
Post No. 11,536
Date uploaded in London – 12 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxx
Poet Ambalavanar’s Imagery
உடல் — நீர்க்குமிழி (Body= Bubble)
வாழ்க்கை — மலையைச் சுற்றிச் சுழன்று ஓடும் வெள்ளப்
பெருக்கெடுத்த ஆறு (Life span= Flooded river rapids)
உறவினர்- கானல் நீர் (Relatives= Mirage
இளமை அழகு – மஞ்சள் வெயில் (Youth= Dusk)
உயிர் – வெட்டவெளியில் காற்று வீசும் இடத்தில்
ஏற்றப்பட்ட விளக்கு (Life/ breath = Lamp in Windy Open Space)
19. நிலையாமை Impermanence VERSE 19 OF ARAPPALISURA SATAKAM WITH MY COMMENTARY
நீரில் குமிழி யாக்கை— அறப்பளீசுர சதகம்
காயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்
காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!
கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்
கானல்காட் டும்ப்ர வாகம்!
மேயபுய பலவலிமை இளமையழ கிவையெலாம்
வெயில்மஞ்சள்! உயிர்தா னுமே,
வெட்டவெளி தனில்வைத்த தீபம்என வேகருதி,
வீண்பொழுது போக்காமலே
நேயமுட னேதெளிந் தன்பொடுன் பாதத்தில்
நினைவுவைத் திருபோ தினும்
நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண் டர்ச்சிக்க
நிமலனே! அருள்புரி குவாய்
ஆயும் அறி வாளர்பணி பாதனே! போதனே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) நிமலனே – தூயவனே!, ஆயும் அறிவாளர் பணி பாதனே –
ஆராயும் அறிஞர்கள் வணங்கும் திருவடிகளை யுடையவனே!, போதனே –
அறிவின் வடிவே!, அண்ணல் – தலைவனே!, எமது….தேவனே!,
காயம் ஒரு புற்புதம் – உடல் ஒரு நீர்க்குமிழி, வாழ்வு மலைசூழ்தரும் காட்டில்
ஆற்றின் பெருக்குஆம் – வாழ்க்கையோ மலையைச் சுற்றியுள்ள
கானகத்தில் ஓடும் ஆற்றின் வெள்ளம் ஆகும்,
கருணைதரு புதல்வர்
கிளை மனை மனைவி இவையெலாம் கானல் காட்டும் பிரவாகம் –
அருளுக்கிடமான மக்களும் உறவினரும் வீடும் இல்லாளும் ஆகிய
இவைகளெல்லாம் பேய்த்தேரிலே/MIRAGE காணப்படும் வெள்ளம்!,
மேய புயபல
வலிமை இளமை அழகு இவையெலாம் வெயில் மஞ்சள் – (நம்மிடம்),
பொருந்திய தோளாற்றலும் இளம் பருவமும் அழகும் ஆகிய இவை மஞ்சள்வெயில் (இளவெயில்),
உயிர்தானுமே வெட்ட வெளியில் வைத்த தீபம் –
உயிரும் திறந்த வெளியில் ஏற்றப்பட்ட விளக்கு,
எனவே கருதி – என்றே
நினைத்து, வீண் பொழுது போக்காமல் – வீணே காலத்தைக் கழிக்காமல்,
தெளிந்து – தெளிவடைந்து,
உன் பாதத்தில் நேயமுடனே அன்பொடு
நினைவுவைத்து –
உன் திருவடிகளிடையே நட்புவைத்து அன்புடன்
நினைத்து, இருபோதினும் நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண்டு
அர்ச்சிக்க அருள் புரிகுவாய் – காலையினும் மாலையினும் நீரையும்
பூவையும் கொண்டு அன்புடன் வழிபட அருள் புரிவாயாக!
XXX

AMBALAVANAR’S NEW PAINTING
அம்பலவாண கவிராயர் ஒரு படம் வரைந்தார். அதற்கு வண்ணங்களும் பூசினார். பெயின்டிங் முடிந்தபின்னர் அதை நமக்கு கவிதையின் மூலம் வருணிக்கிறார்.
வாழ்க்கை — மலையைச் சுற்றிச் சுழன்று ஓ டும் வெள்ளப்
பெருக்கெடுத்த ஆறு
உறவினர்- கானல் நீர்
இளமை அழகு – மஞ்சள் வெயில்
உயிர் – வெட்டவெளியில் காற்று வீசும் இடத்தில்
ஏற்றப்பட்ட விளக்கு
நல்ல அருமையான ஓவியம்/ PAINTING பெயிண்டிங் .
இந்த விளக்கு எந்நேரமும் எளிதில் அணையக்கூடியதால் உடனே இரண்டு நேரமும் — காலையிலும் மாலையிலும் உன்னை நினைந்து வழிபட அருள்புரி என்று சிவபெருமானை வேண்டுகிறார்.
XXX
நிலையாமை , விருந்தோம்பல், பிறன் மனை நோக்காத பேராண்மை போன்ற விஷயங்களை உலகில் இந்து மத இலக்கியங்களில் மட்டுமே காண முடியும் . இதை அவர்கள் தனித் தலைப்பாக எடுத்துக்கொண்டு ஸம்ஸ்க்ருதத்திலும் , தமிழிலும் பாடியுள்ளனர் .
