அழகியிடம் பாரதியார் கேட்ட 7 கேள்விகள் (Post No.11,531)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,531

Date uploaded in London – 11 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

மங்கியதோர் நிலவினிலே பாட்டைப் பலரும் காதல் பாட்டு என்றே நினைப்பர். அது ஒரு தத்துவப் பாடல். முதல் ஒரு கன்னியை மட்டும் சினிமாவில் பாடியதால் அதை எவரும் முழுதும் புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமற்போய்விட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலைப்போல இதுவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது .உண்மையில் கனவில் கண்ட அழகியிடம் — அழகு தெய்வத்திடம் — பாரதியார் 7 கேள்விகளைக் கேட்கிறார்.அவை ஏழும் ஆராயப்பட வேண்டிய கேள்விகள் . அதே போல அவைகளுக்கு அழகு தெய்வம் கொடுத்த பதில்களும் ஆராயப்பட வேண்டிய விஷயங்கள் ஆகும் . இதோ 7 கேள்விகளும் அவைகளுக்கு கிடைத்த பதில்களும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் :

9 அழகுத் தெய்வம்

பாரதியார் கவிதைகள்தனிப் பாடல்கள்

The Goddess of Beauty 

மங்கியதொர் நிலவினிலே கனவிலிது கண்டேன்,
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை;
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்.
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்,
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து,
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்ததேன்.

In moonlight dim I saw it in a dream

She was a lass, perhaps sixteen years old

Like a flooding moonlight beam her face was bright

Her smile shed fresh moonlight; such was her mien

Like gems of purest Ray, her flame glistened

She said Slumber not, wake up, behold me

At that I opened my eyes. What a wonder !

She was indeed the Goddess of Beauty!

xxx


யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ?’என்றேன்;
‘யோகமே தவம்,தவமே யோக’மென உரைத்தாள்.
‘ஏகமோ பொருளன்றி இரண்டாமோ?’என்றேன்;
‘இரண்டுமாம்,ஒன்று மாம்,யாவுமாம்’என்றாள்.
‘தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?’என்றேன்.
‘வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவது வேறாமோ?”என்றாள்.

I asked What is greater, Yoga or Tapas?

Yoga is Tapas and Tapas Yoga, she said

I asked is being two or one only?

She said it is one, is two and all

Can rain know of thirst known to it I said

Is not the forceful descent of rain ,love?

Does it not pour willingly? Thus she spake.

xxxx


‘காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?’என்றேன்.
‘காலமே மதியினுக்கோர் கருவியாம்’என்றாள்.
‘ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?’என்றேன்;
‘நானிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்’என்றாள்
‘ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?’என்றேன்;
‘எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்’என்றாள்.
‘மூலத்தைச் சொல்லவோ?வேண்டாமோ?’என்றேன்;
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.

I asked Can Time bound Fate excel Wisdom?

Time is but Wisdom s tool was her answer

I asked Do wishes come true in this world?

She said perhaps one or two out of four

I asked Can you put up Thought in auction?

She said Thought will fructify backed by will

I asked Shall I reveal the Genesis?

Her face rained grace; gone was my delusion.

——Translation by Dr T N Ramachandran

–subham—

Tags- பாரதி பாடல், மங்கியதோர் நிலவினிலே, அழகு தெய்வம், ஆங்கில மொழிபெயர்ப்பு

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: