்ரா போடுவதையும் இன்னும் பலர் VTICAN MONEY வாடிகன் தரும் கிறிஸ்தவ பணத்துக்காக கர்நாடக இசையை சீர்குலைத்ததையும் , சில பேச்சாளர்கள் இந்து மதத்தை இழித்தும் பழித்தும் பேசியதையும் பத்திரிக்கையில் படித்தோம். இதுகள் மேற்கூறிய பொருத்தமில்லாத சூடான ஐஸ்க்ரீம்கள் தகாத சேர்க்கை
பாரதி போன்ற உலகப் புகழ்பெற்ற கவிஞர்களை வறுமையில் வாடவிட்டு , எச்சிற் கையாலும் காகத்தை ஓட்டாத மக்களிடம் பணத்தைக் கோடிகோடியாக (கடவுள்??பூர்வ ஜென்ம புண்யம் ???) சேர்த்து வைத்ததையும் கண்டோம் .
இவ்வாறு பொருத்தமில்லாத விஷயங்களை இணைத்துப் பாடும் பாடல் ஒன்று விவேக சிந்தாமணியில் உண்டு
68. அறியமுடியாதது
அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கை தானும்,
பித்தர் தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதந்தானும்
அத்தன் மால் பிரம தேவ னாலள விடப்பட் டாலும்,
சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவர் இல்லை கண்டீர்.
அத்தி மரத்தில் மலரையும், வெள்ளை உடலை உடைய காக்கையும், பித்தர்களுடைய மனதையும், நீரில் வாடுகின்ற மீனின் பாதச்சுவடையும், பிரம்மாவும் பெருமாளும் காணமுடியாத சிவபெருமானின் முடியையும் அடியையும், காணமுடியாது. இவைகளை காண முடிந்தாலும் பெண்களின் மனதில் உள்ளதை அறிபவர் யாருமில்லை..
https://www.purnayogam.org/2020/05/blog-post.html
XXXX

. 69. பயனில்லாதன
திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி,
இரப்பர்க்கு ஈயாக்கைகள் இனிய சொல் கேளாக்காது,
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத்தேகம்,
இருப்பினும் பயனென் காட்டில் எரிப்பினும் பயனில்தானே.
https://www.purnayogam.org/2020/05/blog-post.html
XXXX
இறைவன் வாழும் திருத்தலங்களை – திருக்கோயில்களை – மிதிக்காத கால்கள், சிவனின் திருவடிவணங்காத தலை, இல்லையென்று கேட்பவர்க்குக் கொடாத கைகள், பெரியோர்களின் அன்பான இனிய சொற்களைக் கேளாத காதுகள், தன்னைக் காப்பவர்களுக்கு ஓர் ஆபத்து வந்து கண் கலங்கும் போது உயிரைக் கொடுத்தாவது காக்காத உடல், இருந்தாலும் சுடுகாட்டில் எரித்தாலும் பயனொன்றுமில்லை.
XXX
அற்பரின் இயல்பு பற்றி ஒரு பாடல்:
கதிர்பெறு செந்நெல் வாடக்
கார்குலம் கண்டு சென்று
கொதிதிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல், குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்;
நிதிமிகப் படைத்தோர்க்கு ஈவார்;
நிலை இலார்க்கு ஈயமாட்டார்.
மேகக் கூட்டம் நெற்பயிர்கள் வாடுவதைக் கண்டும் அப்பயிரிடையே மழையைப் பொழியாமல், அலைகள் வீசும் சமுத்திரத்தில் சென்று பெய்யும். அது போல நிறைந்த செல்வம் படைத்த செல்வந்தர், வறுமையால் வாடுபவர் முகத்தைப் பார்த்தும் அவருக்கு உதவமாட்டார். மிகுதியாகச் செல்வம் படைத்தவர்க்கே அளிப்பார்கள். இது அற்பர் இயல்பு.
இப்படிப் பட்டவரை மாற்றுவது சாத்யமா? இவர்க்கு எடுத்துச் சொன்னால் கேட்டுத் த்¢ருந்துவாரா? மாட்டார். திருத்த முடியாத ஈன ஜென்மங்கள் அவர்கள்.
நாய்வாலை அளவெடுத்து பெருக்கித் தீட்டின்
நற்றமிழை எழுத எழுத்தாணியாமோ?
பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்
பெரிய விளக்கேற்றி வைத்தால் வீடதாமோ?
தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்
சாற்ற்¢டினும் உலுத்தகுணம் தவிர மட்டான்;
ஈவாரை ஈயவொட்டான் இவனும் ஈயான்;
எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.
நாய்¢னது வாலை எழுத்தாணிக்குரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும் நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப் படுத்தி, அங்கு பெரிய விளக்கொன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட
மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது என்று சாடுகிறது பாடல்.
http://ninaivu.blogspot.com/2005/03/17.html
XXXX SUBHAM XXXX
tags- சூடான ஐஸ் க்ரீம் , பேய், பூதம் , அறப்பளீச்சுர சதகம்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்
CONTENTS
1.பேய்களை விரட்ட வெண் கடுகு!!
2.திருக்குறளில் பேய் நட்சத்திரம்! ஒரு அதிசயத் தகவல்!
3.சங்கத் தமிழ் இலக்கியத்தில் யக்ஷிணி, அணங்குகள்
4.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்!
5.புளியமரத்தை ஒடித்துவிட்டு ஓடிப்போன பேய் !
6.ஔவையாரை மிரட்டிய பேய் !
7.தமிழில் பூதம்! பேய்!! பிசாசு!!!
8.அதர்வண வேதத்தில் பேய்கள் பட்டியல்
9.சிந்து சமவெளியில் பேய் முத்திரை
10.ராக்பெல்லரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும்
11.பூதம் உருவாக்கிய பயங்கர எழுத்தாளி மேரி ஷெல்லி
12.பிரிட்டனின் பேய்க்கதை மன்னன் எம்.ஆர். ஜேம்ஸ்
13.யக்ஷப் ப்ரஸ்னம்:123 கேள்விகள்- பகுதி-1
14.யக்ஷப் ப்ரஸ்னம்–பகுதி-2
15.யக்ஷப் ப்ரஸ்னம் பகுதி- 3
16.யார் இந்த மர்ம தூதர்கள் ?
17.யோகிகள் தீப் பிழம்பாக மாறும் அதிசயம்!
18.பேய்கள் பற்றி பாரதி & விவேகானந்தர்
19.புளியமரத்தில் பேய்கள் வசிப்பது ஏன்? ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
XXXX