
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,503
Date uploaded in London – 4 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாச பஜனம்!
ச. நாகராஜன்
1) வாச பஜனம்
வாக்கினால் செய்யப்படும் வழிபாடு வாச பஜனம் எனப்படும்.
இது நான்கு வகைப்படும். 1) சத்யம் 2) ஹிதம் 3) ப்ரியம்
4) ஸ்வாத்யாயா
சத்யம் ப்ரியம் ஹிதம் ஸ்வாத்யாய: |
சர்வதர்சன சஹஸ்ரக:
உண்மை பேசுதல், இதமாகப் பேசுதல், ப்ரியமாகப் பேசுதல், சாஸ்திரங்களைக் கற்றுணர்தல்
இந்த நான்கும் வாக்கினால் செய்யப்படும் வழிபாடு எனப்படும்.
2) வானப்ரஸ்தம்
முதுமையில் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒதுங்குதல் வானப்ரஸ்தாஸ்ரமம் எனப்படும். இது மனித வாழ்க்கையில் மூன்றாவது ஆஸ்ரமம் ஆகும்.
இது நான்கு வகைப்படும். 1) வைகானஸம் 2) ஔதும்பரம் 3) வாலகில்யம் 4) பேனபா
வனஸ்தா அபி சதுர்விதா: – வைகானஸ- ஔதும்பரோ – வாலகில்ய: பேனபாஸ்சேதி |
– நாரதபரிவ்ராஜகோபநிஷத்
ஒய்வு பெற்ற முது நிலையில் வானப்ரஸ்தம் விதிக்கப்பட்டுள்ளது. 50 முதல் 75 வயது வரை எப்போது வேண்டுமானாலும் ஒருவர் இந்த ஆஸ்ரமத்தை மேற்கொள்ளலாம். வானப்ரஸ்தம் என்றால் வனத்தில் அல்லது காட்டில் வசிப்பது என்று பொருள் படும்.
இதைப் பற்றி விரிவாக ஶ்ரீமத் பாகவதத்தில் காணலாம். (3.12.43)
இதை மேற்கொண்டவர்கள் பின்னர், நான்காவது ஆஸ்ரமமான சந்யாஸ ஆஸ்ரமத்தை மேற்கொள்வர்.
முதலில் இந்த வானப்ரஸ்தம் மனைவியுடன் தொடங்குகிறது. இருவரும் சேர்ந்தே வனத்தில் பயணிப்பர். ஒரு சிறிய குடிசையில் வசிப்பர். புனித தலங்களுக்கு யாத்திரை செய்வர். செக்ஸ் என்பது இருக்காது. பின்னால் மனைவி தனது இல்லம் திரும்புவார். தனது புத்திரர்களின் பராமரிப்பில் வசிப்பார்.
இதைப் பற்றிய நீண்ட விவரணத்தை ஶ்ரீமத் பாகவதத்தில் காணலாம்.

3) கலியுகத்தில் வெற்றி யாருக்கு?
அதர்மம் ஓங்கி இருக்கும் யுகம் கலி யுகம்.
இதில் தர்மத்தை அதர்மம் ஜெயிக்கும்.
சத்யத்தை அஸத்யம் வெல்லும்.
ராஜாவானவன் வேலைக்காரனால் வெல்லப்படுவான்.
ஆண்களை பெண்கள் வெல்வார்கள்.
தர்மோ ஜிதோ ஹ்ராதர்மேண ஜித: சத்யோன்ருதேன ச |
ஜிதா ப்ருத்யைஸ்து ராஜான: ஸ்தீரிபிஸ்ச புருஷா ஜிதா: ||
4) செல்வத்தின் வகைகள்
செல்வம் நான்கு வகைப்படும்.
1) ஸ்வார்ஜிதம் 2) பிதுரார்ஜிதம் 3) ப்ராத்ருவித்தம் 4) ஸ்தீரிவித்தம்
உத்தமம் ஸ்வார்ஜிதம் வித்தம் மத்யமம் பிதுரார்ஜிதம் |
கனிஷ்டம் ப்ராத்ருவித்தம் ச ஸ்தீரிவித்தம் மத்யமாத்யமம் ||
– சுபாஷிதரத்னபாண்டாகாரம் 160/319
–
இதில் தானாக சம்பாதிக்கும் செல்வம் ஸ்வார்ஜிதம். இது உத்தமம் எனப்படுகிறது. அடுத்து தந்தை வழியே வருவது மத்யமம் எனப்படுகிறது. அடுத்து சகோதரனின் செல்வத்தை அடைவது அதமம். ஸ்தீரி மூலமாகப் பெறப்படும் செல்வம் எல்லாவற்றையும் விட அதமம் ஆகும்.
5) வித்தை நான்கு வகைப்படும்
வித்தையானது நான்கு வகைப்படும்.
1) ஆன்விக்ஷ்கி 2) த்ரயீ 3) வார்த்தா 4) தண்டநீதி என்று இவ்வாறு அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.
ஆன்விக்ஷ்கி என்றால் தத்துவம் என்று பொருள்
த்ரயீ என்றால் மூன்று வேதங்கள் என்று பொருள். ரிக், யஜுர், சாம வேதம் ஆகிய மூன்றையும் கற்று உணர்தல்.
வார்த்தா என்றால் பொருளாதாரம் – Economicis
தண்ட நீதி என்றால் அரசியல் – Politics – என்று பொருள்.
ஆன்வீக்ஷிகீ த்ரயீ வார்த்தா தண்டநீதிஸ்சேதி வித்யா:
அர்த்த சாஸ்திரம் 1.2.1
6) வீணாகப் போகின்றவை நான்கு
சமுத்ரேஷு வ்ருஷ்டி:
கடலில் மழை : கடலில் மழை பெய்து யாருக்கு லாபம்? அது வீண் தான். நிலத்தில் பெய்தால் விளைச்சல் உண்டாகும்.
த்ருப்தஸ்ய போஜனம்
ஏற்கனவே நன்கு சாப்பிட்ட ஒருவருக்கு உணவு அளிப்பது.
சமர்தஸ்ய தானம்
நல்ல திறமை உள்ள ஒருவனுக்குக் கொடுக்கப்படும் தானம்.
திவா தீபா
விளக்கை பகல் நேரத்தில் எரிப்பது.
இந்த நான்கும் வீணே.
வ்ருதா வ்ருஷ்டி: சமுத்ரேஷு வ்ருதா த்ருப்தஸ்ய போஜனம் |
வ்ருதா தானம் சமர்தஸ்ய வ்ருதா தீபோ திவாபி ச ||
இப்படி நான்கு நான்காக உணர்ந்து கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன.
***