கும குருபரர் அருளிய நீதிநெறி விளக்க வெண்பாவிலும் இதே கருத்தைக் காணலாம்
*நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் – நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று.
xxxx
குறள் 335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
வளையாபதிப் பாடலொன்றும் இதையே செப்பும்
“இளமையும் நிலையாவாம் இன்பமும் நின்றவல்ல
வளமையும் அஃதே போல் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக் கென்றும் என்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்து கொண்மின்”
என்கிறது. படிக்கவும் பொருள் விளங்கிக்கொள்ளவும் எளிதானது.
XXXX
விவேக சிந்தாமணி ஆசிரியர் வேறு ஒரு சித்திர ஓவியம் வரைந்துள்ளார்
ANOTHER PAINTING BY THE AUTHOROF VIVEKA CHINTAMANI
பாடல் 32: அநித்ய சுகம் ( பூரணயோகம் வெப்சைட் )
கொண்டு விண்படர் கருடன்வாய்க் கொடுவரி நாகம்,
விண்ட நாகத்தின் வாயினில் வெருண்ட வன் தேரை,
மண்டு தேரையின் வாயினில் அகப்படு தும்பி,
வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்.
ஒரு கருடன் தன் வாயில் நாகத்தை இரையாகக் கொண்டு பறந்தது. அந்த நாகத்தின் வாயில் தவளையும், தவளையின் வாயில் தும்பியும் இருந்தன. தும்பிவண்டு நாவில் விழுந்த ஒருதுளி தேனை ருசித்து அனுபவித்தது. இதைப் போன்றதே (மரணதேவனின் வாயில் இருக்கும்) மனிதர் அனுபவிக்கும் இன்பம்.
(ஆகவே அற்பமான உலக இன்பத்தை விடுத்து நிலையான பேரின்பத்தை தேடு.)
XXX
கழுதை யார் ?
பூதலத்தில் மானிடராய்ப் பிறப்பதரிது எனப்
புகல்வர்; பிறந்தோர் தாமும்
ஆதிமறை நூலின் முறை அருள் கீர்த்தி ஆம்
தலங்கள் அன்பாய்ச் சென்று
நீதி வழுவாத வகை வழக்குரைத்து
நல்லோரை நேசம் கொண்டு
காதவழி பேர் இல்லார், கழுதை எனப்
பாரில் உள்ளோர் கருதுவரே.–விவேக சிந்தாமணி
பொருள்: மானிடராய்ப் பிறப்பதரிது. பிறந்தாலும் சாத்திரப்படி தயவு, புகழுடன் வாழ்ந்து, தல யாத்திரை செய்யவேண்டும் நியாயம் தவறாமல் வழக்கு தீர்த்து, நல்லோருடன் பழகி ஒரு பத்து மைல் தூரத்துக்காவது புகழ் பரவ வேண்டும் அல்லது அவனைக் கழுதையின் மறு பிறப்பே என்று உலகம் கருதும்!
XXX
அப்பர் தேவாரம் GOD’S NOTE BOOK ; daily account for six billion people
“தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே” (அப்பர், 5ஆம் திருமுறை)
சிவ பெருமானே! உன் மீது எல்லையிலா அனபு கொண்டு அழுது, தொழுது, பாடிப் பரவுகின்றவர்களையும், பொழுதை எல்லாம் வீண் அடிக்கும், உன்னைக் கண்டு கொள்ளாத சோம்பேறிகளையும் எழுதி கணக்கு வைத்துக் கொள்பவன் நீ! என்று பாடுகிறார். இந்த ஊரின் பெயர் திருஇன்னம்பர். அங்குள்ள இறைவனின் பெயர் எழுத்தறி நாதர்!!
காவிரியின் வடகரைத் தலங்களில் ஒன்று.
XXXX
Do it Now
கடவுளை வணங்குவதை , வயதான பின்னர் செய்து கொள்ளலாம் என்று ஒத்திப்போடக்கூடாது. அதற்குப்பின்னர், குடும்பக் கவலையும், உடல் நலக் கவலையும் அதிகரிக்கும்; வேறு எதற்கும் நேரம் இராது என்பது ஆன்றோர் கண்ட உண்மை. ஆகையால் அவனை இரு போதும் மறவாமல் வழிபட வேண்டும்
நாளை நாளை எண்ணாதே
நாளை வீணில் போக்காதே
நாளை செய்யும் காரியத்தை
இன்றே நலமாய் முடித்திடலாம்.
நாளை நம்முடைய முறையோ?
நமனுடைய முறையோ? என்று ஒரு தமிழ் கவிஞர் பாடியது நினைவுக்கு வருகிறது.
Xxxx
காலையிலும் மாலையிலும் தொழுதல் பற்றி அப்பர் சுவாமிகளும் தேவாரத்தில் பாடி அருளியுள்ளார்
பாலை நகு பனி வெண் மதி பைம் கொன்றை
மாலையும் கண்ணியும் ஆவன சேவடி
காலையும் மாலையும் கைதொழுவார் மனம்
ஆலயம் ஆரூர் அரநெறியார்க்கே 4-17-8

—subham—
Tags—நீரில் குமிழி, யாக்கை, அறப்பளீசுர சதகம் , நாளை நாளை, . நிலையாமை, அம்பலவாணரின், சொல் ஓவியம்