முதல் ‘சீட்’ SEAT யாருக்கு? அறப்பளீசுர சதகம் (Post No.11,528)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,528

Date uploaded in London – 10 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

மஹா வீரன் யார் , மஹா தியாகி யார், மஹா வள்ளல் யார், மஹா நண் பன்  யார் என்று  புதிய விளக்கம் தருகிறார் அம்பலவாணர்.

முதல் வரிசையில் எந்த ‘சீட்’?

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹ்யூஜஸ் என்பவரை நியூயார்க் நகர பத்திரிகையாளர்கள் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தனர். அதே விருந்துக்கு பல வெளிநாட்டு ராஜ தந்திரிகளும் அழைக்கப்பட்டி ருந்தனர். மந்திரியை எந்த இடத்தில் உட்கார வைப்பது என்பது அறியாது அவர்கள் திகைத்தனர். இதற்கு நல்ல தீர்வு, அவரிடமே கேட்பதுதான் என்று எண்ணி, தயங்கித் தயங்கி, அவரிடமே போய்க் கேட்டும் விட்டனர். இதற்குக் காரணம் அப்போதுதான் பத்திரிக்கைகளில், இடம் பற்றிய சர்ச்சை, வரிசை அறிந்து ஒழுகாமை என்பதெல்லாம் காரசாரமாக விவாதிக்கப்பட்டன.

சங்க காலப் புலவர்களில் பலர், மன்னர்கள் தங்களுக்கு முதல் மரியாதை செய்ய வில்லை என்று கோபித்துக்கொண்டு பாடிய பாடல்கள் புற நானூற்றில் உள்ளன. வரிசை அறிந்து ஒழுகல் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்தது.

“மாண்புமிகு அமைச்சரே! உங்களுக்கு முதல் வரிசையில் இடம் போடுகிறோம். எந்த இடத்தில், யாருக்கு அருகில் உங்களுக்கு இடம்போடுவதை நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று பத்திரிக்கையாளர்கள், மரியாதை கலந்த தொனியில், கேட்டனர்.

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்:

“நான் முதலில் இருக்க விரும்புவது ஒரே இடத்தில்தான்; தீவிபத்து ஏற்பாட்டால், முதலில் நிற்க (வெளியே ஓடுவதற்காக) விரும்புவது நான்தான். மற்ற இடங்களில் எங்கே இடமிருந்தாலும் பரவாயில்லை.”

வரிசை அறிதல்  என்பதன் முக்கியத்துவத்தையும் புலவர் பாடுகிறார். கிராமப்புற கோவில்களில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் நடக்கும் மோதல்கள் பற்றி நாம் அடிக்கடி நாளேடுகளில் படிக்கிறோம். சங்க காலத்தில் மஹாசித்ரன் / பெருஞ்சித்திரனார் என்று ஒரு புலவர் இருந்தார். அவர் தன்னை மதிக்காத வள்ளலை ஏசிவிட்டுப் பாரிஸில் பெறாமலே சென்றார். உரிய மரியாதை கொடுக்காவிடில் தமிழர்கள் சீறி ப் பாய்வார்கள்..

வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்

      மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்

      முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்

வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்

      வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்

சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்

      திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே. 

என்று உலகநீதி எழுதிய உலகநாதர் கூறுவார்.

XXXX

இப்போது சதகப்பாடலைக் காண்போம்

17. நல்லோர் – 2

அடைக்கலம் எனத்தேடி வருவோர் தமைக்காக்கும்

     அவனே மகாபுரு டனாம்;

  அஞ்சாமல் எதுவரினும் எதுபோ கினும்சித்தம்

     அசைவிலன் மகாதீ ரனாம்;

தொடுத்தொன்று சொன்னசொல் தப்பாது செய்கின்ற

     தோன்றலே மகரா சனாம்;

  தூறிக் கலைக்கின்ற பேர்வார்த்தை கேளாத

     துரையே மகாமே ருவாம்!

அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த் திரட்சிக்கும்

     அவனே மகாதியா கியாம்;

  அவரவர் தராதரம் அறிந்துமரி யாதைசெயும்

     அவனே மகாஉசி தன்ஆம்;

அடர்க்கின்ற முத்தலைச் சூலனே! லோலனே!

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

xxxx

     (இ-ள்.) அடர்க்கின்ற முத்தலைச் சூலனே – (பகைவரைக்)

கொல்லுகின்ற முத்தலைச் சூலம் ஏந்தியவனே!, லோலனே – திருவிளையாடல்

புரிகின்றவனே!, அமலனே – குற்றம் அற்றவனே!, அருமை ………. தேவனே!,

அடைக்கலம் எனத் தேடிவருவோர் தமைக் காக்கும் அவனே மகாபுருடன்

ஆம் – அடைக்கலம் என்று தேடிவருவோர்களைக் காப்பாற்றுவோன் மக்களிற் சிறந்தவன், அஞ்சாமல் எதுவரினும் எதுபோகினும் சித்தம்

அசைவு இலன் மகாதீரன் ஆம் – எது வந்தாலும் எதுபோனாலும் அச்சம் இன்றி உள்ள உறுதியுடன் இருப்பவன் பெருவீரன், என்று தொடுத்துச் சொன்ன சொல் தப்பாது செய்கின்ற தோன்றலே மகராசன் ஆம் –

ஒன்றைப்பற்றிக் கூறிய சொல்லை நழுவவிடாமல் செய்கின்ற தலைவனே பேரரசன், தூறிக் கலைக்கின்ற பேர் வார்த்தை கேளாத துரையே மகாமேருஆம் – வீண்பழி தூற்றி மனத்தைக் கலைப்பவரின் சொல்லை நம்பாத செல்வனே மாமேரு மலை, அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த்து இரட்சிக்கும் அவனே மகா தியாகி ஆம் – தன்னைச் சார்ந்தோர்க்கு வருந் துன்பத்தை நீக்கிக் காப்பவனே பெரிய வள்ளல், அவரவர் தராதரம் அறிந்து மரியாதை செயும் அவனே மகா உசிதன்ஆம் – ஒவ்வொருவருடைய தகுதியையும் பார்த்து மதிப்புக் கொடுக்கின்றவனே சிறந்த தகவாளன்.

xxxx

அடைக்கலம் நாடி வந்தவர்களைக் காப்போரும் , என்ன நேரிட்டாலும், என்ன கஷ்டம் வந்தாலும், மனம் கலங் காதவர்களும் மகா தீரர்கள் ஆவர்.

ஒரு விஷயத்தை ஆரம்பித்தபின்னர் அதன்படியே, சொன்ன சொல் தவறாமல் நடப்பவனே மகாராஜா என்று உலகோரால் போற்றப்படுவான். அதாவது முதலில் சொன்னதைச் செய்யாமல் தப்பிக்க சாக்குப்போக்கு தேடாமல் சத்தியத்தைக் கடைபிடிப்பவனை ‘ராஜா’வே என்று உலகம் பாராட்டும்.

பிறர் பேச்சைக் கேட்டு தவறு செய்யாதவர்கள் மேரு மலை போன்று உயர்ந்தோர் ஆவர் . குன்றிலிட்ட விளக்கு போல பிரகாசிப்பர்.

தன்னை அடுத்து வாழ்பவர்கள் , தனக்குத் தெரிந்தவர்கள் ஆகியோர் கஷ்டப்படுகையில் வலியச் சென்று உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுபவன் தியாகி ஆவான் .

ஒவ்வொருவருடைய தகுதி, தரம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு அவர்களுக்குரிய மரியாதை செய்பவன் எல்லோருக்கும் நண்பன் ஆவான்.

XXX

ராமாயணத்தில் சரணாகதி /அடைக்கலம்  தத்துவம்

என்னைச் சரணடைந்தவனைக் காப்பேன்; இது என் கொள்கை என்கிறான் ராமன் . யுத்த காண்டப் பாடல் இதோ :

सकृद् एव प्रपन्नाय तव अस्मि इति च याचते ||६-१८-३३

अभयम् सर्व भूतेभ्यो ददामि एतद् व्रतम् मम |

ஸக்ருத் ஏவ பிரபன்னாய தவ அஸ்மி இதி ச யாசதே

அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் விரதம் மம -6-18-33

அடைக்கலம் கொடு என்று ஒரே ஒரு முறை இறைஞ்சி என்னை அணுகினாலும் அவருக்கு எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு வழங்குவேன் இது என்னுடைய விரதம் 

XXX

கம்பனும் இதை அப்படியே கூறுவான் ; அடைக்கலம் தராதோனுக்கு நரகம்தான் கிடைக்கும் என்று ராமபிரான் வாய்மொழியாக கம்பன் உரைக்கிறான்

வீ டணன் அடைக்கலப் படலம்

6478.

உய்ய, ‘நிற்கு அபயம்!” என்றான் உயிரைத் தன்உயிரின் ஓம்பாக்

கய்யனும்ஒருவன் செய்த உதவியில் கருத்திலானும்,

மய் அறநெறியின் நோக்கிமா மறை நெறியில்நின்ற

மெய்யினைப் பொய் என்றானும்மீள்கிலா நரகில்வீழ்வார்.

 நான் உய்யுமாறு உன்னைச்சரண்புகுந்தேன்   என்று   வந்த ஒருவனுடைய; உயிரினைத்

தன்னுயிராகக் கருதிப் பேணிக்காப்பாற்றாத கீழ்மகனும்;  ஒருவன் செய்த உதவியில்  கருத்தில்லாது

மறந்தவனும்;    குற்றம் நீங்க  சிறந்த வேதநெறிப்படி நின்றொழுகும்; உண்மை நெறியைப்

பொய் என்று கூறுபவனும்; மீண்டு   வரமுடியாத   கொடிய நரகத்திலே வீழ்ந்துதுன்புறுவார்.

xxx

6609. ஆதலான்,”அபயம்” என்ற போதத்தே அபய தானம்

ஈதலே கடப்பாடு என்பது; இயம்பினீர் என்பால் வைத்த

காதலான்; இனி வேறு எண்ணக் கடவது என்? கதிரோன் மைந்த!

கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி’என்றான்.         6.4.118

ஆதலால் ஒருவன் அடைக்கலம் என்று வந்து அடைந்தபோதே அடைக்கலம் அளிப்பதே என் கடமை — என்று ராமன் திட்டவட்டமாக  அ றிவிக்கிறான்

1800 ஆண்டுகளுக்கு முன்னரே   யூதர்களுக்கும் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே  பார்ஸி இனத்தவருக்கும் அடைக்கலம் கொடுத்த நாடு இந்தியா.

—subham—-

Tags- வரிசை அறிதல் , அடைக்கலம், சரணாகதி, ராமன், வீடணன் , விபீஷணன் , மரியாதை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: