
Post No. 11,516
Date uploaded in London – 7 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
அறப்பளீசுர சதகம் இயற்றிய அம்பலவாண கவிராயர் ஒரு புது உத்தி (CCTV CAMERA) கண்டுபிடித்துள்ளார். ஒரு ஆள் இந்திரன் போல் புகழ்பெற்றவரா அல்லது உயர் நிலையில் உள்ள சிவன் போலப் புகழுடையவரா என்று அறிய அவர் ஒரு எடைபோடும் மிஷின் அல்லது CCTV காமெரா வைத்துள்ளார். நீங்கள்
10 பேருக்கு உதவினால் தேவன்
100 பேருக்கு உதவினால் இந்திரன்
1000 பேருக்கு உதவினால் பிரம்மா
10,000 பேருக்கு உதவினால் விஷ்ணு
எல்லோருக்கும் எப்போதும் உதவினால் சிவ பெருமான்
யார் உதவியையும் நாடாமல் தனக்குத் தானே வாழ்ந்து கொள்பவன் நல்ல மனிதன்
ஆகையால் கொல்லி மலை வாழ் சதுரகிரி உறை வாசனாகிய சிவனைப் போற்றும் அம்பலவாண கவிராயர் வைத்திருக்கும் சி சி டிவி CCTV Camera காமெரா உங்களை படம்பிடித்துக் கொண்டு இருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
14. மேன்மேல் உயர்ச்சி
தன்மட்டில் இரவாது சீவனம் செய்பவன்
சாமர்த்தியம் உளபுருடன் ஆம்
சந்ததம் பதின்மரைக் காப்பாற்று வோன்மிக்க
தரணிபுகழ் தருதேவன் ஆம்.
பொன்மட்டி லாமலீந் தொருநூறு பேரைப்
புரப்பவன் பொருவி லிந்த்ரன்,
புவிமீதில் ஆயிரம் பேர்தமைக் காப்பாற்று
புண்யவா னேபிரமன் ஆம்
நன்மைதரு பதினா யிரம்பேர் தமைக்காத்து
ரட்சிப்ப வன்செங் கண்மால்,
நாளுமிவன் மேலதிகம் ஆகுவெகு பேர்க்குதவு
நரனே மகாதே வன் ஆம்,
அன்மட்டு வார்குழலி பாகனே! ஏகனே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அல் மட்டுவார் குழலி பாகனே – இருள் போலக்
கருநிறமான, மணமிக்க, நீண்ட கூந்தலையுடைய உமையம்மையாரை
இடப்பாகத்தில் உடையவனே!, ஏகனே – தனி முதல்வனே!, அண்ணல் –
தலைமையிற் சிறந்தவனே, எமது……….தேவனே!, இரவாது தன்மட்டில்
சீவனம் செய்பவன் சாமர்த்தியம் உள புருடன் ஆம் – (பிறரை) நாடாமல்
தன்வரையில் வாழ்க்கை நடத்துவோன் திறமுடைய ஆடவனாவான்,
சந்ததம் பதின்மரைக் காப்பாற்றுவோன் மிக்க தரணி புகழ்தரு தேவன்
ஆம் – எப்போதும் பதின்மரை ஆதரிப்போன் இவ்வுலகு புகழும் சிறந்த அமரன் ஆவான், மட்டிலாமல் பொன் ஈந்து ஒரு நூறுபேரைப் புரப்பவன்
பொருஇல் இந்திரன் – அளவின்றிப் பொருள் கொடுத்து நூறுபேரைக்
காப்பாற்றுவோன் ஒப்பற்ற இந்திரன் ஆவான், புவிமீதில் ஆயிரம்பேர்
தமைக் காப்பாற்று புண்ணியவானே பிரமன் ஆம் – உலகில் ஆயிரவரை
ஆதரிக்கும் அறத்தலைவனே நான்முகன் ஆவான், நன்மைதரு
பதினாயிரம் பேர்தமைக் காத்து ரட்சிப்பவன் செங்கண்மால் – நன்னெறி
செல்லும் பதினாயிரம்பேரைக் காப்பாறியருள்வோன் செந்தாமரைக் கண்ணனான திருமால் ஆவான், நாளும் இவன்மேல் அதிகமாக வெகுபேர்க்கு உதவும் நரனே மகாதேவன் ஆம் – எந்நாளும்
அவனைவிட மிகுதியாக அளவற்றவர்க்குக் கொடுக்கும் மனிதனே
மகாதேவன் ஆவான்.
xxxx

இதை ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகத்துடன் ஒப்பிடலாம்
ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒருவரைத் தியாகம் செய்யத் தயாராக இரு; ஒரு கிராமத்தைக் காக்க ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்; ஒரு ராஜ்யத்தைக் காக்க ஒரு கிராமத்தைத் தியாகம் செய்; ஒருவனின் ஆன்ம முன்னேற்றத்திற்காக உலகையே தியாகம் செய்!
த்யஜேதேகம் குலஸ்யார்தே க்ராமஸ்யார்தே குலம் த்யஜேத் |
க்ராமம் ஜனபதஸ்யார்தே ஹ்ருதாத்மார்தே ப்ருதிவீம் த்யஜேத் ||
त्यजेत् कुलार्थे पुरुषं ग्रामस्यार्थे कुलं त्यजेत् |
ग्रामं जनपदस्यार्थे आत्मार्थे पृथिवीं त्यजेत् ||
renounce one person for the sake of the family,
a family for the sake of village;
village for the sake of country and
even the [kingdom of] earth for one’s own sake.
இதில் வரும் கணக்கு
ஒரு குடும்பத்துக்காக ஒரு மனிதன் பலி
ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பம் பலி
ஒரு நாட்டுக்காக ஒரு கிராமம் பலி
ஆன்ம முன்னேற்றத்துக்காக ஆசை அனைத்தையும் பலி கொடு
பெரியோர்கள் வெவ்வேறு அளவுகோலை, எடைபோடும் எந்திரத்தைப் பயன்படுத்துவதை இது காட்டுகிறது.
Xxxx
வாதக்கோன், வையக்கோன், ஏதக்கோன்: யார் நல்லவர்? (கட்டுரை எண்.2816)
Written by london swaminathan
Date: 16 May 2016; Post No. 2816
ஒரு ஊரில், வாதக்கோன், வையக்கோன், ஏதக்கோன் – என்று மூன்று பேர் வசித்தனர். சிலர் அவர்களிடம், ஒரு நல்ல காரியம் செய்ய நன்கொடை வசூலிக்கச் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் என்னதெரியுமா சொன்னார்கள்?
வாதக்கோன் நாளை என்றான், வையக்கோன் பின்னையென்றான்
ஏதக்கோன் யாதொன்றும் இல்லை என்றான் – ஓதக் கேள்
வாதக்கோன் நாளையினும் வையக்கோன் பின்னையினும்
ஏதக்கோன் இல்லை இனிது
பொருள்:
நாளைக்கு வா, தருகிறேன் என்றான் வாதக்கோன்; மறு நாள் போனபோதும் நாளைக்கு வா, தருகிறேன் என்றான்; இப்படி நாட்கள் உருண்டோடின.
கொஞ்சம் நேரம் கழித்து வாருங்கள், தருகிறேன் என்றான் வையக்கோன்; சிறிது நேரம் கழித்துச் சென்றால், ஐயா, வெளியே போய்விட்டார்- என்று மனைவி சொன்னாள்; மாலை நேரத்தில் சென்று பார்த்தால், ஐயா, இப்பொழுதுதான் போன் செய்தார்; அவசர ஜோலியாக வெளியூர் செல்வதாக; எப்பொழுது திரும்பிவருவார் என்று சொல்லவில்லை என்றாள் மனைவி.
ஏதக்கோன் வீட்டுக்கு, நன்கொடை கேட்கச் சென்றபோது, இதோ பாருங்கள், இந்த மாதிரிப் பணிகளுக்கெல்லாம் நான் நன்கொடை கொடுப்பதுமில்லை; அந்த அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை என்றான்.
இந்த மூன்று ஆட்களில் இல்லை என்று சொன்னானே ஏதக்கோன்; அவன்தான் நல்லவன் – என்கிறார் அவ்வையார்.
xxxx
உத்தமன் யார்? மத்யமன் யார்? அதமன் யார்? (Post No.2894)

Written by London swaminathan
Date: 14 June 2016; Post No. 2894
நல்லவன் யார்?
மீண்டும் மீண்டும் இடையூறு வரினும் எடுத்த காரியத்தை முடிப்பவனே (உத்தமன்) சிறந்தவன்.
சிலர், ஒரு வேலையைத் துவக்கியபின்னர், இடையூறு வந்தால் அதை விட்டு விடுவார்கள். இவர்கள் (மத்யமன்) இடைப்பட்ட நிலையிலுள்ளவர்கள்.
இடையூறு வரும் என்று பயந்துகொண்டு வேலையையே துவங்கமாட்டார்கள் கீழ்நிலையிலுள்ளவர்கள் (அதமன்).
ப்ராரப்யதே ந கலு விக்னபயேன நீசை:
ப்ராரப்யதே விக்னவிஹதா விரமந்தி மத்யமா:
விக்னைர் முஹுர்முஹுர் அபி ப்ரதிஹன்யமானா:
ப்ராரப்தம் உத்தமகுணா ந பரித்யஜந்தி
அறிஞர்களின் அளவுகோல்கள் வெவ்வேறு என்பதை அறிய மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் உதவும்
—subham—
Tags- உதவி 100 பேர், 1000 பேர், இந்திரன், பிரம்மா, திருமால், அம்பலவாணர் , அறப்பளீ